உடல் நலம் நன்றாக இருக்க எந்தெந்த கிரகங்கள் உதவுகின்றன?
- Details
- Category: ஜோதிடம்
- Published Date
- Written by சுரா
- Hits: 3017
உடல் நலம் நன்றாக இருக்க
எந்தெந்த கிரகங்கள் உதவுகின்றன?
- மகேஷ்வர்மா
உடல் நலம் நன்றாக இருப்பதற்கு எந்தெந்த கிரகங்கள் நன்றாக இருக்க வேண்டும்?
ஒரு மனிதனின் ஜாதகத்தில் சூரியன் உச்சமாக இருந்தால் அல்லது அந்த சூரியனுக்கு குருவின் பார்வை இருந்தால், அந்த மனிதர் தலைவலியால் சிரமப்பட மாட்டார். அவருக்கு பித்த நோய் இருக்காது. மார்பில் நோய் இருக்காது. இதயத்தில் பிரச்சினை இருக்காது. அவர் எந்தவித பயமும் இல்லாமல் தன் வேலையை முடிப்பார். சிந்தனை எப்போதும் தெளிவாக இருக்கும். தலையில் அடிபடாது.
ஜாதகத்தில் சூரியன் நல்ல நிலைமையில் இருந்தால், சிந்தனை தெளிவாக இருக்கும். முதுகுத் தண்டில் நோய் வராத எலும்பில் நோய் வராது. பித்தம் இருக்காது.
சந்திரன் ஜாதகத்தில் உச்சமாக இருந்தால், அல்லது சுய வீட்டில் இருந்தால், சந்திரனை குரு பார்த்தால், அவர் அமைதியான குணம் கொண்டவராக இருப்பார். ஆழமாக சிந்திப்பார். இரத்தம் சம்பந்தப்பட்ட நோய் வராது. இரத்த அழுத்தம் வராது. மன நோய் வராது. ஜுரம் வராது. ஜலதோஷம் பிடிக்காது. வயிறு சம்பந்தப்பட்ட நோய் வராது. மூளை பாதிப்பு இருக்காது.
சந்திரன் நன்றாக இருந்தால், அந்த மனிதருக்கு மனநோய் இருக்காது.
செவ்வாய் சுய வீட்டில் இருந்தால் அல்லது உச்சமாக இருந்தால், அல்லது செவ்வாய்க்கு குருவின் பார்வை இருந்தால், அவருக்கு பித்த நோய் இருக்காது. உடலில் சொறி, படை இருக்காது. கட்டிகள் வராது முகத்தில் நோய் இருக்காது. வயிறு சம்பந்தப்பட்ட நோய் இருக்காது. மூல நோய் இருக்காது. குடல் நோய், டைஃபாய்ட் ஜுரம் வராது. பால்வினை நோய் வராது.
செவ்வாய் நன்றாக இருந்தால், அந்த ஜாதகர் தன் வேலைகளை நன்றாகச் செய்து முடிப்பார். நல்ல உடலமைப்பைக் கொண்டவராக அவர் இருப்பார். நோய்கள் நெருங்காது.
புதன் சுய வீட்டில் இருந்தால் அல்லது உச்சமாக இருந்தால் அல்லது குருவின் பார்வை புதனுக்கு இருந்தால், அந்த ஜாதகர் நல்ல படிப்பாளியாக இருப்பார். ஆழமாக சிந்திப்பார். பித்தம், தோல் நோய் வராது. கழுத்தில் நோய் வராது. வயிற்றில் நோய் வராது. மஞ்சள் காமாலை வராது. சர்க்கரை நோய் வராது. குஷ்ட நோய் வராது. சொறி, சிரங்கு வராது. நோயின் பாதிப்பு இல்லாமல் அவர் வாழ்வார்.
குரு லக்னத்திலோ அல்லது சுய வீட்டிலோ அல்லது உச்சமாவோ இருந்தால், முதுகுத் தண்டில் நோய் இருக்காது. மூட்டில் நோய் வராது. கபம் வராது. கால் வீங்காது. ஈரலில் பிரச்னைகள் இருக்காது. காதில் நோய் வராது. தன் வேலைகளை அந்த ஜாதகர் நன்கு முடிப்பார். தைரியசாலியாக இருப்பார்.
சுக்கிரன் சுய வீட்டில் அல்லது உச்சமாக அல்லது குருவின் பார்வையில் இருந்தால், சீறுநீரில் பிரச்சினை இருக்காது. விந்தில் பிரச்சினை இருக்காது. பால்வினை நோய் வராது. மலச்சிக்கல் வராது.
சுக்கிரன் நன்றாக இருந்தால், பிறரை ஈர்க்கக் கூடிய வகையில் அவர் தன் செயல்களைச் செய்து முடிப்பார்.
ஜாதகத்தில் சனி, சுய வீட்டிலோ அல்லது உச்சமாகவோ அல்லது மூல திரிகோணத்திலோ இருந்தால், அவருக்கு விபத்து நடக்காது. வாய்வு தொல்லை இருக்காது. பக்கவாதம் வராது. தலையில் முடி நன்றாக இருக்கும். இதய நோய் வராது. காலில் நோய் வராது. மூட்டில் நோய் இருக்காது. ஜீரண பிரச்சினை இருக்காது.
ஜாதகத்தில் சனி நன்றாக இருந்தால், அந்த ஜாதகர் நன்கு உழைத்து பெயர், புகழுடன் இருப்பார்.
ஒருவரின் ஜாதகத்தில் ராகு 3,6,11 இல் இருந்தால். அந்த ராகு நல்லவற்றைச் செய்யும். ராகு நல்ல நிலையில் இருந்தால், இரத்தம் குறையாது. மனநோய் வராது. பூச்சிக்கடி வராது. கை–கால் வீங்காது. இதய நோய் வராது. உடலில் வேதனை இருக்காது. பசுவால் தாக்கப்பட மாட்டார்கள் ஜதாகர் தைரியசாலியாக இருப்பார்.
ஒரு ஜாதகத்தில் கேது 3,6,11 இல் இருந்தால், அது நன்மைகளைச் செய்யும். கேது நன்றாக இருந்தால், மனம் நன்றாக இருக்கும். ஜாதகர் படிப்பாளியாக இருப்பார். வயிற்றில் நோய் இருக்காது. கல்லீரலில் நோய் வராது. ஜதெகர் எதையும் தைரியமாக முடிப்பார்.
பரிகாரங்கள்
- சூரியன் சரியில்லாமலிருந்தால், தினமும் சூரியனுக்கு நீர் விட வேண்டும். சூரியனை வழிபட வேண்டும். ஞாயிற்றுக் கிழமை கோதுமையைத் தலையில் சுற்றி, அதை தானமாக தர வேண்டும். உப்பு போட்டு சாப்பிடக் கூடாது. மகாம்ருத்யஞ்ஜெய மந்திரத்தைக் கூற வேண்டும். ஞாயிற்றுக் கிழமை மாணிக்கத்தை அணிய வேண்டும்.
- சந்திரன் சரியில்லையென்றால், தினமும் கை , கால்களைக் கழுவ வேண்டும். படுப்பதற்கு முன்பு, துர்க்கையின் நாமத்தைக் கூற வேண்டும். தினமும் சிவனுக்கு பாலாபிஷேகம் செய்ய வேண்டும். சந்திரனின் ரத்தினமான முத்தை அணிய வேண்டும்.
- செவ்வாய் சரியில்லையென்றால், தினமும் ஆஞ்னேயரை நான்கு முறைகள் சுற்றி வர வேண்டும் அவர் காலிலிருக்கும் செந்தூரத்தை, எடுத்து நெற்றியில் திலகமாக வைக்க வேண்டும். இனிப்பை தானமாக அளிக்க வேண்டும். சகோதரர்களுடன் உறவு சீராக இல்லாமலிருந்தால் செவ்வாயின் ரத்தினமான பவளத்தை அணிய வேண்டும்.
- புதன் சரியில்லாமலிருந்தால், தினமும் விநாயகரை வழிபட, வேண்டும். வீட்டில் கால் வைக்கும்போது, விநாயகரின் பெயரைக் கூற வேண்டும். பசுவிற்கு அகத்திக் கீரை, வாழைப் பழம், வெல்லம் ஆகியவற்றைத் தர வேண்டும். புதனின் ரத்தினமாக பச்சைக் கல்லை அணிய வேண்டும்.
- குரு சரியில்லையென்றால், தினமும் சிவனை வழிபட வேண்டும். சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். சிவப்பு மலர்களை வைத்து பூஜை செய்ய வேண்டும். வியாழக் கிழமை பூந்தி, லட்டு தானமாக அளிக்க வேண்டும். வெல்லம், மஞ்சள் வாழைப் பழம் ஆகியவற்றை பசுவிற்குத் தர வேண்டும். குருவின் ரத்தினமான புஷ்பராகத்தை அணிய வேண்டும்.
- சுக்கிரன் சரியில்லையென்றால், தினமும் துர்க்கையை வழிபட வேண்டும். துர்க்கைக்கு விளக்கேற்ற வேண்டும். தேவையற்ற பொருட்களை நீக்கி விட வேண்டும். வெள்ளிக் கிழமை துர்க்கை ஆலயத்திற்குச் சென்று விளக்கேற்றி வைத்து, சிவப்பு மலர்களை வைத்து பூஜை செய்ய வேண்டும்.
- சனி சரியில்லாமலிருந்தால், தினமும் சிவனுக்கு பூஜை செய்ய வேண்டும். அரச மரத்திற்கு நீர் விட வேண்டும். சனிக் கிழமை அரச மரத்திற்கு அடியில் விளக்கேற்ற வேண்டும். காகம், நாய், ஏழைக்கு உளுந்து வடையை தானமாக அளிக்க வேண்டும். சனியின் ரத்தினமான நீலக் கல்லை அணிய வேண்டும்.
- ராகு சரியில்லாமலிருந்தால், தினமும் சிவனையும், துர்க்கையையும் வழிபட வேண்டும். தேவையற்ற பொருட்களை அகற்றி விட வேண்டும். ஒரு முழு தேங்காயை தலையில் சுற்றி, நீரில் வெள்ளிக் கிழமை விட வேண்டும். ராகுவின் ரத்தினமான கோமேதகத்தை அணிய வேண்டும்.
- கேது சரியில்லையென்றால், தினமும் காலையில் சிவனுக்கு பூஜை செய்ய வேண்டும். சூரியனுக்கு நீர் விட வேண்டும். புதன் கிழமை மாலை வேளையில் மீனுக்கு உணவு அளிக்க வேண்டும். குஷ்ட நோய் உள்ளவர்கள் புதன் கிழமை அல்லது சனிக் கிழமை இனிப்பு தானம் செய்ய வேண்டும். கேதுவின் ரத்தினமான வைரத்தை அணிய வேண்டும்.