சரியாக தூக்கம் வரவில்லையா? அதற்கு என்ன பரிகாரம்?
- Details
- Category: ஜோதிடம்
- Published Date
- Written by சுரா
- Hits: 2501
சரியாக தூக்கம் வரவில்லையா?
அதற்கு என்ன பரிகாரம்?
- மகேஷ்வர்மா
ப
ஒரு மனிதருக்கு சரியாக தூக்கம் வந்தால்தான், அவருக்கு நோய்கள் குறையும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் இருக்காது. மனதில் நிம்மதி இருக்கும். ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதியான கிரகம் விரய ஸ்தானத்தில் பாவ கிரகத்துடன் இருந்தால், அல்லது விரய ஸ்தானாதிபதி லக்னாதிபதியுடன் லக்னத்தில் இருந்தால், அவர்கள் அதிகமாக சிந்திப்பார்கள். லக்னாதிபதி, சூரியனுடன் லக்னத்தில் இருந்தால், அந்த ஜாதகத்தில் பித்தம் உண்டாகும். அந்த பித்தத்தினால் அவர்களுக்கு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் உண்டாகும். அதனால் அவர்களுக்கு சரியாக தூக்கம் வராது.
ஒரு ஜாதகத்தில் செவ்வாய் பலவீனமாக இருந்தால் அல்லது 2-இல் இரண்டாம் ஆதியுடன் இருந்தால், வயிற்றில் எரிச்சல் உண்டாகும். மூலத்தில் நோய் உண்டாகும். குடல் நோய் அல்லது டைஃபாய்ட் காய்ச்சல் வரும், அதுவும் செவ்வாய், துலாமில் இருந்தால் அல்லது கடகத்தில், இருந்தால், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். அதனால் வயிற்றில் பிரச்னை உண்டாகும். கோபம் அதிகமாக வரும். தூங்கும்போது அதிகமாக சிந்திப்பார்கள். அதனால் சரியாக தூக்கம் வராது.
ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்தில் சூரியன், சனியுடன் இருந்தால், அவர்கள் அளவிற்கு அதிகமாக சிந்திப்பார்கள். அதனால் அவர்களுக்கு தலைவலி வரும். உடலில் ஏதாவதொரு பகுதியில் எலும்பில் நோய் வரும். அதனால் சரியாக தூக்கம் வராது.
ஒரு ஜாதகத்தில் 4இல் சூரியன், 7இல் சனி இருந்தால், அவர்களுக்கு அதிகமான வேலைகள் இருக்கும். பண பிரச்னை இருக்கும். அதிகமான அலைச்சலால், அவர்களுக்கு தூக்கம் வராது.
லக்னாதிபதி புதனாக இருந்து, அந்த லக்னாதிபதி, சூரியனுடன் லக்னத்தில் அஸ்தமாக இருந்தால், அவர்கள் இளம் வயதிலிருந்தே கடுமையான உழைப்பாளியாக இருப்பார்கள். மறுநாள் என்ன செய்வது என்பதைப் பற்றியே எப்போதும் சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். அதனால் அவர்களுக்கு சரியாக தூக்கம் வராது.
ஒரு மனிதருக்கு ஏழரை நாட்டு சனி நடக்கும்போது மாரகாதிபதி தசை நடந்தால், சரியாக தூக்கம் வராது ஏழரை நாட்டு சனி நடக்கும்போது, அஷ்டமாதிபதி தசையில் 7க்கு உரிய கிரகத்தின் அந்தரம் நடந்தால் அல்லது 2ஆம் ஆதியின் அந்தர தசை நடந்தால் அந்த மனிதருக்கு மரண பயம் ஏற்படும் அதனால் அவர்களுக்கு சரியாக தூக்கம் வராது.
ஒரு ஜாதகத்தில் புதன் சரியில்லையென்றால், அவர்களுக்கு வாதம், பித்தம், தோல் நோய், கழுத்தில் நோய், மஞ்சள் காமாலை, சர்க்கரை நோய்கள் வர வாய்ப்பு அதிகம். மற்றவர்களிடம் தங்களின் மனதில் உள்ளவற்றைக் கூறினால், அவர்கள் ஏதாவது நினைப்பார்களோ என்று சிந்திப்பார்கள். அதனால் சரியாக தூக்கம் வராது.
ஒரு மனிதன் ஜாதகத்தில் குரு சரியில்லாமலிருந்தால், அந்த நேரத்தில் அவருக்கு அஷ்டம சனி நடந்தால் அல்லது கோச்சாரத்தில் குரு பகவான் சந்திரனுக்கு 12இல் இருந்தால், அவருக்கு பலவிதமான நோய்களும் வரும். முதுகுத் தண்டில் பிரச்னை இருக்கும். சளி, ஈரலில் பிரச்னை, காலில் நோய் வரும், அதனால் அவருக்கு சரியாக தூக்கம் வராது.
ஒரு ஜாதகத்தில் சந்திரன் சரியில்லையென்றால், அவருக்கு இரத்தக் கொதிப்பு நோய் வரும், மனதில் குழப்பங்கள் இருக்கும். ஜலதோஷம் இருக்கும். அதன் காரணமாக தலை வலி உண்டாகும். அதனால் தூக்கம் சரியாக வராது.
ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் சரியில்லையென்றால் சுக்கிரன், செவ்வாயுடன் இருந்தால், அவர் பல பெண்களுடன் உறவு கொள்ள வேண்டும். என்று மனதில் நினைப்பார். அவருக்கு மலச் சிக்கல் உண்டாகும். அதனால் சரியாக தூக்கம் வராது.
ஒரு ஜாதகத்தில் சனி சரியில்லாமலிருந்தால், சனி தசையில் அல்லது மாரகாதிபதி தசையில் அவருக்கு காலில் நோய் உண்டாகும். சிலருக்கு பக்கவாதம் வரும். அதனால் தூக்கம் வராது. ஒருவரின் ஜாதகத்தில் ராகு, கேது சரியில்லாமலிருந்தால், இரத்தம் குறையும். மூல நோய் வரும். கை, கால் வீங்கும். ஜீரணப் பிரச்னை உண்டாகும். மனதில் குழப்பங்கள் இருக்கும். அதனால் தூக்கம் சரியாக வராது.
பரிகாரங்கள்
1. சுக்கிரன் சரியில்லையென்றால், படுக்கையறையில் முகம் பார்க்கும் கண்ணாடி இருக்கக் கூடாது. கட்டிலுக்குக் கீழே இரும்பு, தோல் பொருட்கள், செருப்பு இருக்கக் கூடாது.
2. தெற்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும். அல்லது கிழக்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும்.
3. படுக்கையறையில் ரோஸ், வெள்ளை, வெளிர் மஞ்சள் நிறம் இருக்க வேண்டும்.
4. படுப்பதற்கு முன்பு கை, கால்களை கழுவ வேண்டும். சர்க்கரை அல்லது வெல்லத்தைச் சாப்பிட வேண்டும்.
5. தினமும் ஆஞ்சனேயரை நான்கு முறைகள் சுற்றி வர வேண்டும்.<
6. தினமும் சூரியனுக்கு நீர் விட வேண்டும்.
7. தன் லக்னாதிபதியின் ரத்தினத்தை அணிய வேண்டும்.
8. வீட்டில் மகாம்ருத்யஞ்ஜெய யந்திரத்தை வைத்து பூஜை செய்ய வேண்டும்.
9. ஸ்படிக மாலையை கழுத்தில் அணிந்து படுக்க வேண்டும்.
10. தேவையற்ற பொருட்களை வீட்டில் நீக்க வேண்டும்.
11. படுக்கும்போது கருப்பு, அடர்த்தியான நீலம், அடர்த்தியான ப்ரவுன் நிற ஆடைகளை அணியக் கூடாது.
12. ஞாயிற்றுக் கிழமை கோதுமையை தானமாக அளிக்க வேண்டும்.
13. அமாவாசையன்று ஏழைகளுக்கு உணவு அளிக்க வேண்டும்.