Category: சிறுகதைகள் Written by சுரா
புதிய கிராம வளர்ச்சி திட்டங்கள் செயல்வடிவத்திற்கு வந்தபோது, வடக்கு வயநாட்டின் குத்தனூர் கிராமத்திலிருக்கும் கிளை அஞ்சல் அலுவலகம் ஒரு சப் அஞ்சல் அலுவலகமாக ஆனது. ஙஹண்ப் என்று எழுதப்பட்ட ஒரு சிவப்பு நிற அறிவிப்புப் பலகை நெற்றியில் பதிக்கப்பட்டிருந்த ஒரு பேருந்து அந்த கிராமத்தை நோக்கி நகர்ந்து வந்து கொண்டிருந்தது.
Category: சிறுகதைகள் Written by சுரா
கள்ள நோட்டு என்பதே தெரியாமல் கள்ள நோட்டு வாங்கி, தாயே தான் பெற்ற மகளை விற்ற சம்பவத்தை, அந்த மகள்மீது காதல் கொண்டிருந்த போலீஸ் கான்ஸ்டபிள் சமீபத்தில் சொன்னான்: நல்ல பெரிய மார்பகங்களையும், தடித்த பின்பகுதியையும் கொண்ட ஒரு இளம் பெண் அவள். பட்டாளக் கேம்ப்பை அடுத்துள்ள ஒரு மரத்தினடியில் இருந்த ஒரு குடிசையில் அவள் தாயுடனும் சகோதரிகளுடனும் இருந்தாள்.
Category: சிறுகதைகள் Written by சுரா
நடு இரவில், நான்கு- பன்னிரண்டுக்கான ஷிஃப்ட் முடிந்து திரும்பி வந்து கொண்டிருந்தான் முனுசாமி. சைக்கிள் பழுதாகி விட்டிருந்தது. அதை சரி செய்ய வேண்டுமென்றால் அடுத்த சம்பளம் வரை காத்திருக்கவேண்டும். மங்கலான கிராமத்து வெளிச்சத்தின் வழியாக, மரங்களின் குளிரைத் தாண்டி, நான்கரைமைல் அவன் நடந்தேயாக வேண்டும். போத்திக்கலுங்கு வரை- அதாவது ஒன்றரை மைல் தூரம் வரை தன்னுடைய சைக்கிளின் பின்னால் உட்கார்ந்து வரலாமென்று கருப்பையன் சொன்னான்.
Category: சிறுகதைகள் Written by சுரா
என் வாழ்க்கையில் ஞாபகத்தில் நிற்கும் சில வருடங்களை நான் பம்பாய் நகரத்தில் செலவிட்டேன். வாழ்க்கையில் சுவாரசியங்களும் விஷத் தன்மைகளும் நிறைந்த பல பக்கங்களைப் பார்க்கவும் புரிந்துகொள்ளவும் அனுபவிக்கவும் என்னைத் தூண்டிய அந்தப் பெரிய நகரத்தில் எனக்கு நிறைய நண்பர்களும் உண்டு. பல நேரங்களில் தூரத்தில் இருக்கும் அந்த தனித்துவ குணம் கொண்ட நண்பர்களைப் பற்றி நான் நினைத்துப் பார்ப்பதுண்டு.
Category: சிறுகதைகள் Written by சுரா
ஒரு பெண்ணுக்கு தன்னுடைய கணவன் மரணத்தைத் தழுவும்போது, அவளுடைய உடல் உணர்வு இழக்கப்படுகிறது. தன்னுடைய உடலின் உண்மையான மதிப்பைத் தெரிந்திருந்த ஒரே மனிதன் உயிருடன் இல்லை என்பது தெரிய வரும்போது, பெண் உடலைப் பார்த்துக் கொள்வதில் கவனம் செலுத்துவதில்லை.