எள்ளு சாதம்
- Details
- Category: சமையல்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 2359
எள்ளு சாதம்
(Sesame Rice)
தேவையான பொருட்கள் :
• கறுப்பு எள் : 50 கிராம்
• சீரகசம்பா அரிசி : 500 கிராம்
• இஞ்சி : 2 அங்குலம்
• கருவேப்பிலை : சிறிது
• உப்பு : தேவையான அளவு
• இதயம் நல்லெண்ணெய் : 5 மேஜைக்கரண்டி
செய்முறை :
அரிசியை இருபது நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்துக் கொள்ளவும்.
எள்ளை வறுத்து, தூளாக்கிக் கொள்ளவும்.
கருவேப்பிலை, இஞ்சியை அரைத்துக் கொள்ளவும்.
எள்ளை வறுத்து தூளாக்கிக் கொள்ளவும்.
அகன்ற பாத்திரத்தில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அரைத்த இஞ்சியைப் போட்டு வதக்கவும்.
நன்றாக வதங்கியதும் வறுத்து தூளாக்கி வைத்துள்ள எள்ளை சேர்த்துக் கிளறவும்.
எண்ணெய் மிதந்து வரும் போது ஐந்து டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொதித்ததும் ஊறவைத்துள்ள அரிசி மற்றும் உப்பு போடவும்.
அரிசி வெந்ததும் இறக்கி உபயோகிக்கவும்.











