Category: சிறுகதைகள் Written by சுரா
மணி ஆறு
புரோகிதரின் முனை வளைந்த செருப்புகள் கறுத்து மினுமினுப்பாகத் தெரியும் மரப்படிகளில் பட்டு மேலே போகிறபோது உண்டாகும் சத்தம் தெருவில் கேட்டு, கொஞ்சம் கொஞ்சமாக அவர் மேலே நடந்து போய் சேர்ந்ததும், அதுவும் இறுதியில் நின்று போனது.
ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு... மணியோசை சிறகடித்துப் பறந்தது. கோபுரத்திற்கு புத்துயிர் வந்ததுபோல் இருந்தது. வண்ணம் இழந்திருந்த ஒலிபெருக்கி விட்டுவிட்டு உச்சஸ்தாயியில் கத்தியது.
Category: சிறுகதைகள் Written by சுரா
ஜன்னல்களும் கதவுகளும் அடைக்கப்பட்டிருந்த வெள்ளை வர்ண சுவர்களைக் கொண்ட ஒரு அறைக்குள் ஒரு பெண்ணும், ஆணும் உட்கார்ந்திருந்தார்கள். பெண் ஸோஃபாவில் உட்கார்ந்து, பூனையைத் தடவிக் கொடுத்துக்கொண்டிருந்தாள். ஆண் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருந்தான். மேஜை மேல் இருந்த ஒரு கண்ணாடி கூஜாவில் தண்ணீர் வைக்கப்பட்டிருந்தது. ஆணின் முகத்தில் பயங்கர களைப்பு தெரிந்தது. பெண் தன் கால்கள் இரண்டையும் இலேசாக விரித்தவாறு அமர்ந்திருக்க, அங்கு விழுந்த குழியில் பூனை அமைதியாக உட்கார்ந்திருந்தது.
Category: சிறுகதைகள் Written by சுரா
அவர் விமானத்திலிருந்து இறங்கிய உடனே அவள் மிகவும் சூடாக இருந்த இரும்புக் கம்பிகளில் சாய்ந்து நின்று கொண்டு ஒரு முறை தன்னுடைய கையை உயர்த்தினாள். அவர் அதைப் பார்த்திருக்க வேண்டும். காரணம்-
Category: சிறுகதைகள் Written by சுரா
உடம்பில் ஆடை எதுவும் அணியவே இல்லையே! அய்யய்யோ, என்ன வெட்கக்கேடு! உண்மையிலேயே கஷ்டமான விஷயம்தான். உண்ணி வழியிலேயே நின்றிருந்தான். கடைகளில் இருந்த ஆட்கள் எல்லோரும் அவனையே பார்த்தார்கள். அவனைப் பார்த்து அவர்கள் சிரித்தார்கள். இங்கிருந்து உடனே எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக ஓடவேண்டும் என்று நினைத்தான் அவன். ஆனால், கால்கள் அசைந்தால்தானே! மனதில் வருத்தமும் குற்ற மனப்பான்மையும் உண்டானது. இதயம் வெடித்து விடும்போல் இருந்தது. அழுகை கிளம்பிக் கொண்டிருந்தது. ஆனால், அதன் ஒலி வெளியே கேட்கவில்லை.