Logo

குணவதி

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 6864
kunavathi

சொர்க்கத்திலிருந்து கேட்பதைப் போன்று இனிமையான குரலால் அமைந்த பாட்டு. காண்போரைக் கவரக் கூடிய அருமையான நடனம். பெண்மை என்றால் என்ன என்பதை அவளிடம் இறைவன் முழுமையாகச் செதுக்கி வடித்திருந்தான் என்பதே உண்மை.

மனம் திறந்து கூறுவதாக இருந்தால் அவள் ஒரு பேரழகி. அவளைப் பார்க்கும்போது கணவன்மார்கள் தங்களின் மனைவிகளை முழுமையாக மறந்தார்கள். திருமணமாகாத இளைஞர்கள் தத்தம் ரசனைக்கேற்றபடி தங்கள் மனதில் கற்பனை பண்ணி வைத்திருந்த காதலிகளை அவளிடம் தரிசித்தார்கள்.

அவள் விழிகளில் கவர்ச்சி கொப்பளித்து வழிந்தது.

வினயன் அமர்ந்திருந்த நாற்காலிக்குப் பக்கத்து நாற்காலியில் அந்த நடனக் குழுவின் மேனேஜர் ரதீசன் உட்கார்ந்திருந்தான். அவன் முகத்தில் சந்தோஷம் அளவுக்கு மீறி தாண்டவமாடிக் கொண்டிருந்ததை வினயன் உணரவே செய்தான்.

நடனமாடிக் கொண்டிருந்த அந்தப் பெண் ஒரு விலை மாது என்பதை ஏற்கனவே வினயன் அறிந்து வைத்திருந்தான். அவளின் மனதிற்கு விலை பேசுபவன் இந்த ரதீசன்தான் என்பதை அவன் பலரும் கூறத் தெரிந்து வைத்திருந்தான்.

வினயனின் மனம் அலை பாய்ந்து கொண்டிருந்தது. அதற்கு மேல் அந்தப் பெண்ணின் நடனத்தை அவனால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. அவன் மனதில் பல்வேறு வகைப்பட்ட உணர்ச்சிப் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அதைக் கட்டுப்படுத்த முடியாமல் அவன் தவியாய் தவித்துக் கொண்டிருந்தான். குணவதியின் நடனமும் பாட்டும் அரங்கில் கூடியிருந்தவர்களை மிகவும் மகிழ்ச்சியில் மிதக்க வைத்தது. அதைப் பார்த்து ரசீதனின் முகம் இனம் புரியாத சந்தோஷத்தில் மூழ்கி திளைத்தது. வினயனின் இதயம் பயங்கரமாக கனத்தது. குணவதியின் நடனம் உண்டாக்கிய பாதிப்பை அவன் ரதீசனின் முகத்தில் தெரிந்த பல்வேறு உணர்ச்சி மாற்றங்கள் மூலம் தெரிந்து கொண்டான். சொல்லப் போனால் ரதீசனைப் பார்த்தபோது வினயன் மனதில் ஒருவித பயமும் உண்டானது.

மணி க்ணிங் க்ணிங் என்று முழங்கியது. திரைச்சீலை கீழே விழ, நடனம் முடிந்தது. எழுந்திருக்க மனமே இல்லாமல் எல்லோரும் எழுந்து நடையைக் கட்டினார்கள்.

வினயன் தான் அமர்ந்திருந்த நாற்காலியிலேயே கொஞ்சமும் அசையாமல் அமர்ந்திருந்தாள். நேரம் ஓடிக் கொண்டிருந்தது. திரைச்சீலை லேசாக அசைந்தது. உள்ளே யாரோ நடக்கிறார்கள். யாராக இருக்கும்? குணவதியாக இருக்குமோ?

உள்ளே யாரோ தேம்பித் தேம்பி அழும் குரல் கேட்பதைப் போல் வினயன் உணர்ந்தான். அவன் தன் காதுகளைக் கூர்மையாகத் தீட்டிக் கொண்டு கேட்டான். துன்பப்பட்ட ஒரு இதயம் உள்ளே நொந்து அழுது கொண்டிருந்தது. அது யாருடைய இதயம்? வினயன் தன் மனக் கண்ணால் ரதீசனின் முகத்தை ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தான். அந்த முகத்தில் இனம் புரியாத ஒரு கடினத் தன்மை இருப்பதை அவனால் தெரிந்துகொள்ள முடிந்தது.

உள்ளே யாரோ பயங்கர கோபத்துடன் கத்துவது கேட்டது. வினயன் எழுந்து நின்றான். யார் உள்ளே வாய்விட்டு அழுவது? வினயன் ஓரடி முன்னால் வைத்தான். திரைச்சீலையை லேசாக நகர்த்தி குணவதி உள்ளே இருந்தவாறு வெளியே பார்த்தாள். அதைப் பார்த்த வினயன் அதிர்ச்சியடைந்து போய்விட்டான். அவர்கள் இருவரின் கண்களும் சந்தித்தன. அடுத்த நிமிடம் குணவதி தன் தலையை உள்ளே இழுத்துக் கொண்டாள்.

குணவதியின் முகம் மென்மையான ஒரு மலரைப் போல் காணப்பட்டது. உள்ளே போய் அவளின் கண்களில் வழிந்து கொண்டிருந்த கண்ணீரைத் தன் விரல்களால் துடைக்க வேண்டும் என்று நினைத்தான் வினயன். அதைக் கெட்ட குணம் ரதீசன் எதற்காக அவள் மனம் வேதனைப்படும்படி நடந்து கொள்கிறான்? அவளுக்கு ஆறுதல் கூற இந்த உலகத்தில் யாருமே இல்லை என்று அவன் நினைக்கிறானா என்ன?

அதற்குமேல் வினயனால் அங்கு நின்று கொண்டிருக்க முடியவில்லை. குணவதி தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தாள். வினயன் மேலும் ஓரடி மன்னால் வைத்தான். உள்ளே போய் அவளின் கண்களில் இருந்து வழிந்து கொண்டிருக்கும் கண்ணீரைத் துடைக்க அவன் மனம் தவியாய் தவித்தது. ஆனால், அதை அவனால் என்ன காரணத்தாலோ செயல் வடிவத்திற்குக் கொண்டுவர முடியவில்லை. அதனால் என்ன செய்வதென்று தெரியாமல் நின்றான். அவன் மனம் உள்ளே அழுதது.

ஒரே நிசப்தம் நிலவிக் கொண்டிருந்தது. வினயனின் விழிகளில் ஒருவகை ஆர்வம் உண்டானது. லேசாக வீசிய காற்றில் திரைச்சீலை இப்படியும் அப்படியுமாய் அசைய, தீபங்களின் நிறம் மாறி விட்டிருப்பதை வினயன் கவனிக்கவே செய்தான். இப்போது அவள் அழுகை சத்தம் கேட்கவில்லை. குணவதி தன்னுடைய அழுகையை அதற்குள் எப்படி நிறுத்தினாள்? அவளின் மென்மையான இதயம் துக்கத்தைப் பொறுக்க முடியாமல் எங்கே வெடித்துப் போய் விடுமோ என்று அவன் பயந்தான். குணவதியின் உருவம் வினயனின் மனதின் அடித்தளத்தில் வலம் வந்தது. அவள் அழுத காட்சியை அவன் மனதிற்குள் ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தான்.

அவள் அரங்கத்தில் அமர்ந்திருப்பவர்கள் முன்னால் புன்னகை புரியும் முகத்துடன் வந்து நின்றிருக்கலாம். ஆனால், அந்தப் புன்னகைக்குப் பின்னால் தக தக வென எரிந்து கொண்டிருக்கும் இதயத்தை வினயனால் காண முடிந்தது. சிரிக்கும்போது உண்மையில் அவள் மனதிற்குள் அழுது கொண்டுதான் இருந்தாள். ஆனால், அவளைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தவர்கள் அதைப் புன்னகை என்று எடுத்துக் கொண்டார்கள். அவளின் குரலில் ஒருவகை கெஞ்சல்தான் தொனித்தது. அவளின் அழைப்பு ஒரு விலை மாதுவின் அழைப்பு அல்ல. கவலைகள் மண்டிய ஒரு இதயத்தை அவள் திறந்து காட்ட முயற்சித்தாள் என்று கூறுவதே பொருத்தமானது. காலம் காலமாக துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் அவள் ஆத்மா மற்றவர்களின் கருணைக்கு வேண்டி நித்தமும் அழுதது. அவள் நடன மாடியதில், அவளின் சின்னச் சின்ன அசைவுகளில், அவளின் விழிகளில் அசைவில் அவை தெளிவாகத் தெரிந்தன. ஆனால், அரங்கத்தில் கூடியிருந்த யாருமே அதைப் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. அந்த ஆண்களின் உலகம் ஏன்தான் இப்படி ஈவு இரக்கம் என்பதே இல்லாமல் கல்லென இருக்கிறதோ தெரியவில்லை. என்ன இருந்தாலும் அவள் பெண்ணாயிற்றே! அவள் அரை நிர்வாண கோலத்தில்... உண்மையிலேயே கஷ்டமான விஷயம்தான்! அரங்கத்தில் கூடியிருந்தவர்கள் காம வேட்கையில் சிக்கிக் கிடந்தார்கள். அவளை யாருமே புரிந்து கொள்ளவில்லை.

எல்லாவற்றையும் மனதில் அசை போட்டுப் பார்த்த வினயனின் மனம் சற்று லேசானது மாதிரி இருந்தது. அவன் மனதிற்குள் தொடர்ந்து ஒருவகைப் போராட்டமே நடைபெற்றுக் கொண்டிருந்தது. விலை மாது! தேவடியாள்! காப்பாற்றுவதா? யாரைக் காப்பாற்றுவது? யார் காப்பாற்றுவது?


வினயனின் இதயத்தில் பயங்கரமான வேதனை உண்டாகத் தொடங்கியது. தனக்குச் சற்று தூரத்தில் வினயன் குணவதியைப் பார்த்தான். தீபத்தின் ஓளி சற்று குறைந்தது போல் அவனுக்குத் தோன்றியது. ஒரு இருட்டு உலகம் சுற்றிலும் ஆட்சி செய்வதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.

அவள் அவனை நோக்கி வந்து கொண்டிருந்தாள். வினயன் அவளையே பார்த்தான். அலையில் சிக்கிய ஓடத்தைப் போல உலகம் தலைகீழாக கவிழ்வதைப் போல் வினயன் உணர்ந்தான்.

‘‘ஏங்க...’’

வினயன் எழுந்தான். அவள் புன்னகையோடு அவனுக்கு முன்னால் நின்றிருந்தாள். அவள் கண்கள் ஒரு விலை மாதுவின் கண்கள் எப்படி இருக்குமோ அப்படி இருந்தன. அவள் தன் கரங்களை நீட்டி தன்னை இழுத்துப் பிடித்து அடுத்த நிவீடம் இறுகக் கட்டியணைக்கப் போகிறாள் என்று அவன் மனதிற்குள் நினைத்தான். ‘‘‘‘ச்சீ... தேவிடியா....’’’’ வினயன் திரும்பி ஓடினான்.

2

சாலையை அடைந்த வினயன் திரும்பி நின்றான். அந்த நடன அரங்கின் ஜன்னல் வழியாக வெளிச்சம் வந்து வெளியே பரவிக் கொண்டிருந்தது. வினயனின் இதயம் முழுமையான அமைதியில் மூழ்கியிருந்தது.

அவனுக்கு மிகவும் களைப்பாக இருந்தது. இனம் தெரியாத வாட்டம் வந்து அவனை ஆட்கொண்டது. அவன் கால்கள் உடம்பைத் தாங்க முடியாமல் தவித்தன. மூச்சு விடவே மிகவும் சிரமமாக இருப்பதைப் போல் உணர்ந்தான். காற்று நாசிக்குள் நுழையவே மிகவும் சிரமப்பட்டது. தொண்டைவற்றிப் போய் விட்டதைப் போல் அவன் உணர்ந்தான். நடன அரங்கத்தில் ரதீசன் உரத்த குரலில் சத்தம் போடுவது அங்கிருந்து இவனுக்கு நன்றாகவே கேட்டது.

ஆள் நடமாட்டமே இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்த சாலையின் ஓரத்தில் வினயன் அமர்ந்தான். அவன் மனதின் அடித்தளத்தில் முழுமையாக மூடியிருந்த பனிப் போர்வை இப்போது கொஞ்சம் கொஞ்சமாக விலகத் தொடங்கியது. எல்லாம் தெளிவாகி சீரான நிலைக்கு வந்து விட்டதைப் போல் உணர்ந்தான்.

‘‘தேவடியா’’ என்றொரு குரல் எங்கோ தூரத்தில் காற்றைக் கிழித்துக் கொண்டு ஒலிப்பது அவனுக்குக் கேட்டது. மீண்டும் நடன அரங்கை நோக்கிப் போனால் என்ன என்று அவன் நினைத்தான்.

‘‘தேவடியா!’’

 அவன் தனக்குள் முணுமணுத்தான்.

அந்த இரவு மிகவும் குளிர்ச்சி நிரம்பியதாக இருந்தது. காற்று லேசாக வீசிக் கொண்டிருந்தது. வினயனின் உடலில் இருந்த களைப்பு கொஞ்சம் கொஞ்சமாக நீங்கத் தொடங்கியது. அவனுக்குத் தூக்கம் வருவது போலவும் இருந்தது. கண்களை லேசாக மூடினாள்.

சிறிது நேரம் சென்றதும் அவன் கண்களைத் திறந்தான். நிர்மலமான வானத்தில் லட்சக்கணக்கில் நட்சத்திரங்கள் கண்களைச் சிமிட்டிக் கொண்டிருந்தன. குணவதி கட்டியிருந்த புடவையை மனதில் நினைத்துப் பார்த்தான் வினயன். ஏராளமான வெள்ளைப் புள்ளிகளைக் கொண்ட நீல வண்ணப் புடவையை அவள் அணிந்திருந்தாள்.

‘‘தேவடியா...’’ வினயன் மீண்டும் மெதுவான குரலில் சொல்லிப் பார்த்தான். அவன் அடுத்த நிமிடம் எழுந்து நடந்தான். எங்கே போவது? வீட்டிற்குப் போகலாமா? அதற்கு மனம் வரவில்லை. மீண்டும் குணவதியைத் தேடி... வேண்டாம் என்று தீர்மானித்தான். பின்னர் என்ன நினைத்தானோ, தன்னுடைய வீட்டை நோக்கி நடையைக் கட்டினான். யாரையும் தட்டி எழுப்பாமல் அவன் தன்னுடைய அறைக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான். விளக்கைக் கூட எரிய வைக்கவில்லை. பாயை விரித்துப் படுத்தான். ஆனால், தூக்கம் வருவதாகத் தெரியவில்லை. கண்களில் இருந்து மின்மினிப் பூச்சிகள் கிளம்பி அறை முழுக்கப் பறந்து திரிவதாக அவனுக்குத் தோன்றியது.

‘‘தேவடியா...’’

வினயன் அன்று நடைபெற்ற நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றையும் மனதில் நினைத்துப் பார்த்தான். அவள் இப்போது அனேகமாக அழுது கொண்டிருக்கலாம். அவளின் அந்த விழிகளில் இருந்த மென்மைத் தனம் இப்போதும் இருக்குமா? கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் தான் ‘‘தேவடியா’’ என்று கூறியதை குணவதி கேட்டிருப்பாளா? தன்னுடைய வாயில் அப்படிப்பட்ட ஒரு வார்த்தை எப்படி இயற்கையாக வந்து ஒலித்தது? தன்னுடைய மனதின் அடித்தளத்தில் இருந்த வார்த்தையின் வெளிப்பாடுதானே அது? இப்படி பல்வேறு வகைப்பட்ட சிந்தனைகளில் அவன் மனம் அலைபாய ஆரம்பித்தது. அவள்... ஒரு அமைதியான இளம்பெண்! கொஞ்சம்கூட இரக்கம் என்றால் என்னவென்றே தெரியாத ரதீசன் என்ற அந்த மனிதனுக்காக அவள் தன்னுடைய கற்பை விற்றுக் கொண்டிருக்கிறாள். குணவதி தன்னுடைய வாழ்க்கையில் அனுபவித்ததுதான் என்ன? இந்த இளம் பிராயத்தில் அவள் எத்தனை எத்தனை துயரச் சம்பவங்களை அனுபவத்திருக்கிறாள். அவள் வாழ்க்கையில் இதுவரை அன்பு, பாசம், கருணை போன்ற விஷயங்களை அனுபவத்திருக்க வாய்ப்பே இல்லை. துயரத்தையும், வெறுமையையும், இரக்கமற்ற தன்மைகளையும் பார்த்துப் பார்த்து அவளின் இதயம் முழுமையாக மரத்துப் போயிருக்கலாம். அதனால் தானவோ என்னவோ அவளின் விழிகள் நீலம் படர்ந்து காணப்படுகிறது. காமவெறி பிடித்த மனிதர்களின் கூர்மையான நகங்கள் பட்டு அவள் இதயம் கிழிந்து அலங்கோலமாகிவிட்டது. அவள் ஒரு ஒதுக்கப்பட்ட பெண். அவளைப் பற்றி யாருக்குமே அக்கறை இல்லை. அவள் மீது அன்பு செலுத்தக்கூடிய உயிர் இந்த உலகத்தில் ஒன்றுகூட இல்லை. யாரும் அவள் மீது பரிவு காட்டத் தயாராக இல்லை. சிறு வயதில் கூட அவள் தாலாட்டுப் பாடல் என்ற ஒன்றைக் கேட்டிருப்பாளா என்பது கூட சந்தேகமே. ஆனால், அவள் இன்னும் உலகத்தை முழுமையாக விரும்பத்தான் செய்கிறாள். கண்ணால் பார்க்கக் கூடியவற்றிடம், காதால் கேட்கக் கூடியவையிடம், தொடக் கூடியவர்களிடம் - எல்லாவற்றிடமும் அவள் அன்பிற்காகவும், கருணைக்காகவும் கெஞ்சி நிற்கிறாள் என்பது மட்டும் உண்மை.

அவள் தன் மீது யாராவது கலங்கமற்ற பரிவுடன் அக்கறை காட்ட மாட்டார்களா என்று நித்தமும் ஏங்கி நிற்கிறாள். அவளின் அந்த கெஞ்சலும், அபயக் குரலும் யாருடைய இதயத்திலும் விழவில்லையா? ஆனால், ஒருவர்கூட குணவதியைத் திரும்பிப் பார்ப்பதாகத் தெரியவில்லையே! அவள் தேம்பித் தேம்பி அழுகிறாள். அந்த அழுகை அன்பிற்காக ஏங்கும் அழுகை அல்லவா? அவள் இரு கரங்களையும் நீட்டியவாறு என்னை நோக்கி வந்தாள். ஆனால், நான் அவளை விட்டு ஒடினேன். அவள் என் மனதில் என்ன இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டாளா? ரதீசனைப் பார்த்து நான் பயந்தது, அவனை வாய்க்கு வந்தபடி திட்டியது - இதெல்லாம் எதற்காக? அவன் எனக்கு எந்தவித தீங்கான காரியமும் இதுவரை செய்ததில்லை. பார்வையாளர்களில் ஒருவனாக அமர்ந்திருக்கும் என்மீது நிச்சயம் அவனுக்கு அக்கறை இருக்கவே செய்யும்.


குணவதி மனம் வருத்தப்படும்படி அவன் ஏன் நடந்து கொள்ள வேண்டும்? ரதீசனை நான் வெறுத்ததற்குக் காரணம்...? குணவதி மீது நான் கொண்ட அளவற்ற ஈடுபாட்டைத் தவிர வேறென்ன? ஈடுபாடு என்று சொல்வதைவிட இன்னும் ஒருபடி அதிகமாகவே கூட கூறலாம். நான் அவளுடன் இரண்டறக் கலந்து விட்டேன் என்பதே உண்மை. நான் அவளுடன் நூறு சதவிகிதம் ஒன்றிப் போனேன். நான் நடந்து கொண்ட விதம் சரிதானா? ச்சே... ஏன் நான் அப்படி நடந்தேன்? பலவித கஷ்டங்களிலும் சிக்கிக் கொண்டு அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் அந்தப் பெண் என்னை முழுமையாக நம்பினாள். என்னைப் பார்த்ததும் அவளுக்கொரு நம்பிக்கை பிறந்தது. அவள் மனதில் ஏகப்பட்ட கவலைகள் ஆக்கிரமித்துக் கிடக்க, வாழ்க்கை மீது நம்பிக்கையின்னை என்றொரு பெரிய சுமையை அவள் மேல் ஏற்றி வைத்து விட்டேன். மற்றவர்கள் அப்படி நடந்து கொண்டிருந்தால் கூட அவள் கவலைப்பட்டிருக்க மாட்டாள். நான் அப்படி நடந்து கொண்டதைப் பார்த்து நிச்சயம் அவள் ஆடிப் போயிருப்பாள். காரணம் அவள் என்னை முழுமையாக நம்பினாள்.

இப்படிப் பலவிதப்பட்ட சிந்தனைகளிலும் ஆழ்ந்து போயிருந்த வினயன் அடுத்த நிமிடம் வேகமாக எழுந்தான். குணவதியின் அழுகைச் சத்தம் தொடர்ந்து அவன் காதுகளில் கேட்டுக் கொண்டே இருந்தது. அவள் கொலுசு சத்தம் அவன்செவிப்பறையில் மோதி இனம் புரியாத ஒரு புத்துணர்ச்சியை உண்டாக்கியது.

வினயன் கதவைத் திறந்து வெளியே இறங்கினான். அவள் தேம்பலும் கொலுசு சத்தமும் அப்போதும் அவன் காதுகளில் கேட்டுக் கொண்டுதானிருந்தன.

வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. தூரத்தில் இடி பலமாக இடித்துக் கொண்டிருந்தது. தூரத்தில் எங்கோ மழை பெய்து கொண்டிருந்தது. வானத்தின் இரைச்சல் சத்தம் அவ்வப்போது கேட்டுக்கொண்டே இருந்தது.

வினயன் கனவில் நடக்கும் ஒரு மனிதனைப் போல நடந்து சென்றான்.

‘‘நீ தேவடியா இல்ல...’’ - அவன் தன் மனதிற்குள் முணு முணுத்தான்.

அவள் வீடு இருளில் மூழ்கிக் கிடந்தது. மருந்துக்குக்கூட ஒரு சிறு சத்தத்தைக் கேட்க முடியவில்லை.  அவ்வளவு அமைதியாக இருந்தது. வினயன் காலையிலேயே நீண்ட நேரம் நின்றிருந்தான். அந்த வீட்டிற்குள் படுத்து அனேகமாக இப்போது அவள் அழுது கொண்டிருக்கலாம். தூக்கம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் அவளின் அழுகைச் சத்தமும் இதயத் துடிப்பும் அந்த அறையின் நான்கு சுவர்களுக்குள்ளேயே அடங்கிப் போய்விட்டது. அவற்றால் வெளியே வந்து உறங்கிக் கிடக்குமு உலகத்தைத் தட்டியெழுப்பி சிந்திக்க வைக்க முடியாது. அவளோ... பாவம் ஒரு விலை மாது! எந்தவித பலத்தையும் தன்னிடம் கொண்டிராதவள். மிசும் கொடுங்காற்றில் பறந்து காணாமலேயே போகக் கூடிய சருகு அவள்.

அவளைப் பற்றி நினைக்க நினைக்க வினயனின் மனதில் ஒரு பெரிய போராட்டமே நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அவன்மதில் மேல் ஏறி காம்பவுண்டுக்குள் குதித்தான். தூக்கத்தில் யாரோ உளறிக் கொண்டிருந்தார்கள். யாரோ குறட்டை விட்டுக் கொண்டிருந்தார்கள். வினயனுக்கு ஓருவிதத்தில் மனதிற்குள் பயமாக இருந்தது.

அவளுக்கு பயமென்ற ஒன்றே இருக்காதா? வினயன் மனதிற்குள் நினைத்துப் பார்த்தான். விலை மாதுவான அவள். தன்னைத் தேடி வந்திருக்கும் காமவெறி பிடித்த மனிதனின் மார்பின் மீது தலையை வைத்து இப்போது உறங்கிக் கொண்டிருக்கலாம். ஒரு பக்கம் வினயனுக்கு அவளைப் பற்றி அந்த மாதிரி நினைத்துப் பார்க்கக் கூட தோன்றவில்லை. அவள் அந்த மாதிரி இருக்க மாட்டாள் என்று அவன் மனதிற்குள் எண்ணினான். அவள் சுத்த கன்னிப் பெண்ணாகவே இருப்பாள். ஆணின் ஸ்பரிசம் என்றாலே என்னவென்று தெரியாத ஒரு பெண். விலைமாது என்று பெயர் மட்டும் அவள் மீது படிந்து விட்டிருக்கும். அவள் படுக்கையில் இப்போது யாருமே அருகில் இல்லாமல் தனியே படுத்திருக்கிறாள்.இந்த சத்தங்களைக் கேட்டு நல்ல உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் அவள் பயந்து போய் விழித்து நடுங்கிப் போய் உட்கார நேரலாம்.

அந்த வீட்டிற்குள் அவன் காலடி எடுத்து வைத்தான். ஒரு ஜன்னல் திறந்து கிடந்தது. அவள் உள்ளே பார்த்தான். யாரோ மூச்சு விடும் சத்தம் அவன் காதுகளில் வந்து விழுந்தது. ஜன்னல் கம்பிகளைப் பிடித்தவாறு குணவதி வெளியே பார்த்தவாறு நின்றிருந்தாள்.

முல்லைப்பூ வாசனைஅங்கு முழுமையாகப் பரவியிருந்தது. சுவரில் இரந்த ஓரு கடிகாரம் டிக் டிக் என்று ஓசையை உண்டாக்கிக் கொண்டிருந்தது.

வினயன் அன்பு மேலோங்க அவளின் மென்மையான கரங்களைப் பற்றினான். குணவதி எந்தவித நடுக்கமும் இல்லாமல் நின்றிருந்தாள்.

‘‘நீ தேவடியா இல்ல...’’ - வினயன் உறுதியான குரலில் சொன்னான்.

வினயன் அடுத்த நிமிடம் அழுது கொண்டிருந்த அவள் முகத்தோடு தன்னுடைய முகத்தைச் சேர்த்தான். அவனின் கண்களில் இருந்து வழிந்த நீர் அவள் மார்பின் மேல் பட்டு அதை முழுமையாக நனைத்தது. குணவதி உணர்ச்சிவசப்பட்டு நின்றாள். அக்னி குண்டத்தின் மேல் நின்றிருந்த அவளிடம் வினயன் காட்டிய அன்பும் பரிவும் அவளுக்கு குளிர்ந்த காற்றெனப் பட்டது. வினயன் மீண்டும் அவள் கரங்களைப் பற்றி, அவற்றின் மேல் முத்தம் பதித்தான்.

‘‘நீ தேவடியா இல்ல...’’ - அவளின் கையில் அவன் சிந்திய கண்ணீர் துளிகள் விழுந்தன.

நிமிடங்கள் கடந்து கொண்டிருந்தன. அவள் கரங்களைத் தன்னுடைய மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டான் வினயன். சுற்றிலும் இருந்த இருட்டை அவன் கண்கள் துளைத்தெடுத்தன. அவள் முகம் அந்த இருட்டில் அவனுக்குத் தெரியவே இல்லை.

ரதீசன் லேசாக இருமினான். அவ்வளவுதான் - அடுத்த நிமிடம் ஒரு மின்னல் காற்றைப் போல வினயன் அந்த இடத்திலிருந்து காணாமல் போனான்.

கனவு உண்மையாகவே நடந்தது அனைத்தும் ஒரு கனவைப் போலவே இருந்தது குணவதிக்கு. அவளால் நடந்த நிகழ்ச்சிகளையே நம்பவே முடியவில்லை. அவை வெறும் கனவு என்றே அவள் எண்ணினாள். எல்லாம் தன் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் கற்பனைகள் மட்டுமே என்றும் அன்பிற்காக ஏங்கிக் கொண்டிருக்கும் தன்னுடைய கண்களே தன்னை ஏமாற்றப் பார்க்கின்றன என்றும் அவள் அப்போது நினைத்தாள். ஆனால், அவள் கைகள் நனைந்திருந்தன. ஒருவேளை மழைத்துளிகள் கைகளில் விழுந்திருக்குமோ என்று அவள் அப்போது எண்ணினாள். அந்த ஆனந்த வயப்பட்டு நின்ற நிவீடங்கள் வந்தது யாரென்று தனக்குக் கேட்கத் தோன்றவில்லையே என்று தன் மீதே அவள் கோபப்பட்டாள்.


‘‘நீ தேவடியா இல்ல...’’ என்று சொன்ன அந்த இரக்க குணம் கொண்ட நல்ல மனிதன் கண்ணீர் விட்டு அழுதான். தன் மீது அன்பு செலுத்தக்கூடிய, தன் மீது அக்கறை கொண்ட ஒரு உயிரும் இந்த உலகத்தில் இருக்கிறதா என்ன என்று அவள் சந்தேகப்பட்டாள். தன்னுடைய பேசும் சக்தி எங்கே போய் ஒளிந்து கொண்டது என்று மனதிற்குள் நினைத்த குணவதி வெளியே பார்த்தாள். வெளியே ஒருவரும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு முணுமுணுப்பு சத்தம் கேட்டது. அதற்குப் பிறகுதான் அவளுக்கே தெரிந்தது. அது தன்னுடைய இதயம் உண்டாக்கிய சத்தம் தானென்று. குணவதி துக்கம் கலந்த உணர்ச்சிப் பெரு வெள்ளத்தில் முழுக்க முழுக்க சிக்கிக் கிடந்தாள். தான் யார்? தனக்காக கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் இதயத்துக்குச் சொந்தக்காரன் யார்? - என்று பலவிதப்பட்ட விஷயங்களையும் அவள் மனம் நினைத்துப் பார்த்தது. தன்னுடைய கடந்த கால வாழ்க்கையை அவள் மனதில் அசைபோட்டுப் பார்த்தான். ரதீசனின் வீங்கித் தெரியும் பாக்கெட்டையும், தன்னுடைய வாழ்வைச் சூழ்ந்திருக்கும், தானே விரும்பாத கெட்ட நாற்றத்தையும் அவள் ஒரு நிமிடம் மனதின் அடித்தளத்தில் நினைத்துப் பார்த்தாள். அதை நினைக்க நினைக்க குணவதிக்கு எரிச்சல்தான் உண்டானது.

அந்த ஜன்னலை விட்டு அவள் கொஞ்சம் கூட விலகவே இல்லை. நேரம் படு வேகமாகக் கடந்து கொண்டிருந்தது.

அந்தக் கனவு நிலையில் கூட அவள் கண்கள் நன்கு திறந்தே இருந்தன. ஆகாயத்தின் ஏதோ ஒரு மூலையில் தனக்கு ஆதரவாக இருக்கக்கூடிய ஏதோ ஒரு உயிர் மறைந்திருப்பதாக நிச்சயமாக அவள் நினைத்தாள். முடிவே இல்லாத அந்த இருட்டோடு இருட்டாக இரண்டறக் கலந்து விட்டால் கூட நல்லது என்று அப்போது அவள் மனம் நினைத்தது. ஆனால், ஆண் இல்லாத ஒரு உலகத்தை அவளால் எண்ணிப் பார்க்கவே முடியவில்லை.

அவள் தொடர்ந்து அழுது கொண்டிருந்தாள். கிழக்குப் பக்கம் வெளுத்தது. அடுத்த அறையில் இருந்து ஒலித்த ஒரு சத்தத்தைக் கேட்டு அவள் தலையை நிமிர்த்திப் பார்த்தாள். ரதீசன் படுக்கையை விட்டு எழுந்து கொண்டிருந்தான்.

3

றையை விட்டு வெளியே செல்லாமல் அன்று மாலை வரை அவள் அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தாள். தன்னுடைய வாழக்கையில் இதுவரை நடைபெற்ற பல்வேறு சம்பவங்களையும் அவள் மனத்திரையில் ஓட்டிப் பார்த்தாள். முதல் நாள் இரவு நடைபெற்ற சம்பவம் அவளுக்கு அசாதாரணமான ஒன்றாகத் தோன்றியது. அதை நினைத்து நினைத்து குணவதி அழுது கொண்டிருந்தாள்.

மாலை நேரம் வந்ததும் அவள் தான் அணிந்திருந்த முண்டை மாற்றிக்கொண்டு வெளியேறினாள். அவளுடைய முகம் மிகவும் வாடிப் போயிருந்தது.

ஒரு இளைஞன் தூரத்தில் நின்றவாறு அவளையே வைத்த கண் எடுக்காது பார்த்துக் கொண்டிருந்தான். வழியில் போய்க் கொண்டிருந்தவர்களெல்லாம் அவளையே வெறித்துப் பார்த்தார்கள். சிலர் அவர்களுக்குள் என்னவோ ரகசியம் பேசியதைப் போல பேசிக் கொண்டனர். அவர்கள் ஏதோ அர்த்தம் வைத்து பேசுவது போல் இருந்தது. அதைப் பார்த்த குணவதியின் முகம் மேலும் வாடியது.

சொல்லப் போனால் அவள் ஒரு விலை மாது என்ற விஷயம் எல்லோருக்குமே தெரியும்.

சாலையின் ஓரத்திலிருந்த வீடுகளில் இருக்கும் குடும்பப் பெண்கள் ஜன்னல் வழியே பாதையில் நடந்து போய்க் கொண்டிருக்கும் அவளையே பார்த்தார்கள். அவர்கள் மனதில் அவளைப் பற்றி ஏதாவது நினைப்பார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

குணவதியின் இதயம் கவலையின் ஆக்கிரமிப்பால் வலித்தது. தன்னுடைய அவலம் நிறைந்த வாழ்க்கையை நினைத்துப் பார்த்த அவளுக்கு என்னவோ போல் இருந்தது. இதுதான் அவளின் தலையெழுத்து. பாவம்... அவள் என்ன செய்வாள்?- சாக்கடை ஓடிக் கொண்டிருக்கும் அவளின் வாழ்க்கையில் துர்நாற்றம் வீசிக்கொண்டு இருக்கிறது என்பதை எப்படி மறுக்க முடியும்?

ஒரு பிச்சைக்காரி எங்கிருந்தோ ஓடிவந்து அவள் முன்னால் நின்றாள். அந்தப் பிச்சைக்காரச் சிறுமியின் முகத்தைப் பார்க்கவே மிகவும் பரிதாபமாக இருந்தது.

‘‘அம்மா... நாலு காசு தாங்க’’

அதைக் கேட்டு குணவதியின் இதயத்தில் வலி உண்டானது.

அந்தப் பிச்சைக்காரச் சிறுமியின் செம்பட்டை வண்ணத்தில் இருந்த சடை முடி மட்டும் ஒழுங்காகப் பராமரிக்கப்பட்டிருந்தால், யாருடைய மனதையும் அது நிச்சயம் கவரும் என்று நினைத்தாள் குணவதி. அந்தச் சிறுமியின் கண்களுக்குப் பார்ப்போரை ஈர்க்கக்கூடிய காந்த சக்தி இருப்பதாக அவள் உணர்ந்தாள்.

அந்தச் சிறுமி கையை நீட்டினாள். ‘‘அம்மா... நாலு காசு’’. திரும்பத் திரும்ப அவளிக் கெஞ்சல் குரல் கேட்டுக் கொண்டே இருந்தது.

அந்தச் சிறுமியின் குரல் குணவதியின் மனதை என்னவோ செய்தது. சிறுமியின் கையில் நான்கு காசைக் கொடுத்து விட்டால், அடுத்த நிவீடமே அவள் அந்த இடத்தைவிட்டு ஓடி விடுவாள் என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும். இரண்டு இளைஞர்கள் அவர்களையே பார்த்தவாறு தூரத்தில் நின்றிருந்தார்கள். குணவதி சிறுமியைப் பார்த்துக் கேட்டாள். நின்றிருந்தார்கள். குணவதி சிறுமியைப் பார்த்துக் கேட்டாள்.

‘‘ஏண்டா கண்ணு... உனக்கு யாருமே இல்லியா?’’

‘‘இல்ல...’’

குணவதி தன் கழுத்தில் அணிந்திருந்த ஒரு சங்கிலியைக் கழற்றினாள். அந்தச் சங்கிலியை அந்தப் பிச்சைக்காரச் சிறுமியின் கையில் தந்தால், அவள் என்ன செய்வாள் -? இரண்டு வடைகளை அவள் கையில் தந்து யாராவது அதை ஏமாற்றி தட்டிப் பறிப்பார்கள். குணவதி சிறுமியைப் பார்த்துக் கேட்டாள்.

‘‘என் கூட நீ வர்றியா?’’

‘‘வர்றேன்’’

சிறிது நேரம் கழித்து குணவதி சொன்னாள்.

‘‘வேண்டாம்... நீ அழகான பொண்ணா வருவே. உன்னோட... உன்னோட... பெரிய சொத்தே நாசமாய் போயிடும்’’

அந்தச் சிறுமிக்கு குணவதி பேசியது எதுவுமே புரியவில்லை. குணவதி அவளைப் பார்த்துக் கேட்டாள்.

‘‘உனக்கு என்னம்மா வேணும்?’’

‘‘நாலு காசு’’

குணவதி அந்தச் சிறுமியின் கையில் நான்கு காசுகளைத் தந்தாள். சிறுமி அடுத்தநிமிடம் அந்த இடத்தை விட்டு நீங்கினாள்.

குணவதி தன்னுடைய வாழ்க்கையையும் அந்தப் பிச்சைக்காரச் சிறுமியின் வாழ்க்கையையும் ஒப்பிட்டுப் பார்த்தாள். அவள் பலவித நடனங்களையும் ஆடி, அதைப் பார்த்துக் கொண்டிருப்போர்களை மயக்கி அவர்களிடமிருந்து ஏமாற்றி பணத்தைப் பறித்துக் கொண்டிருக்கிறாள். அதே நேரத்தில் அந்தப் பிச்சைக்காரச் சிறுமி நேரடியாகக் கேட்டு அந்த நான்கு காசுகளை வாங்குகிறாள். அவளின் மதிப்பும், மரியாதையும் எங்கிருந்து வந்தன- -? இந்த அணிந்திருக்கும் நகைகளில் இருந்து - உடுத்தியிருக்கும் உடைகளில் இருந்து - இவை எல்லாம் எங்கிருந்து வந்தன?


குணவதி மீண்டும் தன்னுடைய முழு வாழ்க்கையையும் நினைத்துப் பார்த்தாள்.

அந்தப் பிச்சைக்காரப் பெண்ணின் ஒழுக்கத்தை அவளின் அழகற்ற தன்மை காப்பாற்றும். சொல்லப் போனால் அவள் அழகில்லாத ஒருத்தியாக இருப்பதே நல்லது என்று கூட கூறலாம். அவள் தனக்கு நான்கு காசுகள் வேண்டும் என்று கேட்பாள். அவனைத் திரும்பிக்கூட பார்க்காமல் யாரும் அவள் கேட்ட காசை வீசி எறிவார்கள்.

யாரோ உரத்த குரலில் தனக்குப் பின்னால் சிரிப்பதை அவள் கேட்டாள். சில இளைஞர்கள் அவளுக்குப் பின்னால் இருந்து சிரித்துக் கொண்டிருந்தார்கள்.  வளைப் பற்றி அவர்கள் என்னவோ கிண்டலாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

அவள் வானத்தின் விளிம்பைப் பார்த்தாள். அங்கு எவ்வளவு பெரிய ரகசியங்கள் மறைந்திருக்கும் என்று அவள் அப்போது மனதிற்குள் நினைத்துப் பார்த்தாள்.

கடற்கரையில் வீசிய காற்று அவள் உடம்பில் அவளுக்கே புரியாத மொழியில் ஏதோ ஒரு செய்தியைச் சொல்லிக் கொண்டிருந்தது.

தூரத்தில் செக்கச் செவலேன்று இருந்த வானத்தின் ஒரு மூலையை அவன் பார்த்தாள். அங்கு எவ்வளவு புதிர்கள் மண்டிக் கிடக்கும் என்று ஒரு நிமிடம் யோசித்துப் பார்த்தாள். அங்கு என்னென்னவோ ரகசிய நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. அந்த எல்லையைத் தாண்டி ஒரு நெருப்புக் கடல் இருக்குமோ என்று அவள் சந்தேகப்பட்டாள். அந்தச் சுவரைத் தள்ளி உடைக்க கடலால் நிச்சயம் முடியாது என்பதையும் அவள் உணராமல் இல்லை. தூரத்தில் கடல் மிகவும் சாந்தமாக இருந்தது. இந்தக் கடலலைகள் கரைமேல் ஏன் இவ்வளவு ஆவேசமாக வந்து மோதுகின்றன? மீண்டும் திரும்பி கடலுக்குள் செல்லும் இந்த அலைகள் அந்த அக்னி குண்டல்த்தில் போய் சங்கமமாகி விடுமா என்ன?

குணவதி பலவிதப்பட்ட சிந்தனைகளில் ஆழ்ந்து போயிருந்தாள். ஒவ்வொன்றைப் பற்றியும் ஆலோசிக்க ஆலோசிக்க அவளுக்கே மனதில் ஆர்வம் உண்டானது. ஒன்றுமே தெரியாதவளைப் போல அவள் இயற்கையின் மேன்மையையும், அது தன்னிடத்தே கொண்டிருக்கும் ரகசியங்களையும் எண்ணிப் பார்த்த அவள் தன்னை முழுமையாக மறந்துவிட்டிருந்தாள்.

‘‘இதுதான் குணவதி...’’

அந்தக் குரலைக் கேட்டு அவள் அதிர்ச்சியடைந்து, திரும்பிப் பார்த்தாள். இரண்டு இளைஞர்கள் அவளையே உற்றுப் பார்த்தவாறு நடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

அவள் மீண்டும் அவலங்கள் நிறைந்த தன்னுடைய வாழ்க்கையைப் பற்றியும், தான் சந்தித்த கசப்பான அனுபவங்களைப் பற்றியும் நினைக்க ஆரம்பித்தாள். தான் ஒரு விலைமாது என்பதால் தன்னுடைய வாழ்க்கை மிகவும் ரகசியமானது, அதைப் பற்றி மற்றவர்களுக்கு எதுவுமே தெரியாது என்றுதான் அவள் எண்ணியிருந்தாள். அது எவ்வளவு பெரிய தவறான ஒரு விஷயம் என்பதே குணவதிக்கு இப்போதுதான் புரிந்தது. தன்னுடைய விஷயம் எதுவுமே ரகசியமான ஒன்றல்ல என்பதையும், தன்னைப் பற்றி எல்லோருக்குமே நன்கு தெரிந்திருக்கிறது என்பதையும், அதனால்தான் தன்னை மற்றவர்கள் கேவலமாகப் பார்க்கிறார்கள் என்ப¬யும் அவள் புரிந்து கொண்டாள். அவளுக்கு முன்னால் பரந்து விரிந்த கிடந்த கடல் தனக்குள் கம்பீரமான பல ரகசியங்களை மிகவும் பாதுகாப்பாகப் பூட்டி வைத்திருப்பதை அவள் உணராமல் இல்லை. அதனால்தான் அந்தக் கடலுக்கென்று இருக்கும் மதிப்பு பல மடங்கு அதிகமானதாக என்றும் நிலவி நின்று கொண்டிருக்கிறது.

ஆனால், ஒரு விலைமாது அப்படியா? தன்னுடைய வாழ்க்கை அனுபவங்கள் ஒவ்வொன்றையும் அவள் மனதின் அடித்தளத்தில் அசை போட்டுப் பார்த்தாள். அவள் அரை நிர்வாண கோலத்தில் நடனம் ஆடியிருக்கிறாள். தன்னைத் தேடி வரும் காமவெறி பிடித்த மனிதர்களின் திருப்திக்காக கூச்சம் என்பதையே முற்றிலுமாகத் தூக்கியெறிந்திருக்கிறாள். தன்னுடைய உடலை எல்லோர் முன்னாலும் திறந்துகாட்டியிருக்கிறாள். அதனால்தானோ என்னவோ இந்த உலகம் அவளைப் பார்த்து காரித் துப்புகிறது. நாறிப் போயிருக்கும் இந்த வாழ்க்கையைப் பற்றி, ஒழுக்கத்திற்கான கட்டுப்பாடுகள் அனைத்தையும் தாண்டி நடந்து கொண்டிருக்கும் இந்தப் போக்கைப் பற்றி, அதற்குமேல் மதிக்க என்ன இருக்கிறது? அதற்குமேல் கைமாறாக என்னதான் எதிர்பார்க்க முடியும்?  காமவெறி பிடித்து அவளைத் தேடி வருபவர்கள் ஒன்றுமே தெரியாத அப்பாவிகளைப் போல எப்போதும் நடந்து கொள்வார்கள். அவர்கள் தங்களின் இளமை முறுக்கால் உந்தப்பட்டு அவளை, அந்த அழகுப் பெட்டகத்தை இருடடுக்குள்ளிருந்து வெளிச்சத்தில் கொண்டுவந்து நிறுத்துவார்கள். தாங்கள் என்னவெல்லாம் நினைக்கிறார்களோ, அதையெல்லாம் அவள் மூலம் நிறைவேற்றிக் கொள்வார்கள். மனதில் கற்பனை பண்ணி வைத்திருந்த எல்லா விஷயங்களையும் அவள் மேல் ஏற்றி அட்டகாசம் புரிவார்கள். அவளுக்கு அவர்கள் வைத்திருக்கும் பெயர் - விலைமாது! அவளின் வாழ்க்கையைப் பொறுத்தவரை, அது தோல்வியான ஒன்று என்றுதான் நாம் சொல்ல வேண்டும். எதுவுமே ரகசியமாக இருப்பதுதான் வாழ்க்கையின் மிகப்பெரிய வெற்றி எனலாம். ஒரு விலைமாதுவிடம் அப்படிப்பட்ட ரகசியங்கள் இருக்கின்றனவா? இன்னும் சொல்லப்போனால், அவளின் வாழ்க்கை அனுபவங்கள் எல்லாமே இருட்டு நேரங்களில்தான் நடைபெறுகின்றன. ஆனால், அதற்காக அவை யாருக்குத் தெரியாமல் இருந்து விடுகிற்னவா என்ன? நேற்று அவளைத் தேடி வந்த காதலன் இன்றைய அவளின் காதலனிடம் எல்லா விஷயங்களையும் கூறுவான். ‘‘அவள் அனுபவிக்க வேண்டிய ஒரு மலர்தான்’’ என்பான் மகிழ்ச்சியுடன். இன்றைய காதலன் நாளைய காதலனிடம் ஒவ்வொரு விஷயத்தையும் விலாவாரியாக விவரித்து கூறிக் கொண்டிருப்பான். விலைமாது! அவளுக்கு இரவு என்ற ஒன்ற இல்லவே இல்லை. எப்போதுமே திறந்திருக்கும் கதவு, திறந்து கிடக்கும் வாழ்க்கை, திறந்திருக்கும் இதயம் - எல்லாமே பகலைப் போல வெளிச்சம் போட்டு இருக்கும்.

வி¬¬மாது எதற்காக சல்லடை போன்ற மென்மையான ஆடைகளை அணிகிறாள்? ஏன்... அவள் எதற்காக ஆடை என்ற ஒன்றையே அணிய வேண்டும்?

தான் நிர்வாணமாக நின்று கொண்டிருப்பதைப் போல் குணவதி உணர்ந்தாள். அதை நினைத்து அவள் தேம்பித் தேம்பி அழுதாள்.

மேற்கு மூலையில் நெருப்பென எரிந்து கொண்டிருந்த வானம் பலவித சிந்தனைகளிலும் ஆழ்ந்து போய் வருத்தத்தில் அவளுக்காகப பரிதாபப்பட்டது போல் இருந்தது. மென்மையான சல்லடை உடையணிந்திருக்கும் அவளுக்காகக் கவலைப்பட்ட அதன் செயல் இயல்பானதாகவே இருந்தது. அங்கு அமர்ந்திருந்த கணவன் - மனைவிமார்கள் தங்களை மறந்து பேசிக் கொண்டிருந்தனர். கணவன்மார்களின் காதல் வயப்பட்ட பேச்சில் மனைவிகள் ஆனந்த அனுபவம் அடைந்து கொண்டிருந்தார்கள். அவளுக்குச் சற்று தூரத்தில் இருந்த தம்பதிகள் உலகையே மறந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் மகன் அவர்களுக்குப் பக்கத்தில் அமர்ந்து மணலில் சுரங்கம் தோண்டிக் கொண்டிருந்தான். மனைவியின் முகத்தில் என்றுமே அகலாத புன்னகை தவழ்ந்து கொண்டிருந்தது.


அவர்கள் அப்படி உலகையே மறந்து என்னதான் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிய குணவதியின் மனது துடித்தது. அந்த இதயத்தின் வெளிப்பாடுகளை உண்மையாகவே அவள் இதுவரை அறிந்திருக்கவில்லை. அந்தச் சிறுவன் தன் தந்தையை அழைத்து தான் தோண்டியிருக்கும் சுரங்கத்தைக் காட்டினான். தந்தை அதைப் பார்த்துப் புன்னகைத்தான். தாயின் மடியில் தன்னுடைய தலையையும் தந்தையின் மடியில் கால்களையும் வைத்தவாறு மல்லாக்கப் படுத்திருந்த சிறுவன் ஏதோ ஒரு பாட்டைப் பாடிக் கொண்டிருந்தான். அவன் தாய் பையனின் கன்னத்திலும் தலையிலும் ஒட்டியிருந்த மணலைக் கையால் தட்டி விட்டாள். பையனின் தந்தை அந்தக் காட்சியை வைத்த கண் எடுக்காது பார்த்துக் கொண்டிருந்தான். அந்த உன்னத உறவுகளின் மகத்துவம், அவர்களுக்கிடையே இருந்த பால் பிணைப்பின் மேன்மைத்தனம் - எல்லாவற்றையும் குணவதி உணராமல் இல்லை. அந்த மூவரையும் வெறித்து பார்த்தவாறு அமர்ந்திருந்தாள் குணவதி. அந்த உயர்ந்த உறவுகளை, கணவன்- மனைவி என்ற பிணைப்பை, தாய் - மகன் பாசத்தை அவள் தன்னுடைய கண்களால் எவ்வளவு நேரம் பார்க்க முடியுமோ அவ்வளவு நேரம் பார்த்தாள். சொல்லப் போனால் அங்கு அமர்ந்திருப்பவர்களில் அவள் மட்டுமே அந்த அற்புதக் காட்சியைப் பார்த்தாள் என்பதே உண்மை. அதைப் பார்க்க பார்க்க அவள் மனதில் ஒருவித புளகாங்கித உணர்வு உண்டானது. தாய் தன்னுடைய மகனுக்கு முத்தம் தந்தாள். அப்போது தாயின் தலைமுடியில் மூடியிருந்த பூச்சரம் நழுவிக் கீழே விழுந்தது. அதை அவளுடைய கணவன் எடுத்து மீண்டும் அவள் கூந்தலில் வைத்தான். அதைப் பார்த்த குணவதிக்குத் தன்னுடைய துயரங்களையெல்லாம் மறந்து விட்டதைப் போல் இருந்தது. குடும்பங்களில் சர்வ சாதாரணமாக நடைபெறும் அந்தச் சம்பவம் அவளுக்கென்னவோ பயங்கர ஆச்சரியத்தைத் தந்தது. அந்தத் தம்பதிகளை அவள்  கண் குளிரப் பார்த்து ஆனந்த அனுபவத்தை மனப்பூர்வமாகத் தரிசித்தாள். அவர்கள் இந்த உலகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல - வேறெங்கோ இருந்து வந்தவர்கள் என்று அவள் மனம் நினைத்தது.

அவர்கள் மவுனமாக வானத்திற்கு மேற்கு திசையையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குள் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. சிறுவன் மணலில் தவழ்ந்தவாறு சென்று, அவனுக்கு அருகிலிருந்த இன்னொரு சிறுவனையே வைத்த கண் எடுக்காது பார்த்தான்.

மனைவி கணவனைப் பார்த்த என்னவோ சொன்னாள். பதிலுக்கு கணவனும் என்னவோ சொன்னான். சிறுவன் தன் தந்தையின் மடியில் வந்து அமர்ந்தான். பின்னர் என்ன நினைத்தானோ, மெதுவாக எழுந்து மடியில் நின்றவாறு தன் தந்தையின் தாடையைப் பிடித்து தடவினான். தந்தை பையனை இறுக அணைத்துக் கொண்டான்.

நடந்த விஷயங்கள் ஒவ்வொன்றுமே அவளுக்கு ஆர்வத்தைத் தரக் கூடியவனாக இருந்தன. இந்த சம்பவங்களெல்லாம் இந்த உலகத்தில்தான் நடக்கின்றனவா என்று அவள் ஆச்சரியப்பட்டாள். ஒரு ஆண் ஒரு பெண் மீது அன்பு வைத்திருக்கிறானா? அந்த ஆணை அந்தப் பெண் சாகசங்கள் காட்டி மயக்குகிறாள் என்பதுதானே உண்மை. அவன் செய்கிற ஒவ்வொரு விஷயமும் உண்மையில் பார்க்கப் போனால் ஒருவித நாடகம்தானே. மொத்தத்தில் - எல்லா செயல்களுக்கும் பின்னால் பல ரகசியங்கள் மறைந்திருக்கின்ற என்பதாக அவள் நினைத்தாள்.

கணவனும் மனைவியும் இருந்த இடத்தை விட்டு எழுந்தார்கள். மகன் தாயை இறுக் கட்டிப் பிடித்துக் கொண்டு தாயின் முகத்தைப் பார்த்தவாறு என்னவோ சொன்னான். அவள் அவனைத் தூக்கினாள். அவன் தந்தை இரு கைகளையும் நீட்டினான். அடுத்த நிமிடம் சிறுவன் தந்தையின் கைகளுக்கு மாறினான்.

‘‘‘‘வேண்டாம்... நான் இவனைத் தூக்கிக்கிறேன்’’’’- மனைவி சொன்னாள்.

‘‘‘‘ நான் இவனை வச்சுக்கிறேன்’’’’- கணவன் சொன்னான்.

அவர்கள் குணவதியைக் கடந்து சென்றார்கள்.

இளைஞர்கள் சிலர் குணவதி அமர்ந்திருந்த இடத்திற்குச் சற்று தள்ளி வட்டமாக அமர்ந்து என்னவோ உற்சாகத்துடன் பேசியவாறு பொழுது போக்கிக் கொண்டிருந்தார்கள். குணவதி எழுந்து நடந்தாள். இளைஞர்களில் ஒருவன் அவளைப் பற்றி ஏதோ சொல்வதை அவள் கேட்கவே செய்தாள்.

மூன்று இளம் பெண்கள் தாழ்ந்த குரலில் பேசியவாறு அவளுக்கு நேர் எதிரில் வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் வெளியே கேட்காதது மாதிரி தங்களுக்குள் சிரித்துக் கொண்டார்கள். இருந்தாலும் அந்தச் சிளீப்பு உண்மையானதாகவும், இதயத்தில் இருந்து வருவதாகவும் இருந்தது.

அந்தக் கடற்கரையில் தனியாக யாருமே அமர்ந்திருக்க வில்லை. எல்லோருமே யாரையாவது உடன் வைத்துக் கொண்டுதான் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால்... தான்? தனக்கென்று இந்த உலகத்தில் யார் இருக்கிறார்கள்? யாருமே இல்லையே. அந்தப் பெண்களுடன் தன்னையும் இணைத்துக் கொண்டால் என்ன என்று அவள் மனம் ஆசைப்பட்டது. குணவதி சினேகிதனைப் பார்த்த சிறுமியைப் போல அந்த இளம்பெண்களையே பார்த்தவாறு நின்றிருந்தாள். அவர்கள் ஒவ்வொருவரும் திரும்பி அவளையே பார்த்தார்கள். ஒருத்தி மற்றவர்களைப் பார்த்து  என்னவோ மெதுவான குரலில் சொன்னாள். இன்னொருத்தி ‘‘யா...’’ என்று ஏதோ சொல்லி முடித்தாள். அவர்கள் தங்கள் நடையைத் தொடர்ந்தார்கள்.

குணவதி அவர்களையே மீண்டும் பார்த்தவாறு நின்றிருந்தாள். தன்னைப் பார்த்து ஒருவேளை அவர்கள் பயப்படலாம். ஆனால், அதைப் பார்த்து அவள் ஆச்சரியப்படவில்லை. தான் அவர்களுக்கு அருகில்  இருப்பது அவர்களுக்கு என்னவோ போல் இருக்கலாம். ஒரு விலைமாதுவிற்கு அருகில் நடந்து போக ஒழுக்கமான பெண்கள் விரும்புவார்களா என்ன?

தனியாக கடற்கரையில் நடந்து சென்ற குணவதி மற்றொரு இடத்தில் ஒரு சம்பவத்தை பார்த்தாள். இரண்டு பெண்கள் ஒரு ஆணிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் தாயும் மகளும் என்பதை குணவதி புரிந்து கொண்டாள். தன் தாய்க்குப் பின்னால் ஒளிந்து கொண்டு அந்த இளம்பெண் அந்த ஆணிடம் என்னவோ ஜாடை காட்டி பரிபாஷையில் பேசிக் கொண்டிருந்தாள்.

அது யாருக்குமே தெரியாதா என்ன? அது யாருக்காவது தெரிய வேண்டாமா? அது தவறான ஒரு காரியமாகத் தெரியவில்லையா? சிறிது நேரத்திற்கு முன்பு அவளுக்கு நேர் எதிராக வந்து கொண்டிருந்த மூன்று பெண்களும் இந்த இரண்டு பெண்களுடன் சேர்ந்து கொண்டார்கள். அப்போது அந்த ஆண் அந்த இடத்தை விட்டு அகன்று விட்டான்.

அவர்களின் அந்த உறவில் கொஞ்சமும் நினைத்துப் பார்க்க முடியாத சில ரகசியங்கள் இல்லாமலா இருக்கின்றன? அந்தப் பெண்ணின் செயலில் ஒரு வெட்கமும், உணர்ச்சி வசப்பட்ட ஒரு புன்னகையும் வெளிப்பட்டதென்னவோ உண்மைதானே? அவர்களுக்குள் சில ரகசிய உறவுகள் இருக்கின்ற என்பதை மறுப்பதற்கில்லை.


ஆனால், அந்த இளம் பெண்ணின் நடவடிக்கைகள் ஏன் வெளிப்படையாகத் தெரியும்படி இல்லை? அவளின் அசைவுகள், அவளின் முக பாவனைகள் எதுவுமே விரும்பக்கூடிய வகையில் இல்லையே.

அவர்களைத் தாண்டி அவர் நடந்து சென்றாள். ஒரு குடும்பம். மூன்று குழந்தைகள் மணலில் ஓடி விளையாடிக் கொண்டிருந்தனர். மனைவியும் கணவனும் ஒரு நண்பனும் ஒன்றாக அமர்ந்து என்னவோ பேசிக் கொண்டிருந்தனர். ஓடிக்கொண்டிருந்த ஒரு பிள்ளையைப் பிடிப்பதற்காக மற்றவர்கள் ஓடினார்கள். பெற்றோர், இருந்த இடத்தைவிட்டு தூரத்தில் ஓடிக் கொண்டிருந்த பிள்ளையை அவர்கள் அழைத்தார்கள்.

குணவதி இருந்த இடத்தில் வயதான மூன்று கிழவிகள் அமர்ந்திருந்தார்கள். அவர்களில் ஒரு கிழவி சொன்னாள்.

‘‘இந்த பிள்ளைகள்ல ஒரு பிள்ளை இந்த ஆளுக்குப் பிறந்தது இல்ல...’’

அப்போது இன்னொரு கிழவி கேட்டாள்.

‘‘நடுவுல இருகுகே... அந்த பிள்ளையா?’’

‘‘‘அவளோட அப்பாதான் அங்கே நின்னுக்கிட்டு இருக்கிற ஆளு’’ அவள் விரலால் சுட்டிக் காட்டினாள்.’’ உங்களுக்கு கண்ணு இருக்கா இல்லியா? அந்தப் பையனைப் பார்க்குறப்பவே தெரியலியா அவனுக்கு யாரோட சாயல் இருக்குன்னு?’’

குடும்பப் பெண்கள் பேசும் பேச்சு இது. அவர்கள் இப்படிப் பேசியதும், அந்தப் பிள்ளைகளைப் பார்க்க வேண்டும்போல் இருந்தது. குணவதிக்கு அவர்களை இந்தச் சமுதாயம் மதித்துக் கொண்டுதானே இருக்கிறது.

குணவதி பிள்ளைகளையும், அவர்களின் தாய், தந்தையையும் மிகவும் நெருக்கத்தில் வைத்துப் பார்த்தாள். அவள் அந்தப் பெண்ணையும், அந்த இரண்டு ஆண்களையும் வெறித்து பார்த்தாள். அந்தப் பெண்ணின் கணவன் அவள் காதில் விழுவது மாதிரி சொன்னாள்.

‘‘இன்னைக்கு யாராவது ஆள் கிடைப்பானான்னு கடற்கரை பக்கம் வந்திருக்கா...’’

அந்தப் பெண் ஒருவகை வெறுப்புடன் அவளைப் பார்த்தாள்.

‘‘இவ தேவடியா...’’ - அந்த நண்பன் சொன்னான்.

நேரம் இருட்டியது. மேற்கு திசையில் இதுவரை இருந்த ஒளி கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தது. சில நட்சத்திரங்கள் மட்டும் ஆங்காங்கே வானத்தில் கண் சிமிட்டிக் கொண்டிருந்தன.

அவளுக்கு மிகவும் அருகில் எங்கிருந்தோ ஒரு ஆள் வந்து சேர்ந்தான். அவன் அவளைப் பார்த்து  என்னவோ கேட்டான். குணவதி அதற்கு எந்த பதிலும் கூறவில்லை. சாலையோரத்தில் நின்றிருந்த ஒரு ஜட்கா வண்டியின் கதவைத் திறந்து அவள் உள்ளே ஏறினாள். அவளைத் தொடர்ந்து அந்த ஆள் ஏறினாள்.

4

ந்த அறை காமத்தைத் தூண்டக் கூடிய விதத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

அங்கே சுவரில் நிர்வாண கோலத்தில் ஒரு பெண் வினயனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் கண்களை மூடிக் கொண்டான். அவளின் இதயக் குரலையும், வெட்கத்தைவிட்டு நின்று கொண்டிருக்கும் போக்கையும் பார்த்துக் கொண்டிருந்த வினயனுக்குத் தன்னுடைய இத்தகைய நிலையைப் பார்த்து அவள் மனதிற்குள் அழுது கொண்டிருப்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது. அவள் தன்னைக் காப்பாற்ற யாராவது வர மாட்டார்களா, தன்னிடம் இரக்கம் காட்ட ஒரு உயிர் வராதா என்று ஏங்குவதையும் அவனால் உணர முடிந்தது. இன்னொரு படத்தில் ஒரு ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் இறுகக் கட்டிப் பிடித்து அணைத்துக் கொண்டிருந்தனர். ஆணும் பெண்ணும் தங்களை மறந்து கட்டிப் பிடித்துக் கொண்டிருப்பது, முத்தம் கொடுத்துக் கொண்டிருப்பது- இவற்றையெல்லாம் ஒரு விலைமாது வீட்டில் மட்டுமே பார்க்க முடியும் என்று வினயன் நினைத்தான். காமவெறியைத் தூண்டக் கூடிய விஷயங்கள் ஒரு விலைமாது வீட்டில் மட்டுமே இருக்கக் கூடியன என்று அவனுக்குத் தோன்றியது. அழகான பஞ்சு மெத்தையில் முல்லைப் பூக்கள் தூவப்பட்டிருந்தன. வெறியைத் தூண்டக்கூடிய விதத்தில் எழுதப்பட்டிருக்கும் சில புத்தகங்கள் மேஜை மேல் வைக்கப்பட்டிருந்தன. ‘‘காம சாஸ்திரம்’’ - வினயன் படித்தான். மெத்தையில் போடப்பட்டிருந்த பூக்களில் இருந்து கிளம்பிய வாசனை அறையெங்கும் ‘‘கமகம’’வென வீசியது. தன்னுடைய தொண்டையில் ஓரு மாமிசத் துண்டு சிக்கவிட்டிருப்பதைப் போல் அவன் உணர்ந்தான். மனதில் பலவிதப்பட்ட சிந்தனைகளும் எழுந்து ஒன்றோடொன்று மோதிக் கொண்டிருந்தன. அந்த ஜன்னலுக்கு அருகில் - முந்தைய நாள் நடைபெற்ற சம்பவத்தை வினயன் நினைத்துப் பார்த்தான். அவள் அது யார் என்பதை அறிந்து விட்டிருப்பாளா? வினயன் ஜன்னல் கம்பிகளைப் பிடித்தபடி நின்றிருந்தான்.

வெளியே நடந்து வரும் ஓசை கேட்டது. வினயன் மூச்சை அடக்கிக் கொண்டு நின்றிருந்தான். கதவு திறககப்பட்டது. பட்டுப் புடவையின் சர சர சத்தம் கேட்டது. குணவதி அறைக்குள் வந்தாள். அவளிடமிருந்து புறப்பட்டு வந்த நறுமணம் வினயனின் நாசித் துவாரத்திற்குள் நுழைந்து அவனைக் கிளர்ச்சியூட்டியது. அது சிலையைப் போல அசையாமல் நின்றிருந்த வினயன் தூரத்தில் தெரிந்த ஒரு நட்சத்திரத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் மூச்சுவிடக் கூட மறந்திருந்தான்.

குணவதி கதவருகில் நின்றிருந்தாள். அவள் ஒருவித பய உணர்வில் இருந்தது மாதிரி அவனுக்குத் தோன்றியது. தான் அறைக்குள் வந்திருப்பதை அவன் அறியாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று அவள் நினைத்தாள்.

நிமிடங்கள் வேகமாக ஓடிக்கொண்டிருந்தன. அவன் தலையைத் திருப்பி குணவதியைப் பார்த்தான். அவர்களின் கண்கள் சந்தித்தன.

குணவதியின் இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. அவள் லேசாக நடுங்கினாள். வினயன் மெதுவாக நடந்து குணவதிக்கு அருகில் வந்தான். அவள் நடுங்கியவாறு சற்று பின்னால் நகர்ந்தாள்.

‘‘நான்... நான்... ரொம்பவும் நல்லவ’’ - அவள் தேம்பித் தேம்பி அழுதாள்.

யாரோ தன்னைப் பிடித்து நிறுத்தியதைப் போல் என்ன செய்வதென்று தெரியாமல் நின்றிருந்தான் வினயன்.

‘‘நான் நல்லவ’’

ஒரு விலைமாதுவின் முகமல்ல அது. அழகான கண்களும் சதைப் பிடிப்பான கன்னங்களும் - உண்மையாகவே மிகவும் அழகானவளாக அவள் இருந்தாள். அவளின் முகத்தில் தெரிந்த கலங்கமற்ற தன்மையைப் பார்த்து வினயன் ஆச்சரியப்பட்டு நின்றான். இரண்டடி பின்னால் தள்ளி நின்றான்.

‘‘நீ நல்லவளா? ஆண்கள் தொட்டு...’’

‘‘நான் சுத்தமானவள்...’’

‘‘நீயா?’’

அதற்கு அவள் எந்த பதிலும் கூறவில்லை. மனதில் தோன்றிய சில எண்ணங்களின் விளைவால் அவள் அமைதியாக நின்றிருந்தாள்.

வெளியே ரதீசன் உண்டாக்கிய சத்தம் குணவதியின் காதில் கேட்டது. அவள் அருகில் நெருங்கி வினயனைக் கட்டிப் பிடித்தாள்.

அவன் கண்களில் இருந்து இரண்டு துளி நீர் கீழே விழுந்தது.

‘‘நீங்க ஏன் அழறீங்க?’’ - அவள் வினயனின் காதில் கேட்டாள்.

‘‘நீ நல்லவதானா? சுத்தமானவதானா?’’ - வினயன் கேட்டான். அவள் அதற்கு ஒரு பதிலும் கூறவில்லை.


‘‘ரதீசனோட சத்தம் கேட்டப்போ நீ ஏன் என்னைக் கட்டிப் பிடிச்சே?’’

‘‘நீங்க யாரு?’’

‘‘நானா? நீ...’’

‘‘நான் ஒரு தேவடியா...’’

‘‘நீ முன்னாடி சொன்னது...’’

‘‘நான் நல்லவளாகவும், சுத்தமானவளாகவும் இருக்கணும்னு பிரியப்படுறேன்...’’

‘‘அப்படி நீ இருக்குறதுக்கு இடைஞ்சலா நான் வந்திருக்கேனா என்ன?’’

‘‘நிச்சயமா இல்ல. எனக்கு பன்னிரெண்டு வயது நடக்குறப்பவே நான் கெட்டுப் போனேன்.’’

‘‘பிறகு?’’

‘‘எல்லாமே போயிடுச்சு. ஒவ்வொரு ஆண் முன்னாடி நிக்குறப்பவும் நான் ஒரு நல்லவ, சுத்தமானவ, கன்னிப் பொண்ணுன்னு என் மனசுக்குள்ளே நினைச்சுக்குவேன்.’’

வினயனின் கண்கள் நனைந்தன.

‘‘நீங்க ஏன் அழறீங்க?’’ - அவள் கேட்டாள்.

‘‘உனக்காக’’

‘‘எனக்காகவா?’’

வினயனைச் சுற்றியிருந்த அவளின் கைகள் மேலும் இறுகின.

‘‘நான் ஓரு தேவடியா. இனிமையான பேச்சை வச்சு...’’

‘‘நான் ஒரு காமவெறி பிடிச்ச மனிதன் இல்ல.’’

‘‘உனக்கு இதைக் கேட்க புதுமையா இருக்கா?’’

‘‘அப்படி ஒரு ஆண் இருக்கானா என்ன?’’

‘‘ஏன்? நான் இருக்கேனே...’’

‘‘அப்ப நீங்க யாரு?’’

வினயனுக்கு என்ன பதில் கூறுவதென்று தெரியவில்லை. தான் ஒரு காமவெறி பிடித்த மனிதன் இல்லையென்றால்தான் யார்? இரவு நேரத்தில் விலைமாது இருக்கும் வீட்டைத் தேடி வந்திருக்கும் தான் எந்த உணர்ச்சியால் உந்தப்பட்டு இங்கு வந்திருக்க வேண்டும் என்று அவன் மனம் நினைத்துப் பார்த்தது.

‘‘நான் காமவெறி கொண்ட மனிதன் இல்லை. உன்னோட உடல் அழகால் தூண்டப்பட்டு நான் இங்கே வரல. அதன் மேல் எனக்கு விருப்பமும் இல்ல...’’

தன் மனதில் இருந்த எண்ணத்தை வினயன் சொன்னான். ‘‘அப்ப நீங்க, நீங்க பணம் கொடுத்தீங்களே? - அவள் கேட்டாள். வினயன் கதவைத் திறக்க முயன்று கொண்டிருந்தான்.

‘‘அய்யோ... கடவுள் மேல் ஆணையா...’’ அவள் அவனைத் தடுத்தாள். ‘‘நான் உங்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டாமா?’’ - தொடர்ந்து அவள் அவனை இறுகக் கட்டிப் பிடித்தாள்.

‘‘வேண்டாம். வேண்டாம். எனக்கு மூச்சை அடைக்குது. வினயன் அவளிடம் கெஞ்சினான். அவன் கண்களில் கனிவு தெரிந்தது.

நான் காமவெறி பிடித்த மனிதனில்லை...’’

அவளின் அணைப்பிலிருந்து தன்னை அவன் விடுவித்துக் கொண்டான்.

‘‘என்னை அவன் கொன்னுடுவான்?’’

‘‘யாரு?’’

‘‘எதற்கு?’’

‘‘உங்களை வேணும்னே கோபப்படுத்தி அனுப்பிட்டேன்னு அவன் நினைப்பான்.’’

‘‘அவன் பாக்கெட்ல பணம் போய்ச் சேர்ந்தா போதும்ல?’’ ‘‘போதாது, வர்ற எல்லாரையும் சந்தோஷப்படுத்தி, அவர்களைப் பெருமைப்படுத்தி அனுப்பி வைக்கணும். நம்மளோட திறமை என்னன்னு எல்லார்கிட்டயும் காட்டணும். அப்படின்னாத்தான் அவங்க திரும்பத் திரும்ப வருவாங்க...’’

இதைச் சொன்னபோது குணவதியின் சதைப் பிடிப்பான கன்னங்களில் கண்ணீர் ஆறென வழிந்து கொண்டிருந்தது. செக்கச் செவேலேன சிவந்திருந்த தன்னுடைய உதடுகளை அவள் மெல்ல கடித்தவாறு பொங்கி வந்த அழுகையைத் தடுத்து நிறுத்த அவள் முயற்சித்தாள்.

‘‘குணவதி...’’

‘‘ம்...’’

வினயன் அவள் விழிகளிலிருந்த வழிந்த கண்ணீரைத் அடைத்தான். அவள் வினயனின் தோள்மீது தன்னுடைய தலையை வைத்து ஒருவகை நிம்மதி உணர்வுடன் சாய்ந்து நின்றாள். அவள் தாழ்ந்த குரலில் அவனைப் பார்த்து கேட்டாள்.

‘‘இப்படி நடக்கலாமா?’’

வினயனுக்கு உண்மையிலேயே அவளின் கேள்விக்கு அர்த்தம் தெரியவில்லை.

‘‘ஆமா... நீ ஏன் அழறே?’’

பல ஆண்களும் என்னோட கண்ணீரைத் துடைச்சு விட்டிருக்காங்க’’.

‘‘நான் உன் மனசு சங்கடப்படுற மாதிரி நடக்க மாட்டேன். உன்னைத் தாங்கக் கூடிய மனிதனா என்றைக்கும் நான் இருப்பேன்.’’

வினயன் அவளை அள்ளித் தூக்கினான். அவளை அப்படியே மெத்தையில் படுக்க வைத்தான். அவன் செயல்களின் வெளிப்பாடு அவளின் முகத்தில் தெரிந்தது.

‘‘அனாதைப் பெண்ணே!’’

‘‘ஈரமான இதயத்தைக் கொண்டு என்னைக் காப்பாற்ற வந்த மனிதரே!’’

வினயன் வாசலை நோக்கி நடந்தான்.

‘‘கதவை திறங்க’’ - அவன் உரத்த குரலில் சொன்னான். ரதீசன் கதவைத் திறந்தான்.

வினயன் திரும்பிப் பார்த்தான். ‘‘நீங்க சொன்னது எல்லாம் உண்மைதானா?’’ - குணவதியின் விழிகள் கேட்டன. ‘‘என் கைகள் உன்னை எந்நாளும் தாங்கும்’’- வினயனின் பார்வை சொன்னது. அடுத்த நிவீடம் அவன் வேகமாக மறைந்தான்.

குணவதி எழுந்து ஜன்னலருகில் போய் நின்றாள். அந்த இருட்டில் ஒரு நட்சத்திரத்தைக் கூட அவளால் பார்க்க முடியவில்லை.

5

தீசன் அங்கு இல்லை. குணவதி மட்டுமே இருந்தாள்.

ஒருபெண் அப்போது உள்ளே வந்தாள். அந்தப் பெண்ணைப் பார்த்ததும் மனதிற்கள் பதைபதைத்த குணவதி இருந்த இடத்தை விட்டு எழுந்து நின்றாள்.

வந்த பெண் நல்ல அழகியாக இருந்தாள். அவள் அழுது கொண்டிருந்தாள். என்றாலும் அப்போதும் அவள் முகம் மிகவும் அழகானதாகவே இருந்தது. அவள் குணவதியைப் பார்த்துக் கேட்டாள்.

‘‘இங்கே வந்த என்னோட கணவர் எங்கே?’’

அவள் கேட்ட கேள்வியில் அர்த்தம் புரியாமல் விழித்தாள் குணவதி. அவள் எதுவுமே பேசாமல் பொம்மையைப் போல கொஞ்சமும் அசையாமல் நின்றிருந்தாள். அந்தப் பெண் தான் கேட்ட கேள்வியையே மீண்டுமொருமுறை கேட்டாள். அப்போதும் குணவதி எந்த பதிலும் கூறவில்லை. அவ்வளவு தான் - அந்தப் பெண் வாய் விட்டு அழ ஆரம்பித்து விட்டாள்.

‘‘அய்யோ... என் குழந்தை... அவர் எங்கே? என் மகள்...’’

குணவதியும் அவளுடன் சேர்ந்து அழுதாள். வந்த பெண் தன்னுடைய மார்பு மீது இரண்டு மூன்று முறை அடித்துக் கொண்டாள்.

‘‘என் கணவர் எங்கே? துரோகி... எங்கே அந்த ஆளை நீ ஒளித்து வச்சிருக்கே? என் மகள் சாகுறு நிலையில் இருக்குறா. அய்யோ....’’

‘‘என்ன சொல்றீங்க?’’

‘‘நீ எல்லாத்தையும் நாசம் பண்ணிட்டே. ஒரு குடும்பத்தையே அழிச்சு குட்டிச் சுவராகிட்டே எவ்வளவு பெரிய பாவத்தை நீ பண்ணியிருக்கே தெரியுமா? அவர் குடும்பத்தை எவ்வளவு நல்லா - கவனமெடுத்து பார்க்கக் கூடிய மனிதரா இருந்தாரு. நீ அவரோட மனசைக் கெடுத்துட்டே! சரி... அது இருக்கட்டும். எங்கே அந்த ஆளு. நான் வேணும்னா அவரை உனக்கே விட்டுத் தந்துர்றேன். என் மகள் சாக பிழைக்கக் கிடக்குறா. அவ கடைசி முறையா தன்னோட அப்பா முகத்தை ஒரு தடவை பார்க்கப் பிளீயப்படுறா. நான் உனக்காக எது வேணும்னாலும் செய்றேன்.’’

அவளின் கஷ்ட நிலையைப் பார்த்து குணவதியின் இதயத்தில் பயங்கர வேதனை உண்டானது. ஆனால், அந்தப் பெண் என்ன சொல்கிறாள் என்பதைத்தான் குணவதியால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.


 சாகும் நிலையில் இருக்கும் மகள், காணாமல் போன கணவன், கவலையில் சிக்கிக் கிடக்குமச் தாய் - இவர்களுக்குள் இருக்கும் உறவுகளை குணவதியால் சரிவர புரிந்து கொள்ள முடியவில்லை. வெளியில் சொல்ல முடியாத ஏதோ சில ரகசியங்கள் இதற்குப் பின்னால் மறைந்திருக்கின்றன என்பது மட்டும் உண்மை.

ஆனால், குணவதி ஆத்மார்த்தமாகவே அந்தப் பெண்ணுக்காக பரிதாபப்பட்டாள். அவள் சிந்திய கண்ணீர் கூட உண்மையானது தான்.

‘‘அய்யோ... என் கணவர் எங்கே? என் மகள் இப்போ இறந்தாலும் இறந்திருக்கலாம்.

‘‘இங்க பாருங்கம்மா...’’- குணவதி தயங்கியவாறு அழைத்தாள். அதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியாமல் அவள் விழித்தவாறு நின்றிருந்தாள். அந்தப் பெண்ணின் கவலை போகும்படி சில ஆறுதல் வார்த்தைகளை அவள் சொல்ல நினைத்தாள்.

அந்தப் பெண் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தாள்.

‘‘கடவுள் சத்தியமா சொல்றேன்...’’- அந்தப் பெண் நெஞ்சே வெடித்துப் போகிற மாதிரி அழுது கொண்டு சொன்னாள்.

‘‘அய்யோ... என் மகளே. நீ உன் அப்பாவைப் பார்க்காமலே சாகப் போறியா? அப்பா அப்பான்னு எத்தனை தடவை தான் நீ அழைக்கிறது. உனக்க அப்பான்னு ஒரு ஆளு இல்லவே இல்ல... துரோகி. இதை எப்படி நான் தாங்குவேன்?’’

‘‘உங்க மகளோட அப்பா எங்கே போயிருக்காரு?’’ குணவதி கேட்டாள்.

‘‘எங்கே போயிருக்காரா? தேவடியா... உன் அறைக்குள்ள அந்த ஆளை ஒளிச்சு வச்சுக்கிட்டு என்கிட்டயே ஒண்ணுமே தெரியாதது மாதிரி கதை விடுறியா? நீ அந்த ஆளை உன் உடம்பைக் காட்டி மயக்கிட்டே எங்க குடும்பத்தை படுகுழியில் தள்ளிட்டே சாகப்பிழைக்கக் கிடைக்குற என்னோட மகள்... அப்பா அப்பான்னு கூப்பிட்டுக்கிட்டு இருக்கா. அப்பவாவது...’’

அந்தப் பெண பற்களை ‘‘நற நற’’வென கடித்தாள். தன்னுடைய தலையில் கையை வைத்து குணவதியைப் பார்த்து சாபமிட்டாள். ‘‘நீ நாசமாப் போக...’’

அவளின் சாப வார்த்தைகளை கேட்டு குணவதி நடுங்க ஆரம்பித்தாள். சற்று பின்னால் நகர்ந்து நின்றாள். அந்தப் பெண் இடும் சாபம் ஒருவேளை பலித்தாலும் பலிக்கலாம். தான் இதுவரை செய்த புண்ணியங்கள் எல்லாவற்றுக்கும் மதிப்பே இல்லாமல் போய் விடுமோ என்று அவள் பயந்தாள். அந்தப் பெண்ணின் கால்களில் விழுநன்து இதுவரை நான் ஏதாவது தப்புகள் செய்திருந்தால், அவற்றையெல்லாம் மன்னித்து விடும்படி வேண்டுகோள் விடுத்து அவளின் கருணையை யாசித்துப் பெற்றால் என்ன என்று அவள் நினைத்தாள். அந்தப் பெண் இட்ட சாபம் குணவதியின் மனதை மிகவும் வேதனைப்படுத்தியது. தன் மீதே அவளுக்கு ஒரு குற்ற உணர்வு உண்டானது. அவள் பாதிக்கப்படும்படி நான் நடந்திருக்கலாம். அவளின் இந்தக் கவலைக்கெல்லாம் காரணம் தானாக இருந்திருக்கலாம். ஆனால், அப்படித் தான் செய்த தவறு என்ன என்பதுதான் அவளுக்குப் புரியவில்லை. ஆனால், தன் மீது தப்பு இருக்கிறது என்பது மட்டும் அவளுக்குத் தெரிந்தது.

‘‘உனக்கு இதயம்னு ஒண்ணு இருக்கா? நீயும் ஓரு பெண்தானே?’’ அந்தப் பெண் அவளைப் பார்த்து கேட்டாள்.

‘‘நான் ஒரு பெண். என்னை நீங்க பொறுத்துக்கணும்.’’

‘‘நீ ஒரு பெண் கிடையாது. நீ ஒரு ராட்சஸி. இந்த மாதிரி எத்தனை  குடும்பங்களை நீ அழிச்சிருப்பே.’’

‘‘நான் எவ்வளவோ பாவங்களைச் செய்தவள். நான் ஒரு தேவடியா...’’

‘‘என் மகள் சாகுறதுக்கு முன்னாடி அவளோட அப்பாவை ஒரு தடவையாவது பார்க்கணும்...’’

‘‘நீங்க யாரைச் சொல்றீங்க?’’

‘‘அய்யோ... நீ எதற்காக இந்த நிமிடத்திலும் என்னை இந்த அளவுக்கு காலால மிதிச்சு சந்தோஷப்படுறே. நான் என் மகள் இருக்குற இடத்துக்கு உடனே போயாகணும். நான் பெத்த மகள் அவ...’’

‘‘இங்க பாருங்க... நான்...’’

‘‘உன்னோட அறையைக் கொஞ்சம் திறக்குறியா? அங்கேதான் நீ என் கணவரை மறைச்சு வச்சிருக்கே.

‘‘உங்க கணவர்...’’

‘‘ராமசரன்...’’

குணவதி ஞாபகப்படுத்திப் பார்த்தாள். அப்படிப்பட்ட பெயரைக் கொண்ட ஒரு மனிதனை அவள் சந்தித்ததாக அவளுடைய ஞாபகத்தில் இல்லை.

‘‘அந்த பெயரைக் கொண்ட ஒரு ஆள் இங்கே இல்ல...’’

‘‘உன் கழுத்துல ஒரு சங்கிலி இருக்குதே. அது என் மகளுக்காக என் கணவர் செய்தது...’’

குணவதியால் எவ்வளவு தான் முயன்றாலும் அந்த ஆள் யார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. அவளின் கழுத்திலும் உடலிலும் இந்த மாதிரி எவ்வளவு நகைகளை ஒவ்வொருவரும் அணிவித்திருக்கிறார்கள்.

அவள் சொன்னாள். ‘‘எனக்குச் சரியாக ஞாபகத்தில் இல்லை.’’

‘‘சாவு கிராக்கியே! நீ ஒரு பெண்ணா? அப்ப அந்த ஆளையும் நீ ஏமாத்துறே இல்ல...’’

‘‘இப்படியெல்லாம் பேசாதீங்க. நான் ஏற்கனவே நரகத்துல கிடந்து தவிச்சிக்கிட்டு இருக்கேன்.’’

‘‘உன் கிட்ட பேசி பிரயோஜனம் இல்ல. நான் புறப்படுறேன். இதற்கான பலனை நீ அனுபவிப்பே...’’

அந்தப் பெண் அந்த இடத்தை விட்டு நீங்கினாள்.

நடைபெற்ற சம்பவங்கள் முழுவதையும் குணவதி நினைத்துப் பார்த்தாள். அந்தக் குடும்பம் இப்படி சின்ன பின்னமாகிப் போய் அழிவுப் பாதையில் நின்று கொண்டிருப்பதற்கு காரணம் தான்தான் என்பதைப் புரிந்து கொள்ள அவளுக்கு அதிக நேரம் ஆகவில்லை. கடைசி மூச்சை விட்டுக் கொண்டிருக்கும் அந்த அன்பு மகளின் வேதனை நிறைந்த விஸீகளை அவள் மனதில் நினைத்துப் பார்த்தாள். ‘‘அப்பா.. என்னைப் பாருங்க... அப்பா... என் அப்பா... என்னைக் கொஞ்சம் நீங்க பார்க்கக் கூடாதா? என் தந்தையே... தண்ணி... அப்பா... என் நெஞ்சு...’’- இப்படி இதயத்தைப் பிழியக் கூடிய குரல் ஒலிப்பதை அவளால் கேட்க முடிந்தது. கண்ணீர் வழிய ‘‘என் அன்பு மகளே’’ என்று அழைத்தவாறு, என்ன செய்வதென்று தெரியாத ஒரு நிலையில் அவளின் தாய் அந்த மகளுக்கு அருகில் அமர்ந்திருந்தாள். ‘‘என் அப்பா...’’ என்ற குரல் மீண்டும் ஒலிக்கிறது. ‘‘மகளே என்னம்மா...? - தாயின் குரல். ‘‘அப்பாவை உடனடியா நான் பார்க்கணும்’’ - மகளின் கண்கள் மூடுகின்றன. பரிதவித்து நிற்கும் தாய், மகளின் தந்தையைத் தேடி ஒடுகிறாள். விலை மாதுவைத் தேடி வந்த அந்த தந்தை குணவதியை பார்க்கிறான். அவன் அவள் கழுத்தில் ஒர சங்கிலியை அணிவிக்கிறான்.

ஒரு குடும்பமே அழிவுப் பாதையில் நிற்கிற அளவுக்குக் காரணமாக இருக்கும் அந்த விலை மாதுவை கொலை செய்தால் என்ன என்று நினைத்தாள் குணவதி. உண்மையிலேயே ஒரு விலைமாது இந்த உலகத்தைக் கெடுக்கத்தான் செய்கிறாள்.


ஒரு விலைமாது நடத்தும் நாடகங்கள்தான் எத்தனை எத்தனை, ஒரு விலைமாதுவிடம் சரணாகதி ஆகிப்போன அந்த மனிதனுக்கு மரணத்தின் நுழைவாயிலில் நின்று கொண்டிருக்கும் தன்னுடைய மகளைப் பற்றிய ஞாபகம் கூடவா இல்லாமற் போய்விட்டது. அந்த அளவிற்கு அந்த விலைமாது அவன் ஞாபகச் சக்தியைக் கொஞ்சம் கூட இல்லாமல் செய்து விட்டாளா என்ன? விலைமாது! அவளை எதற்காக கடவுள் படைத்திருக்க வேண்டும்? உலகத்தை நாசம் செய்து கொண்டிருக்கும் அப்படிப்பட்ட ஒரு பெண் இங்கு அவசியம்தானா?

அப்போதுதான் குணவதிக்கு தானும் ஒரு விலைமாது தானே என்ற ஞாபகமே வந்தது. அருமையான, உன்னதமான உறவுகள் சீர்குலைந்து போவதற்குத் தானும் கூட பல நேரங்களில் காரணமாக இருந்திருப்பதாக அவள் அப்போது நினைத்துப் பார்த்தாள். கழுத்தில் இப்போது அணிந்திருக்கும் சங்கிலியை யாரோ ஒரு மனிதன் அணிவித்திருக்கிறான், அந்தச் சங்கிலி அவன் தன்னுடைய மகளுக்காக வாங்கியது என்பதை அவள் மனம் எண்ணிப் பார்த்தது.

அந்த அளவிற்கு காமவெறி பிடித்துப் போயிருந்த மனிதன் யார்? குணவதி மனதில் ஞாபகப்படுத்திப் பார்த்தாள். ஆனால், அந்த மனிதனை அவளால் ஞாபகத்திற்குக் கொண்டு வரவே முடியவில்லை. ஆனந்தமாக வாழ்ந்து கொண்டிருந்த ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சி கெட்டுப் போன நிலைக்குத் தான் காரணமாக இருந்ததற்காக அவள் உள் மனம் அழுதது.

உண்மையிலேயே பார்க்கப் போனால் ஒரு விலைமாது என்பவள் சமுதாய துரோகிதான். அவளால் எவ்வளவு பெரிய இழப்புகள் உண்டாகின்றன. ஆண்கள் உலகத்தையே ஒரு விலைமாது கடின மனம் கொண்ட மனிதர்களாக மாற்றி விடுகிறாள். ஒரு ஆண்கூட எந்த விலைமாது மீதும் உண்மையான அன்பு கொள்வதில்லை. எல்லா ஆண்களிடமுமே இந்நிலைதான் நீடிக்கிறது. இதன் விளைவாக திருமணமான பிறகும் கூட ஒரு ஆண் தன்னுடைய மனைவி மேல் சரியான அன்பு கொள்ளாமல் இருக்கிறான். ஒரு விலைமாதுவைத் தேடி வரும் ஒரு காமவெறி பிடித்த மனிதன் எப்போதாவது அந்த விலைமாதுவின் சுகத்தைப் பற்றி மனதில் நினைத்துப் பார்த்திருக்கிறானா? தன்னுடைய காமவெறியை எப்படியாவது தணித்துக் கொள்ள வேண்டும் என்று அவன் எண்ணுகிறானே தவிர, அந்த விலைமாதுவின் மன திருப்தியைப் பற்றி என்றைக்காவது அவன் சிந்தித்துப் பார்த்திருக்கிறானா? ஒரு விலைமாதுவிடம் அப்படி நடந்து கொள்ளக்கூடிய ஒரு மனிதன் மனைவியிடம் கூட அப்படித்தான் நடந்து கொள்வான். விளைவு - அவன் இல்லற வாழ்க்கை துன்ப மயமான ஒன்றாக மாறி விடுகிறது. ஒரு விலைமாது மீது அவன் கொள்ளும் வெறுப்பு, அவள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அவன் காட்டும் சிரத்தையின்மை எல்லாமே மரணம் வரை அவன் மனதில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தன்னைப் பற்றி, தன்னுடைய நலனைப் பற்றி, இதுவரை தன்னைத் தேடிவந்த ஒரு ஆணாவது நினைத்துப் பார்த்திருப்பானா? பெண்களின் மனதைப் பற்றி அவன் தன்னுடைய மனதில் என்னதான் நினைத்துக் கொண்டிருப்பான். தன்னுடைய மனைவியைக் கூட அவன் சந்தேக மனப்பான்மையுடன்தானே பார்க்கிறான்.

எப்படிப் பார்த்தாலும் தான் ஒரு சமுதாய துரோகிதான் என்ற முடிவுக்கு அவள் வந்து விட்டாள். தன்னை நாடி வரும் ஒவ்வொரு ஆணையும் தான் ஒரு மந்திர சக்தியைப் போல அவர்களைப் பிடித்துக் கட்டிப் போட்டு விடுவதாக அவள் உணர்ந்தாள். அன்பு மனம் கொண்ட தந்தையை, பாசம் கொண்ட கணவனை - உலகத்திற்கும் அவர்களுக்கும் எந்தவித பிரயோஜனமும் இல்லாத மனிதனாக அவள் மாற்றி விடுகிறாள். மொத்தத்தில் - ஒரு குடும்ப வாழ்க்கையின் புனிதம் அவளால் கெட்டுப் போய் விடுகிறது.

இதைப் போல எத்தனைக் குழந்தைகள் தந்தை பாசத்திற்காக ஏங்கிக் கொண்டிருப்பார்கள். எத்தனை மனைவிமார்கள் கணவனால் ஒழுங்காக கவனிக்கப்படாமல் இருப்பார்கள். இதற்கெல்லாம் காரண கர்த்தாவாக இருக்கும் ஒரு விலைமாதுவிற்காவது அந்த ஆண்களின் அன்பும், பாசமும் கிடைக்கிறதா? அதுவும் இல்லை.

சங்கிலியைப் பரிசாகத் தந்த அந்த மனிதன் திடீரென்று குணவதியின் ஞாபகத்தில் வந்தான். மனைவி இல்லாமல் தான் தொடும் முதல் பெண்ணே அவள்தான் என்று அன்று வந்தபோது தன்னிடம் அவன் சொன்னதை குணவதி நினைத்துப் பார்த்தாள்.

அந்தக் கணவனை இப்போது காணவில்லை என்று வந்து நின்று கொண்டிருக்கிறாள் அவன் மனைவி. ஆனால், அவன் தன்மீது அன்பு வைக்கவில்லை என்பதை குணவதி நன்றாக அறிவாள். ஒவ்வொரு முறை வரும்போதும், நண்பர்கள் சிலரை அழைத்துக்கொண்டுதான் அவன் வருவான். ஒருமுறை பயங்கர கோபம் உண்டாகி, அவன் அவள் முகத்தில் காறித் துப்பினான். அந்த அளவிற்கு அவள் மேல் அவனுக்கு வெறுப்பு. பல நேரங்களில் அவளைப் பற்றி மற்றவர்களிடம் எந்த அளவிற்கு கிண்டலும் கேலியுமாகப் பேச முடியுமோ, அவ்வளவும் பேசியிருக்கிறான் அவன். அங்கு அவன் வந்து எத்தனையோ நாட்கள் ஆகிவிட்டன. வேறு ஏதாவது ஒரு விலைமாது இருக்கும் இடத்தைத் தேடி அவன் இப்போது போயிருக்கலாம். ஆனால், இந்த விஷயத்தில் ஒரு ஈடுபாட்டையும், ஈர்ப்பையும் உண்டாக்கியது தான்தான் என்பதையும் அவள் நினைத்துப் பார்த்தாள். மனைவியையும், பிள்ளைகளையும் ஒரேடியாக மறந்து வாழ்க்கையையே அலட்சியமாக எண்ணி ஒரு மனிதன் வாழ முயல்வதற்கு மூல காரணமாக இருந்து இந்த உலகத்தையே நாசம் செய்து கொண்டிருக்கும் விலைமாது என்பவள் ஒரு அசிங்கமான படைப்புதான் என்ற எண்ணத்திற்கே குணவதியால் வர முடிந்தது.

6

ன்றாக உடைகள் அணிந்து அறைக்குள் அவள் வினயனுக்காக காத்திருந்தாள்.

வேறெங்கும் போக வேண்டும் என்ற எண்ணம் இல்லாத அவள் மீது கருணையும் பரிவும் கொண்ட வினயன் அறைக்குள் வந்தான். தன்னுடைய இரண்டு கைகளையும் முன்னால் நீட்டியவாறு ஒரு தாயைத் தேடி ஆசை மேலோங்க ஓடிச் செல்லும் குழந்தையைப் போல அவள் ஓடி அவன் மேல் சாய்ந்தாள். வினயன் அவள் தலையை மார்போடு இறுக அணைத்துக் கொண்டான்.

‘‘என் ஆசைக் கண்ணே1’’

வினயன் அவளின் நெற்றியில் முத்தமிட்டான். அவன் சட்டையை அவள் கண்களிலிருந்து வழிந்த நீர் ஈரமாக்கியது.

நிமிடங்கள் ஒன்று, இரண்டு, மூன்று என்று வேகமாக ஓடிக் கொண்டிருந்தன. குணவதி தன்னுடைய துயரங்கள் நிறைந்த வாழ்க்கையை முழுமையாக அந்தக் கணத்தில் மறந்தாள். தான் ஒரு சுத்தமான கன்னிப்பெண் என்பதாக அவள் உணர்ந்தாள். அந்த எண்ணம் அவளுக்கு ஒரு புதுவித உற்சாகத்தையும், தன்னம்பிக்கையும் அளித்தது.


அந்தச் சிந்தனையுடன் வினயனின் அரவணைப்பில் அவள் தன்னையே மறந்து போய் நின்றிருந்தாள். நிமிடங்கள் வேகமாக ஓடிக் கொண்டிருந்தன.

‘‘முந்தா நாள் ராத்திரி...’’- அவள் கேட்டாள்.

‘‘ஆமா... நான்தான்...’’

‘‘சரியான ஆள்தான்...’’

‘‘என்னடா சொன்னே கண்ணு?’’

‘‘உலகத்துக்கே பெரிய களங்கமாக இருக்குற, கேவலமான, ஒழிக்கப்பட வேண்டிய தேவடியா மேல யாருக்காவது காதல்னு ஒண்ணு வருமா?’’

‘‘நான் உன்னைக் காதலிக்கல.’’

‘‘அப்படியா? இருந்தாலும் நான் உங்களை விடுறதா இல்ல...’’

குணவதி அவனை மேலும் இறுகக் கட்டியணைத்தாள்.

‘‘என்னை யாரும்... நான் உங்களை நம்புறேன். நான் உங்களை விட மாட்டேன். என்னை நீங்க உங்க கையால கொல்லணும்.’’

வினயன் அதற்குப் பதில் எதுவும் கூறவில்லை. மனதிற்குள் என்னென்னவோ எண்ணங்கள் அலை மோதி திக்கு முக்காடிக் கொண்டிருந்தன. அவனால் எதுவுமே பேச முடியவில்லை. என்ன சொல்வது என்றும் தெரியவில்லை.

‘‘நான் எவ்வளவோ பேர்கிட்ட கெஞ்சிக் கூத்தாடிக் கேட்டிருக்கேன்.’’

‘‘என்ன கேட்டே?’’

‘‘என் மேல் அன்பு செலுத்துங்க, கருணை காட்டுங்கன்னு...’’

‘‘என்கிட்ட இருந்து நீ என்ன எதிர்பார்க்குற?’’

‘‘என் இதயம் வெந்து சாகுது. அதுக்கு நீங்க மருந்தா இருந்தா போதும். என்னைத் தேடி வந்த ஆயிரம் பேர்ல ஒரு ஆளுதானே நீங்க...?’’

‘‘குணவதி... நீ சந்தோஷமா ஒரு நிமஷம் சிரி... நான் கொஞ்சம் பாக்குறேன்.’’

அவளின் தாடையைப் பிடித்து வினயன் அவளுடைய தலையை உயர்த்தினான்.

‘‘என்ன நினைச்சு நீங்க இங்கே வந்தீங்க?’’

‘‘வாய்க்கு வந்தபடி ஏதாவது கேள்விகள் கேட்டுக்கிட்டு இருக்காம, என் இதயத்துக்குள்ளே என்ன இருக்குன்னு பார்க்குறதுக்கு வழியைப் பாரு.’’

‘‘அது படு வேகமாக துடிச்சிக்கிட்டு இருக்கு!

குணவதி சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு தொடர்ந்தாள்.

‘‘ நீங்களும் மனிதர்தானே’’.

‘‘ஆமா...’’

‘‘என்னை நினைச்சு நீங்க ஏன் அழணும்?’’

‘‘ரதீசனைப் பார்த்து உனக்கு பயம் கிடையாதா? எனக்கு அவனைப் பார்த்து பயம்.. தெரியுமா?’’

‘‘நீங்க அழுதது பொய்யானது... நான் சொல்றேன்.’’

‘‘நான் ஒரு காமவெறி பிடிச்ச ஆள் இல்ல...’’

‘‘என்னை நீங்க காதலிக்க?’’

‘‘எனக்குத் தெரியாது.’’

‘‘என்கிட்ட உங்களுக்குத் திருப்பித் தர ஒண்ணுமே கிடையாது.’’

‘‘நான் உனக்கு எது எது வேணுமோ எல்லாத்தையும் தர்றேன்.’’

‘‘ஒரு பெண்ணுக்கு அவளோட சந்தோஷம் எவ்வளவு முக்கியம் தெரியுமா?’’

‘‘நான் உன்னோட...’’

‘‘நான் என்னையே முழுசா உங்கக்கிட்ட கொடுத்துட்டேன். மத்தவங்கக்கிட்ட இருந்து...’’

‘‘நீ சந்தோஷமா சிரிக்கிறதை நான் பார்க்கணும்...’’

மேஜை மேலிருந்த தட்டில் இருந்த ஒரு பூ மாலையை குணவதி எடுத்தாள். வினயன் தலையைக் குனிந்து அவள் முன் நின்றிருந்தான். அவள் கையிலிருந்த அந்த மாலையை அவனுடைய கழுத்தில் அணிவித்தாள்.

‘‘இப்போ சொல்லுங்க... நான் உங்களுக்கு யார்?’’

‘‘நீயா? நீயா?’’

வினயன் என்ன சொல்வது என்று தெரியாமல் நின்றான். அவள் தனக்கு யார்? அவனுக்கும் அவளுக்குமிடையே இருக்கும் உறவுக்குப் பெயர் என்ன?

‘‘நீ எனக்கு மேலானவள்...’’

‘‘இல்ல... நான் உங்களோட மனைவி.’’

அதைக் கேட்டு வினயன் நடுங்கினான்.

‘‘ஆமா... ஏன் நீங்க நடுங்குறீங்க?’’

வினயன் அதற்கு எந்த பதிலும் கூறவில்லை.

‘‘நான் உங்க கழுத்துல மாலை போட்டேன். நீங்க நல்லா இருக்கணும்னு மனப்பூர்வமா நினைக்கக் கூடியவ நான். உங்களோட சந்தோஷத்துல எனக்கும் பங்கு இருக்கு. நான் உங்களோட சந்தோஷத்துல எனக்கு பங்கு இருக்கு. நான் இப்போ ரொம்பவும் பாதுகாப்பா இருக்குறதா உணர்கிறேன். இப்போ எனக்குக் கல்யாணம் ஆயிடுச்சு... நான் இப்போ ஆடலாம், பாடலாம்...’’

தான் ஆசைப்பட்ட விளையாட்டுச் சாமான்கள் கிடைத்தால் ஒரு குழந்தை எந்த அளவிற்கு சந்தோஷப்படுமோ, அந்த மாதிரி மகிழ்ச்சிப் பெருக்கெடுத்து துள்ளிக் குதித்தாள் குணவதி. அதைப் பார்த்து ஆனந்தவயப்பட்டு நின்றான் வினயன். அவள் பாட்டுப் பாடினாள். இதைப் போன்ற இனிமையான குரலில் சுருதி சுத்தமான ஒரு பாட்டை இதற்கு முன்பு அவன் கேட்டதே இல்லை என்பதை உண்மை. வினயன் பாட்டைக் கேட்டு உணர்ச்சி வசப்பட்டு நின்றான். அவளின் சிரிப்பு அவன் இதயத்தில் குளிர்ச்சியை உண்டாக்கியது.

‘‘மார்வாடிகளோட நடனத்தைப் பார்க்கணுமா?’’

வினயன் தலையை ஆட்டினான்.

அவள் ஆடினாள். கலைத் தன்மை பரிமளிக்க அவள் ஆடிய நடனத்தைப் பார்த்து அவன் மெய்மறந்து நின்றான். பஞ்சாபி, பெங்காளி என எல்லா வகை நடனங்களையும் அவள் ஆடினாள். எல்லாவற்றிலும் அவள் பிரமாதமான திறமையைக் கொண்டிருந்தாள். அவள் நடனங்களை ஆடும்போது அவளின் கைதேர்ந்த அனுபவத்தையும், முழுமையான ஈடுபாட்டையும் அவனால் உணர முடிந்தது. வினயன் தன்னையே முழுமையாக மறந்து போய், பரமானந்த நிலையில் நின்றிருந்தான்.

இளங்கொடியைப் போன்ற அவள் ஆடி ஆடி களைத்துப் போய், மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கினாள். அவளால் ஓழுங்காக மூச்சு விட முடியவில்லை. அதனால் சில இடங்களில் அவள் பாட்டுப் பாடும் போது இடறியது. அவளின் கன்னத்தில் வியர்வை அரும்பி வழிந்து கொண்டிருந்தது. சிவந்த தன் உதடுகளை நாக்கால் ஈரமாக்கிக் கொண்ட அவள் தான் சகஜ நிலையில் இருப்பது மாதிரி காட்டிக் கொள்ள முயன்றாள்.

‘‘என்னால் இனிமேல் முடியாது. கால் ஒரேடியா வலிக்குது’’ - அவள் கட்டிலில் போய் படுத்தாள்.

‘‘இப்படி ஆடணும், உடற்பயிற்சி செய்யணும்னு யாராவது உன்கிட்ட சொன்னாங்களா என்ன?’’

‘‘நீங்க அகலமா கண்களைத் திறந்து வச்சு ரசிச்சீங்க. அதற்கு நான் நன்றியோட இருக்க வேண்டாமா? இங்கிலீஷ் நடனம் ஏதாவது பார்க்கணுமா?’’

‘‘நான் ஒண்ணையும் பார்க்க வேண்டாம்’’ - வினயன் மெத்தையில் போய் படுத்தான்.

‘‘இங்க பாரு... எப்படி வேர்க்குதுன்னு.’’

‘‘உஷ்ணம் அதிகமா இருக்கு. கொஞ்சம் விசிறி விட்டால்தான் சரியா வரும்.’’

குணவதி எழுந்து தன்னுடைய நெஞ்சோடு ஒட்டிக் கிடந்த ரவிக்கையை நீக்கினாள். வினயன் அவளுக்கு விசிறி விட்டான்.

சுகமாக வீசிய காற்றின் சுகத்தை அனுபவித்த அவள் அப்படியே தன்னை மறந்து உறங்கிப் போனாள். வினயன் அதற்குப் பிறகும் கூட அவளுக்கு விசிறி கொண்டுதானிருந்தான்.

தன்னை இதுநாள் வரை அலைக்கழித்துக் கொண்டிருந்த கவலைகளையெல்லாம் ஒரு மூலையில் தூக்கியெறிந்து விட்டு, அவள் எதிர்காலத்தைப் பற்றிய இனிய கனவுகளுடன் ஒரு குழந்தையைப் போல் தூங்கிக் கொண்டிருந்தாள்.

மரணம் என்ற மறுகரையை அடைவதற்கு முன்னால் அவள் எத்தனை நெருப்பு எல்லைகளைத் தாண்டிச் செல்ல வேண்டியிருக்கிறது என்று நினைத்துப் பார்த்தான் வினயன்.


அவள் எந்தவித கவலையும் இல்லாமல் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கிறாள். குணவதியின் மார்புப் பகுதி அவள் ஒவ்வொரு முறை மூச்சு விடுகிறபோதும் மேலும் கீழுமாய் ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறது. அவளின் உதடுகள் அழகாகவும் கவர்ச்சியாகவும் பார்ப்போர் மனதைக் கொள்ளை கொள்ளக் கூடிய விதத்திலும் இருந்தன. கணவனுக்கு அருகில் படுத்து உறங்கிக் கொண்டிருக்கும் அன்பு மனைவி அவள். அவள் ஓரு விலைமாது அல்ல.

குணவதியின் முகத்தையே வினயன் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கை ஒரு இயந்திரத்தைப் போல இப்போதும் விசிறியை வீசிக் கொண்டிருந்தது. எவ்வளவு கஷ்டங்களை இதுவரை அவள் அனுபவித்திருக்கிறாள். அவ்வளவு கஷ்டங்களையும் தாங்கிக் கொள்ள வேண்டுமென்றால் அதற்கு எந்த அளவிற்கு பொறுமை வேண்டும்? எவ்வளவு பேர்களுடன் இதுவரை அவள் நல்ல முறையில் பேசியிருப்பாள். எத்தனைப் பேர்களுடன் அவள் சண்டை போட்டிருப்பாள். கண்களில் கண்ணீர் மல்க எத்தனைப் பேரின் ஆசைக்கு அவள் அடி பணிந்து போயிருப்பாள். அவள் மனதிற்குள் எத்தனை வினோதமான சம்பவங்களைப் பற்றிய நினைவுகள் இப்போது உறங்கிக் கொண்டிருக்கும். இந்த இளம் வயதிலேயே உலகத்திலுள்ள எல்லாவித கஷ்டங்களையும் அவள் அனுபவித்து விட்டாள். ஆனால், அந்த கஷ்டங்களின் அறிகுறி  கொஞ்சங்கூட இல்லாமல் இப்போது அவள் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கிறாள். தூக்கம் என்றால் என்ன? வினயன் சிந்தித்துப் பார்த்தான். சொல்லப்போனால் அது மரணத்தின் இன்னொரு பெயர்தானே? சுகத்தைத் தேடுபவர்கள் அதைச் சாபமிடுகிறார்கள். கவலையில் மூழ்கிக் கிடப்பவர்கள் அதை வாழ்த்துகிறார்கள்.

அவள் அதரங்கள் மிகவும் அழகாக இருந்தன. ‘‘நான் உங்க மனைவி’’ என்று அவள் சொல்லாமல் சொல்லுவதைப் போல் இருந்தது. கற்பு என்பது பெண்களின் புனிதத்தைக் காப்பாற்றக்கூடிய ஒரு மந்திரச் சொல்லா? பெண்களுக்காக உண்டாக்கப்பட்ட ஒரு நரகம்தான் அந்த வார்த்தை என்று சில பெண்கள் கூறுவதை வினயன் நினைத்துப் பார்த்தான். அவள் மனைவி. யாருக்கு மனைவி?

குணவதி நீண்ட ஒரு பெருமூச்சு விட்டவாறு உடம்பை லேசாக முறுக்கியவாறு சாய்ந்து படுத்தாள். அவள் தூக்கம் கலைந்து எங்கே அவளின் நிம்மதி பறிபோய் விடப் போகிறதோ என்று பயந்த வினயன் தன் கையில் இருந்த விசிறியால் மேலும் வேகமாக வீசினான். அவள் தன் கையை எடுத்து வினயனின் மடியில் போட்டாள்.

குணவதி தூக்கம் கலைந்து மெல்ல கண்களைத் திறந்து வினயனைப் பார்த்தாள். அவள் விழிகளில் பயம் நிழலாடியது மாதிரி இருந்தது.

‘‘யாரு?’’ - அவள் கேட்டாள்.

‘‘நான் தான் குணவதி...’’

‘‘நீங்க தூங்கலியா?’’

‘‘இல்ல...’’

‘‘இவ்வளவு நேரமும் எனக்கு விசிறியால் வீசிக்கிட்டா இருந்தீங்க?’’

‘‘ஆமா...’’

‘‘கை வலிக்கலியா?’’

‘‘இல்ல...’’

குணவதி கைகளை உயர்த்தி வினயனின் முகத்தைப் பற்றி தன்னுடைய முகத்தோடு சேர்த்து இறுக அணைத்தாள். அவள் அவன் உதடுகளில் ஆழமாக முத்தம் தந்தாள்.

7

வினயனுக்கு அருகில் தளர்ந்து போய் உறங்கிக் கொண்டிருந்தாள் குணவதி. அவள் கையில் அவன் தன் தலையை வைத்து படுத்திருந்தான். வினயனுக்கு உறக்கமே வரவில்லை. தாயை ஒட்டிப் படுத்திருக்கும் குழந்தையைப் போல அவளுடன் மிகவும் நெருக்கமாக படுத்திருந்த அவன் அவள் முகத்தையே பார்த்தவாறு படுத்திருந்த இடத்தை விட்டு எழுந்தான். அவள் இன்னும் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தாள். உலகையே மறந்து எந்தவித கவலையும் இல்லாமல் அவள் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தாள்.

‘‘என் அருமை மனைவியே?’’

வினயன் இப்படி அழைத்தபோது உண்மையிலேயே நடுங்கினான். அவள் ஒரு விலை மாது. அவனைப் பொறுத்தவரை அவனுக்கு அவள் யார்?

மனைவி

நிச்சயமாக இல்லை. அப்படி ஒரு கோணத்தில் அவளை நினைத்துப் பார்க்க அவன் தயாராக இல்லை. அவளின் விரிந்து கிடந்த கூந்தல் மெத்தை மேல் பரந்து கிடந்தது. அவளின் மார்புப் பகுதி எந்தவித ஆடையும் இல்லாமல் நிர்வாணமாக இருந்தது. வினயன் அவளின் அணைப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டான். அவனின் மனம் பலவித சிந்தனைகளிலும் மூழ்கி சிக்கிக் அல்லல்பட்டுக் கொண்டிருந்தது. அவள் தன்மீது கொண்டிருக்கும் அளவற்ற நம்பிக்கையை அவனால் உணர முடிந்தது. அதை நினைத்துப் பார்த்தபோது, அவனையும் மீறி அவன் கண்களில் நீர் துளிர்த்தது.

அருமை மனைவி

அவள் நிச்சயமாக அவன் மனைவி அல்ல. இருந்தாலும் அவன் தன்னை முழுமையாக அவளிடம் ஒப்படைத்திருக்கிறானே. அவள் இனிமேல் எப்படிப்பட்ட நிலையைத்தான் கை கொள்வது?

எப்படிப் பார்த்தாலும் அவள் தன்னுடைய மனைவி அல்ல என்ற முடிவுக்கே வந்தான் வினயன். தன்னைப் பார்த்ததும், அவளுக்கு நிம்மதியும் ஆறுதலும் கிடைத்தது என்பதென்னவோ உண்மை. தன்னுடைய கைகளுக்குள் தன்னை அடக்கிக் கொண்டு அவள் எந்தவித கவலையும் இல்லாமல் இருக்கிறாள் என்பதையும் அவன் புரிந்து கொண்டான். தானே அவளை வீணாக வீசி எறிந்தால் நன்றாக இருக்குமா? அப்படிச் செய்தால் அது ஒரு நல்ல செயலாக இருக்குமா? அவளிடம் இனிமேல் இப்படிப்பட்ட வேதனைச் சம்பவங்களைத் தாங்கிக் கொள்ளக் கூடிய அளவிற்கு சக்கி இருக்கிறதா? எது எப்படியோ- அவளுக்கு உதவி செய்ய முன் வந்திருக்கிறேன் என்பது மட்டும் உண்மைதானே. அதுகூட உண்மை இல்லை என்று கூறுவதே சரியானது. இந்த நரகக் குழியிலிருந்து அவளைக் காப்பாற்றுவதற்குத் தாய் செய்ததுதான் என்ன? அவளைக் கைகளால் தாங்கி ஆறுதலாவது தர முயற்சித்திருக்கலாமே. அப்படி எதுவுமே செய்யவில்லையே. பிறகு என்னதான் நடக்கிறது? கணக்கில்லாத அளவிற்கு கவலைகள் நிறைந்த அனுபவங்களைக் கொண்டு, கிட்டத்தட்ட பைத்தியம் பிடிக்கிற நிலைக்குத் தன்னைக் கொண்டுபோய், எந்நேரமும் கண்ணீர் விட்டுக்கொண்டு, பார்க்கும்போதே நம் மனம் சங்கடப்படும் அளவிற்கு அவள் வானத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டு அதில் ஆறுதல் தேடும் செயல் தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வானத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் நிலவைப் பார்க்கும்போது, அவள் மனதில் மண்டிக்கிடக்கும் கவலைகள் சற்று நேரத்திற்கு இல்லாமற்போகின்றன. அப்போது தன்னையும் மீறி அவளிடம் ஒரு உற்சாகம் வந்து ஒட்டிக் கொள்கிறது. அந்த மாதிரியான நேரங்களில் அவள் ஆனந்த வயப்பட்டு நின்று விடுகிறாள். தன் கவலையைப் போக்க அந்த சந்திரன் இருக்கிறான் என்று அவள் மனம் எண்ணி ஆறுதல் அடைந்து கொள்கிறது. ஆனால், சில நேரங்களில் இனம் புரியாத பயம் வந்து மனதை ஆட்சி செய்கிறபோது, சூனியமான நிலை வந்து அங்கு ஒட்டிக் கொள்கிறபோதுதான் அவளுக்கே தெரிய வருகிறது - அந்த சந்திரன் இருப்பது வெகுதூரத்தில் என்ற உண்மையே.


அதற்கு அந்த சந்திரன் என்ன செய்வான்? அவன் மேல் தவறா என்ன? இது அவளே தனக்கு உண்டாக்கிக் கொண்ட நிலைதானே. உண்மை நிலையையும், மனிதல் தோன்றும் கற்பனை நிலையையும் அவளால் பிரித்துப் பார்க்க முடியவில்லையே. அதற்காக என்ன செய்வது?- நினைக்க நினைக்க வினயனின் இதயமே மரத்துவிடும்போல் இருந்தது. அவள் கஷ்டப்படட்டும் வேறென்ன செய்ய முடியும்?

அப்படியென்றால் அவனுக்கு அவள் மீது எந்தவித ஈடுபாடோ ஈர்ப்போ இல்லையா என்ன? அந்தச் சிந்தனை வினயனின் இதயத்தின் அடித் தளத்தில் எழும்பி கொழுந்து விட்டு எரிந்தது.

எந்தவித கவலையும் இல்லாமல் அவள் தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருக்கிறாள். அவள் கட்டியிருந்த புடவை உடம்பைவிட்டு நீங்கி தாறுமாறாக கலைந்து போய்க் காணப்பட்டது. அவளின் மென்மையான ஒரு கை அவள் மார்பின் மீதும், இன்னொரு கை மெத்தையிலும் இருந்தன. அடடா... உறங்கும்போது அவள் எவ்வளவு அழகாக இருக்கிறாள்.

இந்த நிலையைப் பற்றி என்ன சொல்வது? எதுவுமே தெரியாமல் அவள் தூங்கிக் கொண்டிருக்கிறாளே, கைகளால் தட்டிக் கொடுக்கப்பட்டு தாலாட்டுப் பாடல் கேட்டு அவள் உறங்கிக் கொண்டிருக்கிறாள். அந்தத் தாலாட்டுப் பாடலுக்கு இடையே அவளைத் தட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கும் கையே நரகத்தை நோக்கி நீள்கிறது என்றால்... குணவதி தன்னுடைய நிலையைப் பற்றி எதுவுமே தெரியாமல் இருக்கிறாளே.

எது நடக்கிறதோ அதை அவள் நன்கு அனுபவிக்கட்டும் என்று தான் கூறியது சரிதானா? அவள் யார்? வினயன் தனக்குத் தானே கேட்டுக் கொண்டான். அவளுக்கு எதையெதையெல்லாம் தர வேண்டுமோ, அவற்றை அவன் தந்திருக்கிறான். அவளுக்குத் தர வேண்டிய பாக்கி என்று எதுவும் இல்லை. அந்த அழகுப் பெட்டகத்தை விட்டு தன் வேலையைப் பார்க்கத்தான் போனால் இதயத்தில் ஈரமே இல்லாத கயவர்களின் கையில் சிக்கி அவள் சின்னாபின்னமாகப் போவது உறுதி என்பதை அவன் நன்கு அறிந்தே இருந்தான். அவள் கஷ்டத்தைப் பார்த்து அவன் ஏன் அழ வேண்டும்? அப்படி அழுதது கூட ஒருவகையில் பார்த்தால் ஏமாற்றுத்தனம் தானா? ஆயிரம் பேர்களில் தானும் ஒருவன் - அவ்வளவுதானா என்று அவன் சந்தேகப்பட்டான். ஆனால், அவனுக்கு நன்றாகவே தெரியும் தான் ஒரு காமவெறி பிடித்த மனிதன் இல்லை என்ற உண்மை. ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வுதான் தன்னை அவளை நோக்கிச் செலுத்தி கொண்டு வந்திருக்கிறது என்பதையும் அவன் நன்கு தெரிந்தே வைத்திருந்தான்.

‘‘டேய் கண்ணு! உன்னை நான் எந்தக் காலத்திலும் விடமாட்டேன்டா...’’

வினயன் தலையைக் குனிந்து அவளின் நெற்றியில் முத்தமிட்டான். அவன் மூடிய விழிகளில் இருந்து வழிந்த கண்ணீர் அவள் முகத்தில் விழுந்தது. குணவதியின் கைகள் வினயனின் கழுத்தை இறுகப் பற்றி வளைத்தன.

‘‘நீ எப்பவும் எந்தவித கவலையம் இல்லாமல் நிம்மதியா உறங்கணும்...’’

அவள் மீண்டும் உறங்க ஆரம்பித்தாள். வினயன் எந்தவித ஓசையும் எழுப்பாமல் புறப்படத் தயாரானான். சுவரில் தொங்கிக் கொண்டிருந்த ஓவியங்கள் அவனை ‘‘வா... வா’’ என்று அழைப்பதைப் போல் இருந்தது.

அவன் வாசலில் சிறிது நேரம் நின்றவாறு அவளைப் பார்த்தான். பிறகு கதவைத் திறந்தான். அடுத்த நிமிடம் அவன் அங்கிருந்து மறைந்தான்.

பொழுது புலர்ந்த நேரத்தில் குணவதி தூக்கம் கலைந்து எழுந்தாள். ஒருவித உற்சாகத்துடன் அவள் தன் கண்களைத் திறந்தாள். ஜன்னல் வழியாகப் பார்த்தபோது தூரத்தில் வானம் பூமியைத் தொட்டுக் கொண்டிருந்த இடத்தில் சூரியன் பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்தான். அதைப் பார்த்ததும் ஆடைகளைச் சரி செய்தபடி அவள் எழுந்து நின்றாள்.

அடர்ந்த காட்டுப் பகுதியில் கணவனால் அனாதையாக கை விடப்பட்ட ஒரு மனைவியைப் போல தன்னை அவள் உணர்ந்தாள். ஆதவன் உதித்துக் கொண்டிருந்த அந்தக் காலை நேரத்தில் அந்தப் பெண்ணின் மனதில் மட்டும் ஒரு பெரிய போராட்டமே நடைபெற்றுக் கொண்டிருந்தது. அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து மார்பின் மேல் விழுந்தது. மார்பின் மீது விழுந்து கிடந்த தலைமுடியைக் கையால் ஒதுக்கிவிட வேண்டும் என்ற எண்ணம் கூட அவளுக்கு உண்டாகவில்லை. அந்த அதிகாலை வேளையில் வீசிக் கொண்டிருந்த குளிர்காற்று ஜன்னல் வழியே அறைக்குள் நுழைந்து அவளைத் தாலாட்டிக் கொண்டிருந்தது.

ஆரம்ப நிமிடங்களில் அவளைப் பொறுத்தவரையில் கவலை என்றால் என்னவென்று தெரியாமல்தான் இருந்தாள். தூக்கத்தில் கனவு கண்டு எழுந்து ‘‘மிட்டாய்...’’ என்று கேட்டு அழுது கொண்டிருக்கும் ஒரு குழந்தையைப் போல்தான் தன்னை அவள் இப்போது உணர்கிறாள். கடந்த இரவில் நடைபெற்ற சம்பவங்கள் ஒவ்வொன்றும் பனிப்படலத்தால் மூடப்பட்டதைப் போல் அவள் ஞாபகத்தில் அடுத்தடுத்து வந்து கொண்டிருந்தன. வாழக்கையிலேயே முதல் முறையாக அவள் கஷ்டங்க¬¬ப் பார்த்து ஒரு மனிதன் பரிதாபப்படுகிறான். அப்படிப்பட்ட ஒரு விஷயத்தை எவ்வளவுதான் முயன்றாலும் அவளால் நம்பவே முடியவில்லை. இருப்பினும் அவள் ஏன் தன்னை மறந்து அழ வேண்டும்? தன்னுடைய வாழ்க்கை வழக்கம் போல ஏதாவதொரு சம்பவத்துடனும், தன்னைத் தேடி வரும் யாராவதொரு ஆணின் திருப்தி - இப்படி மட்டுமே நீங்கிக் கொண்டிருக்கும் பட்சம், உற்சாகமும் பிரகாசமும் புதுமையும் கொண்ட இந்தக் காலை வேளையில் அவள் எதற்காகத் தன்னையும் மீறி அழ வேண்டும்? காலமெல்லலம் கவலைகளைத் தவிர வேறெதையுமே தெரிந்திராத யார் தூங்காமல் விசிறியால் வீசிக் கொண்டிருந்தது என்பதை ஒரு நிமிடம் மனதில் நினைத்துப் பார்த்தாள். அந்த மனிதன் இப்போது தன்னுடன் இல்லாமற் போனதற்குக் கூட அவள் வருத்தப்படவில்¬¬. மனைவி என்ற நிலையை விட்டு தன்னுடைய நிலை விலைமாது என்ற அளவிற்குத் தரம் தாழ்ந்து விட்டதே என்பதை நினைத்துத்தான் அவள் தேம்பித் தேம்பி அழுதாள்.

அன்று அவள் அந்த அறையைவிட்டு அவள் வெளியேறவே இல்லை. அறைக்குள் அமர்ந்த அழுது கொண்டே இருந்தாள். அவள் இதயத்தில் ஒரு தெளிவு பிறந்தது. தன்னை மறந்து அவள் மனதிற்குள் சொர்க்கத்தைக் கனவு கண்டு கொண்டிருந்தாள். அவனும் ஆயிரத்தில் ஒருவன். அவ்வளவு தான். முதல் நாள் இரவில் தான் நடனம் ஆடியதை அவள் நினைத்துப் பார்த்தாள். அப்படித்தான் ஆடியதற்காக அவள் வெட்கப்பட்டாள். பைத்தியம் பிடித்த ஒரு பெண் மாதிரி தான் பாட்டுப் பாடியதையும், நடனமாடியதையும் அந்த மனிதன் ரசித்ததை அவள் நினைத்துப் பார்த்தபோது, அவளுக்கு ஒருவிதத்தில் மகிழ்ச்சியாகவே இருந்தது.


பலவிதப்பட்ட சிந்தனைகளில் அவள் மனம் அலைமோதினாலும் குணவதி வினயனின் மனதை முழுமையாக நம்பினாள். தான் அவனுடைய மனைவி என்ற எண்ணம் அவளின் இதயத்தின் அடித்தளத்தில் ஆழமாகவே பதிந்திருந்தது. கணவன் இறந்து போனால், ஒரு மனைவி எந்த அளவிற்கு துக்கத்தில் மூழ்கிப் போய் இருப்பாளோ, அந்த அளவிற்கு கவலையில் ஆழ்ந்து போயிருந்தாள் குணவதி.

அன்று தன்னால் நடனம் ஆட முடியாதென்று திட்டவட்டமாகக் கூறி விட்டாள். அதைக் கேட்டு ரதீசன் பயங்கரமாகக் கோபப்பட்டான். அவன் கோபப்பட்டதும் அவளுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அவள் அவனுடைய கால்களில் விழுந்து கெஞ்சத் தொடங்கினாள்.

‘‘ரதீசா... இதுக்கு முன்னாடி இருந்த குணவதி இல்ல இப்ப இருக்குற குணவதி...’’

‘‘இதுக்கு மேல ஏதாவது பேசினே... அப்புறம் நடக்குறதே வேற...’’

‘‘என் விருப்பப்படி தான் இனிமேல் நான் நடப்பேன். நான் ஒரு திருமணம் ஆன பெண்.’’

அதைக் கேட்டு ரதீசன் விழுந்து விழுந்து சிரித்தான்.

‘‘நான் சொல்றதைக் கேளுங்க... நான் ஒரு குடும்பப் பெண் - ஒருத்தருக்கு மனைவி...’’

அவள் அன்று நடனம் ஆடாமல் ஒரு மூலையில் போய் அமைதியாக உட்கார்ந்தாள். அன்று வினயன் வரவேயில்லை. கணவன் வராததால் ஒரு மனைவி எந்த அளவிற்கு மனக்கவலையில் மூழ்கிப் போய் கிடப்பாளோ, அந்த அளவிற்கு இதயத்தில் எல்லைக்கு மேல் கவலைகள் ஆக்கிரமிக்க அமர்ந்திருந்தாள் அவள். ஆனால். அவளின் கவலையைப் பற்றி யாராவது கவலைப்பட்டார்களா என்ன? அந்த அழகு தேவதையைப் பற்றி யாருக்கு அக்கறை? அரங்கில் அமர்ந்திருந்த மனிதர்களைப் பார்த்து அவள் பயப்பட்டாள். அங்கிருந்த எல்லோரும் தன்னை நாசம் பண்ண வந்திருப்பவர்களே என்று அவள் மனம் நினைத்தது.

8

குணவதி அவளுடைய அறையில் மெத்தையில் குப்புறப்படுத்துக் கிடந்தாள். அப்போது இரவு மணி பத்தைத் தாண்டிவிட்டிருந்தது. கதவு அடைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு நிமிடமும் கடக்க கடக்க அவளின் மனதிற்குள் ஒரு எண்ணம் மேலோங்கிக் கொண்டே வந்தது. ‘‘ஆயிரத்தில் ஒருவன்’’ என்ற எண்ணமே அது. இதற்கு முன்பு தன்னுடைய மனதில் அலைவீசிக் கொண்டிருந்த புத்துணர்ச்சி இப்போது எங்குபோய் இருக்கும் இடம் தெரியாமல் ஒளிந்து கொண்டது? அவன் தன்னைத் தொட்டபோது, தன்னுடைய உடல் சிலிர்த்து நின்றதை அவள் உணராமல் இல்லை. அவன் இரக்கம் கலந்த பேச்சும், அன்புமயமான பார்வையும், இனிமையான ஒவ்வொரு வார்த்தையும் அவளுக்கு ஒரு புது அனுபவமாக இருந்ததென்னவோ உண்மை. அவன் பாசமான அந்தப் பார்வையில் அவன் உள்ளுணர்வு புத்துயிர் பெற்று எழுந்து நின்றது. அவன் ஒவ்வொரு செயலின் விளைவாலும், அவள் உடலிலும் மனதிலும் இதற்கு முன்பு இல்லாத பல மாற்றங்களும் உண்டாயின. அவளை வஞ்சகம் செய்து ஏமாற்ற வேண்டும் என்று அவன் நினைத்திருந்தால் அத்தகைய ஒரு புதுமை அனுபவம் அவளுக்கு உண்டாகியிருக்குமா? அவளுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அவளைப் பலரும் வஞ்சகம் செய்து ஏமாற்றியே வந்திருக்கின்றனர். இந்த உறவில் மட்டுமே ஒரு புதுமையான அனுபவத்தை அவள் உணர்ந்திருக்கிறாள்...

அந்த இரவு நேரத்தில் ஜன்னலருகில் வைத்து... குணவதி அந்தச் சம்பவத்தை நினைத்து நினைத்து மனதிற்குள் ஆனந்த அனுபவத்தை அடைந்து கொண்டிருந்தாள். அவனின் இரக்க குணத்தை அவள் எண்ணிப் பார்த்தாள். ‘‘நான் காமவெறி பிடிச்ச மனிதன் இல்லை’’ என்று அவன் சொன்ன வார்த்தைகளை நினைத்துப் பார்த்தாள். உண்மைதான். ஒரு காமவெறி பிடித்த மனிதனுக்குரிய நடவடிக்கைகளை அவன் கொஞ்சம் கூட வெளிப்படுத்தவில்லையே? காமவெறி பிடித்து தன்னை நாடி வரும் ஆண்களிடம் பொதுவாக அவள் எப்படி நடந்துகொள்வாளோ அப்படி அவன் தன்னை சிறிது கூட நடக்க அனுமதிக்கவில்லையே! இரவு முழுவதும் ஒரு பொட்டு கூட தூங்காமல் அமர்ந்திருந்து விசிறியால் அவனுக்கு வீசிக் கொண்டிருந்தான். அவன் உண்மையிலேயே வீசினானா... இல்லாவிட்டால் கனவா என்று கூட அவள் சந்தேகப்பட்டாள். காமவெறி பிடித்து தன்னைத் தேடி வந்தவன் என்று அவனைச் சொல்ல முடியுமா என்ன? கண்ணீர் வழிய அவன் தந்த முத்தம்... எத்தனை பேர் அவளுக்கு முத்தம் தந்திருக்கிறார்கள்! அவளுக்கு அப்படி யார் தந்த முத்தமும் மனதில் சந்தோஷப்படுகிற விதத்தில் இருந்ததில்லை என்பதே உண்மை. தான் உறங்கிக் கொண்டிருக்கும்போது தன்னைப் பார்த்து அழுது கொண்டிருந்தான். அவன் எதற்காக அழவேண்டும்? தான் அவள் மீது கொண்டிருக்கும் அன்பை யாரிடமாவது வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணமெல்லாம் அவனுக்குக் கிடையாது. அன்பு என்பது இதயத்தில் பிறப்பதாயிற்றே! அவன் தன்னைப் பார்த்து ஏன் அழுதான்? தன்னுடைய கேடுகெட்ட நிலையைப் பார்த்தா? தன்னுடைய எந்த விஷயம் அவன் மனதில் இரக்கத்தை வரவழைத்திருக்கும்? தன்னிடம் குடீக்கொண்டிருக்கும் ஏராளமான கவலைகள் காரணமாக இருக்குமா?

வினயனின் இரக்கம் கொண்ட இதயத்தை அடிக்கொருதரம் நினைத்துப் பார்த்தாள் குணவதி. பல மனிதர்களையும் பார்த்திருக்கும் அவளுக்கு அவன் கனிவான மனம் ஆச்சரியத்தைத் தந்தது. அதனால்தானோ என்னவோ அவளைப் பொறுத்தவரை வினயன் ஒரு மறக்க முடியாத மனிதனாக மாறியிருந்தான்.

கதவு திறந்து பரபரப்பான முகத்துடன் வினயன் அறைக்குள் நுழைந்தான். உள்ளே வந்த அவன் கொஞ்சம் கூட அசையாமல் சிலையென நின்றிருந்தான். குணவதியும் அசையவே இல்லை. அவள் படுக்கையில் படுத்தவாறே இருந்தாள். அழுகையை அடக்க எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. தலையணைணப் பற்களால் கடித்தவாறு படுத்துக் கிடந்தாள். தட்டுத் தடுமாறிய குரலில் வினயன் அழைத்தான்.

‘‘குணவதி...’’

‘‘ம்...’’ - அவள் தேம்பினாள்.

‘‘இன்னைக்கு நீ நடனம் ஆடினியா?’’

‘‘நான் ஒருத்தரோட மனைவியா இருந்தாலும், எனக்குன்னு ஆதரவா யாரு இருக்காங்க?’’

‘‘நீ யாரோட மனைவி?’’

அதற்கு அவள் எந்தப் பதிலும் கூறவில்லை.

அங்கே சில நிமிடங்கள் அமைதி நிலவியது. ஒரு சிறு பூச்சி பறந்து வெள்ளையடித்த சுவரின் மேல் போய் உட்கார்ந்தது. அவள் கூந்தலில் குடியிருந்த மலர்களில் ஒன்று உதிர்ந்து மெத்தைமேல் விழுந்தது. சுவரில் மாட்டப்பட்டிருந்த ஓவியங்கள் ஒவ்வொன்றும் தன்னை வெறுப்புடன் பார்ப்பதாக அவனுக்குத் தோன்றியது. சுவர்க்கடிகாரம் இதயத்துடிப்பைப் போல டிக் டிக்கென்று தொடர்ந்து அடித்துக் கொண்டிருந்தது.

‘‘நீ யாரோட மனைவி?’’ என்ற கேள்வி தன் இதயத்திலிருந்து புறப்பட்டு அந்த அறையின் சுவர்களில் மோதி எதிரொலிப்பதாக வினயனுக்குத் தோன்றியது.

‘‘குணவதி...’’ தன்னை மறந்து அவன் அழைத்தான்.

‘‘ம்...’’


வினயன் முன்னோக்கி நடந்து அந்த மெத்தை மேல் அமர்ந்தான். குப்புறப்படுத்துக் கிடந்த அவள் தோளின் மேல் தன்னுடைய தலையை வைத்தவாறு மெதுவான குரலில் அவன் சொன்னான்.

‘‘குணவதி... உன்னை நான் காதலிக்கிறேன்...’’

‘‘நிச்சயமாக இல்லை...’’

‘‘உண்மையாகத்தான் சொல்றேன்!’’

வினயன் அவளை அள்ளி எடுத்து தன்னுடைய மடிமேல் இட்டான். சிவந்து போயிருந்த அவளின் அழகான உதடுகளில்அவன் அன்பு மேலோங்க முத்தமிட்டான்.

‘‘குணவதி உன்னை நான் கடைசிவரை காதலிப்பேன்!’’

‘‘உங்களால் அது முடியுமா?’’

‘‘நிச்சயமாக முடியும்!’’

‘‘நான் உங்களோட மனைவியா?’’

‘‘இல்ல... நீ ஒரு தேவடியாளாச்சே!’’

‘‘அப்படியே வச்சுக்கங்க!’’

‘‘சரி... நீ அழக்கூடாது!’’ - வினயன் அவளுடைய முகத்தைத் துடைத்தான். ஆனால், அவனுடைய கண்களில் இருந்து கண்ணீர்த் துளிகள் அரும்பி அவள் முகத்தில் விழுந்து கொண்டிருந்தன.

‘‘உங்க இதயத்தை முழுசா கொஞ்சம் திறந்து காட்ட முடியுமா?’’ அவள் கேட்டாள்.

‘‘அது ஏற்கனவே திறந்துதான் இருக்கு!’’

‘‘என்னால புரிஞ்சுக்கவே முடியலையே!’’

‘‘என்னைப் பற்றி என்னாலயும் தெரிஞ்சிக்கமுடியல...’’

‘‘நீங்க ஏன் அழறீங்க?’’

‘‘அது... அதுவா... நீ அழறதைப் பார்த்து. நீ கவலைப்படுறதைப் பார்த்து. அயோக்கியப் பயல் ரசீதனைப் பார்க்குறப்போ உனக்கு பயம் வரலியா?’’

‘‘அப்போ... என்னோட கவலைகளைப் பார்த்துத்தான் நீங்க அழறீங்க... இது நீலிக் கண்ணீர்தானே?’’

‘‘அப்படிப் பொய்யா அழ எனக்குத் தெரியாதே -?’’


‘‘அப்போ நீங்க என்னை...’’

‘‘நிரந்தரமா நாம ஒண்ணு சேர்ந்து வாழலாம்!’’

‘‘நான் உங்க மனைவியில்லையா?’’

‘‘இல்ல...!’’

‘‘உங்களால என்னை எப்படிக் காதலிக்க முடியும்?’’

வினயன் அதைக்கேட்டு குழப்பமானான். அதற்கு அவன் என்ன பதில் கூறுவான்?

‘‘நான் நேற்று உங்க கழுத்துல மாலை போட்டிடேனில்ல?’’ அவள் தொடர்ந்தாள்.

‘‘ஆமா...’’

‘‘அப்போ...’’


‘‘ஆனா...’’

‘‘நம்ம ரெண்டுபேருக்குமி¬யே உள்ள உறவுக்கு என்ன பேரு?’’

வினயன் என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் தவித்து நின்றான்.

‘‘மனைவியா இல்லாத, இரத்த உறவு இல்லாத, ஒரு பெண்ணை ஒரு ஆண் எப்படிக் காதலிக்க முடியும்?’’ அவள் கேட்டாள்.

வாழ்க்கையில் அவள் சந்தித்த அனுபவங்கள அவளிடம் அப்படிப்பட்ட ஒரு தப்பான எண்ணத்தை உண்டாக்கி விட்டிருக்கின்றன. ஒரு ஆண் ஒரு பெண்ணைக் காதலிக்கிறான் என்றால் ஒன்று அவள் அவனுடைய மனைவியாக இருக்க வேண்டும் - இல்லாவிட்டால் அவளுடன் இரத்த உறவு கொண்டவனாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் கொண்டிருந்தாள் அவள்.

வினயனால் தெளிவான ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை. அன்று முழுவதும் மனதைப் போட்டு குழப்பிக் கொண்டதில் மூன்று விஷயங்கள் தெளிவாகத் தெரிந்தன. அவன் அவளை விரும்புவது உண்மை. அதையும் தாண்டி அவளுடன் அவன் இரண்டறக்கலந்து ஒன்றென ஆகி விட்டான். அவர்கள் இருவரும் தனித்தனி இல்லை. ரதீசனின் கொடூர மனம் அப்போது என்ன காரணத்தாலோ வினயனின் ஞாபகத்தில் வந்தது. இது இரண்டாவது விஷயம். மூன்றாவது விஷயம் - அவள் தன்னை மனைவி ஸ்தானத்திற்கு உயர்த்திச் சொல்கிறாள். ஒருவிலைமாதுவான அவள் எப்படி தன்னுடைய மனைவியாக இருக்க முடியும்?

‘‘அவன் இரக்க குணம், அமைதியை நோக்கி அலைபாயும் மனம் எல்லாமே சேர்ந்து குணவதியின்மேல் அவனுக்கு ஒரு தீவிர ஈடுபாட்டை உண்டாக்கிவிட்டன. அவள் மீது அவன் கொண்ட அன்பு கண்ணை மூடிக்கொண்டு இருந்தது. அது வெறெதைப் பற்றியும் எண்ணிப் பார்க்கவேயில்லை. அறிவுகொண்டு தான் கொண்டிருந்த அன்பையும், ஈடுபாட்டையும் அவன் ஆராய்ச்சி செய்து பார்க்க முடியவில்லை. தீவிரமாக அவள் மீது கொண்ட ஈடுபாடுதான் குணவதியை ஒரு மனைவியாக எண்ணிப் பார்க்க அவனுக்குத் தடையாக இருந்தது. தான் அவள் மீது கொண்ட ஈர்ப்புக்குப் பின்னால் மறைந்திருந்த இன்னெனரு பக்கத்தை அவன் மறக்காமல் இல்லை. ‘‘ஒரு விலைமாதுவை எப்படி மனைவியாக நினைக்க முடியும்’’ என்ற கருத்தும் அவன் மனதின் ஒரு மூலையில் ஒலிக்கவே செய்தது. அவன் அவள் மீது கொண்ட அன்பின் அடிநாதமாக அந்த கருத்தும் லேசாக ஓடிக்கொண்டுதானிருந்தது. குணவதியுடன் உடல் ரீதியாக உறவு கொள்வது என்ற விஷயத்தை நினைத்துப் பார்க்கக்கூட வினயனுக்கு கஷ்டமாகவே இருந்தது.

‘‘என் உடல்... என் கற்பு... அய்யோ... நான் அதை எப்படி காப்பாற்றுவேன்?’’ அவள் கேவிக் கேவி அழுதாள்.

‘‘நமக்கு வர்ற ஆபத்துல இருந்து நாம தப்பிக்கலாமே!’’ வினயன் சொன்னான்.

தன்னுடைய கைகளைத் தூக்கி வினயனின் கழுத்தைச் சுற்றி, அவனை இறுக அவள் கட்டிப் பிடித்தாள்.

‘‘நான் என்னைக்கு இருந்தாலும் நான் உங்களோட மனைவிதான். நான் எந்தக் காலத்திலும் இன்னொரு ஆம்பிளையை விரும்ப மாட்டேன். நீங்கதான் என் புருஷன்’’.

காதல் என்ற உணர்வு மனதிற்குள் வந்தவுடன் அந்த உணர்வுக்கு அடிமையான ஒரு பெண்ணின் முகத்தில் இதற்கு முன்பு இல்லாத ஒரு பிரகாசம் வந்து சேரும் என்பதை குணவதியின் முகமே தெளிவாகக் காட்டியது.

‘‘நான் உங்க காலடியில என்னை முழுசா ஒப்படைச்சிட்டேன்...’’

வினயன் அழகாக ஒளிவீசிக் கொண்டிருந்த அவளுடைய முகத்தையே உற்றுப் பார்த்தான். இவ்வளவு அழகான, கவர்ச்சியான, ஒளிபொருந்திய, காந்தமென ஈர்க்கக்கூடிய கண்களை இதற்கு முன்பு வாழ்க்கையில் வேறு எங்குமே பார்த்ததில்லை. அவளின் சிவந்து போயிருந்த மென்மையான அதரங்களை எச்சிலால் அவள் நனைத்தாள். அவனைப் பார்த்தபோது அவள் நெற்றியில் லேசான சுருக்கம் உண்டானது. அவள் கன்னங்கள் சிவந்து போய் சதைப் பிடிப்புடன் இருந்தன. உண்மையிலேயே குணவதி ஒரு பேரழகிதான்.

குணவதியின் கைகள் பரபரத்தன. அவன் தனக்கு ஒரு முத்தம் தர மாட்டானா என்று அவள் ஏங்கினாள். ஆனால், வினயன் முகம் குனியாமல் அமர்ந்திருந்தான்.

அவன் தனக்குள் நடுங்கவும் செய்தான். உலகத்தையே தன்னுடைய காலடிக்குக் கீழே கொண்டு வரக்கூடிய அளவிற்குப் பேரழகு வாய்ந்த பெண் குணவதி. காதல் வயப்பட்டு அந்த அழகு தேவதை நின்றிருக்கிறாள். அவன் இளமை தாண்டவமாடும் ஒரு இளைஞன். அவள் மீது அவன் ஈடுபாடு கொண்டதற்கு முதல் காரணம் அதுதான். அவன் மனதின் அடித்தளத்தில் நிரந்தரமாகக் குடிகொண்டிருக்கும் அழகுணர்வு என்ற ஒன்றுதான் அவன் இந்தச் செயலுக்கு அடிப்படையான மூல காரணம் என்று கூட கூறலாம். இதை அவன் சரிவர அறிந்திருக்கவில்லை என்பதும் உண்மை. அவள் மீது அவன் கொண்ட ஆசை, இரக்கமாக உருமாறி விட்டது. அவ்வளவுதான் விஷயம். அந்த இரக்கம் இப்போது பல மடங்கு பெருகி வழிந்து கொண்டிருக்கிறது.


‘‘எனக்கு முத்தம் கொடுக்கணும்னு தோணலியா?’’


‘‘உனக்கா?’’

‘‘சரி... வேண்டாம். நான் என் மனசுல இருக்குற எல்லாவித ஆசைகளையும் அடக்கிக்கிறேன். உங்களைத் தேவையில்லாத தொந்தரவுக்கு ஆளாக்க நான் விரும்பல...’’

‘‘நீ மனசுல வேதனைப்படுறதை நான் எப்பவும் விரும்ப மாட்டேன்.’’

‘‘நீங்க எனக்கு எந்தக் காலத்திலும் தராத ஒரு இடத்தை - நானே எடுக்குக்குறேன்.’’

‘‘என் மேல நீ வைத்திருக்கிற உறவுக்குப் பேர் என்ன?’’

‘‘பக்தி... இல்லை... இல்லை... காதல்.’’

‘‘காதலா? அதுவும் ஒரு தேவடியாத்தனம் நடக்குற வீட்டுலயா?’’

‘‘தேவடியாளும் ஒரு பெண்தான்.’’


‘‘சரிதான்...’’

‘‘வினயனுக்கு என்ன சொல்லிப் புரியவைப்பது என்று தெரியாமல் தவித்தாள் குணவதி. தன்னுடைய கேவலமான நிலையைப் பற்றி அவளுக்குக் கொஞ்சம் கூட வருத்தமே உண்டாகவில்லை. அவள் சொன்னதற்கு மேலும் விளக்கம் தேவைப்படுவதைப் போல அவளுடைய முகத்தையே பார்த்தான் வினயன்.’’

‘‘பக்தின்னு கூட சொல்லலாம்’’ - அவள் தொடர்ந்தாள்.

‘‘வெறும் பக்தி மட்டும்தானா?’’

‘‘அப்படிச் சொல்ல முடியாது. அதுல எல்லாமே கலந்திருக்கு.’’

‘‘என்ன கலந்திருக்கு?’’

‘‘என்னென்னவோ. அதுல ஆசை கூட கலந்திருக்கு. ஆமா...என்னை நீங்க முத்தமிடணும்’’

வினயன் தன்னையும் மீறி தலையைக் குனிந்தான். அவளின் நெற்றியில் அவன் அழுத்தமாக ஒரு முத்தத்தைப் பதித்தான். அடுத்த நிமிடம் தன்னுடைய உடம்பெங்கும் மின்சாரம் பாய்ந்ததைப் போல் அவன் உணர்ந்தான்.

அந்த முத்தத்திற்கு தனிச் சிறப்பு ஏதோ இருந்திருக்கிறது. இதற்கு முன்பு கொடுத்த முத்தங்களில் இப்படிப்பட்ட உணர்வு ஏனோ தோன்றவேயில்லை. முத்தம் தந்த நேரங்களின் இறுக்கமான சூழ்நிலையும் கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு உணர்வுக்கு ஆட்பட்டு மனதை வெளிப்படுத்தும் எண்ணத்துடன் ஒருவரையொருவர் ஒருவகை நிராசை உணர்வு மேலோங்க தங்களையே மறந்து கொடுத்துக் கொண்ட முத்தங்கள் அவை. ஆனால், இந்த முத்தம் தந்த நிமிடம் அளித்த சுகமான அனுபவத்தை இதற்கு முன்பு வினயன் உணர்ந்ததே இல்லை. குணவதியைப் பொறுத்தவரை அவளின் மனதின் அடித்த்ட்டில் ஆழமாக உறங்கிக் கொண்டிருந்த உணர்வுகள் மூலம் அவள் தன்னுடைய காதலனுடன் ரகசிய மொழி வழியாகப் பேசிக் கொண்ட சந்தர்ப்பம் அது என்றுதான் சொல்ல வேண்டும்.

வினயன் மெல்ல கண்களை மூடியவாறு சாய்ந்தான். அவன் மனதில் காதல் உணர்வு சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தது. அந்த விலைமாதுவின் இதயத்தோடு அவன் இரண்டறக் கலந்தான்.

‘‘குணவதி... நீ எனக்குச் சொந்தமானவ.’’


‘‘நான் உங்களோட தாசி... அப்படித்தானே?’’

‘‘குணவதி... நாம எப்பவும் இப்படியே ஒண்ணா இருப்போம்.’’

‘‘நான் ஒரு சிறைக் கைதி.’’

‘‘உன்னை நான் தப்பிக்க வைக்கிறேன். நாம இங்கேயிருந்து ஓடிடுவோம்.’’

‘‘ரதீசன்...?’’

9

‘‘குணவதி... நீ போறியா என்ன?’’ ரதீசன் கேட்டான்.

‘‘நான் எங்கே போறது?’’

‘‘ம்...’’ ரதீசன் முணுமுணுத்த குரலில் சொன்னான். சிறிது நேரம் கழித்து அவன் தொடர்ந்தான்.

‘‘இப்போ கொஞ்சம் தகராறு பண்ண நீ ஆரம்பிச்சிருக்கே!’’

‘‘அய்யோ... ரதீசன்... நான் நடனமாடி மட்டும் உங்களுக்கு எவ்வளவு பணம் சம்பாதிச்சி தந்துக்கிட்டு இருக்கேன்!’’

‘‘நீ என்னைப் பார்த்து கணக்கு கேக்குறியா?’’

‘‘நான் ஒரு பெண். ஒரு பெண்ணுக்கு மதிப்புள்ளது எது?’’

‘‘இங்க பாரு... நான் யார்னு உனக்குத் தெரியுமா?’’

‘‘நான் என்னைக்கும் உங்களோட வப்பாட்டியா இருப்பேன்.’’

‘‘பெண்ணே, நான் முட்டாள் இல்ல. புரிஞ்சுக்கோ. காமவெறி பிடிச்சு அலையிற ஆள்னு என்னை நீ நினைச்சிட்டியா என்ன?’’

‘‘இப்படியெல்லாம் பேசுறதை விட என்னைக் கொன்னு போட்டிருக்கலாம்.’’

‘‘இவ்வளவு நாள் இல்லாத மானம் இப்போ எங்கே இருந்து வந்துச்சு? ம்... நான் எல்லாத்தையும் பார்த்துக்கிட்டுத்தான் வர்றேன். அவன்தான் எல்லா விஷயங்களுக்கும் காரணம்...’’

‘‘அய்யோ...’’

‘‘ம்... அதைப் பின்னாடி பார்ப்போம். நான் இப்போ எதுக்கு வந்திருக்கேன் தெரியுமா? உன் நகைகள் எல்லாத்தையும் இங்கே எடு.’’

‘‘என் நகைகளையா?’’

‘‘ஆமா...’’

‘‘அதை நான் தரமாட்டேன். உங்களுக்கு அது எதுக்கு?’’

‘‘நீ என்னைப் பார்த்து கேள்வி கேக்குறியா?’’

‘‘நான் சம்பாதிச்ச சொத்து அது.’’

‘‘அது எப்படி வேணும்னாலும் இருக்கட்டும். முதல்ல அதை இங்கே எடு.’’

‘‘உங்களுக்கு அதைக் கேக்குறதுக்கு உரிமையே இல்ல. பலரும் பரிசா எனக்குத் தந்த நகைகள் அதெல்லாம்...’’

‘‘ச்சீ சவமே... எடுக்குறியா இல்லியா?’’

ரதீசனின் நடவடிக்கை மாறியது.

‘‘அப்படியா? இந்த நகைகள் அது இதுன்னு எதுவுமே இல்லாம இருக்குறதே நல்லது. இந்த நாசமாப் போன பொருள்களை நீயே வச்சுக்கோ. இந்தா...’’

அவள் தன்னுடைய நகைகளைக் கழற்றி அவன் முன்னால் வீசினாள்.

‘‘இவ்வளவுதான் இருக்கா?’’

‘‘இல்ல... மீதி பெட்டியில இருக்கு...’’

‘‘அதையும் எடு.’’

குணவதி தன்னுடைய நகைப் பெட்டியை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தாள்.

எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு ரதீசன் வெளியே கிளம்பினான்.

வினயனைக் காணவே காணோம். அவள் மனதில் பலவிதப்பட்ட சிந்தனைகளிலும் மூழ்கி தன்னைத் தானே குழப்பிக் கொண்டிருந்தாள். ரதீசன் அனுமதிக்காவிட்டால் கூட பரவாயில்லை. அவளைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தால் வினையனால் நிச்சயம் பார்க்க முடியும் என்று நினைத்தால் குணவதி. அவன் மற்றவர்களைப் போல இல்லை. முற்றிலும் மாறுபட்ட ஒருவன் என்பதை அவள் அறியாமல் இல்லை. உண்மையிலேயே அவள் வாழக்கையில் இப்படிப்பட்ட ஒரு காதலனைப் பார்த்ததே இல்லை. தன்னுடைய கடந்த கால அனுபவங்களை அசை போட்டுப் பார்த்தபோது அவனுடன் படுத்திருந்த அந்த நிவீடங்களைத் தனியாக மனதில் ஒட்டிப் பார்த்தாள். அவளிடம் இதற்கு முன்பு உல்லாசமாக இருக்க வந்த மனிதர்கள் ஒவ்வொருவரையும் நினைத்துப் பார்த்தாள். அவர்களுடன் அவள் கொண்ட உறவு ஒரே மாதிரியானது அல்ல. ஆனால், கூர்மையாக கவனித்துப் பார்த்தால், அவர்ளின் செயலல் அடி நாதமாக ஒரு ஒற்றுமை இழையோடிக் கொண்டிருப்பதை அவள் உணரவே செய்தாள். மனரீதியாக ஒப்பிட்டுப் பார்த்தால் அவர்களின் வெவ்வேறு சேட்டைகளும், நடவடிக்கைகளும், பேசும் வார்த்தைகளும் கிட்டத்தட்ட ஒன்றாகவே இருந்தன. பயங்கர போலித்தனம்! மனதிற்குள் திருட்டுத்தனம்! ஆனால், வினயனிடம் மட்டும்... அவனிடம் ஒரு வித்தியாசம் இருப்பதை அவளால் உணர முடிந்தது.

வினயனுக்கும் தனக்கும் உள்ள உறவைப் பற்றி அவள் எண்ணிப் பார்த்தாள். அதைப் பல்வேறு கோணங்களில் அசை போட்டுப் பார்த்தாள். அப்படியொன்றும் குறை சொல்லும் அளவிற்கு அவனிடம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு பக்கம், நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பயங்கரமான வஞ்சகமும், போலித்தனமும்.


இன்னொரு பக்கம், இதயத்திலிருந்து கிளம்பி வரும் அன்பு வஞ்சகத்திற்கும் வினயனுக்கும் தூரம் அதிகம் என்று குணவதியின் உள்மனம் கூறியது. மனதிற்குள் கபடம் இருக்கும்பட்சம், கொஞ்சமாவது அது வெளியே தெரியாதா என்ன? ஆனால், அவனின் கண்களில் கள்ளம் கபடமற்ற தன்மையைத்தான் அவள் இதுவரை பார்த்திருக்கிறாள். அவள் தன்னைத் தேடி வந்திருக்கும் மனிதர்களை ஒவ்வொருவராக நினைத்துப் பார்த்தாள். ஒருவன் பேசினால் உடம்பை துளைத்து உள்ளே நுழையக் கூடிய சக்தி உடையதாகவும், விஷத்தைத் தடவிக் கொண்டிருப்பதாகவும் அது இருக்கும். ஒருவனுடைய பார்வையே அர்த்தம் நிரம்பியதாக இருக்கும். ஒருவன் ஒருமுறை அவளைப் பார்த்துக் கேட்டான். ‘‘நீ இதுவரை எத்தனை பேர்கூட படுத்திருப்பே?-’’ இன்னொருவன் அவளைப் பார்த்துக் கேட்டான். ‘‘நீ இதுவரை எவ்வளவு சம்பாதிச்சிருப்பே?’’ ஒருவன் அவளை எல்லோருக்கும் தெரியும்படி கிண்டல் பண்ணினான். இப்படிப்பட்ட தான் சந்தித்த எத்தனையோ அனுபவங்களை குணவதி மனதில் நினைத்துப் பார்த்தாள். எப்படிப் பார்த்தாலும் வினயனிடம் விரும்பத்தகாத குணம் எதுவும் இருப்பதாக அவளுக்குத் தெரியவில்லை. ஆனால், அவன் ஏன் தன்னைத் தேடி வரவில்லை? குணவதி எப்போதும் நிற்கும் ஜன்னலின் அருகில் நின்றவாறு அவனுக்காகக் காத்திருந்தாள். ரதீசனின் குறட்டைச் சத்தத்தைக் கேட்டு ஒரு வகையில் அவள் மனதிற்குள் சந்தோஷப்பட்டாள். இப்போது சுவரைத் தாண்டி வினயன் வரக்கூடாதா என்று அவளுடைய மனம் ஏங்கியது. தன்னை வந்து அவன் பார்ப்பதற்கான சரியான சூழ்நிலை இருப்பதாகவே அவள் நினைத்தாள். இந்த வழியில் அவன் இப்போது வரக்கூடாதா என்று ஆசைப்பட்டாள். தன்னுடைய பார்வையில் படும்படி எங்காவது ஒரு இடத்தில் ஒரு கடிதத்தை எழுதி அவன் வைத்து விட்டுப் போகக் கூடாதா என்று மனப்பூர்வமாக ஏங்கினாள். இங்கு வரக்கூடிய யாராவது ஒரு ஆளிடம் ஏதாவதொரு செய்தியை அவன் சொல்லிவிடக் கூடாதா என்று மனதிற்குள் ஏங்கினாள்.

அவள் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டாள். அவளிடமிருந்த ஆர்வம் அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் போய் ஒளிந்து கொண்டது. அவனும் மற்றவர்களில் ஒருவனாக ஆகிவிட்டானா என்ன? ஒவ்வொரு நாளும் அவள் மாலைகளைக் கட்டி அவனுக்காக எடுத்து வைப்பாள். ஆனால், அந்த மாலை அதே இடத்திலேயே தினமும் கிடக்கும். வினயனோடு பழகிய நிமிடங்களை அவள் மறக்க முயற்சித்தாள். ஆனால், முடியவில்லை. அவனுடன் அவள் கழித்த ஒவ்வொரு நிமிடமும் பிரகாசமாக முகம் காட்டிக் கொண்டிருந்தன.

குணவதியைத் தனியாக வெளியே செல்ல ரதீசன் ஒருபோதும் அனுமதிக்கவில்லை. அவள் கூண்டுக்குள் சிக்கிய கிஷீயைப் போல அடைபட்டுக் கிடந்தாள்.

ஒருவன் கோபத்துடன் அவளைப் பார்த்துக் கேட்டான்.

‘‘நீ என்னைப் பற்றி மற்றவங்கக்கிட்ட ஏதாவது சொல்லி இருக்கியா?’’

அவள் அவன் என்ன சொல்கிறான் என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் சொன்னார்.

‘‘சரியாக ஞாபகத்துல இல்ல...’’

‘‘நீ என்னோட மானத்தையே காத்துல பறக்க விட்டுட்டே. நான் இங்கே வர்ற விஷயம் ஊர் முழுக்க தெரிஞ்சி போச்சு.’’

தான் தப்பு செய்து விட்டதாக எண்ணிய குணவதி எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருந்தாள். அவன் மேலும் தொடர்ந்தான்.

‘‘நீ என்கிட்ட மற்ற ஆளுங்களைப் பற்றி ஏராளமா சொல்லியிருக்கே இல்லே... அந்த மாதிரி என்னைப் பற்றியும் சொல்லி இருப்பே...’’

‘‘அப்படி ஏதாவது நான் சொல்லியிருந்தா, தயவு செஞ்சு என்னை மன்னிச்சிக்கங்க.’’

‘‘அப்படி நீ சொன்னதுனால எனக்கு எவ்வளவு பெரிய பிரச்சினைகளெல்லாம் வந்திருச்சு தெரியுமா? சமுதாயத்துல என்னோட கவுரவம், அந்தஸ்து எல்லாமே போச்சு. இது இல்லாம இன்னும் எவ்வளவோ...’’

‘‘அப்படி உங்களைப் பற்றி மோசமா நான் எதுவம் சொன்னதா எனக்கு ஞாபக்த்துல இல்ல.’’

‘‘மோசமா ஏதாவது சொல்லணும்னு அவசியமில்ல. நான் இங்கே வர்றேன்ற ஒரு விஷயத்தைச் சொன்னா போதாதா? இங்க பாரு... எனக்கும் என் மனைவிக்கும் தகராறு உண்டாகி விவகாரத்து வரை போயிடுச்சு. என் சொந்தக்காரங்கல்லாம் என்னை விட்டுட்டுப் போயிட்டாங்க. இது எனக்கு எவ்வளவு பெரிய பாதிப்பு தெரியுமா?’’

‘‘அய்யோ... இது எதுவுமே எனக்குத் தெரியாது.’’

‘‘இங்க பாரு... நீ ரொம்பவும் கவனமா இருக்கணும். இங்க வர்ற எல்லாரோட ரகசியங்களும் உனக்கு நல்லாவே தெரியும்.’’

‘‘ஆமா...’’

ஒரு விலைமாதுவை ஏன் பலரும் வெறுக்கிறார்கள் என்பதற்கான காரணம் அவளுக்குப் புரிந்தது. ஒரு விலைமாதுவிற்கு தான் சந்திக்கு எல்லோரைப் பற்றியும் உள்ள ரகசியங்கள் நன்றாகத் தெரியும். ஒரு மனிதன் அவன் மனைவியைப் பற்றி ஏராளமான குற்றச்சாட்டுகளை அவளிடம் கூறியிருக்கிறான். இன்னொருவன் உடலுறவு சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பற்றி மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருக்கிறான். பலருடைய கேலிக்கூத்தான நடவடிக்கைகளை அவளால் நேரில் பார்க்க முடிந்திருக்கிறது.

ஒருமுறை தன்னைத் தேடி வந்த ஒருவனை அவள், பயமுறச் செய்த சம்பவத்தை மனதிற்குள் நினைத்துப் பார்த்தாள். அவன் விலைமாதுவைத் தேடி வந்திருக்கும் விஷயத்தை எல்லோருக்கும் தெரியும்படி வெளியே கூறப்போவதாக அவள் சொன்னாள். அவ்வளவுதான் - அவன் பயந்து நடுங்க ஆரம்பித்துவிட்டான். அவள் கேட்டது எல்லாவற்றையும் அவன் கொடுத்தான்.

ஆனால், பிறகு ஒரு நாள் அவன் அவளிடம் எல்லோருக்கும் தெரியும்படி கன்னாபின்னாவென்று பேசி தகராறு செய்தான்.

மற்றொரு சம்பவமும் அவள் ஞாபகத்தில் வந்தது. ஒருவருக்கொருவர் எதிரிகளான இரண்டு ஆண்களை அவள் அச்சமுறச் செய்திருக்கிறாள். தந்தையும் மகனும் கூட அவளிடம் வந்து போயிருக்கிறார்கள். ஒரு பெரிய மனிதரின் எல்லா ரகசியங்களும் அவளுக்குத் தெரியும். இப்படி எல்லோருமே அவளைப் பார்த்து பயப்பட்டார்கள். ஒரு முறை அவளுடன் படுக்கையில் படுத்த எவனும் அடுத்த முறை அவள் முன்னால் தலை குனிந்துதான் நிற்க வேண்டும். அவர்களின் நற்பெயர், வாழ்க்கையில் பெற்ற வெற்றி, லாபம், வாழ்க்கை சுகம் - எல்லாவற்றையும் அவளிடம் அவர்கள் பணயம் வைத்திருக்கிறார்கள். அவளின் விருப்பத்திற்கேற்றபடியெல்லாம் அவர்களின் ஒவ்வொரு செயலும் இருக்கும் என்பதே உண்மை.

விலை மாதுவை உலகம் வெறுப்பதற்கான இன்னொரு காரணம் இதுதான். அவளை பயங்கர கோபத்துடன் உலகம் பயமுறுத்துகிறது. அவளிடம் கொஞ்சம் கூட மனிதாபிமானத்துடன் உலகம் நடந்து கொள்ளத் தயாராக இல்லை.

ஒரு விலை மாதுவிடம் இந்த உலகம் தன்னுடைய அசிங்கத்தைப் பார்க்கிறது. அவள் எங்கே தங்களைப் பற்றிய செய்திகளை வெளியே சொல்லியிருப்பாளோ என்று அவளைத் தேடி வரும் ஒவ்வொரு மனிதனும் சந்தேகப்படுகிறான். தங்களை துச்சமாக நினைக்க அவளால் முடியும் என்று ஒவ்வொருத்தனும் எண்ணுகிறான். இந்த நிலையில் அவள் அழிந்து தொலையட்டும் என்றுதானே ஒவ்வொருவனும் ஆசைப்படுவான்?


10

தீசன், ஒரு சுருட்டைப் புகைத்தவாறு அமர்ந்திருந்தான். யாரோ கதவை பலமாக தட்டினார்கள். ரதீசன் எழுந்து போய் கதவைத் திறந்தான். அன்று குணவதியை விலைக்கு வாங்கிய ஆள் நின்றிருந்தான்.

அந்த மனிதனின் முகததில் சிவப்பு வண்ணத்தில் வட்ட வட்டமாக தழும்புகள் இருந்தன. கைகளில் சிவப்பு நிறத்தில் சின்னச் சின்ன புண்கள் இருந்தன. பயங்கரமான ஒரு தொற்று நோய் அந்த ஆளுக்கு இருப்பது பார்க்கும்போதே தெரிந்தது.

ரதீசன் கேட்டான்.

‘‘என்ன... சிளம்பியாச்சா!’’ அவன் சொன்னான்.

‘‘ஆமா... நான் தந்த பணத்தைத் திருப்பித் தா.’’

‘‘ஏன் என்ன நடந்துச்சு?’’

‘‘அவள் என்கிட்ட ஒழுங்கா நடக்க மாட்டேங்குறா. என்கிட்ட சண்டை போடுறா.’’

‘‘வாங்க நானும் வர்றேன்.’’

‘‘வேண்டாம். நான் புறப்படறேன். என் பணத்தைத் தா.’’

‘‘நீங்க சொல்றது உண்மைதான்னு நான் எப்படி நம்புறது?’’

‘‘சரிதான்... என்கிட்ட நீ சண்டை போடலாம்னு பார்க்குறியா?’’ உன்னை மாதிரி ஆளுங்களை நான் நிறைய பார்த்திருக்கேன். இந்தப் பூச்சாண்டி வேலையெல்லாம் வேற எங்கேயாவது வச்சுக்கோ. இப்போ என் பணம் எனக்கு வந்தாகணும்.’’

‘‘நான் தர மாட்டேன். நீங்க கேக்குறதும் முறையில்லை.’’

‘‘அவள் என்னைக் கண்டபடி பேசுறா. நான் ஒரு வார்த்தை கூட பேசல. எனக்கு கோபம் கூட வரல. அவள் ஒரு குடும்பப் பெண்ணுன்னு சொல்றா. நான் அவக்கிட்ட நெருங்கக்கூட இல்ல. என் பணத்தை ஒழுங்கா கொடுத்திடு...’’

‘‘தர மாட்டேன்.’’

‘‘நான் உன்னை ஒரு வழி பண்ணிடுவேன்.’’

‘‘இப்போ என் கூட வாங்க. நான் அவள்கிட்ட ஒரு வார்த்தை கேக்குறேன். நீங்க சொல்றது உண்மைதானான்னு நான் தெரிஞ்சிக்கணும்.’’

‘‘தாராளமா...’’

பயங்கர கோபத்துடன் ரதீசன் அவளுடைய அறைக்குள் நுழைந்தான். அவனுக்குப் பின்னால் அந்த ஆள் நின்றிருந்தான். அவள் சிங்கத்தைப் பார்த்த மானைப் போல் நின்றிருந்தாள்.

‘‘குணவதி...’’

‘‘என்ன?’’

‘‘நீ...’’

‘‘நான் நீங்க சொன்னதை ஒரு நாளும் மீறினது இல்ல. நீங்க சொன்னபடியெல்லாம் நடந்திருக்கிறேன். எப்பவாவது மாட்டேன்னு சொல்லியிருக்கேனா?’’

‘‘அது இருக்கட்டும். இப்போ எதுக்கு இந்த ஆளு சொன்னபடி நீ நடக்கல?’’

‘‘ரதீசன்... எதிர்காலத்தை நீ நினைச்சு பார்க்குறதே இல்லியா? இந்தப் பிச்சைக் காசுக்காக... எது வேணும்னாலும் நடக்கட்டும்னு நினைச்சா எப்படி? நான் ஒரேயடியா அழிஞ்சு நாசமாப் போகட்டும்னு நினைச்சா நல்லதா?... இப்படி நடந்தா அதுதான் நடக்கும்.’’

‘‘வாயை டு. நீ இவரை கண்டபடி பேசி ஏன் வெளியே அனுப்பினே?’’

‘‘அது உங்களுக்குத் தெரிஞ்சு என்ன பிரயோஜனம்? நான் உங்களுக்கு வாக்குறுதி கொடுத்திருக்கேன். நீங்க சொன்னபடியெல்லாம் நடக்குறேன்னு. பெண் நிச்சயமா தான் தந்த வாக்குறுதியை எந்தக் காலத்திலும் மீற மாட்டா...’’

அவள் விரல்களைத் கோர்த்து, கையைத் தலையில் வைத்தவாறு தொடர்ந்தாள்.

‘‘இதுவே எனக்கு சுமைதான்.’’

‘‘எது?’’

‘‘என்னோட அழகு...’’

‘‘சரி... எல்லாம் ஒழுங்கா நடக்கட்டும்...’’

குணவதியின் கண்களில் இருந்து கண்ணீர் அரும்பி கன்னத்தில் வழிந்து கொண்டிருந்தது. அவள் பற்களைக் கடித்துக் கொண்டு தொடர்ந்தாள்.

‘‘சரி... சரி... நான் பார்த்துக்குறேன். நீங்க போகலாம்.’’

‘‘அந்த இரவு பயங்கரமான ஒன்றாக இருந்தது. அதைப் போன்ற இருளடைந்து போன ஒரு இரவை அவள் இதற்கு முன்பு பார்த்ததேயில்லை. ஆகாயம் அடர்த்தியான இருட்டு நிறத்தில் இருந்தது. அவ்வப்போது வானத்தை மூடிக் கொண்டிருந்த கரு மேகங்களைத் தாண்டி இடி இடித்தது. தூரத்தில் - அனேகமாக சுடுகாடாக இருக்க வேண்டும். குள்ள நரிகள் ஊளையிட்டுக் கொண்டிருந்தன. அறைக்குள் படு நிசப்தம் நிலவிக் கொண்டிருந்தது. ’’

அவளுடைய மென்மையான மெத்தையை இனி யாரும் தொட முடியாது என்கிற அளவிற்கு தீட்டுப் பட்டுவிட்டது என்றாலும், இவ்வுண்மையை உலகில் உள்ள யாரும் அறிந்திருக்கவில்லை. அன்று முதல் அவளின் முல்லைக் கொடியில் இருந்து விழுந்த மலர்கள் யாருக்குமே பிரயோஜனமில்லாமல் வெறுமனே தரையில் கிடக்க ஆரம்பித்தன. அவற்றின் நறுமணம் கிருமிகள் நிறைந்த நரகத்தில் போய் வீச வேண்டும்.

அவளுடைய அறையில் இருந்து குரல் கேட்டது.

‘‘கடவுளே!’’

அது அவள் குரல்தான். மீண்டும் அவள் பேசுவது கேட்டது.

‘‘எனக்கு ஓய்வெடுக்க வேண்டிய நேரம் வந்திருச்சு...’’

காம வேட்கை கொண்ட பேச்சுக்கு மத்தியில், சரசங்களுக்கு மத்தியில், அவளின் குரல் மூன்றாவது தடவையாகக் கேட்டது.

‘‘நீங்க ஒரு பெரிய உதவியைச் செஞ்சீங்க. குணவதி ஒரு அழகான பெண்ணாக இருந்தா. அதுனால அவ நரக வேதனையை அனுபவிச்சா. அந்த நரகத்துல இருந்து நீங்க தான் அவளைக் கரையேத்தி விட்டீட்ஙக. அவள் அதுல இருந்து தப்பிச்சிட்டா...’’

11

ந்த ஜன்னலுக்குப் பக்கத்தில் அனேக நாட்களுக்குப் பிறகு வினயன் மீண்டும் காட்சியளித்தான்.

‘‘அப்போ குணவதி...’’

‘‘என்னை இனிமேல் நீங்க தொட நான் அனுமதிக்க மாட்டேன்.’’

‘‘நீ தேவடியாதானே?’’

‘‘ஆமா... நான் தேவடியாதான்.’’

‘‘ஒரு நரகத்தைப் போல அதை நீ வெறுத்தேல்ல?’’

‘‘நான் பழிக்குப் பழி வாங்கப் போறேன்.’’

‘‘பழிக்குப் பழியா? ரதீசனையா?’’

‘‘ரதீசனை இல்ல... ஆண்கள் உலகத்தை. நான் வாங்குற உலகம் முடியிற வரைக்கும் பரம்பரை பரம்பரையாகத் தொடர்ந்துகிட்டேயிருக்கும்.’’

குணவதி பிசாசு சிளீப்பதைப் போல் உரத்த குரலில் சிரித்தாள். அவள் தொடர்ந்து சொன்னாள்.

‘‘காம வெறி பிடித்த அரக்கர்களை நான் பழிக்குப் பழி வாங்குறேன். அவர்களும் அவர்களோட பரம்பரையும் தொடர்ந்து அதை அனுபவிக்கட்டும்.’’

‘‘என்ன பைத்தியக்காரத்தனமா பேசுற நீ?’’ - வினயன் கேட்டான். அந்த இருட்டில் அவளுடைய முகத்தை அவனால் சரிவரப் பார்க்க முடியவில்லை.

‘‘நான் சொல்றது புரியலியா? தேவடியான்ற ஒருத்தி சாதாரணமானவ இல்ல. அவளோட வாழ்க்கையின் லட்சியம் என்னன்னு தெரியுமா? அயோக்கியர்களைத் தண்டிக்கிறதுக்குள்ளே கடவுளால படைக்கப்பட்டவதான் அவ. அவகிட்ட உலகம் அடிக்கடி சொல்லுற வெட்கம், மானம் எதுவுமே கிடையாது. தீராத நோய்கள்தான் அவளோட ஆயுதம். அவள் ஒரு அவதாரம்னு கூட சொல்லலாம். தண்டிக்கப்பட வேண்டியவர்களை அவள் நிச்சயமா தண்டிப்பா.’’

‘‘சரி அது இருக்கட்டும். காதல் வயப்பட்ட நீ...’’

‘‘வாழ்க்கையோட லட்சியம் என்னன்னு தெரியாம நான் இருந்தேன். எதுக்காக நான் கடவுளால் படைக்கப்பட்டிருக்கேன்றதையே இப்பத்தான் உணர்றேன்.’’

‘‘நீ என்னோட மனைவிதானே!’’

‘‘நான் பின்னாடி அதுக்கு இன்னொரு ஆளை கல்யாணம் பண்ணிட்டேன்.’’

‘‘வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிற இதயத்தைக் கொண்ட காதலன் நான்.’’

‘‘தேவடியா மேல உங்களுக்குக் காதல் இருக்கா என்ன?’’


இதைக் கேட்டபோது குணவதி லேசாக நடுங்கினாள். அவளுடைய உள் மனம் நடக்கக் கூடாதது நடந்து விட்டதைப் போல் அழுது கொண்டிருந்தது.

‘‘அதை உன்னால புரிஞ்சிக்க முடியலியா? ’’ - வினயன் கேட்டான்.

‘‘என்னை மனைவி ஸ்தானத்துல எந்தக் காலத்துலயும் வச்சு பார்க்குறதா இல்லைன்னு நீங்கதானே சொன்னீங்க.’’

‘‘நடந்தையெல்லாம் நீ மறந்திட்டியா?’’

‘‘வேணும்னா நான் நினைச்சுப் பார்க்குறேன்.’’

குணவதி சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்தாள்.

‘‘என் மேல உங்களுக்கு களங்கமில்லாத அன்பு இருந்தா?’’

‘‘நாம இங்கேயிருந்து ஓடிடுவோம்.’’

குணவதியின் காதில் அது விழவில்லை. வினயனுடன் தான் கொண்டிருந்த உறவை தன்னுடைய மனதின் அடி ஆழத்திலிருந்து இழுத்து மேலே கொண்டுவர அவள் முயற்சித்துக் கொண்டிருந்தாள். அவளின் காதல் அங்கு அடைபட்டுக் கிடந்தது. அந்த நோயாளி மனிதனுடன் உறவு கொண்ட பிறகுதான், அது உள்ளே தள்ளப்பட்டு விட்டது. அதுகூட வினயனுடன் அவள் கொண்ட தீவிர காதலால்தான். எந்த காரணத்திற்காக வினயனை இனிமேல் தொட அனுமதிக்க மாட்டேன் என்று அவள் சொன்னாளோ, அதே காரணத்தால்தான் அவளின் உயிரோட்டம் நிறைந்த காதல் உணர்வுகள் கல்லறையில் போட்டு மூடப்பட்டு விட்டது.

வினயனை நினைக்கும்போது இப்படி அவள் தனக்குத்தானே கூறிக்கொள்வான். ‘‘அவர் என்னைத் தொட நான் சம்மதிக்க மாட்டேன்! கடைசியில் தன்னைத் தொட அனுமதிக்க முடியாத ஒரு மனிதன் என்பது மட்டுமே வினயனைப் பற்றிய அவளின் கருத்தாக இருந்தது.

வைராக்கியம் கொண்ட பழிக்குப் பழி வாங்கும் குணத்தைக் கொண்ட குணவதியின் காதல் உணர்வுகள் வடிவம் மாறின. வினயனின் இரக்கம் கலந்த முகத்தைப் பெறவும், பார்க்கும் நிமிடங்களில் மனதில் மகிழ்ச்சிப் பொங்கி நிற்கவும், கடவுளின் இதயத்தைப் போல கருதி பாதுகாப்பான அவன் நெஞ்சின் மேல் தலையை வைத்து உறங்கவும் அவள் ஆசைப்பட்டது இருந்த இடம் தெரியாமல் அடங்கிப் போனது. சுருக்கமாகச் சொல்லப்போனால் காதல் ணர்வு மேலோங்க அருமையான ஒரு குடும்ப வாழ்க்கை வாழவேண்டும் என்று வெறித்தனமாக அவளுடைய மனதில் இருந்த எண்ணம், அந்த நோயாளி மனிதனுடன் அவள் கொண்ட உறவோடு மறைந்து போனது.

‘‘என் பிரியமானவரே!’’ என் மனதில் ஏகப்பட்ட வேதனையுடன் இரும்பு போல பலமான தன்னுடைய காதலனின் அருகில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள் அந்த அழகு தேவதை. அவள் மனதில் தன்னுடைய கணவன் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று கற்பனை பண்ணி வைத்திருந்தாளோ, அதை வினயனிடம் கண்டாள். அவள் ஆனந்த வயப்பட்டு நடனம் ஆடினாள். அவளின் இதயத்தில் அரும்பி மலர்ந்து கொண்டிருந்த காதல் உணர்வு அந்த நோயாளி மனிதனுடன் அவள் உறவு கொண்ட நிமிடத்திலேயே கொஞ்சமும் இல்லாமல் மறைந்து போனது. அந்தக் காதல் உணர்வுகள் மறைந்து பக்தியாக அவை வடிவமெடுத்தன. காமம் கலந்த அவளுடைய ஆசைகளை எல்லாம் காதலுக்குள் அடங்கிய பக்தி இதயத்தின் அடி ஆழத்தில் கொண்டு போய் சேர்த்துவிட்டது. காம எண்ணங்கள் ஆதரவற்ற அந்தப் பெண்ணின் சக்தியற்ற இதயத்தின் ஒரு மூலையில் கிடந்து தவித்தது. அந்த அடக்கப்பட்ட காம உணர்வின் வெளிப்பாடே அவளின் பழி வாங்க வேண்டும் என்ற உணர்வு. அடக்கி வைக்கப்பட்டிருக்கும் காமம் வெளியே பாய்ந்து ஓடி வருவதற்கு வழி தேடி அலைந்து கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள அவளுக்குத் தெரியவில்லை. காரணம் அந்த உணர்வுகள் நினைவற்ற பகுதியில் ஆழ்ந்து கிடப்பதுதான்.

வினயன் மீண்டும் சொன்னான்.

‘‘நாம ஓடிடலாம்.’’

‘‘எதற்கு?’’

‘‘நான் உனக்கு முத்தம் தரலாம். கட்டிப் பிடிக்கலாம். தூக்கத்தை ஒதுக்கி வச்சிட்டு, விசிறியால வீசி விடலாம்.’’

அவன் சிறிது கூட உறங்காமல் அவளின் அருகில் அமர்ந்து அவளுக்கு விசிறியால் வீசி விட்ட அந்த இரவு அப்போது அவளின் ஞாபகத்தில் வந்தது. அந்த முத்தங்கள் மறக்க முடியாதவையாக இருந்தன. இருப்பினும், அவள் எப்படி அதை மறந்தாள்? வாழ்க்கையிலேயே முதல் தடவையாக இன்ப உணர்வை அளித்த - மறக்க முடியாத சந்தோஷ தருணங்களை அந்த முத்தத்தை அவள் எப்படி மறந்தாள்?

‘‘சரி... நாம இங்கேயிருந்து ஓடிடுவோம்’’ - அவள் திடீரென்று சொன்னாள்.

‘‘நீ என்னோட மனைவி.’’

‘‘இல்ல. உங்களோட மனைவியா இருக்க முடியாது.’’

‘‘என் மேல உனக்கு காதல் இல்லியா?’’

‘‘இருக்கு. அதனாலதான் சொல்றேன் - உங்களோட மனைவியா என்னால ஆக முடியாது.’’

‘‘அதெப்படி? காதலுக்கு அப்படியொரு சக்தி இருக்கா என்ன?’’

‘‘நான் ஒரு நாளும் உங்க பக்கத்துல வர மாட்டேன்.’’

குணவதி முகத்தை மூடியவாறு, சற்று பின்னால் நகர்ந்து நின்றாள்.

‘‘நீ... நான்... இந்த உலகத்தைவிட்டே போயிடுவோம்’’ வினயன் அழுதான்.

அவள் கேட்டாள். ‘‘எதற்கு?’’

‘‘நீ என்னை ஏன் இந்த அளவுக்கு கஷ்டப்படுத்துறே? அதுக்கு பழிக்குப் பழி...’’

‘‘பழிக்குப் பழியா?’’

‘‘ஆமா...’’

‘‘யாரை? ரதீசனையா?’’

‘‘ரதீசனைப் பழிக்குப் பழி வாங்குறதுக்காக தற்கொலையா?’’

‘‘அப்போ... அய்யோ... அப்படியெல்லாம் தற்கொலை செய்யணும்னு நினைக்காதீங்க.’’

குணவதி ஜன்னலை நோக்கி நடந்தாள்.

‘‘அய்யோ... நீங்க...’’

‘‘நீ கதவைத் திற...’’

‘‘அது இந்தப் பிறவியில நடக்காது.’’

‘‘காரணம்?’’

‘‘நீங்க ரதீசனைக் கொல்லத் தயாரா இருக்கீங்களா? அவன்தான் எல்லாத்துக்கும் காரணம்!’’

‘‘நிச்சயமா கொல்லத்தான் போறேன். ஒரே வெட்டுல ஆளை காலி பண்றேன்.’’

‘‘பிறகு?’’

‘‘என்ன செய்யணும்?’’

‘‘அய்யோ... உங்களுக்கு தூக்குமரம்... வேண்டாம். நீங்க கொலைகாரனா ஆக வேண்டாம். ரதீசனைக் கொலை செஞ்சி என்ன பிரயோஜனம்? நடக்குறது நடக்கட்டும். நான் அனுபவிச்சிட்டுப் போறேன்.’’

‘‘நீ எந்த அளவுக்கு நரக வேதனை அனுபவிச்சிக்கிட்டு இருக்கே! அவனை நான்...’’

‘‘உங்க குணவதி ஒரு தீராத நோயைக் கொண்டவள்...’’

‘‘அய்யோ... அது எப்படி?’’

‘‘ரதீசன் ஒருவனை அழைச்சிட்டு வந்தான். அவன் என்கூட படுத்தான்.’’

‘‘உன் பாதத்துல நான் கொஞ்சம் விழட்டுமா? கதவைத் திற...’’

‘‘என் பாதத்துலயா?’’

‘‘இல்ல. கஷ்டங்கள் அனுபவிக்கிற மனித உலகத்தையே உன் மூலம் நான் பார்க்குறேன். அதற்கு முன்னால்...’’

‘‘இல்ல... கதவைத் திறக்க மாட்டேன்.’’

12

‘‘ச்சே... நான் கோழையா ஆயிட்டேனா?’’ வினய் தனக்குத் தானே முணுமுணுத்தான். அவன் கண்களில் ஒரு கொடூரத் தனம் நிழலாடியது.

மேஜைக்குள் மறைத்து வைத்திருந்த ஒரு நீளமான கத்தியை எடுத்து அவன் வேஷ்டியின் இடுப்புப் பகுதிக்குள் சொருகினான்.


அடுத்த நிவீடம் அவன் தனக்குள் சொல்லிக் கொண்டான். ‘‘நான் செய்யிறது சரிதானா? நான் வளை ஏமாற்றுகிறேனா என்ன?’’

வினயன் வாசலை நோக்கி நடந்தான். தலையைச் சுற்றுவது போல் இருந்தது. வாசலிலேயே சிறிது நேரம் அசையாமல் நின்றான். விளக்கு பளிச்சென்று எரிந்து கொண்டிருந்தது.

அவன் திரும்பவும் அறைக்குள் வந்தான். கட்டிலில் போய் படுத்தான். கண்களை மூடினான். அப்படியே கண்களை மூடியவாறு படுத்துக் கிடந்தான்.

நிமிடங்கள் கடந்தன. மீண்டும் படுக்கையை விட்டு எழுந்தான். வேஷ்டிக்குள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்தான். விளக்கினடியில் கொண்டு போய் அதன் முனைப் பகுதிக்கு கூர்மை சரியாக இருக்கிறதா என்று விரலால் தடவி பரிசோதித்துப் பார்த்தான். மேஜையைத் திறந்து நீளமான ஒரே நேரத்தில் அகலம் குறைந்த ஒரு சிறு பெட்டியை எடுத்துத் திறந்தான். அதில் கத்தியைத் தீட்ட பயன்படும் கல் இருந்தது. அடுத்த நிமிடம் கல்லின் மேல் கத்தியை வைத்து கூர்மை ஏற்றத் தொடங்கினான்.

பரணில் எலி எதையோ உருட்டிக் கொண்டிருந்தது. வினயன் அதிர்ச்சியடைந்தவாறு காதுகளைத் தீட்டிக் கொண்டு சிறிது நேரம் நின்றான். வேறு எந்தச் சத்தமும் கேட்கவில்லை. பரிபூர்ண நிசப்தம் நிலவிக் கொண்டிருந்தது. மீண்டும் கத்தியைத் தீட்ட ஆரம்பித்தான். இரும்பும் கல்லும் உராய்கிறபோது உண்டாகிற சத்தத்தில் அவன் இன்னொரு முறை நடுங்கினான்.

அவன் எழுந்து அறைக்குள் இங்குமங்குமாய் வேகமாக நடந்தான். கத்தியைக் கையில் வைத்து அதன் எடை என்னவாக இருக்கும் என்று கணக்குப் போட்டான். அடுத்த நிமிடம் அதை மேஜை மேல் வைத்தான். தாழ்ப்பாள் போட்டு அடைக்கப்பட்டிருந்த ஜன்னலில் ஒரு சிறு ஓட்டை இருக்கும். வேகமாக ஒடிச்சென்ற வினயன் அந்த ஓட்டையின் வழியாக வெளியே பார்த்தான். வெளியே இருள் பயங்கரமாகக் கவிந்திருந்தது. அவன் விரலால் அந்த ஓட்டையை அடைத்தவாறு நின்றிருந்தான்.

சில நிமிடங்கள் அப்படியே சிலையென அசையாமல் நின்£றன். அப்போது அவன் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. மேஜையைத் திறந்து ஒரு தாளை எடுத்து சுருட்டி அதை வைத்து ஜன்னலில் இருந்த ஓட்டையை அடைத்தான். வேறு எந்த பிரச்சினையும் இருப்பதாக அவனுக்குத் தெரியவில்லை. சுவரில் தொங்கிக் கெண்டிருந்த ஒரு படம் அவனை, அவனின் செயல்களை உற்று பார்த்துக் கொண்டிருந்தது. வினயன் அந்தப் படத்தை எடுத்து அதையே உற்று பார்த்தான். என்ன பார்வை! அவன் அந்த படத்தைத் தரையில் எறிய, அது பல துண்டுகளாக உடைந்தது. அறையெங்கும் கண்ணாடித் துண்டுகள் சிதறிக் கிடந்தன.

விளக்கு பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தது. அநிதப் பிரகாசம் அறை முழுவதும் பரவியிருந்தது. வினயன் ஒரு நிமிடம் கண்களை மூடினான். மீண்டும் கண்களைத் திறந்தான். விளக்கின் திரியை இறக்கிவிட்டான். அறை முழுக்க இருள் சூழ்ந்து மீண்டும் திரியை ஏற்றிவிட்டான். அப்போது அறை திரும்பவும் வெளிச்சத்தில் மூழ்கியது.

வினயன் என்ன காரணத்தாலோ லேசாக நடுங்கினான். மின்னி ஒளிர்ந்து கொண்டிருந்த கத்தியை கையில் எடுத்தான். அடுத்த நிமிடம் நடக்க ஆரம்பித்தான். கத்தியை ஓங்கினான். அவனுடைய கண்கள் ஒரு கொலைகாரனின் கண்களைப் போல குரூரம் நிறைந்ததாகவும், பயங்கரமானதாகவும் இருந்தன. ஒரே வெட்டு! காற்றில் கத்தியை வீசினான்.

கத்தியையே பார்த்தவாறு அவன் நின்றான். மீண்டும் அதை வேட்டிக்குள் செருகினான். கத்தி எங்கே கீழே விழுந்து விடப் போகிறதோ என்று வேட்டிக்கு மேல் பெல்ட்டால் கட்டினான்.

வினயன் கையை மடக்கி மூச்சை அடக்கிக் கொண்டு பார்த்தான். கையில் சதை திரண்டு உருண்டு தெரிந்தது. அவன் தன்னுடைய உடம்பை முழுவதும் கண்களால் மேய்ந்தான். கத்தியின் கைப்பிடி வேஷ்டிக்கு மேலே வயிறோடு சேர்ந்து இருந்தது.

மணி எட்டு அடித்தது. சாலையில் மக்கள் நடமாட்டம் நிறையவே இருந்தது. மக்களின் பேச்சு சத்தமும் சிரிப்புமாய் சாலை நிறைந்திருந்தது.

அவன் சட்டையை எடுத்து பரிசோதித்தான். அது ஒரு இளம் பச்சை நிற சட்டை வினயன் சிறிது நேரம் என்னவோ சிந்தனையில் ஆழ்ந்தவாறு மேஜையைத் திறந்தான். சிவப்பு மை இருந்த பாட்டிலை எடுத்து சாய்த்து கொஞ்சம் மையை அந்தச் சட்டையில் கொட்டினான்.

அந்தச் சிவப்பு நிறம் தெளிவாகத் தெரிந்தது. வினயன் ஆடையைக் கழற்றினான். பெட்டியைத் திறந்து அதற்குள் இருந்த வேட்டிகள் அனைத்தையும் வெளியே எடுத்துப் போட்டான். இளம் சிவப்பு நிறத்தைக் கொண்ட ஒரு சட்டையை எடுத்து அதில் சிவப்பு மையை ஊற்றி பார்த்தபோதும், ஒரு நிற வித்தியாசம் மை விழுந்த இடத்தில் நன்றாகவே தெரிந்ததை உணர்ந்தான். சிறிது நேரம் என்னவோ சிந்தித்தவாறு நின்றான். கத்தியை எடுத்து கையை லேசாக கீறி அந்த ஆடையில் இரத்தத்தைப் புரட்டிப் பார்த்தான். அவ்வளவு தெளிவாக அது தெரியவில்லை.

வேட்டியை மடித்துக் கட்டியவாறு வெளியே சட்டையை அணிந்து கொண்டு அவன் வெளியே புறப்பட்டான். மணி பத்து அடித்தது. சாலை ஆள் நடமாட்டமே இல்லாமல் அமைதியாக இருந்தது.

சாராயக் கடை இன்னும் அடைக்கப்படவில்லை. கடைக்குள் உரத்த குரலில் சிலர் பேசிக் கொண்டிருந்தார்கள். திறந்து கிடந்த ஜன்னல் வழியாக உள்ளேயிருந்த ரதீசனை வினயன் பார்த்தான். அவன் நன்றாகக் குடித்து போதையில் இன்னொரு ஆளுடன் தகராறு பண்ணிக் கொண்டிருந்தான்.

சாராயக் கடைக்கு சற்று தூரத்தில் ஒரு வீட்டில் திண்ணைக்குப் பின்னால் வினயன் ஒளிந்திருந்தான்.

இடுப்பில் வைத்திருந்த கத்தி தரையில் ‘‘சில்’’ என்று ஓசை உண்டாக்கியவாறு கீழே விழுந்தது. உள்ளே ஒரு நாய் குரைத்தது. வினயன் பயந்து எழுந்து நடந்தான்.

மணி பதினொன்று. பன்னிரண்டு. வினயன் சாலையோரத்தில் இருந்த ஒரு பள்ளத்தில் மறைந்து உட்கார்ந்தான். சொல்லப்போனால் மூச்சு விடக் கூட அவன் பயந்தான்.

சற்று தூரத்தில் உரக்க யாரோ பேசும் சத்தத்தைக் கேட்டு வினயன் கத்தியைக் கையிலெடுத்தான். அவன் மெதுவாக மூச்சை இழுத்து விட்டான். இதயம் துடிக்கும் சத்தத்தைக் கேட்டு அவன் பயந்தான். காற்றில் ஆடும் தாளைப் போல அவன் நடுங்கினான். கண்களைச் சுருக்கி வைத்துக்கொண்டு தூரத்தில் பார்த்தான்.

அந்தப் பேச்சு சத்தம் இப்போது கேட்கவில்லை. வினயன் மேலும் சிறிது தலையை வெளிப்பக்கமாய் நீட்டிப் பார்த்தான். அந்த இருட்டில் அவனால் எதையும் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. மேலும் உடம்பு மார்பு வரை வெளியே நீட்டிப் பார்த்தான். அப்போதும் யாரும் கண்களில் படவில்லை.


வினயன் இப்போது நன்றாக மூச்சை இழுத்து விட்டான். பின்னர் என்ன நினைத்தானோ மூச்சை அடக்கியவாறு, உடம்பை உட்பக்கமாய் இழுத்துக் கொண்டான். கத்தி பிடித்திருந்த கையை முழங்காலில் சுற்றியவாறு அதன் மேல் முகத்தை வைத்துக் கொண்டு சிறிது நேரம் அசையாமல் உட்கார்ந்திருந்தான்.

 

வினயனின் கண்கள் அவனையும் மீறி மூடின. இருந்தாலும் அவன் தூங்கவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் அவன் உட்கார்ந்திருந்தான்.

குணவதியின் உருவம் லேசாக அவனின் மனதின் அடித்தளத்தில் தோன்றியது. அப்போதும் அவள் அழுது கொண்டுதானிருந்தாள். அவள் ஒரு போதும் சிரிக்க மாட்டாளா? அவளுடைய கூந்தல் அவிழ்ந்து கிடந்தது. கவலையால் ஆக்கிரமிக்கப்பட்ட அவள் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தாள். அவளுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும் என்று ஆசைப்பட்ட வினயன் தன்னுடைய கைகளை நீட்டினான். காற்றைத் தன் கைகளால் அவன் தழுவிக் கொண்டிருந்தான்.

காற்று பலமாக வீசியது. தூரத்தில் ஒரு அழுகைச் சத்தம் கேட்டது. வினயன் அதைக்கேட்டு அழத் தொடங்கினான். எங்கோ தூரத்தில் ஆந்தையொன்று அலறியது.

தீராத நோயால் பீடிக்கப்பட்ட ஒரு மனிதன்! வினயன் கண்களை அகல விரித்தவாறு தூரத்தில் பார்த்தான். சகிக்க முடியாத ஒரு துர்நாற்றம் அவன் நாசித் துவாரத்திற்குள் நுழைந்து அவனைப் பாடாய் படுத்தியது. குணவதி செல்லமாக சிணுங்கிக் கொண்டிருந்தாள். அவள் அவனுடைய உடல் மேல் ஒட்டி படுத்தவாறு - அவன் கழுத்தைத் தன்னுடைய கைகளால் சுற்றியவாறு தோள் மீது தன்னுடைய முகத்தை வைத்திருந்தான்.

‘‘கண்ணே...’’

வினயன் அழைத்தான். அவன் குரலே அவளை சுயஉணர்வுக்குக் கொண்டு வந்தது.

வினயனின் உணர்வற்ற மனதில் கிடந்து போராடிக் கொண்டிருந்த உணர்ச்சிகள் மெல்ல எழுப்பி மேலே வந்தன. சூழ்ந்திருந்த காரிருளத் தாண்டி அவனுடைய கண்களில் மரங்கள் தெரிந்தன. அருவி தொடர்ந்து விழுந்து கொண்டிருக்கும் ஓசையும் காதில் விழுந்தது. ரதீசனின் கழுத்தை அறுத்து அந்த மரத்திற்குக் கீழே எல்லோரும் பார்க்கும்படி வைப்பதுதான் தன்னுடைய வாழ்க்கையின் லட்சியம் என்று நினைத்தான் வினயன். அடுத்த நிமிடம் கத்தியைக் கையிலெடுத்து சுழற்றினான். தான் செய்யப்போகும் காரியத்தை ஒரு நிமிடம் மனதில் அவன் ஓட்டிப் பார்த்தான். ‘‘அந்தத் தலை... அந்தத் தலை...’’ - அவள் முணுமுணுத்தாள். ‘‘நான் இனி மேல் ஒருமுறை கூட உங்களைத் தொட மாட்டேன்’’ - அவளின் கண்ணீர் வழிந்த முகம் அவனுடைய மனத்திரையில் தோன்றியது.

‘‘நான் உங்க மனைவி’’ - அந்தச் சிரிப்பு! அந்த நடனம்! அந்த அசாதாரணமான முத்தத்தின் மூலம் அவள் தன்னை முழுமையாக நம்பியதற்குக் காரணம்? அழகான பெண்கொடி அவள்! வினயன் மீண்டும் தன்னை மறந்தான். அவன் மனம் வெறுமையானது. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பல காட்சிகள் சற்று முன்பு தோன்றியதைப் போல தோன்றியது. வினயன் பள்ளத்தை விட்டு வெளியே வந்தான்.

போதை கலந்த ஒரு பேச்சு சத்தம் அவன் காதில் விழுந்தது. வினயன் மீண்டும் பள்ளத்திற்குள் போய் ஒளிந்து கொண்டான். அந்தப் பேச்சுச் சத்தம் அவனை நெருங்கிக் கொண்டிருந்தது. வினயன் ஒளிந்திருந்த இடத்திலிருந்து பார்த்தான்.

ரதீசனும் அவனுடைய நண்பனும் வந்து கொண்டிருந்தார்கள்.

ஒரே வெட்டு... இரத்தம் தெறித்தது. கழுத்து அறுபட்டு தலையும் உடம்பும் தனித்தனியாக... ரதீசன் நிலத்தில் விழுந்தான். துடித்துக் கொண்டிருந்த தலையை வினயன் கையில் எடுத்தான். கத்தி முனையால் அதை மூன்று நான்கு முறை குத்தி சிதைத்தான்.

அடுத்த நிமிடம் - ரதீசனின் நண்பன் வினயனை உடும்பென பிடித்துக் கொண்டான். அந்தப் பிடியிலிரந விடுபட எண்ணி உண்டான போராட்டத்தில் இரத்தம் விழுந்து கிடந்த மண்ணில் இருவரும் மாறி மறி விழுந்து கொண்டிருந்தார்கள். கத்தி இருந்த வலது கையை அவன் பிடியிலிருந்து வினயன் விடுவிக்க முயன்றான். மது அருந்தியிருந்த அவன் பிடி மேலும் இறுகியது. வினயன் கையிலிருந்த கத்தியால் அவனின் மணிக்கட்டை அறுத்தான். ‘‘அய்யோ...’’ என்று உரத்த குரலில் அலறியவாறு அவன் வினயனை விடுவித்ததும் கையிலிருந்த கத்தியை தூரத்தில் எறிந்துவிட்டு வினயன் ஓடியதும் ஒரே நேரத்தில் நடந்தன.

காற்றைவிட வேகமாக ஓடிய வினயன் அந்தக் காரிருளில் எதிரில் வந்து கொண்டிருந்த ஒரு ஆள் மீது மோத, அந்த ஆள் நிலை தடுமாறி கீழே சாய்ந்தான்.

13

ழுது அழுது கண்களும் முகமும் வீங்கிப் போய் ஒரு வாய் உணவு கூட உட்கொள்ளாமல் அருகிலேயே அமர்ந்து வினயனை கவனித்துக் கொண்டிருந்தாள் அவனுடைய தாய். அவன் கண்களைத் திறந்தான். வாயைத் திறந்தான். ஒரு நீண்ட பெருமூச்சை விட்டான். கண்களைத் திறந்து ஒரு வகை பயத்துடன் நாலா பக்கங்களிலும் பார்வையை ஓட்டினான். அவன் கண்கள் கிட்டத்தட்ட ஒரு எலுமிச்சம் பழம் அளவிற்கு இருந்தன. படுத்திருந்த இடத்தை விட்டு எழ முயற்சித்தான். ஆனால், உடல் ஒத்துழைக்க மறுத்தது.

‘‘மகனே...’’

வினயன் தன் தாயையே உற்று பார்த்தான். இரண்டாவது முறையாக மிகவும் கஷ்டப்பட்டு முயற்சி செய்து தலையணையில் கைகளை ஊன்றியவாறு தலையைத் தூக்கினான். தன்னை மூடியிருந்த போர்வையையும் தான் அணிந்திருந்த வேட்டியையும் உற்று பார்த்தான். தன்னுடைய கையைப் பார்த்தான். உள்ளங்கையில் இருந்த பல கோடுகளுக்கு மத்தியில் காய்ந்து போன இரத்தம் தெரிந்தது. கோடுகளுக்கு மத்தியில் காய்ந்து போன இரத்தம் தெரிந்தது.

அடுத்த நிமிடம் வினயன் படுக்கையை விட்டு எழுந்தான்.

‘‘அம்மா... தண்ணி...’’

அவன் தாய் நீர் எடுக்கப் போனாள்.

வினயன் தாண் அணிந்திருந்த வேட்டி, படுத்திருந்த பாய் எல்லாவற்றையும் கண்களால் மேய்ந்தான். கட்டிலில் அமர்ந்தவாறு மேஜையைத் திறந்து கண்ணாடியைக் கையில் எடுத்தபோது, அவன் தாய் அறைக்குள் வந்தாள். தன்னுடைய முகத்தைப் பார்ப்பதற்கு அதற்கு மேல் அவனுக்கு நேரமில்லை. ஆர்வத்துடன் நீரை வாங்கிய வினயன் கையையும் முகத்தையும் கழுவினான்.

‘‘மகனே... கொஞ்சம் கஞ்சி கொண்டு வரட்டா?’’

‘‘என் வேட்டியும் சட்டையும் எங்கே?’’

‘‘நேற்று ராத்திரி நான் கட்டியிருந்த அந்த சிவந்த...’’

‘‘நேற்று நீ வாய்க்கு வந்தபடி என்னென்னமோ உளறிக்கிட்டு இருந்தே. இன்னைக்குக் காலையில இந்தக் கதவை வம்படியா உடைச்சுல்ல நான் உள்ளே வந்தேன்...’’

‘‘அந்தச் சிவந்த சட்டை...’’

‘‘பெட்டியில பாரு.’’

‘‘இல்ல... அது... ’’

‘‘நீ கொஞ்சம் துணியை தீ வச்சு எரிச்சிட்டே.’’

அதைக் கேட்டு வினயன் அதிர்ந்தான்.


‘‘அந்த சட்டை முழுதும் எரிஞ்சிருச்சா -?’’

‘‘கொஞ்சம் சாம்பலை நான் வெளியே எடுத்துப் போட்டேன்.’’

‘‘அதுல இரத்... ஆமா... அந்த சாம்பல் கருப்பாத்தானே இருந்துச்சு?’’

‘‘பிறகு... சாம்பல் எப்படி இருக்கும்?’’

சிறிது நேரம் என்னவோ சிந்தித்தவாறு அமர்ந்திருந்தான் வினயன்.

‘‘தெரியுமா? - அவன் கேட்டான்.’’

‘‘என்ன?’’

‘‘அந்தச் சாம்பல்ல இரத்... ஒரு நிற வித்தியாசம் தெரியலியா?’’

‘‘என்ன வித்தியாசம்?’’

‘‘நனைஞ்சிருந்த அந்தசட்டை முழுசும் எரிஞ்சதா?’’

‘‘ஆமா... நீ ஏன் அதை எரிச்சே? அதைக் கேட்டு வினயன் அதிர்ச்சியடைந்தான். தன் தாயை சந்தேகத்துடன் அவன் பார்த்தான்.’’

‘‘அம்மா... உங்களுக்குத் தெரிஞ்சு போச்சா?’’

‘‘என்ன சொல்ற?’’

வினயன் உரத்த குரலில் சிரித்தான்.

‘‘இல்ல... இல்ல... அம்மா, நான் சும்மா சொன்னேன். உங்களுக்குத் தெரிஞ்சிருந்தா...’’

‘‘உனக்குப் பைத்தியம்தான் பிடிச்சிருக்கு!’’

‘‘பைத்தியமா? நான் என்ன சொன்னேன்?’’

‘‘இரத்தம்... ரதீசன்... அப்படின்னு என்னமோ சொல்லிக்கிட்டு இருந்ததே...’’

ஒரு மிருகத்தின் கண்களைப் போல வினயனின் கண்கள் அதைக் கேட்டு பெரிதாயின. பார்க்கவே அவை மிகவும் பயங்கரமாக இருந்தன. ஒரு வகை கொடூரத், தன்மை அவனுடைய முகத்தில்வந்து ஒட்டிக் கொண்டு, பார்க்கவே சகிக்காத அளவிற்கு ஒரு அரக்கத்தனத்தை அங்கு உண்டாக்கியது. அதைப் பார்த்து உண்மையிலேயே அவனுடைய தாய் பயந்து போனாள்.

‘‘என்னை... எல்லாம் தெரிஞ்சு... ரதீ... எதுக்கு?’’ - வினயன் உரத்த குரலில் கத்தினான்.

‘‘கடவுளே... என் மகனே... உனக்கென்ன ஆச்சு?’’

வினயன் தன்னையும் மீறி கட்டிலில் போய் விழுந்தான். அவன் நிலையைப் பார்த்த அவனுடைய தாய் வாய் விட்டு அழ ஆரம்பித்தாள்.

‘‘குணவதி’’ - அவன் மெதுவான குரலில் உச்சரித்தான்.

‘‘என்னைக் கண்டுபிடிச்சிட்டாங்க... தூக்குமரம்...’’

வினயன் மீண்டும் கண்களைத் திறந்தான்.

‘‘மகனே... உனக்கு என்ன ஆச்சு? சொல்லுடா... அம்மாவை தேவையில்லாம கஷ்டப்படுத்தாதே...’’


மிகவும் களைத்துப் போயிருந்த வினயன் நாக்கு வறண்டு போய், அசையாமல் சில நிமிடங்கள் படுத்துக்கிடந்தான். அவன் தொண்டையில் கொஞ்சம் கூட ஈரம் இல்லை.

‘‘த...ண்...ணி...’’

அவன் தாய் உள்ளே போய் கஞ்சி கொண்டு வந்தாள்.

ஆர்வத்துடன் வினயன் கஞ்சியை வாங்கிக் குடித்தான். உடம்பில் இருந்த தளர்ச்சி போய், கொஞ்சம் புத்துணர்ச்சி பிறந்தது போல் இருந்தது. அவன் உள் மனதில் அந்த பயங்கர சம்பவம் ஒரு மின்னலைப் போல ஒரு நிமிடம் தோன்றி மறைந்தது. மகனின் நடவடிக்கைகளைத் தெரியாமல் கவலையுடனும் வாட்டத்துடனும் பக்கத்தில் அமர்ந்திருந்த தன்னுடைய தாயையே பயத்துடன் பார்த்தான் வினயன். மகனும் தாயும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். தாயின் கண்ணில் நீர் அரும்பியது.

‘‘என் தங்கமே!’’

வினயன் முகத்தை திருப்பிக் கொண்டான். சுவரைப் பார்த்தவாறு சாய்ந்து படுத்தான். அந்த வெண்மை வண்ணம் பூசிய சுவரில் இருந்த ஒரு கறையை அவன் கண்கள் பார்த்தன. அந்தக் கறை பெரிதாகி, இரத்தச் சிவப்பு வண்ணத்தில்... ஒரு மனித உருவமாகி... கண்ணும் மூக்கும் காலும் தலையும்... வினயன் நடுங்க ஆரம்பித்தான். அவனுடைய கண்களைப் பார்க்கவே பயங்கரமாக இருந்தது.

‘‘மகனே!’’

ஒரு அசரீரியைக் கேட்பது போல் அது அவனுக்கு இருந்தது.

‘‘உனக்கென்னடா ஆச்சு?’’ - அவனின் தாய் தோளில் தன் தலையை வைத்தவாறு கேட்டாள்.

‘‘ஒண்ணுமில்ல...’’

‘‘நீ நடுங்குறதுக்கு... இரத்தம்... அவளோட தலை... அது இதுன்னு பேசுறதுக்கு...’’

‘‘எப்ப சொன்னேன்? ஒண்ணுமில்ல...’’

‘‘நேற்று ராத்திரி முழுசும் சொல்லிக்கிட்டே இருந்தியே!’’

‘‘நேற்று ராத்திரி நான் அந்த சம்பவத்தைப் பற்றியோ சொன்னேன்?’’

‘‘எந்த சம்பவம்?’’

‘‘அந்த... அந்த சம்பவம்... அம்மா, உங்களுக்கு எல்லாம் தெரிஞ்சி போச்சா?’’

‘‘எனக்கெப்படி தெரியும்?’’

‘‘தூக்கு... இல்ல... அம்மா, என்னைப் பற்றி உங்களுக்கு பயமொண்ணும் இல்லியே?’’

‘‘அப்படியெல்லாம் அம்மாகிட்டே பேசாதடா. நான் அப்படி நினைச்சுக்கூட... அட கடவுளே!’’

‘‘அப்ப... அம்மா, உங்களுக்கு எல்லாம் தெரியவேண்டாமா? நான் சொல்றேன்.’’

‘‘சரிடா மகனே... சொல்லு... உன் கஷ்டத்துக்குக் காரணம் என்ன?’’

‘‘ஆனா...?’’

‘‘என்ன?’’

‘‘அம்மா... மனிதனுக்கு உலகத்தோட உள்ள ஒரே உறவு அவனோட தாய்தானே?’’

‘‘நீ என்ன நினைச்சு பேசறேன்னே என்னால புரிஞ்சிக்க முடியல...’’

‘‘எனக்காக அம்மா... நீங்க உங்க உயிரைக் கூட தரத் தயாரா இருங்கீங்கள்ல?’’

‘‘மகனே... உனக்கு என்னடா வேணும்? நான் எது வேணும்னாலும் உனக்காகச் செய்வேன்.’’

‘‘அம்மா, உங்களை நீங்க விரும்புறதைவிட என்னை அதிகம் விரும்புறீங்கள்ல?’’

‘‘அது கடவுளுக்குத் தெரியும்.’’

‘‘சரி... அப்படின்னா நான் சொல்றேன்.’’

அவன் என்ன சொல்லப் போகிறான் என்பதைக் கேட்கும் ஆர்வத்துடன் அவனையே பார்த்தாள் அவன் தாய்.

‘‘அம்மா... நீங்க மனிதப் பிறவிதானே?’’

‘‘நான் உன்னோட அம்மா...’’

‘‘இருந்தாலும் சட்டத்தை மதிக்கணும்னும், சட்டத்தை மீறி நடக்குறவங்க மேல கோபமும் உங்களுக்கு இருக்கும்ல?’’

‘‘அதைப் பற்றியெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது.’’

சிறிது நேரம் அவள் அமைதியாக இருந்தாள்.

‘‘மகனே... சொல்லுடா.’’

‘‘என்னம்மா?’’

‘‘சொல்றேன்னு சொன்னதை...’’

‘‘நான் என்ன சொல்றேன்னு சொன்னேன்?’’

‘‘நீ ஏன் இப்படி இருக்கே?’’

‘‘ஒரு காரணமும் இல்ல...’’

‘‘ஏதோ சொல்றேன்னு சொன்னது...’’

‘‘என்னைத் தேவையில்லாம கஷ்டப்படுத்தாதீங்க...’’

நேரம் ஓடிக்கொண்டிருந்தது. வினயனின் மனதில் உள்ள விஷயத்தை அறிய அவன் தாய் பிரியப்ப்டட்டாள்.

‘‘மகனே... அம்மாகிட்ட சொல்லுடா.’’

‘‘என்ன சொல்லணும்?’’

‘‘நீ பயப்படுறியா?’’

‘‘நான் குளிக்கணும்.’’

‘‘உடம்பு நெருப்பு மாதிரி சுடுது. வேண்டாம்...’’

‘‘என் உடம்புல...’’

‘‘உன் உடம்புல... என்ன?’’

‘‘ஓண்ணுமில்ல...’’

‘‘ஒண்ணுமே இல்லியா?’’

‘‘அம்மா, கொஞ்சம் போங்க. நான் தூங்கப் போறேன்.’’

வினயனுக்கு அந்தக் கொலையைப் பற்றி எந்த ஞாபகமும் இல்லை. ‘‘இரத்தம்’’, ‘‘அவனோட தலை’’, ‘‘தூக்குமரம்’’ என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.

வினயன் கட்டிலை விட்டு எழுந்து மேஜையைத் திறந்து கண்ணாடியைக் கையிலெடுத்தான். காது மடிப்பிற்குப் பின்னால் ஒரு துளி இரத்தம் கட்டியிருந்தது. நெற்றியில் விழுந்து கிடந்த தலைமுடியில் இரத்தம் பட்டு காய்ந்து போயிருந்தது.

தன் தாய்க்குத் தெரியாமல், போய் குளித்தான்.

14

ந்தக் கொலை செய்தவனைப் பிடித்துவிட்டார்கள். காவல் நிலையத்தில் அவன் தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டும் விட்டான்.

இப்படிப் பல கதைகளையும் வினயன் கேட்டான். எங்கு பார்த்தாலும் இதைப் பற்றித்தான் பேச்சாக இருந்தது.

வினயன் மந்திரசக்திக்கு ஆட்கொண்டவனைப்போல இங்குமங்குமாய் தன்னையே மறந்து அலைந்து திரிந்தான்.


அன்று கையில் கீறல் பட்டவன் மருத்துவமனையில் இருப்பதாக வினயனுக்கு தெரிய வந்தது.

கொலை செய்தவன் குற்றத்தை ஒப்புக் கொண்டு விட்டான்!

வினயன் காவல் நிலையத்தைத் தேடிச் சென்றான். இரும்புக் கம்பிகளுக்குப் பின்னால் இருந்தவாறு ஒருவன் வெளியே பார்த்துக் கொண்டிருப்பதை வினயன் கண்டான்.

அவன்தான் கொலை செய்தவன்!

வினயன் இன்ஸ்பெக்டரின் அறைக்குள் சென்று சொன்னான்.

‘‘அந்த ஆள் நிரபராதி. எல்லாம் முடிஞ்ச பிறகு இரத்தத்துல கால் தடுமாறி கீழே விழுந்தவன். பாவம் அவன்...’’

‘‘அவன் தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டிருக்கிறானே!’’ - இன்ஸ்பெக்டர் சொன்னார்.

‘‘அட கஷ்டமே!’’

வினயன் வெளியே வந்தான். எந்தவித இலக்குமில்லாமல் மனம் போனபடியெல்லாம் நடந்து திரிந்தான். மீண்டும் காவல் நிலைத்திற்கே வந்து சேர்ந்தான். இன்ஸ்பெக்டர் அவனை உள்ளே அழைத்துக் கேட்டார்.

‘‘இவன் நிரபராதின்னு உனக்கு எப்படி தெரியும்?’’

‘‘நிரபராதியாக இருக்குற ஒருவன் தூக்கு மரத்தில் தொங்குவதை விட, ஆயிரம் குற்றவாளிகள் தப்பிப்பது எவ்வளவோ மேல்...’’

‘‘நீ சொல்ற தத்துவம் நல்லாத்தான் இருக்கு. ஆனால், இந்த ஆளு நிரபராதின்னு எப்படி தெரிஞ்சிக்கிறது?’’

‘‘பணமோ அந்தஸ்தோ இல்லாத ஏழை இந்த ஆளு. இவன் குடும்பத்தோட கஷ்டத்தை நினைச்சு இவனை விடுதலை பண்ணுங்க.’’

‘‘அப்ப யார் கொலை செய்தது?’’

வினயன் அந்தக் கேள்வியைக் கேட்டு நடுங்கினான். இன்ஸ்பெக்டர் அதை கவனிக்காமல் இல்லை.

வினயனுக்கு மிகவும் களைப்பாக இருந்தது. அவன் ஒரு நாற்காலியில் தளர்ந்து போய் உட்கார்ந்தான்.

‘‘பாவம் இந்த ஆளை விட்டுடுங்க.’’

‘‘கொலை செய்த ஆளை உனக்குத் தெரியுமா?’’

‘‘இதுதான் கஷடம்ன்றது. சில நேரங்கள்ல இப்படித்தான் நல்லது சொல்லலாம்னு நினைச்சா இப்படியெல்லாம் பிரச்சினை வருது. இந்த ஆளுக்கு இந்தக் கொலையைப் பற்றி எதுவுமே தெரியாதுன்னு நான் சத்தியம் பண்ணிச் சொல்றேன். நீங்க இந்த ஆளை அனாவசியமா உள்ளே போட்டு வச்சிருக்கீங்க. நீங்க சொன்னதை அவன் திருப்பிச் சொல்றான். அவ்வளவுதான்.’’

வினயன் மீண்டும் அமர்ந்திருந்த இடத்தைவிட்டு எழுந்தான். காவல் நிலையத்தை விட்டு அவனுக்கு வெளியே போக வேண்டும் என்று தோன்றவில்லை. அவன் மீண்டும் இன்ஸ்பெக்டரைப் பார்த்துச் சொன்னான்.

‘‘அவன் நிரபராதி.’’

‘‘உனக்கு எப்படித் தெரியும்?’’

‘‘அந்தக் கத்தி கிடைச்சதா?’’

அவன் எங்கேயோ அதை ஔச்சு வச்சிருக்கிறதா சொன்னான்.’’

‘‘அட கஷ்டமே!’’

வினயன் தான் செய்த செயலை மீண்டும் ஞாபகத்திற்குக் கொண்டு வந்தான். அங்கே எதற்காக தான் வர வேண்டும் என்று தன்னைத்தானே கேள்வியும் கேட்டுக் கொண்டான். தான் இன்ஸ்பெக்டரிடம் பேசிய விஷயங்களை மீண்டும் ஞாபகப்படுத்திப் பார்த்தான். இன்ஸ்பெக்டரிடம் முகத்தையே வினயன் உற்றுப் பார்த்தான். அவர் தன்னை சந்தேகப்படுகிறாரோ என்று அவனுக்குத் தோன்றியது. அவன் தன் காதுகளைத் துடைத்துக் கொண்டான்.

‘‘யார் கொலை செய்தது? உனக்கு ஏதோ தெரியும்ன்ற மாதிரி தோணுதே!’’

இன்ஸ்பெக்டரின் இந்தக் கேள்விக்கு எந்த பதிலும் கூறாமல் மவுனமாக இருந்தான் வினயன்.

அந்தக் கத்தியை எங்கேயோ ஒளித்து வைத்திருப்பதாக அந்த ஆள் கூறினானாம். வினயன் இந்த விஷயத்தை மீண்டும் ஞாபகப்படுத்திப் பார்த்தான். அந்தக் கொலையைச் செய்தது தான்தானா என்று அவனுக்கு சந்தேகம் தோன்ற ஆரம்பித்துவிட்டது. அந்தச் சம்பவம் ஒருவேளை ஒரு கனவாக இருக்குமோ என்று அவன் நினைத்தான். உயிரற்ற சவத்தைப் போல நள்ளிரவு நேரத்தில் காவல் நிலைய வளாகத்தில் அவன் இங்குமங்குமாய் அலைந்து கொண்டிருந்தான். அந்தக் கொலை நடந்த இடத்தில் அந்த இரவு நேரத்தில் - வெள்ளை உடை அணிந்த ஒரு உருவத்தைச் சிலர் பார்த்திருக்கிறார்கள்.

வினயனை எதிர்பார்த்து மனதில் பதைபதைப்புடன் அவன் தாய் காத்திருந்தாள்.

‘‘அம்மா... துயரக் கடலோட ஆழத்தை நீங்க இதுவரை பார்த்தது இல்லை. ஆனால், நீங்க ஒருநாள் அதைப் பார்க்கத்தான் போறீங்க...’’

வினயன் தன் தாயைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தான். அவன் தொடர்ந்தான்.

‘‘அம்மா... என்னை ஏன் நீங்க பெத்தீங்க? எனக்காக நீங்க ஏன் கஷ்டங்களை அனுபவிச்சீங்க? எனக்காக நீங்க ஏன் அழணும்? என் இதயத்தை நான் உங்களுக்குத் திறந்து காட்டவா? அம்மா... உங்களோட கடைசி காலத்துல... நான் உங்களுக்கு உதவியா இருக்குறதுக்கு ஒரு பெண்ணை ஏற்பாடு பண்ணுறேன். அவ ஒரு மகள் மாதிரி உங்களைப் பார்த்துக்குவா. அவள் உங்களுக்கு கேக்குறப்போ தண்ணி தருவா. அவள் உங்களை சுடுகாட்டுக்கு சுமந்துட்டு போவா... நான்... நான்...’’

‘‘மகனே!’’

‘‘எமன் என்னை வட்டம் போடுறான்மா. நான் உங்களோட ஒரே மகன். இருந்தாலும் நீங்க எனக்காக அழ வேண்டாம். உலகத்துல இருக்குற கஷ்டங்களைப் பார்த்து என் இதயம் வெந்து உருகிக்கிட்டிருந்து. இருந்தாலும், அம்மா... உங்க அன்பாலும் அரவணைப்பாலும் நான் எல்லாத்தையும் எப்படியோ தாங்கிக்கிட்டேன். அம்மா... அந்தப் பெண்ணோட அன்பு உண்மையானது. நான¢அவளை அழைச்சிட்டு வரட்டுமா?’’

‘‘அய்யோ... வினயா!’’

வினயன் திரும்பி நின்றான்.

‘‘அம்மா.’’

‘‘நீ எங்கே போற?’’

‘‘நானா? அம்மா அழாதீங்க... இனிமேல் உங்களோட அன்பை அந்தப் பெண் மேல காட்டுங்க. என்னை நீங்க மறந்திடுங்கம்மா. இந்த மகன் இனிமேல்... அம்மா உங்களைப் பத்திரமா பாதுகாக்குற நிலையில இப்போ நான் இல்ல. அவுங்க என்னை சீக்கிரம் பிடிச்சிட்டுப் போய்... அதுக்கு முன்னாடி நான் அந்தப் பெண்ணை இங்கே அழைச்சிட்டு வந்திர்றேன். அந்தப் பெண்ணோட இங்கே அழைச்சிட்டு வந்திர்றேன். அந்தப் பெண்ணோட அன்பில்... அம்மா... அழாதீங்க... என்னை வாழ்த்தி அனுப்பு வையுங்க... தேவையில்லாமல் ஒரு நிரபராதியான அந்த ஆளு ஏன் தூக்கு மரத்துல தொங்கணும்?’’

‘‘மகனே... நானும் உன் கூட...’’

‘‘அம்மா... சாதாரண இதயத்தைக் கொண்ட இப்படியொரு மகனை ஏன் பெத்தீங்க? எனக்காக ஏன் எவ்வளவோ கஷ்டங்களைச் சகிக்கச்சீங்க? கடந்த போன அந்த இளமைக்காலம்... வாழ்க்கை இன்னும் முடியல... என் மனதில் இருக்கும் ஆசைகள்... கண்முன்னாடி கம்பீரமா நிற்கிற விதி... அன்பே வடிவமான தாயின் அரவணைப்பு... அம்மா...’’

வினயன் தன் தாயைக் கட்டிப் பிடித்தான்.

‘‘அம்மா... நீங்கதான் என் உயிர்... நீங்கதான் என் உயிர்.’’

வினயன் வேகமாக தன் தாயிடமிருந்து எழுந்து வெளியே நடந்து கண் இமைக்கும் நேநத்தில் இருளோடு இருளாய் கலந்து காணாமல் போனான்.

அவன் தாயும் அவனுக்குப் பின்னால் போனாள். ஆனால், வினயன் சென்ற வழியை அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை.


15

‘‘உங்களுக்கு நடந்த விஷயங்கள் தெரியும்ல?’’

குணவதி உள்ளே இருந்தவாறு கேட்டாள். வினயன் வெளியே நின்றிருந்தான். அந்த ஜன்னல் திறந்தே இருந்தது.

‘‘குணவதி... கொஞ்சம் கதவைத்திற...’’

‘‘அது இந்தப் பிறவியில் நடக்காது.’’

‘‘இது நான் வர்ற கடைசி முறையா இருக்கும்.’’

‘‘அப்படியா? பாவம்... ரதீசனை யாரோ அயோக்கியப் பசங்க கொலை செய்திருக்காங்க. உங்களுக்குத் தெரியுமா?’’

‘‘பாவம் ரதீசனா?’’ - வினயன் கேட்டான்.

‘‘ஆமா... உண்மையைத்தான் சொல்றேன். அந்த ஆளை யாரோ வெட்டி கொன்னுருக்காங்க. அதைக் கேட்கவே பயங்கரமா இருக்கு. பாவம் ரதீசனை யாரோ அயோக்கியப் பசங்க கொலை செய்திருக்காங்க. உங்களுக்குத் தெரியுமா?’’

‘‘பாவம் ரதீசனா?’’ - வினயன் கேட்டான்.

‘‘ஆமா... உண்மையைத்தான் சொல்றேன். அந்த ஆளை யாரோ வெட்டி கொன்னுருக்காங்க. அதைக் கேட்கவே பயங்கரமா இருக்கு. பாவம்! அந்த மகா பாவத்தைச் செய்தவன்...’’

‘‘கொலை செஞ்சவன் மகா பாவியா?’’

‘‘அந்தச் சம்பவத்தை மறுபடியும் என்கிட்ட. ஞாபகப்படுத்தாதீங்க. என் கண்கள்ல கண்ணீரே வற்றிப் போச்சு. ரதீசன் கூட எனக்குப் பழக்கம் உண்டாகி எவ்வளோ நாட்கள் ஆயிடுச்சு. அந்த ஆளு தலையும் உடம்பும் தனித் தனியா கிடக்குறத என்னால நினைச்சுக்கூட பார்க்க முடியல...’’

‘‘ரதீசன் செத்துப் போனதுக்காக நீ அழுதியா?’’

‘‘எப்படி கவலைப்படாம இருக்க முடியும்? உற்சாகமா இருந்த ஒரு ஆளு திடீர்னு இந்த உலகத்தை விட்டு போறதுன்னா...’’

‘‘அது உனக்கு நல்லதுதானே? அவன் உன்னை எப்படியெல்லாம் கஷ்டப்படுத்தினான்!’’

‘‘அந்த ஆளு செய்தது எல்லாம் தன்னோட சொந்த வாழ்க்கை நல்லா இருக்கணும்ன்றதுக்காக. சுயநலமா இருக்குறது பாவம்னு நான் நினைக்கல. அப்படி இல்லாதவங்க இந்த உலகத்துல யார் இருக்காங்க?’’

‘‘நீ அவனை மன்னிச்சிட்டியா?’’

‘‘எனக்கு அதுக்கு தகுதி இருக்கா என்ன? அந்த ஆளு செய்த தவறுகளையெல்லாம் மன்னிக்கணும்னு நான் கடவுள்கிட்ட வேண்டிக்கப் போறேன்.’’

‘‘நீ ரதீசனோட ஆத்மா சாந்தி அடையிறதுக்காக கடவுள்கிட்ட வேண்டிக்கப் போறியா?’’

‘‘இந்தப் பேச்சை இதோ நிறுத்திக்குவோம். அந்தச் சம்பவத்தை என்னால நினைச்சுப் பார்க்கவே முடியல. பாவம்... ரதீசன் ஒரு நல்ல ஆளுதான். அந்த ஆளை இப்பக்கூட நேர்ல பார்க்குற மாதிரியே இருக்கு.

அந்த ஆளு எவ்வளவோ தப்புகள் செஞ்சிருக்கலாம். அது சாதாரணமா உலகத்துல நடக்கக் கூடியதுதான். இருந்தாலும் அந்தக் கொலையைச் செய்தவன் உண்மையிலேயே ஒரு மகா பாவிதான். அவனுக்கு எப்படி ஒரு கொலையைச் செய்யணும்னு தோணிச்சின்னே தெரியல. நினைச்சுப் பார்க்குறப்பவே எவ்வளவு பயங்கரமா இருக்கு! இந்த மாதிரி கொலை செய்றவங்களுக்கு நரகம்தான் கிடைக்கும்.’’

‘‘குணவதி... ரதீசனைக் கொலை செய்தவன் பெரிய பாவின்னு சொல்றியா?’’

‘‘கொலை செஞ்சவன் பாவியான்னா கேக்குறீங்க? சரிதான்... உலகத்துல கொலை செய்றதைப் போல பெரிய பாவக் காரியம் என்ன இருக்கு? சொல்லுங்க...’’

‘‘நினைச்சுப் பார்க்குறப்போ நீ சொல்றது உண்மைதான்னு படுது. கொலைன்றது பெரிய பாவச் செயல்தானோ?’’

‘‘ஆமா... உங்க குரல் ஏன் தடுமாறுது?’’

‘‘என் உள் மனசு என்னமோ சொல்லுது. குணவதி கொலை... செஞ்சவன் பெரிய பாவிதான். இல்லே?’’

‘‘உண்மையாகவே அவன் இந்த உலகத்துக்கு ஒரு தீராத கலங்கத்தை உண்டாக்கியவன்தான். ஒரு மனிதனோட உயிரை எடுக்கணும்னு நினைக்கிறவனோட இதயம் எந்த அளவுக்கு கடினமாகவும் கொடூரத் தன்மை உள்ளதாகவும் இருக்கும்!’’

‘‘நீ சொல்றது ஒருவிதத்துல உண்மைதானோ?’’

‘‘நம்மளை மாதிரி ஒரு மனிதன் இரத்தம் சிந்துறதுன்றது எவ்வளவு பெரிய பாவம்!’’

வினயன் எதுவுமே பேசாமல் சிறிது நேரம் நின்றான்.

‘‘அவன் தண்டிக்கப்பட வேண்டியவனா?’’

‘‘நிச்சயமா.’’

‘‘அய்யோ...’’

‘‘ஆமா... நீங்க ஏன் அழறீங்க?’’

‘‘கொலை செஞ்சவன் மோசமானவனா? ஒதுக்கப்பட வேண்டியவனா? இன்னொரு தடவை சொல்...’’

‘‘இதுல சந்தேகம் வேற இருக்கா?’’

‘‘அவனோட பயங்கரமான கனவுகள்- அந்த அக்னி குண்டம்- அவன் நெஞ்சில் எரிஞ்சிக்கிட்டு இருக்குற நெருப்பு - இதுக்கு மேல வேற தண்டனையும் வேணுமா? கொலை செஞ்ச இடத்துல கிடந்த இரத்தம் அவன் மனசுல தோணிக்கிட்டே இருக்கு. இந்த தண்டனைகள் போதாதா?’’

‘‘அவனோட செயலோட கொடூரத் தன்மையையும் விளைவையும் பார்க்குறப்போ, நிச்சயமா இது ரொம்பவும் சாதாரணமானது. அந்த ஈவு இரக்கமே இல்லாத மனிதன் மேல யாருக்குமே பச்சாதாபம் உண்டாகாது.’’

‘‘அப்படியா சொல்ற? அவனோட நெஞ்சுல உண்டாகுறு வலி போதாதுன்னா சொல்ற?’’

‘‘தூக்கு மரத்துல இருந்து தப்பிக்கிறதுக்காக சொல்ற வார்த்தை அது.’’

‘‘இல்ல... இல்ல... நிச்சயமா இல்ல...’’

வினயன் முஷ்டியைச் சுருட்டி தலையில் வைத்தவாறு நின்றான். ‘‘நீ சொல்றது உண்மைதான்’’ பல்லைக் கடித்தவாறு உரத்த குரலில் சொன்னான்.

‘‘ஆமா... நீங்க ஏன் தேவையில்லாம வேதனைப்பட்டுக்கிட்டு இருக்கீங்க?’’

‘‘கொலை செய்யப்பட்டவன் கெட்டவனா இருந்தாலும் அவனுக்கும் எவ்வளவோ ஆசைகள் இருந்திருக்கும். சொந்தக்காரங்கன்னு நிறைய பேர் இருந்திருப்பாங்க. தன்னோட எதிர்காலத்தைப் பற்றி அவன் எப்படியெல்லாம் மனசுல கற்பனை பண்ணி வைத்திருப்பான்! எதிரியோட நோக்கம் என்னன்னு தெரியமா இருந்தால்கூட கத்தி அவன் நெஞ்சுல இறங்குறப்போ... அய்யோ குணவதி... நினைக்கிறப்பவே எவ்வளவு கஷ்டமா இருக்கு! தேவடியாளான உனக்கு கஷ்டம்னா என்னன்னு தெரியும். கவலைன்னா என்னன்னு தெரியும். தேவடியா... மொத்த உலகமும் வெறுக்குற தேவடியா... உலகமே சேர்ந்து தூரத்துல நிக்க வைக்கிற தேவடியா... எந்த இடத்துலயும் அன்பையோ, பாசத்தையோ பார்க்க முடியாம இருட்டுல வெளிச்சம் தெரியமா மனசுக்குள்ளே வெந்து செத்து நடைப்பிணமா வாழ்ந்துக்கிட்டு இருக்குற தேவடியா... காதலோட இனிமையைத் தெரிஞ்சு வச்சிருக்குற தேவடியா... குணவதி... உன்கிட்ட என் மனசுல இருக்குற பாரத்தை இறக்கி வைக்கிறேன். இரத்தத்தைக் கனவு காண்கிற கொலைகாரன் வேற எங்கே போவான்?’’

வினயன் எதுவும் பேசாமல் சில நிமிடங்கள் அமைதியாக இருந்தான். குணவதியும் எதுவும் பேசவில்லை. சிறிது நேரம் கழித்து அவன் தொடர்ந்தான்.

‘‘குணவதி... இந்தக் கதவைத் திற... என்னைக் கொஞ்சம் உள்ளே விடு. உன் காலடியில் நின்னு நான் கொஞ்சம் நிம்மதி தேடிக்கிறேன். அய்யோ... குணவதி! எனக்கு நீ ஆறுதல் சொல்லக்கூடாதா? கொலை செய்தவனை நீ ஒரேடியா வெறுக்குறியா?’’

‘‘நீங்க கொலைகாரனா?’’

‘‘நானா? நீ என்னைக் கை விட்டுட்டே!’’

‘‘நீங்க ஏன் இவ்வளவு வேதனைப்படணும்?’’

‘‘இது போதாதுன்னுல்ல நீ சொல்ற?’’

‘‘நீங்க...’’


‘‘குணவதி! எனக்கு இதயம்ன்ற ஒண்ணு இல்லவே இல்ல. ஒத்துக்குறேன். அந்தக் கொலை செய்யப்பட்ட ரதீசன்.... நான்... எங்க ரெண்டு பேர்ல யாருக்கும் இதயம் இல்ல?’’

‘‘நீங்களா ரதீசனைக் கொன்ன ஆளு?’’

‘‘அது உண்மையா இருந்தா, என்னை நீ வெறுத்து ஒதுக்கிடுவியா?’’

‘‘அய்யோ...’’

‘‘நீ ஏன் அழறே! வெறுத்து ஒதுக்கிடுவே! அப்படித்தானே!’’

‘‘நீங்க சொல்றதெல்லாம் உண்மையா?’’

‘‘என் இதய வேதனைக்கு மருந்து வேணும்.’’

‘‘மனசுல மறைச்சு வச்சிருக்குற உண்மையைச் சொல்லுங்க.’’

‘‘கொலைகாரனை நீ வெறுக்கத்தானே செய்வே?’’

‘‘மனசுல மறைச்சு வச்சிருக்குற உண்மையை...’’

‘‘நான்தான் அந்தக் கொலைக்காரன்...’’

‘‘அய்யோ...!’’

அடுத்த நிமிடம் மயக்கமடைந்து கீழே விழுந்தான் வினயன்.

16

செய்த குற்றத்தைக் கட்டாயம் ஒப்புக் கொள்ள வேண்டுமென்று குணவதி சொன்னாள்.

‘‘நான் உங்களுக்காக காத்திருப்பேன்’’ அவள் அவனுக்கு வாக்குறுதி அளித்தாள்.

வினயன் குற்றத்தை ஒப்புக் கொண்டான். ஆனால், குணவதி அனுபவிக்கும் கஷ்டங்களைப் பார்த்துத்தான் தான் கொலை செய்யும் முடிவையே எடுத்தது என்ற விஷயத்தை அவன் அங்கு வெளியிடவில்லை.

ஆயுள் தண்டனை!

சிறையின் இரும்புக் கம்பிகள் வழியாக அவன் வெளியே பார்த்துக் கொண்டிருந்தான். வெளியே இருக்கும் அழகான உலகத்தில் ஒரு கிளியைப் போல எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் படு சுதந்திரமாக அவனுக்குப் பறந்து திரிய வேண்டும்போல் இருந்தது. குணவதியை வினயன் நினைத்துப் பார்த்தான். அவளை நினைக்க நினைக்க அவனுடைய இதயத்தில் இன்ப ஊற்று பெருக்கெடுத்து ஓடியது. அவள் இப்போது எப்படி இருப்பாள்? அவள் இப்போதும் விலைமாதுவாகத்தான் இருப்பாளா?’’

வினயன் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான். அவனுடைய கண்களில் இருந்து கண்ணீர் அரும்பி ஆறென வழிந்தது. அந்த வெரும் தரையில் சோர்வடைந்து அவன் படுத்துக் கிடந்தான். அவனுடைய தண்டனைக் காலம் முடிய இன்னும் எத்தனை வருடங்கள் இருக்கின்றன.

தன் மீது ஏகப்பட்ட பாசத்தைக் கொட்டி வளர்த்த தன்னுடைய தாயை நினைத்துப் பார்த்தான். இதயத்தில் நெருப்பைக் கொட்டியதைப் போல் அப்போது அவன் உணர்ந்தான். இப்போது அவன் தாய் உயிரோடு இருப்பாளா? வயதான காலத்தில் அருகிலிருந்து கவனிப்பதற்கு யார் இருக்கிறார்கள்? குணவதி அங்கே போயிருப்பாளா?’’

வினயனை வேலை செய்வதற்காக வெளியே கொண்டு சென்றார்கள். அவன் விசாரித்துப் பார்த்தான். ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

குணவதி அந்த குணப்படுத்த முடியாத நோயால் பீடிக்கப்பட்டு விட்டவள் என்பதை வினயன் நினைத்துப் பார்த்தான். அவள் எவ்வளவு அழகானவளாக இருந்தாள்! உலகத்தையே தன்னுடைய காலடிக்குக் கீழே கொண்டு வரக்கூடிய அளவிற்கு அழகானவள் அவள்! ஆனால், அந்த நோய் இப்போது மேலும் முற்றிப் போயிருக்கும். அவள் தன் அழகையெல்லாம் இழந்து பார்க்கவே சகிக்க முடியாதவளாக இப்போது இருக்கலாம். அவள் நடனம் ஆடுவதை விட்டிருப்பாள். யாராவதொரு ஆண் அவளைப் பார்த்துக் கொண்டிருப்பானா? எது உண்மையோ? யாருக்குத் தெரியும்? காம வெறி பிடித்து அலையும் ஆண்கள் உலகத்தின் மனநிலையை யாரால் சரியாகக் கணித்துக் கூற முடியும்? அவள் விருப்பப்பட்டதைப் போல ஓய்வு அவளுக்கு இப்போது கிடைத்திருக்கலாம். முன்பு பார்த்த குணவதியைப் பற்றி இப்போது பேச்சுக்கு மத்தியில் பலரும் சொல்லிக் கொண்டிருக்கலாம். அவளைப் பற்றி அவர்கள் ‘‘ஆஹா ஓஹோ’’ என்று புகழ்ந்து கொண்டிருக்கலாம்.

தண்டனை முடிந்தது. வினயன் விடுதலை ஆனான். குணவதியின் வீடு வெறுமனே ஆள் இல்லாமல் கிடந்தது. மறக்க முடியாத அந்த ஜன்னல் இப்போதும் திறந்து கிடந்தது.

வினயன் தன்னுடைய வீட்டிற்குச் சென்றான். அவனுக்குச் சொந்தமான சொத்தெல்லாம் காணாமல் போயிருந்தது. அவனுடைய தாய் ஏற்கனவே இறந்து போயிருந்தாள். அவளின் கடைசி காலத்தில் ஒரு இளம்பெண் அவள் அருகிலேயே இருந்து அங்கேயே தங்கி அவளை மிகவும் கவனமாகப் பார்த்துக் கொண்டாள் என்று யாரோ சொல்லி வினயன் கேட்க நேர்ந்தது.

வினயன் தன்னுடைய ஊரை விட்டு நிரந்தரமாகப் பிரிந்தான். ஊர் ஊராக அலைந்தான். சென்ற இடங்களிலெல்லாம் குணவதியைப் பற்றி விசாரித்தான். முடியவற்ற அவன் விசாரணை, நிராசையிலேயே முடிந்தது.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.