Logo

தேவராகம்

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 6644
devaragam

1890, பிப்ரவரி, 10.

மூன்று நாட்களாக இடைவெளி இல்லாமல் பனி பெய்து கொண்டேயிருந்தது. பாதைகள் முழுவதும் தடைப்பட்டதால் தேவாலயத்திற்குப் போவது என்பது என்னைப் பொறுத்தவரையில் சிரமமான காரியம்தான். கடந்து போன பதினைந்து வருடங்களாக மாதத்தில் இரண்டு தடவைகள் தவறாமல் நான் தேவாலயத்திற்குப் போவதை வழக்கமாக கொண்டிருந்தேன்.

எப்படி இருந்தாலும் நான் இந்தச் சந்தர்ப்பத்தை எனக்குப் பயனுள்ளதாக ஆக்கிக் கொள்வேன். கடந்துபோன நாட்கள்... ஷரத்ருத் என்ற கண்பார்வை தெரியாத சிறுமியைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எனக்கு வந்து சேர்ந்த சூழ்நிலையைப் பற்றியும், அதைத் தொடர்ந்து அவளுடைய கொடுமைகள் நிறைந்த வாழ்க்கையில் உண்டான சம்பவங்களைப் பற்றியும் நான் இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.

 சுமார் இரண்டு, இரண்டரை வருடங்களுக்கு முன்னால் நடைபெற்ற சம்பவம் அது. ஒருநாள் மதிய நேரத்திற்கு பிறகு லா ஷா தஃபோன்ஸில் இருந்து திரும்பி வந்ததும் நான் இதற்கு முன்பு பார்த்திராத ஒரு சிறுமி வேகமாக எனக்கு அருகில் வந்து நின்றுகொண்டு என்னையே பார்த்தாள்.

‘‘ஃபாதர், ஐந்து மைல்களுக்கு அப்பால் இருக்குற ஒரு இடத்துக்கு என்கூட நீங்க வரமுடியுமா?’’- கெஞ்சுகிற குரலில் அவள் தொடர்ந்து சொன்னாள்.

‘‘உடனடியாக நான் அங்கே போகணும். அங்கே ஒரு வயதான பெண் இறுதி மூச்சை விட்டுக்கொண்டிருக்கிறாள்.’’

குதிரை வண்டியில் ஏறுமாறு கூறிய நான் ஒரு நிமிடம் கூட தாமதம் செய்யாமல் அந்த வயதான பெண் இருக்குமிடத்திற்குப் புறப்பட்டேன். இருட்டு நேரத்தில் திரும்பி வருவது சிரமமான காரியம் என்று மனதில் பட்டதால், நான் முன்னெச்சரிக்கையாக ஒரு லாந்தர் விளக்கையும் எடுத்துக்கொண்டேன்.

தேவாலயத்திற்குப் பக்கத்திலிருக்கும் எல்லா இடங்களும் எனக்கு நன்கு தெரிந்தவையே என்ற எண்ணத்தில் இருந்தேன் நான். ஆனால், நாங்கள் லா சவுண் ட்ரே ஃபாமைக் கடந்ததும், அவள் சொன்னாள்:

‘‘இந்தச் சாலை வழியா வண்டியை ஓட்டுங்க.’’

நான் அந்த நிமிடம் வரை அந்தச் சாலையில் கால் வைத்ததே இல்லை. கிட்டத்தட்ட இரண்டு மைல்கள் தாண்டியதும், சிறு பையனாக இருந்தபோது அவ்வப்போது ஸ்கேட்டிங் விளையாடுவதற்காகப் போன மறைவான ஒரு இடத்தில் இருக்கும் ஒரு சிறு குளத்தை நான் பார்த்தேன். ஒரு பாதிரியார் என்ற நிலையில் அங்கு போகவேண்டிய தேவையே எனக்கு இல்லாததால், பதினைந்து வருடங்களாக நான் அந்தக் குளத்தைப் பார்க்கவேயில்லை. ரோஜா நிறத்தலிருந்த வானத்தின் பிரகாசத்தில் பார்த்தபோது முன்பு எப்போதோ அந்தக் குளத்தைக் கனவு கண்டதைப் போல எனக்கு இருந்தது.

குளத்திலிருந்து புறப்பட்ட நீர் காட்டின் எல்லை வரை போனபிறகு ஏதோ ஒரு இடத்தில் போய் விழுந்து கொண்டிருந்தது. சாலை நீண்டுகொண்டே போய்க்கொண்டிருந்தது. நான் அந்த இடத்தை முன்பு எந்தச் சமயத்திலும் பார்த்ததில்லை.

சூரியன் மறைந்து கொண்டிருந்தது. நீண்ட நேரம் நாங்கள் முன்னோக்கி அமைதியாக போய்க்கொண்டிருந்தோம். திடீரென என்னுடன் இருந்த அந்தச் சிறுமி மலைமேல் இருந்த ஒரு கட்டிடத்தை நோக்கி விரலை நீட்டினாள். அதன் புகைக் குழாய் வழியாக புகை வந்து கொண்டிருந்தது. புகையின் நிறம் நீலமாக இருந்தாலும், பழுப்பு நிறத்தில் இருந்த வானத்தை அடைந்தபோது அது சிவப்பு நிறத்திற்கு மாறியது. குதிரையை அருகிலிருந்த ஆப்பிள் மரத்தில் கட்டிவிட்டு, நான் அந்தச் சிறுமியை பின்பற்றி இருட்டான ஒரு அறைக்குள் நுழைந்தேன். சில நிமிடங்களுக்கு முன்னால் ஒரு கிழவி தன்னுடைய இறுதி மூச்சை விட்டது அந்த அறையில்தான்.

அங்கு கண்ட காட்சி என் மனதை மிகவும் வேதனை கொள்ளச் செய்தது. இளம்பெண் என்றுதோன்றக்கூடிய ஒரு பெண் கட்டிலுக்கு அருகில் முழங்காலிட்டு அமர்ந்திருந்தாள். இறந்துபோன பெண்ணின் மகளாக இருக்கும் என்று நான் கருதிய அந்தச் சிறுமி உண்மையில் அவளுடைய வேலைக்காரியாக இருந்தாள். கரிந்த திரியைச் சரிபண்ணி எரியவிட்ட அவள் கட்டிலுக்கு அருகில் ஒரு கல்லாலான சிலையைப் போல நின்றிருந்தாள். நீண்ட நேரம் முயற்சி செய்து அவளை இரண்டு வார்த்தைகளாவது பேச வைக்க வேண்டும் என்று நினைத்த என் எண்ணம் வீணானதே மிச்சம்.

முழங்காலிட்டு அமர்ந்திருந்த அந்தப் பெண் எழுந்தாள். நான் நினைத்ததைப்போல அவள் இறந்துபோன பெண்ணுக்குச் சொந்தக்காரி ஒன்றுமில்லை. எஜமானி இறுதி மூச்சை விடப் போகிறாள் என்ற விஷயம் தெரிந்தபோது, வேலைக்காரி அவளைப் பக்கத்து வீட்டிலிருந்து அழைத்து வந்திருக்கிறாள். இறந்துபோன உடலுக்கான பொறுப்புகள் முழுவதையும் ஏற்றுக் கொண்டிருந்த அந்தப் பெண் சொன்னாள்:

‘‘பெரிய கஷ்டங்கள் எதுவும் இல்லாமலே, இறுதியில் கிழவி போயாச்சு!’’

சவ அடக்கம் தொடர்புள்ள ஏற்பாடுகள் என்னென்ன என்பதைப் பிறகு தீர்மானிக்க வேண்டியதிருந்தது. அந்தப் பின்தங்கிய பகுதியில் பொதுவாகவே பெரும்பாலான விஷயங்களை நான்தான் முடிவு செய்ய வேண்டியிருந்தது. அந்த வீட்டைப் பற்றிய விஷயம் எனக்கு மிகவும் கவலையைத் தந்தது. ஆனால், பக்கத்து வீட்டுப் பெண்ணிடமும் சிறுமியின் தலையிலும் வீட்டின் பொறுப்பை ஒப்படைக்க எனக்குச் சற்று சங்கடமாக இருந்தது. எனினும், அப்படிச் செய்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லாமலும் இருந்தது. இருந்தாலும், நான் கேட்டேன்:

‘‘இந்தக் கிழவிக்கு வாரிசுன்னு யாரும் இல்லையா?’’

என்னுடைய கேள்வியைக் கேட்டதும், அந்தப் பெண் விளக்கைக் கையில் எடுத்து உயர்த்தினாள். அடுப்பின் மூலைப் பகுதி சிவப்பு நிறத்தில் தெரிந்தது. அந்த வெளிச்சத்தில் அடுப்பிற்கு அருகில் யாரோ பதுங்கி இருப்பது தெரிந்தது. அடர்த்தியான கூந்தலால் தன் முகத்தை மூடிக்கொண்டு அவள் உறங்கிக் கொண்டிருந்தாள்.

அவள் கண்பார்வை தெரியாதவள். கிழவியின் பேத்தி என்று வேலைக்காரி சொல்கிறாள். ‘‘இந்த வீட்டுல இப்போ இருக்குறது அவள் மட்டும்தான். எப்படியவாது அந்த அப்பிராணியை ஒரு அனாதை விடுதியில் கொண்டு போய் சேர்க்க வேண்டியதுதான்.’’

கண்பார்வை தெரியாத சிறுமிக்கு முன்னால் இருந்துகொண்டு அவளுடைய எதிர்காலத்தைப் பற்றி இந்த மாதிரி பேசுவதைக் கேட்டபோது எனக்கே என்னவோ போல இருந்தது. அவளுடைய மனம் எந்த அளவிற்கு வேதனைப்பட்டிருக்கும் என்று நான் நினைத்தேன்.

கொஞ்சம் மெதுவான குரலில் பேசினால் நன்றாக இருக்கும் என்று கூற நினைப்பதைப்போல நான் தாழ்ந்த குரலில் சொன்னேன்:

‘‘அவளை எழுப்ப வேண்டாம்.’’

‘‘ஆனால். அவள் தூங்க மாட்டாள். அவளால் எதையாவது பேசவோ புரிந்துகொள்ளவோ முடியாது. காலையில் இருந்தே நான் இந்த அறையில்தான் இருக்கேன். ஆனால், அவள் கொஞ்சம்கூட அசைந்து நான் பார்க்கல.


அவளுக்குக் காது கேட்காது போலன்னு நான் நினைச்சேன். ஆனால் அவள் செவிடு இல்லைன்னு வேலைக்காரி சொன்னாள். உண்மையாகச் சொல்லப் போனால், அந்தக் கிழவிதான் காது கேட்காதவள். கிழவி இன்று வரை அவள்கிட்ட ஒரு வார்த்தை கூட பேசியது இல்லையாம். ஏதாவது சாப்பிடவோ குடிக்கவோ செய்றப்ப மட்டும்தான் வாயைத் திறக்க வேண்டிய சூழ்நிலை உண்டானதே தவிர, நீண்ட காலமா அந்தக் கண்பார்வை தெரியாத சிறுமி வாயைக்கூடத் திறக்காமத்தான் இருக்கிறாள்.’’

‘‘பாவம்... அவளுக்கு சுமாரா என்ன வயது இருக்கும்?’’

‘‘கிட்டத்தட்ட... ம்... பதினாலு, பதினஞ்சு இருக்கும்னு நினைக்கிறேன்.’’

அனாதையாக்கப்பட்ட ஒரு சிறுமியைக் காப்பாற்றுவது என்பது சாதாரண ஒரு விஷயமல்ல. அப்படியொரு சுமையான காரியத்தை அப்போது நான் மனதில் நினைத்திருக்கக்கூட இல்லை. ஆனால், பிரார்த்தனையின் முடிவில் - அந்தப் பெண்ணுக்கும் வேலைக்காரிக்கும் இடையில் குனிந்து பிரார்த்த¬னை செய்து கொண்டிருந்தபோது... அப்படிக் கூறுவதுதான் சரியாக இருக்கும்... கருணை வடிவமான கடவுள் என்மீது இப்படிப்பட்ட ஒரு பொறுப்பைச் சுமத்தியிருக்கிறார் என்பதையும், நான் அதிலிருந்து தப்பிக்க நினைப்பது கோழைத்தனமான ஒரு செயலாக இருக்கும் என்பதையும் உடனடியாக உணர்ந்தேன்.

பிரார்த்தனை முடிந்து எழுந்திருக்கும்போது, அந்தக் கண்பார்வை தெரியாத சிறுமியை அன்று சாயங்காலமே என்னுடன் வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று நான் முடிவெடுத்தேன். அதற்குப் பிறகு அவளை என்ன செய்வது என்பதையோ, யாருடைய பாதுகாப்பில் அவளைக் கொண்டுபோய் வைப்பது என்பதைப் பற்றியோ நான் சிறிதும் சிந்தித்துப் பார்க்கவே இல்லை. மேலும் சில நிமிடங்கள் அங்கு நின்றிருந்த நான், வேடன் வரிந்து கட்டிய பையைப் போல இருந்த கிழவியின் வாடிய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். தொடர்ந்து அந்தப் பார்வையற்ற சிறுமி இந்தப் பக்கம் திரும்பி என் மனதில் நான் நினைத்திருந்த விஷயத்தைச் சொன்னபோது, அவர்கள் உடனே சொன்னார்கள்:

‘‘ஆட்கள் நாளைக்கு இறந்த உடலை எடுப்பதற்கு வருவதற்கு முன்னால், நீங்க இங்கேயிருந்து கிளம்பிப் போயிடுறது நல்லது.’’

பக்கத்து வீட்டுப் பெண் அப்போது அமைதியாக இருந்தாள்.

உயிரில்லாத ஒரு மாமிசப் பிண்டத்தைப்போல இருந்த அந்த கண்பார்வையற்ற சிறுமி தன்னை. என்னுடன் அழைத்துக் கொண்டு செல்ல என்னை அனுமதித்தாள். அவளுடைய முகத்தைப் பார்க்கும் போது எந்தவொரு பிரச்சினையும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், அந்த அழகான முகத்தில் எந்தவொரு உணர்ச்சியும் இல்லாமலிருந்தது.

அறையிலிருந்து மேலே ஏறி, படிக்குக் கீழே மூலையில் கிடந்த விரிப்பிலிருந்து நான் கம்பளியை எடுத்தேன். அதில்தான் தினமும் அவள் படுத்திருக்க வேண்டும்.

பக்கத்து வீட்டுப் பெண் நல்லவளாக இருந்தாள். அந்தப் பெண் மிகுந்த ஆர்வத்துடன் அந்தச் சிறுமியைக் கம்பளியால் போர்த்த உதவினாள்.

மிகுந்த குளிர் இருந்த இரவு, குதிரை வண்டியின் விளக்கை எரியவிட்டு நான் அந்தச் சிறுமியையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்குப் புறப்பட்டேன். உயிருள்ள பிணத்தைப்போல அவள் எனக்கருகில் ஒடுங்கிப் போய் உட்கார்ந்திருந்தாள். கொஞ்சம் உடம்பில் சூடு இருக்கிறது என்பதை நீக்கிவிட்டு பார்த்தால், உயிர் இருப்பதற்கான எந்தவொரு அடையாளமும் அவளிடம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பாதை முழுவதும் நான் சிந்தித்துக் கொண்டே வந்தேன். ‘இவள் உறங்குகிறாளா? இவள் தூங்கும் போதும் கண்விழித்து இருக்கும்போதும் இருப்பதற்கிடையில் என்ன வித்தியாசம் இருக்கிறது? கடவுளே, கட்டுகளால் இறுகக் கட்டப்பட்டிருக்கும் ஆன்மா உங்களின் கருணைக்காகக் காத்திருக்கிறது. இவளை அன்புக் கரங்களால் தொடவேண்டும் கடவுளே! உங்களின் கருணை இருக்கும்பட்சம் என்னுடைய அன்பு இந்த அப்பிராணிச் சிறுமியின் கொடுமையான இருளை முழுமையாக நீக்கிவிடும்.’’

உண்மைக்கு எந்த அளவிற்கு மதிப்பு இருக்கிறது என்பதை நான் நினைத்துப் பார்க்கிறேன். வீட்டை அடைந்தபோது, சிறிதும் விருப்பமே இல்லாத ஒரு வரவேற்பு கிடைத்தது என்ற விஷயத்தை நான் மறைத்து வைக்க விரும்பவில்லை. என் மனைவி நல்ல குணத்தைக் கொண்டவள். அவளுடைய மனதிற்குள் கருணை இல்லை என்று கஷ்டங்கள் நிறைந்த நிமிடங்களில் ஒருமுறை கூட நான் கவலைப் பட்டதில்லை. மிகவும் திட்டமிட்டு வாழக்கூடிய அவள், ஓரு அடி முன்னோக்கியோ பின்னோக்கியோ போகாமல், மிகவும் சரியாக எந்த செயலையும் செய்யக்கூடியவள். ஆனால், அன்பு என்பது எல்லையற்றது அல்ல என்பதைக் காட்டும் வண்ணம் மிகவும் அளந்து அதைக் காட்டக்கூடிய பழக்கத்தைக் கொண்டவள் அவள். இந்த ஒரு விஷயத்தில் மட்டும் எங்கள் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு இருக்கத்தான் செய்தது.

அந்த மாலை நேரத்தில் அந்தச் சிறுமியை வீட்டிற்குக் கொண்டு வந்ததைப் பார்த்து, என் மனைவி சொன்னாள்:

‘‘இப்படி எதற்குத் தேவையில்லாத சுமையை நீங்க தலைமேல எடுத்து வச்சிக்கணும்?’’

தினமும் நடப்பதைப்போல எங்களைச் சுற்றி வாயைப் பிளந்துகொண்டு ஆச்சரியத்துடன் பார்த்தவாறு நின்று கொண்டிருந்த பிள்ளைகளைப் பார்த்து நான் சொன்னேன்:

‘‘அறையை விட்டு வெளியே போங்க.’’

நான் நினைத்ததற்கு மாறாகவும், எந்த அளவிற்கு மாறுபட்ட ஒன்றாகவும் இருந்தது அந்த வரவேற்பு! என்னுடைய இளைய மகள் ஷார்லட் மட்டும்தான் அந்த ‘ஆச்சரியமான பிறவி’ வண்டியிலிருந்து இறங்குவதைப் பார்த்து நடனமாடியதோடு நிற்காமல் கைகளால் தட்டவும் செய்துகொண்டிருந்தாள். ஆனால், தங்களுடைய தாயிடமிருந்து எல்லா விஷயங்களையும் கற்றுக் கொண்டிருந்த மற்ற பிள்ளைகள், தங்களின் தங்கையின் ஆனந்தத்தைக் கெடுக்கிற மாதிரி அவளைத் தங்களுடன் சேர்த்துக் கொண்டார்கள்.

ஒரு நிமிடம் எனக்கு எதுவுமே புரியவில்லை. கண்பார்வை முழுமையாகத் தெரியாத ஒரு சிறுமியை நான் அழைத்துக் கொண்டு வந்திருக்கிறேன் என்ற உண்மை என்னுடைய மனைவிக்கோ பிள்ளைகளுக்கோ தெரியாமல் இருந்தது. அதனால், ஆச்சரியப்படத்தக்க என்னுடைய அக்கறையைப் பற்றி அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. பயணம் முழுக்க நான் அந்தச் சிறுமியின் கையைப் பிடித்திருந்தேன். நான் கையை விட்டதும், அவள் வினோதமான விதத்தில் அழ ஆரம்பித்துவிட்டாள். அதைக் கேட்டவுடன் என்னுடைய மனதிற்குள் கவலை உண்டாகிவிட்டது. அவளுடைய குரல் மனதிற்கள் கவலை உண்டாகிவிட்டது. அவளுடைய குரல் மனிதர்களின் குரலை விட நாய்க்குட்டின் குரலையொட்டி இருந்தது. தனக்கென்று ஒரு சிறு உலகத்தை அமைத்துக் கொண்டு, அதில் குடியிருந்தவள் ஆயிற்றே அவள்! எப்போதும் கட்டப்பட்டது மாதிரி ஒரே இடத்தில் இருப்பதைவிட பிறருடன் உறவு  கொண்டிருப்பது வேறுபட்ட ஒன்று என்பதைப் புரிந்துகொண்ட அடுத்த நிமிடமே அவளுடைய பிஞ்சுக் கால்கள் குழைய ஆரம்பித்தன. அவள் மிகவும் தளர்ந்துபோய்க் காணப்பட்டாள். உடனடியாக நான் ஒரு நாற்காலியைக் கொண்டு வந்து அவளுக்கு முன்னால் போட்டேன்.


ஆனால், அதில் உட்காரும் அளவிற்குத் தன்னிடம் பலமில்லை என்பது மாதிரி அவள் தரையில் சாய்ந்து விட்டாள்.சிறிதும் தாமதிக்காமல் கிழவியின் அடுப்பிற்குப் பக்கத்தில் உட்கார்ந்து இருந்ததைப் போல அந்த அப்பிராணிச் சிறுமி உட்கார ஆரம்பித்து விட்டாள். அப்படி உட்கார்ந்திருப்பதில்தான் அவளுக்கு ஒரு சந்தோஷம் கிடைத்ததைப் போல இருந்தது. குதிரை வண்டியில் பயணம் செய்தபோது கூட அவள் இருக்கையிலிருந்து கீழே விழத்தான் செய்தாள். பிறகு பயணம் முடிவுக்கு வருவது வரையில் அவள் எனக்கு அருகில் ஒட்டிக் கொண்டே இருந்தாள்.

என் மனைவி எப்போதும் உயர்ந்த எண்ணங்களுக்குச் சொந்தக் காரியாக இருந்தாள். அவள் உதவிக்கு வந்தாள். இதயத்தின் உள்ளறைகளிலும் எண்ணங்களிலும் எப்போதும் ஒரு கடுமைத்தனம் இருந்து கொண்டே இருந்தாலும், கருணை கொண்ட இதயத்தை தன்னிடம் கொண்டிருப்பவள் அவள் என்ற உண்மையை நான் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். சந்தோஷத்துடன் அந்தச் சிறுமியை ஒரு இடத்தில் உட்கார வைத்தபோது, என் மனைவி கேட்டாள்:

‘‘இவளை இனி என்ன செய்யப் போறீங்க?’’

‘இவளை’ என்ற சொல்லுக்கு அவள் கொடுத்த அழுத்தம் சிறிதும் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு என்னைக் கோபம் கொள்ளச் செய்தது. எனக்குள் ஒரு எரிச்சல் உண்டானது. எனினும் உள்ளுக்குள் தோன்றிய அமைதியான எண்ணத்தின் மூலம் என்னை நானே கட்டுப்படுத்திக் கொண்டேன். என்னைச் சுற்றி நின்றுகொண்டிருந்த பிள்ளைகளைப் பார்த்தவாறு நின்றிருந்த நான், அந்தக் கண்பார்வையற்ற சிறுமியின் தலையில் என் கையை வைத்தேன். தொடர்ந்து குரலில் கம்பீரத்தை வரழைத்துக் கொண்டு நான் சொன்னேன்.

‘‘காணாமல் போன ஆட்டை நான் திரும்பக் கொண்டு வந்திருக்கிறேன்.’’

உண்மையானதோ அல்லது சூழ்நிலைக்குப் பொருத்தமாக இருக்கும்படியோ எடுத்துக் கூறக்கூடிய அளவிற்கு பைபிளில் இப்படி ஏதாவது இருக்கும் என்ற விஷயத்தில் எமிலி எதிர் கருத்தைக் கொண்டிருந்தாள். என் கருத்தை எதிர்ப்பதுதான் அவளுடைய நோக்கம் என்பது தெரிந்ததும் உடனடியாக நான் ஜாக்ஸையும் சாராவையும் வெளியே போகும்படி சைகை செய்தேன். அந்த நிமிடமே அவர்கள் இருவரும் சிறு குழந்தைகளை அழைத்துக்கொண்டு வெளியே  போய்விட்டார்கள். எங்களுக்கிடையே இருக்கக்கூடிய சிறு சிறு கருத்து வேறுபாடுகளைப் பற்றி அவர்களுக்கு நன்றாகவே தெரியும். இந்த மாதிரியான சண்டைகளிலும் சாதாரண கருத்து மோதல்களிலும் பொதுவாகவே அவர்களுக்கு சிறிதும் ஈடுபாடு கிடையாது.

என் மனைவி எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பதைப் பார்த்ததும், புதிதாக வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தாளிதான் அதற்குக் காரணமாக இருக்கும் என்று நினைத்து நான் சொன்னேன்.

‘‘இவளை வைத்துக் கொண்டு நீ எதை வேண்டுமென்றாலும் சொல்லலாம். தயங்க வேண்டிய அவசியமே இல்லை. இவளால் ஒரு வார்த்தையைக்கூட புரிந்துகொள்ள முடியாது.’’

‘‘இல்லை... நான் சொல்றதுக்கு எதுவும் இல்லை...’’- அவளுடைய நீண்ட பேச்சுக்கு எப்போதும்போல இருக்கக்கூடிய முன்னுரையாக இருந்தது அது. நடைமுறையில் காணமுடியாத என்னுடைய கிறுக்குத்தனமான செயல்களை ஏற்றுக் கொள்வதைத் தவிர, அவளுக்கு வேறு வழியே இல்லை. அந்தச் சிறுமியை இனிமேல் என்ன செய்வது என்பதைப் பற்றி சிறிதுகூட யோசிக்கவேயில்லை என்பதைத்தான் ஆரம்பத்திலேயே நான் கூறிவிட்டேனே! அவளை நிரந்தரமாக என்னுடைய வீட்டில் தங்கவைக்கும் விஷயத்தைப் பற்றி நான் சிந்திக்கவே இல்லை. எமிலிதான் என்னுடைய மூலையில் முதல் முறையாக இந்த விஷயத்தையே ஏற்றி விட்டிருக்கிறாள்.

என் மனைவியின் கோபம் அதிகரித்துக் கொண்டிருக்க, என் இதயத்திலிருந்து இயேசுபிரானின் சில வார்த்தைகள் உயர்ந்து உதடுகள் வரை வந்துவிட்டன. ஆனால், ந;£ன் அவற்றை வெளியே வர அனுமதிக்கவில்லை. நான் கூற நினைப்பதைப் பிறரை ஒப்புக்கொள்ளச் செய்ய டைபிளை நம்பாமல் இருப்பதே சரியானது என்று நான் நினைப்பதே அதற்குக் காரணம். ஆனால் அவள் சோர்வைப் பற்றி பேசியபோது என் மனதில் எரிச்சல் உண்டானது. ஆர்வமும் யோசனையும் கொண்ட என்னுடைய உற்சாகத்தைப் பற்றிப் பேசியதன் மூலம் என் மனைவிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் கவலைப்பட வேண்டிய நிலை உண்டானது என்பதை ஒப்புக் கொள்கிறேன். அவள் எப்போதும்போல பேசுவது ஒரு பக்கம் இருந்தாலும் நான் செய்ய வேண்டியது என்ன என்பதைப் பற்றியும் சிந்தித்தேன். அதனால் எமிலியிடம் மிகவும் பணிவான குரலில் சொன்னேன்:

‘‘எமிலி, கொஞ்சம் சிந்திச்சுப் பாரு. என் இடத்துல நீ இருந்தால், நான் செய்ததைத்தானே நீயும் செய்திருப்பே... அப்படிச் செய்யாமல் துணைக்கு யாருமே இல்லாமல் இருக்குற இந்தச் சிறுமியை வெறுமனே அங்கேயே விட்டுட்டு வந்திடுவியா? இந்தப் புதிய விருந்தாளியைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பை ஏற்றெடுத்ததன் மூலமாக அதிக சுமையைச் சுமக்க வேண்டியது வருமென்றும், வீட்டைப் பற்றிய கவலைகள் அதிகமாக ஆகுமென்றும் நான் நினைக்கல.’’

இப்படிப்பட்ட சிந்தனைகளில் நான் அவளுக்கு உதவி செய்ய முடியாத நிலையில் இருப்பதைத் கூறி வருத்தப்பட்டேன். அந்த வகையில் முடிந்த வரையில் நான் அவளைச் சமாதானப்படுத்தினேன். கள்ளங்கபடமற்ற அந்தச் சிறுமியிடம் கோபப்பட்டுப் பேச வேண்டாம் என்று தொடர்ந்து அவளிடம் கேட்டுக் கொண்டேன்.

‘‘உன் வேலைகளில் உதவுகிற அளவுக்கு சாரா வளர்ந்துட்டாளே!’’  - நான் சொன்னேன்: ‘‘ஜாக்ஸ் விஷயத்தை எடுத்துக் கொண்டால், அந்த அளவுக்கு அவனைக் கண்காணிக்க வேண்டும் என்ற அவசியமே இல்லாமற் போய்விட்டது’’ - சுருக்கமாக விஷயத்தைப் புரிய வைக்கிற  வகையில், கடவுள் என்னை சரியான வார்த்தைகளில் பேசவைத்தார்.

பந்தயத்தில் பெரும்பாலும் வெற்றி பெற்றாகிவிட்டது என்பதையும், மனதைச் சரளமாக ஆக்கிக் கொண்டு எமிலி இப்போது ஷரத்ருத்தைப் பார்க்க ஆரம்பிக்கிறாள் என்பதையும் நான் புரிந்துகொண்டேன். ஆனால், அந்தச் சிறுமியை மிகவும் நெருக்கத்தில் இருந்துகொண்டு பார்ப்பதற்காக விளக்கை எரியவிட்டபோது, ஷரத்ருத்தின் உடல் முழுக்க அழுக்காக இருப்பதைப் பார்த்து அவள் உரத்த குரலில் கத்த ஆரம்பித்து விட்டாள்.

‘‘கொடுமை! கொடுமை! இவள் இப்படியா அழுக்காக இருக்குறது! நீங்க போயி உடனடியாக அழுக்கைக் கழுவிட்டு வாங்க. இங்கே பண்ண வேண்டாம். வெளியே போங்க. ஆடைகளை நல்லா உதறுங்க. அய்யய்யோ! பிள்ளைகள்மேல் இந்தப் பேன்கள் ஏறினால்...’’

எமிலி சொன்னது உண்மைதான். அவளுடைய தலைமுடியில் பேன்கள் நிறைய ஓடிக்கொண்டு இருந்தன. பயணம் செய்தபோது அவள் எந்த அளவிற்கு என்னுடன் மிகவும் நெருக்கமா உட்கார்ந்திருந்தாள் என்பதை நினைத்தபோது, என் உடம்பில் வாயால் கூற முடியாத அளவிற்கு நடுக்கம் உண்டானதென்னவோ உண்மை.

அழுக்கு முழுவதையும் கழுவிவிட்டு சில நிமிடங்களுக்குப் பிறகு அழகாக ஆடை அணிந்து வந்தபோது எமிலி சாய்வு நாற்காலியில் சாய்ந்து படுத்திருப்பதைப் பார்த்தேன்.


கையைத் தலைக்குக் கீழே வைத்துக் கொண்டு அவள் கண்களைப் மூடிப் படுத்திருந்தாள்.

‘‘இந்த அளவுக்கு எனக்குத் தைரியம் இருக்குதான்னு எனக்கே ஆச்சரியமா இருக்கு!’’- மிகவும் மென்மையான குரலில் நான் சொன்னேன்.

‘‘எது எப்படி இருந்தாலும் இந்த அளவுக்கு இரவாகி சுற்றிலும் இருட்டு பரவியிருக்குற சூழ்நிலையில் என்னால் எதுவுமே செய்ய முடியாது. நான் தூங்காம விழிச்சிருக்கேன். அடுப்பில் நெருப்பு இருக்கணும். இவள் அடுப்புக்குப் பக்கத்துலேயே படுத்துக்கட்டும் நாளைக்குத் தலைமுடியை வெட்டி நாம இவளைச் சரி பண்ணிடுவோம்.’’

பிள்ளைகளிடம் எதுவும் கூறவேண்டாம் என்று நான் அவளைக் கேட்டுக் கொண்டேன்.

உணவு சாப்பிட வேண்டிய நேரம் வந்தது. மேஜைமீது வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்களையே ஷரத்ருத் தன் பார்வையற்ற விழிகளால் திரும்பத் திரும்ப பார்ப்பதுபோல் தோன்றியபோது, நான் அவளுக்கு ஒரு ப்ளேட் நிறைய சூப்பை எடுத்துக் கொடுத்தேன். ஆர்வத்துடன் உடனடியாக அவள் அதை முழுவதுமாகக் குடித்தாள். இந்த உலகத்தில் எதுவுமே கிடைக்காதவர்களின் நிலைமை எந்த அளவிற்கு வினோதமாக இருக்கிறது என்று உணவு சாப்பிடும்போது பிள்ளைகளிடம் கூறுவதற்கும், அவர்களைப் புரிந்து கொள்ள வைப்பதற்கும் நான் விரும்பினேன். கடவுள் நம்மிடம் அனுப்பி வைத்திருக்கும் விருந்தாளி மீது அவர்களின் உள்ளத்தில் கருணையும் இரக்கமும் உண்டானால் நல்ல ஒரு விஷயமாக இருக்கும் என்று நினைத்த அதே நேரத்தில், எங்கே மீண்டும் எமிலி கோபப்பட ஆரம்பித்து விடுவாளோ என்று நான் அஞ்சவும் செய்தேன்.

எல்லோரும் உறங்கச் சென்ற பிறகு, எமிலியும் என்னிடமிருந்து எழுந்து சென்ற பிறகு, கிட்டத்தட்ட ஒருமணி நேரம் கடந்த பிறகு, என்னுடைய இளைய மகள் ஷார்லட் அமைதியாக பாதி திறந்திருந்த கதவு வழியாக என்னிடம் வந்தாள். தொடர்ந்து அவள் தன்னுடைய பிஞ்சுக் கை விரல்களால் என் கழுத்தைப் பிடித்துக் குலுக்கியதும், நான் திடுக்கிட்டுத் திரும்பினேன்.

‘‘அப்பா, ராத்திரி நான் உங்களுக்குச் சரியாக வணக்கம்கூட சொல்லல’’- அவள் மெதுவான குரலில் சொன்னாள்.

தொடர்ந்து அமைதியாகக் கண்களை மூடிப் படுத்திருந்த அந்தக் கண்பார்வை தெரியாத சிறுமியை நோக்கித் (தூங்கப் போவதற்கு முன்பு அவளைப் பார்க்க என் இளைய மகளுக்கு அப்படி என்ன ஆர்வம் இருந்ததோ) தன்னுடைய சிறிய விரலை நீட்டியவாறு சொன்னாள்: ‘‘இன்னைக்கு நான் இவள்கிட்ட பிரியமா நடக்கல.’’

‘‘மகளே, நாளைக்குப் பிரியத்தைக் காட்டலாம். இப்போ இவளைத் தொந்தரவு செய்ய வேண்டாம். இவள் நல்லா தூங்கட்டும்’’- ஷார்லட்டுடன் கதவுவரை போன நான் சொன்னேன்.

அதற்குப் பிறகு நான் திரும்பவும் வந்து உட்கார்ந்து பொழுது புலரும் வரை படிப்பதிலும், அடுத்த சொற்பொழிவிற்கான உரையைத் தயாரிப்பதிலும் ஈடுபட்டேன்.

2

பிப்ரவரி, 27.

நேற்று இரவு மீண்டும் கடுமையான பனி பெய்தது. இன்று காலையிலிருந்து முன்னாலிருக்கும் கதவு மூடப்பட்டே இருக்கிறது. குளியலறை வழியாகச் செல்லும் ஒரே ஒரு வழிமூலம்தான் வெளியே செல்லமுடியும். தின்பதற்கும் குடிப்பதற்கும் கிராமத்தில் ஏராளமான பொருட்கள் இருக்கின்றன என்ற விஷயத்தை நான் நேற்றுதான் புரிந்து கொண்டிருந்தேன். அதற்குக் காரணம் இனி வரப்போகும் சில நாட்களுக்குப் புற உலகத்துடன் எங்களுக்கு எந்தவித தொடர்பும் இருக்கப்போவதில்லை. பனியால் மூடப்படுவது இது முதல் தடவை அல்ல என்றாலும், இந்த அளவிற்குக் கொடுமையாக பனி பெய்து இதற்கு முன்னால் பார்த்திருப்பதாக  எனக்கு ஞாபகத்தில் இல்லை. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு நான் கதையைத் தொடரலாம்.

மிகவும் பரிதாபப்படும் நிலையில் இருந்த அந்தச் சிறுமியை வீட்டிற்குக் கொண்டு வந்தபோது, எங்களின் வசிப்பிடத்தில் அவளுடைய நிலை எந்த மாதிரி இருக்கும் என்பதைப் பற்றி முன்கூட்டியே நான் சிந்தித்துக்கூட பார்த்ததில்லை என்ற விஷயத்தைத்தான் நான் இதற்கு முன்பே கூறிவிட்டேனே! என் மனைவியின் பொறுமையின் எல்லை எதுவென்று எனக்கு நன்றாகவே தெரியும். வீட்டின் இடவசதியைப் பற்றியும் பணத் தட்டுப்பாட்டைப் பற்றியும் நான் தெளிவாகவே உணர்ந்திருந்தேன். நிலைமை அப்படி இருக்க, எப்போதும்போல நான் செய்யக் கூடியதைத்தான் செய்தேன். நான் எனக்கென்று சில கொள்கைகளை இறுகப் பிடித்துக் கொண்டிருந்தேன். என்னுடைய செயல்களுக்கு எந்த அளவிற்கு விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதைப் பற்றி ஒருநிமிட அளவிற்குக்கூட நான் நினைத்துப் பார்ப்பதே இல்லை. அப்படி முன்கூட்டியே திட்டமிட்டுச் செயல்படுவது என்பது பைபிளைப் படிப்பதற்கு எதிரானது என்பதாக நான் நினைத்தேன். அதே நேரத்தில் எனக்கென்று இருக்கும் சிந்தனைகளைக் கடவுளிடம் ஒப்படைப்பது என்பது ஒருவிதம் என்றால், அவற்றை யாருடைய தலையிலாவது கட்டிவிடுவது என்பது இன்னொரு விதம். எமிலியின் தோள்மீது கனமான சுமையை நான் ஏற்றி வைத்திருக்கிறேன் என்பதை உடனடியாக நான் உணர்ந்தேன்.

அந்தச் சிறுமியின் தலைமுடியை வெட்டும் விஷயத்தில் என்னால் முடிந்த அளவிற்கு என் மனைவிக்கு நான் உதவினேன். அவள் வெறுப்புடன்தான் அந்தச் செயலைச் செய்தாள். எனினும், கண் பார்வையற்ற அந்தச் சிறுமியைக் குளிக்கச் செய்து, வேறு ஆடைகள் அணியச் செய்ததை எமிலி மூலம்தான் நான் நிறைவேற்றினேன்.

வேறு எந்த விஷயத்திற்கும் எமிலி சிறிதுகூட எதிர்ப்பைக் காட்டவில்லை. எல்லா விஷயங்களைப் பற்றியும் இரவில் அவள் யோசித்துப் பார்த்திருப்பதைப் போல் தோன்றியது. என்னுடைய புதிய பொறுப்புகளை அவள் ஏற்றுக் கொண்டதைப்போல் எனக்குத் தோன்றியது. எல்லாவற்றையும் நான் செய்வது குறித்து அவள் முழுமையாக சந்தோஷப்படுவதைப்போல் நான் உணர்ந்தேன். ஷரத்ருத்தைக் குளிக்கச் செய்து, ஆடைகள் அணிவித்தபோது அவளுடைய உதடுகளில் புன்னகை மலர்வதை நான் பார்த்தேன். சாராவிற்குச் சொந்தமான நல்ல ஆடைகளில் சிலவற்றை அணிவித்துவிட்டு, எமிலி கண்பார்வையற்ற அந்தச் சிறுமியின் பழைய துணிகளை நெருப்புக்குள் வீசி எறிந்தாள்.

 ஷரத்ருத்தின் உண்மையான பெயர் என்னவென்று எங்களுக்குத் தெரியாது. அந்த யாருமற்ற அனாதைச் சிறுமிக்கு தன்னுடைய பெயர் என்னவென்றுகூடத் தெரியிவில்லை. அவளுடைய பெயர் என்ன என்பதைக் கண்டுபிடிப்பதற்கான வழியும் எனக்குத் தெரியவில்லை. அதனால்தான் ஹார்லட் அவளுக்கு ஷரத்ருத் என்று பெயர் வைத்தவுடன், நாங்கள் எல்லோரும் அந்தப் பெயரையே வைத்து கூப்பிட ஆரம்பித்துவிட்டோம். சாராவிற்கும் அவளுக்குமிடையில் வயது விஷயத்தில் அப்படியொன்றும் பெரிய வித்தியாசம் இல்லை. அதன் காரணமாக சாராவின் சென்ற வருட உடை ஷரத்ருத்திற்கு இப்போது சரியாகப் பொருந்தியது.

ஆரம்பத்தில் தாங்க முடியாத அளவிற்கு என்னிடம் ஒருவகை விரக்தி உணர்வு உண்டானது என்பதை நான் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்.


ஷரத்ருத்தின் கல்வியைப் பற்றி நான் மனதில் நினைத்திருந்தது. செயல் வடிவத்திற்கு வராமல் வெறுமனே காலம் வீணாகிக் கொண்டிருந்தது தான் மிச்சம். அவளுடைய அலட்சியமான போக்கும் முகத்தில் எந்தவித உணர்ச்சியும் இல்லாமலிருந்ததும் என்னுடைய உற்சாகத்தை முழுமையாக இல்லாமற் செய்தன. தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்வதற்குத்தான் பகல் நேரம் முழுவதும் அவள் அடுப்புக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறாள் என்பதாக நான் உணர்ந்தேன். எங்களுடைய சத்தத்தைக் கேட்ட அடுத்த நிமிடம், குறிப்பாக அவளை நாங்கள் நெருங்கிச் செல்கிற தருணம்- அவளுடைய முகம் கொடூரமாக மாறும். எந்தவித உணர்ச்சியும் இல்லாமலிருப்பதற்கு பதிலாக ஒருவகை விரோத உணர்ச்சி அந்த முகத்தில் பரவித் தெரியும். யாராவது அவளுடைய கவனத்தைத் திருப்ப முயற்சிக்கும்பட்சம், அடுத்த நிமிடமே ஒரு மிருகத்தைப்போல சத்தம் உண்டாக்க ஆரம்பித்துவிடுவாள் அவள். சாப்பிடும்நேரம் வந்தால்தான் அவளுடைய முகத்தில் படர்ந்த அந்த உணர்ச்சி இல்லாமல் போகும். நான் அவளுக்கு உதவுவேன். தொடர்ந்து காட்டு மிருகங்களைப்போல உணவுப் பொருட்களை நோக்கி அவள் தாவிக் குதிக்க ஆரம்பித்துவிடுவாள். அதைப் பார்க்கும்போது எனக்கு மிகவும் கவலையாக இருக்கும். அன்பிலிருந்து அன்பு பிறப்பெடுப்பதைப் போல, ஷரத்ருத்தின் பிடிவாதத்திலிருந்து எனக்குள் இரக்கம் உண்டாக ஆரம்பிக்கும். முதல் பத்து நாட்கள் கடந்தபோது, நான் அவள்மீது பரிதாபம் கொள்ள ஆரம்பித்தேன். அந்தக் கண்பார்வை தெரியாத சிறுமிமீது நான் கொண்டிருந்த ஈடுபாடு படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்தது. ஆரம்பத்தில் காட்டிய உற்சாகத்தை நினைத்துப் பார்த்து நான் கவலைப்பட்டேன். அவளை இங்கு கொண்டு வந்திருக்கக் கூடாது என்று என்னுடைய மனம் கூறியது. மிகுந்த கருணையுடனும், பரிதாப உணர்ச்சியுடனும் இப்போது எமிலி அவளிடம் நடக்க ஆரம்பித்திருந்தாள். ஷரத்ருத் எனக்கு ஒரு சுமையாக இருக்கிறாள் என்பதையும் வீட்டிலுள்ள எல்லோருக்கும் மத்தியில் அவள் இருப்பதை நினைத்து நான் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன் என்பதையும் என் மனைவி புரிந்து கொண்டாள்.

இப்படிப்பட்ட சூழ்நிலை நிலவிக் கொண்டிருக்கும்போது, என்னுடைய நண்பர் ஒருவர் சுற்றுலாவிற்குச் சென்று கொண்டிருந்த வழியில் வீட்டிற்கு வந்தார். அவரிடம் ஷரத்ருத்தைப் பற்றிய எல்லா விஷயங்களையும் நான் சொன்னேன். எல்லாவற்றையும் கேட்டவுடன் அவருக்கு அவள்மீது காரணமே இல்லாமல் ஒருவித ஈடுபாடு உண்டானது. அவளுடைய நிலைமையைப் பார்த்து என் நண்பர் அவள்மீது பரிதாபப்பட ஆரம்பித்தார்.

 ஷரத்ருத்திடம் இருக்கும் ஒரே ஒரு குறை அவளுடைய பார்வையற்றத் தன்மை மட்டுமே என்று என் நண்பர் நினைத்தார். ஆனால், ஓருமுறைகூட பேசியிராத அவளைக் காப்பாற்றிய அந்தக் கிழவியின் காது கேளாத தன்மை காரணமாக, அந்த அப்பிராணிச் சிறுமி ஏராளமான சிரமங்களை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை உண்டானது என்று நான் சொன்னேன்.

‘‘நீங்க இரக்கப்பட்டுக் கொண்டும் பரிதாபப்பட்டுக் கொண்டும் இருக்காமல் உடனடியாக ஒரு வழியைக் கண்டுபிடிக்கணும். எதுவும் செய்யாமல் வெறுமனே இருப்பதில் என்ன பிரயோஜனம்?’’ என்று நான் சொன்னதைக் கேட்டு அவர் சொன்னார்:

‘‘நீங்கள் அடித்தளத்தில் நம்பிக்கையே இல்லாமல் கட்டிடம் கட்ட முயற்சிக்கிறீங்க. இவளுடைய மூளை முழுமையாகச் செயல்படக்கூடிய விதத்தில் இல்லைன்றதுதான் உண்மை. ஆரம்ப நிலையில் இருக்கும் உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் கூட வேண்டிய அளவிற்கு இல்லைன்றதுதான் உண்மையான விஷயம். இவளுக்கு முதல்ல வேண்டியது - தொடும் உணர்ச்சியும், சுவை உணர்ச்சியும்தான். அதை நாம இவளுக்கு கற்றுத் தரணும். அதற்குப் பிறகு ஒலியைப் பற்றி இவளைப் புரிய வைக்கணும். கொஞ்சம்கூட சோர்வே அடையாமல் இவற்றை நாம கற்றுத்தர வேண்டியிருக்கு. தொடர்ந்து நீங்க அழைச்ச பிறகு, இவளை அழைக்க வைக்கணும். இந்த விஷயத்துல அவசரப்படக்கூடாது. அவசரப்பட்டால், ஒரு விஷயம்கூட ஒழுங்கா நடக்காது. தேவையான அளவிற்கு நேரம் எடுத்து ஷரத்ருத்தைக் கொஞ்சம்கூட வற்புறுத்தாமல், இவளாகவே செய்ய வேண்டிய காரியங்கள் இவை... இந்த அணுகு முறையில் எந்தவொரு மேஜிக்கும் இல்லை...’’ - எனக்குத் தெளிவாக விளங்கும் வகையில் கூறிய என் நண்பர் தொடர்ந்து சொன்னார்.

‘‘இந்த விஷயங்கள் நான் கண்டுபிடித்தவை அல்ல. வேறு பலரும் இவற்றை செயல்படுத்திப் பார்த்திருக்கிறார்கள். தத்துவ வகுப்பில் இருக்குறப்போ நம்மோட பேராசிரியர்கள் இந்த மாதிரியான ஒரு சம்பவத்தைச் சொன்னது உங்களுக்கு ஞாபகத்தில் இருக்குதா?’’

இந்த விஷயங்களைச் சொன்ன என் நண்பர் சிறிது நேரம் தன் பேச்சை நிறுத்தினார். பிறகு தன்னைத்தானே திருத்திக் கொண்டது மாதிரி அவர் சொன்னார்:

‘‘இல்லை... இல்லை... இந்த விஷயம் சைக்கலாஜி சம்பந்தப்பட்ட ஓரு முடிவில் சொல்லப்பட்டது... அப்படித்தானே? ம்... பரவாயில்ல... எது எப்படி இருந்தாலும் என்னை மிகவும் கவர்ந்த ஒரு விஷயம் அது. அந்த அப்பிராணி இளம்பெண்ணின் பெயர்கூட எனக்கு ஞாபகத்தில் இருக்கு. ஷரத்ருத்தின் நிலைமையை விட அவளோட நிலை மிகவும் பரிதாபமாக இருந்தது. அவளால் பேசக்கூட முடியல. அவளுக்கு முழுமையாகப் பார்வை சக்தி கிடையாது. கடந்த குளிர் காலத்தில் ஒரு டாக்டர் அவளை சிறிதும் எதிர்பாராமல் இங்கிலாந்தில் பார்த்தார். அவளுக்குக் கல்வி புகட்ட வேண்டும் என்று அவர் தன் தலையைப் புண்ணாக்கிக் கொண்டதுதான் மிச்சம். லாரா ப்ரிஜ்மேன்- இதுதான் அவளின் பெயர்...’’

அவர் தொடர்ந்தார்:

‘‘லாராவின் வளர்ச்சியைப் பற்றிய விஷயங்களை டாக்டர் பத்திரமா எடுத்து வைத்தார். அதே மாதிரி ஷரத்ருத்தைப் பற்றிய தகவல்களை நீங்களும் பாதுகாத்து வைக்கணும். முதலில் பல வாரங்களாக இரண்டு விஷயங்களைப் பற்றத்தான் அவர் திரும்பத் திரும்ப அவளுக்கு உணர்த்திக்கிட்டே இருந்தார். பின்னைப் பற்றியும் பேனாவைப் பற்றியும்... ‘ப்ரெயில் சிஸ்டம்’ பாணியில் இருந்த புத்தகத்தில் பின், பேனா என்று இருந்த சொற்கள் மீது அவளின் விரல்களை அவர் வைக்கச் செய்தார். வாரங்கள் பல கடந்த பிறகும் எந்தவாரு முன்னேற்றமும் உண்டாகல. ஒரே இடத்திலேயே அவள் இருக்குற மாதிரி இருந்தது. எனினும் டாக்டர் தன் தைரியத்தைக் கொஞ்சமும் இழக்கல’’- என் நண்பர் தொடர்ந்து கூறிக் கொண்டிருந்தார்.

‘‘இருளடைந்ததும் ஆழமானதுமான ஒரு கிணற்றின் விளிம்பில் குனிந்து நின்றுகொண்டு, யாராவது இதைப் பிடிக்க மாட்டாங்களா என்ற எதிர்பார்ப்புடன் யாரோ ஒரு கயிறை மிகவும் கவனமாக கிணற்றுக்குள் தொங்க விடுறதைப் போல எனக்குத் தோணுச்சுன்னு டாக்டர் எழுதியிருக்காரு. கிணற்றுக்குள் யாரோ இருக்கிறார்கள் என்பதிலும் இறுதியில் அந்த ஆள் கயிறின் நுனியைப் பிடிக்கப் போறது உறுதி என்பதிலும் டாக்டருக்கு கொஞ்சம்கூட சந்தேகமே இல்லை.


எந்தவிதமான உணர்ச்சி மாறுபாடுகளும் இல்லாத லாராவின் முத்தில் புன்னகை மலர்வதை இறுதியில் அவரால் பார்க்க முடிந்தது. அன்பு, கருணை ஆகியவற்றை வெளிப்படுத்துகிற மாதிரி டாக்டரின் கண்களில் கண்ணீர் நிறைந்தது. அவர் குனிந்து கடவுளுக்கு நன்றி சொன்னார். அவள் தன் சிரமங்களிலிருந்து விடுபட்டு விட்டாள். அதற்குப் பிறகு எவ்வளவு வேகமாக அவளுடைய முன்னேற்றம் இருந்தது தெரியுமா? எல்லா விஷயங்களையும் அவள் தனக்குத்தானே கற்றுக்கொள்ள ஆரம்பித்தாள். இறுதியின் கண்பார்வையற்றவர்கள் சம்பந்தப்பட்ட அமைப்பின் தலைவியாகவே அவள் ஆனாள். சமீபத்தில் இதைப் போன்ற வேறு சிலரைப் பற்றி செய்தித்தாள்களில் விவாதிக்கப்பட்டதே! இப்படிப்பட்டவர்களுக்கு எப்படியாவது நல்லது நடக்குமான்னுதான் மக்கள் ஆர்வமா பார்க்குறாங்க. என் கருத்தில் அவங்க சந்தோஷமா இருக்காங்க. முழுமையான திருப்தியுடன் இருக்காங்க.’’

தொடர்ந்து அவர் டிக்கன்ஸ் எழுதிய ஒரு சிறுகதையை என்னிடம் சொன்னார். லாரா ப்ரிஜ்மேனின் வாழ்க்கையிலிருந்து உண்டான பாதிப்பால் எழுதப்பட்ட அந்தக் கதையை அனுப்பி வைப்பதாக அவர் எனக்கு உறுதி தந்தார். நான்கு நாட்களில் கதை என் கைக்கு வரவும் செய்தது. மிகுந்த மகிழ்ச்சியுடன் நான் அதை வாசித்தேன். ஆரம்பத்திலிருந்து இறுதி வரை உணர்ச்சிமயமாக அந்தக் கதை இருந்தாலும், கண் பார்வையற்ற ஒரு சிறுமியின் இதயத்தை நெகிழச் செய்யும் தன்மை கொண்டதாக அது இருந்தது. ஓய்வு, பணம், சந்தோஷம் ஆகியவை நிறைந்த மாய உலகத்தில், விளையாட்டு பொம்மைகள் உண்டாக்குகிற ஒரு அப்பாவியான அவளுடைய தந்தைதான் எல்லா விஷயங்களையும் நடத்திக் கொண்டிருந்தவன். டிக்கன்ஸின் கோணத்தில் ஒரு முமுமையான புனிதச் செயலாக அது இருந்தது.

டாக்டர் சென்ற பிறகு முழுமையான தீவிரத் தன்மையுடனும் ஈடுபாட்டுடனும் நான் அந்த வழிமுறையைச் செயல்படுத்த ஆரம்பித்தேன்.

ஒளிமயமான அந்தப் பாதையில் ஷரத்ருத்தின் ஆரம்ப கால் வைப்புகளைப் பற்றி விளக்கங்கள் உண்டாக்க முடியவில்லை என்ற கவலை எனக்கு இருக்கவே செய்கிறது. ஆரம்பத்தில் என்னுடைய கால்களே தடுமாறத்தான் செய்தன. ஆரம்ப வாரங்களில் நினைத்ததை விட அதிகமான தைரியம் தேவைப்பட்டது. இப்படிப்பட்ட பயிற்சிக்கு அதிக நேரம் ஆனது என்பதால் அல்ல- அதற்கு மாறாக தாங்க முடியாத நன்றி கெட்டச் செயலைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலை உண்டானது என்பதுதான் மனதில் கவலை தந்த ஒரு விஷயம். என் மனைவி மூலம் தான் அப்படிப்பட் ஒரு செயல் நடந்தது என்பதைக் கூறும்போது என் இதயத்தின் உள்ளறைகளில் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு வேதனை உண்டாகிறது. எனக்குள் இப்போது வெறுப்பு, கடுமை போன்றவற்றின் ஒரு சிறு அடையாளம்கூட இல்லை என்ற உண்மையை வெளிப்படுத்துவதற்காகத்தான் இந்த விஷயத்தை இங்கு நான் குறிப்பிடுகிறேன். பிறகு எமிலியின் கண்களில் இந்த வரிகள் படக்கூடிய சாத்தியம் இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு தைரியமாகக் கூறுகிறேன்- அவளுடைய நன்றிகெட்டச் செயல் காரணமாக ஏராளமான சிரமங்களை நான் சந்திக்க வேண்டிய சூழ்நிலை உண்டானபோதும், ஷரத்ருத்திற்காக இந்த அளவிற்கு அதிகமான நேரத்தை நான் செலவழிப்பதை அவள் விரும்பவில்லை என்ற உண்மையைத் தெரிந்தபோதும், நான் கொடூரமான மனிதனாக மாறவேயில்லை. என்னுடைய சிரமங்களுக்கு என்றாவதொரு நாள் நல்ல பலன் கிடைக்கும் என்பதில் அவளுக்கு சிறிதுகூட நம்பிக்கையே இல்லாமல் இருந்தது. இந்த விஷயம் என்னை மிகவும் வேதனை கொள்ளும்படி செய்தது. எனினும், நான் என் விஷயத்தில் உறுதியாகவே நின்றேன்.

ஷரத்ருத்துடன் நான் ‘பிஸியாக இருக்கும்போது’ நான் இப்போது ஓரு ஆளைப் பார்க்க வேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால் இந்த விஷயத்தைச் செய்ய வேண்டியிருக்கிறது என்று எமிலி என்னிடம் வந்து கூறுவாள். ஓருவகையான பொறாமை என்மீது அவளுக்கு இருக்கிறது என்பதென்னவோ உண்மை. எப்படியென்றால் இரண்டு மூன்று தடவைகள் அவள் என்னைப் பார்த்துச் சொன்னாள்:

‘‘நீங்க உங்க சொந்த பிள்ளைகளுக்காகக்கூட இந்த அளவுக்கு கஷ்டப்பட்டது இல்ல...’’

அவள் கூறுவது ஒருவகையில் பார்க்கப்போனால் உண்மைதான். எனக்கு என் பிள்ளைகள் மீது விருப்பம் இருந்தாலும், அவர்களுக்காக இவ்வளவு நேரத்தைச் செலவிடுவேன் என்பதை ஒருமுறை கூட நான் நினைத்துப் பார்த்தது இல்லை.

தாங்கள்தான் உண்மையான கிறிஸ்துவர்கள் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்குக் கூட பைபிளில் இருக்கும் காணாமல் போன ஆட்டுக்குட்டியைப் பற்றிய கதையை ஏற்றுக் கொள்வது என்பது மிகவும் சிரமமான காரியம் என்று என்னுடைய மனம் கூறுகிறது. இடையனின் பார்வையில் கூட்டத்திலிருக்கும் ஒவ்வொரு ஆடும் மற்ற எல்லா ஆடுகளையும்விட மிகவும் விலை மதிப்பு உள்ளதே என்று கூறுவது இப்படிப்பட்ட ஆட்களின் சிந்தனைக்கு அப்பாற்பட்ட ஒரு விஷயமே.

‘நூறு ஆடுகள் இருக்குறப்போ, அவற்றில் ஒரு ஆடு காணாமல் போனால், மீதி தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மேயும் இடத்தில் விட்டு விட்டு, காணாமல் போன அந்த ஒரு ஆட்டைக் கண்டுபிடிக்கும் வரை தேடிக் கொண்டிருப்பவர் உங்களில் யார் இருக்கிறார்கள்?’’

இந்த வார்த்தைகளில் கனிவு இருக்கிறது. ஆனால், சாதாரண மனிதர்கள் திறந்த இதயத்துடன் பேச தைரியம் கொண்டவர்களாக இருக்கும்பட்சம், அப்படி அவர்கள் செய்வது சிறிதும் சரியான ஒரு செயலாக இருக்காது என்றுதான் நினைக்கிறார்கள்.

ஷரத்ருத் முதல் தடவையாக புன்னகைத்தபோது எனக்கு நிம்மதியாக இருந்தது. சிரமப்பட்டதற்கான ‘கூலி’ எவ்வளவோ மடங்கு அதிகமாகக் கிடைத்துவிட்டதைப்போல் நான் உணர்ந்தேன். ‘காணாமல் போன ஆட்டுக்குட்டிக் கிடைக்கும் மனிதனுக்கு, மீதியிருக்கும் தொண்ணூற்றொன்பது ஆடுகளால் கிடைக்கும் சந்தோஷத்தைவிட அதிகமான சந்தோஷம் கிடைக்கும் என்று நான் கூறுகிறேன்...’ ஷரத்ருத்தின் மஞ்சள் நிறமான முகத்தில் ஒருநாள் புன்னகை மலர்ந்ததைப் பார்த்தபோது, இதுவரை நான் கற்றுத்தர முயற்சித்தபோது அறிவு மற்றும் ஆர்வத்தின் உடனடி வெளிப்பாடு அவளிடம் தெரிந்தபோது, என் இதயம் உற்சாகத்தால் துள்ளியது. என்  பிள்ளைகளிடமிருந்து ஒருமுறைகூட எனக்குக் கிடைத்திராத மதிப்புமிக்க ஆனந்தம் அது!

மார்ச், 5.

ஒரு பிறந்தநாளைப் போல இந்த அருமையான நாள் என் ஞாபகத் தளத்தில் ஒரு இடத்தைப் பிடித்துவிட்டது. ஷரத்ருத்தின் புன்சிரிப்பு சாதாரண புன்சிரிப்பு அல்ல. அவளிடம் உண்டான அந்த முன்னேற்றம்... ஆமாம்- அதுதான் அந்தப் புன்சிரிப்பிற்கான அர்த்தம். அவளுடைய மனக்கண்ணில் வாழ்க்கை பிரகாசிக்கத் தொடங்கியது. மிக உயர்ந்த ஆல்ப்ஸ் மலைச் சிகரங்களில் மேகங்களைக் கிழித்துக் கொண்டு தோன்றும் சூரியனைப் போன்ற ஈர்க்கக்கூடிய ஒரு பிரகாசமாக இருந்தது அது. பனி படர்ந்த மலைச் சிகரங்கள் அதன் ஒளியில் நடுங்க, அவற்றுக்கு மேலே மூடியிருந்தது.


மேகப்படலம் பின்னோக்கி போய்க் கொண்டேயிருந்தது. தூங்கிக் கொண்டிருக்கும் நீரை எழுப்புவதற்காக கடவுளின் தூதன் வானத்திலிருந்து பதேஸ்டா ஏரியை நோக்கி இறங்கிக் கொண்டிருக்கும் காட்சிதான் உடனடியாக என் மனதில் தோன்றியது. ஷரத்ருத்தின் முகத்தில் அப்போதும் தெரிந்து கொண்டிருந்த பிரகாசம் என்னை எப்போதையும் விட மகிழ்ச்சி கொள்ளச் செய்தது. கருணை உணர்ச்சி நிறைந்திருந்த கண்களுடன் நான் அவளுடைய நெற்றிப் பகுதியை முத்தமிட்டேன். அப்படிச் செய்யும்போது, கடவுளுக்கு நன்றி கூறுவதாக நான் எனக்குள் நினைத்துக் கொண்டேன்.

அதற்குப் பிறகு ஷரத்ருத்திடம் ஆச்சரியப்படும் வகையில் முன்னேற்றம் உண்டானது. எல்லாவித சட்டங்களையும் தவிடுபொடியாக்கி அவள் படுவேகமாக முன்னோக்கிப் போய் கொண்டிருப்பதைப் போல் சில நேரங்களில் எனக்குத் தோன்றும் பொருட்களின் ‘தரத்தை’விட அதிகமாக  வெப்பம், குளிர்ச்சி, இனிப்பு, கசப்பு, கடுமை, மென்மை போன்ற விஷயங்களுக்குத்தான் நான் முதலில் கவனம் செலுத்தினேன் என்பதை நினைத்து பார்த்தேன். எல்லாம்  ஒரு ஓழுங்கில் நடந்து கொண்டிருப்பது தெரிந்தது. தொடர்ந்து அதிக கவனம் நான் செலுத்தியது எழுந்திருப்பது, வைப்பது, மாற்றுவது, கட்டுவது, சேகரிப்பது போன்ற விஷயங்களில்தான்.

‘சித்தாந்தம்’ கற்றுத்தரும் எல்லா முயற்சிகளையும் நான் ஒரு பக்கம் ஒதுக்கி வைத்துவிட்டு, ஷரத்ருத்துடன் உரையாட ஆரம்பித்தேன். சொல்லித்தரும் விஷயங்களை அவளால் புரிந்துகொள்ள முடிகிறதா இல்லையா என்பதைப் பற்றியெல்லாம் நான் சிறிதும் கவனத்தில் எடுத்துக் கொள்ளவேயில்லை. எல்லாம் மெதுவாக முன்னோக்கிப் போய்க்கொண்டிருந்தது. ஷரத்ருத்தின் ஈடுபாட்டையும் ஆர்வத்தையும் பார்த்து, அவளைக் கேள்விகள் கேட்கும்படி நான் அழைத்ததன் மூலம், அவளிடம் நான் ஒரு உற்சாகம் உண்டாகும்படி செய்தேன்.

ஷரத்ருத்தைத் தனியாக விடும்நேரம் முழுவதும் அவளுடைய மூளை படு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும். சிறிதுநேர விலகலுக்குப் பிறகு அவளுக்கு அருகில் போகும்போது எங்கள் இருவரையும் விலக்கி நிறுத்தியிருந்த கறுத்த சுவரின் கடுமை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டு வருவதை ஆர்வத்துடன் நான் பார்த்துக் கொண்டிருப்பேன். எனக்குள் நானே கூறிக்கொள்வதைப்போல் இறுதியில் நான் சொன்னேன்:

‘காற்று வெளியில் வெயிலும் கால மன்னனின் விசாலமும் சிறிது சிறிதாக குளிரின்மீது வெற்றியை அடைவதைப்போலத்தான் இதுவும்’ இந்த மாற்றத்தை நினைக்க நினைக்க எனக்கு ஆச்சரியம் உண்டாகிக் கொண்டிருந்தது. அவளுடைய மனக் கண்கள் திறக்க ஆரம்பித்தன. ஆனால், அவளுடைய உறுப்புகள் கொண்ட உடல் அப்படியேதான் இருந்தது.

நெருப்புக்குப் பக்கத்திலிருந்த கிழவியைப் போல மோசமான நிலைமைக்கு எங்கே ஆளாகிவிடப் போகிறாளோ என்ற பயத்தின் காரணமாக நான் ஷரத்ருத்தை வெளியே அழைத்துச் செல்ல ஆரம்பித்தேன். ஆனால் என் கை பற்றினால் மட்டுமே அவள் வெளியே தன் கால்களை எடுத்து வைப்பாள். தான் இதுவரை வீட்டு வாசற்படியைக்கூட கடந்ததில்லை என்ற உண்மையை வெளிப்படுத்துகிற விதத்தில் ஆச்சரியத்துடனும் மிகுந்த அச்சத்துடனும்தான் அவள் முதலில் வீட்டை விட்டு வெளியிலேயே வந்தாள். தின்பதற்குக் கொடுத்தார்கள். மரணத்திலிருந்து காப்பாற்றினார்கள் என்பதை நீக்கிவிட்டுப் பார்த்தால் ஷரத்ருத்தைப் பற்றி வீட்டில் யாரும் சிறிதும் சிந்தித்துப் பார்க்கக் கூட இல்லை என்பதுதான் உண்மை. உயிருடன் இருக்கும் வண்ணம் நாட்கள் விடிய ஷரத்ருத்திற்கு யாராவது உதவினார்கள் என்று கூறுவதற்கில்லை. அமைதியான அவளுடைய ‘மினி உலகம்’ ஒரு அறையின் நான்கு சுவர்களால் சூழப்பட்டிருந்தது. எந்தச் சமயத்திலும் அவள் அதைவிட்டு வெளியே வந்ததில்லை. வெளிச்சம் நிறைந்த பரந்த உலகத்திற்கான கதவை கோடை காலத்தில் திறந்தபோது, அவள் மிகவும் சிரமப்பட்டு வாசற்படி வரை நடந்தாள்.

‘‘வெளிச்சத்தின் பரவல் மூலமாகத்தான் கிளிகள் கலகல என்ற சத்தத்தை உண்டாக்குகின்றன என்ற விஷயத்தை நான் எப்போதும் சிந்தித்திருக்கிறேன்’’- ஒருநாள் ஷரத்ருத் சொன்னாள். நெருப்பு எரியும்போது அடுப்பில் குளிர்ந்த நீர் கொதிக்க ஆரம்பிப்பது மாதிரி கன்னங்களிலும் கைகளிலும் வெப்பக் காற்று படும்போது அதுவும் இனிய பாடல்களைப் பாடும் என்று அவள் எப்போதும் மனதில் நினைத்துக் கொண்டிருப்பாளாம்! ஆனால், நான் அவளைக் காப்பாற்றும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் வரையில் உண்மையாக சொல்லப்போனால் அவள் எந்த விஷயத்திலும் சிறிதுகூட ஆர்வமே காட்டியதில்லை. அவள் எப்போதும் அசையாத ஒரு பொருளைப்போல கிடப்பாள். இயற்கையில் இங்குமங்குமாக படர்ந்து கிடக்கும் சந்தோஷம் தெரிகிற மாதிரி உயிருள்ள பிராணிகள் சிறு சிறு சத்தங்களை உண்டாக்கும் என்று நான் சொன்னபோது ஷரத்ருத்திற்கு எந்த அளவிற்கு மகிழ்ச்சி உண்டானது தெரியுமா? அன்று முதல் அவள் கூறத் தொடங்கினாள்.

‘‘பறவைகளைப்போலவே நானும் சந்தோஷமாக இருக்கிறேன். ஆனால் கிளிகள் சந்தோஷம் நிறைந்த சத்தங்கள், பார்க்க இயலாத வினோதக் காட்சியை அல்லவா வெளிப்படுத்துகின்றன என்பதை நினைத்த அடுத்த நிவீடமே அவளுடைய முகம் சுருங்கிப் போய்விடும்.

‘‘பறவைகள் உணர்த்துகிற மாதிரி, அந்த அளவிற்கு அழகானதா இந்த உலகம்?’’

அவள் கேட்பாள்: ‘‘இப்படிப்பட்ட விஷயங்களை மனிதர்கள் ஏன் என்னிடம் கூறவில்லை? என்னால் பார்’க முடியாது என்பதை நினைத்து, நான் கவலைப்படுவேன் என்ற பயத்தின் காரணமாகவா அதைப்பற்றிய எந்த விஷயத்தையும் நீங்கள்கூட ஒருமுறையும் என்னிடம் கூறாமல் இருந்தீங்க? அப்படின்னா, அப்படி நட’குறது சரியில்லை... பறவைகளின் ஒலிகளை நான் எப்போதும் கேட்டு’கொண்டுதான் இரு’கிறேன். அவை கூறுகிற ஒவ்வொரு விஷயத்தையும் முழுமையாக புரிந்துகொள்கிறேன்னுதான் நினை’கிறேன்.’’

‘‘பார்வை ச’தி இருப்பவர்களால் நீ கேட்கிற அளவிற்கு தெளிவாக கேட்க முடியாது ஷரத்ருத்’- அவளைத் தேற்றுகிற விதத்தில் நான் சொன்னபோது, அவள் சொன்னாள்:

‘‘மற்ற உயிரினங்கள் ஏன் பாடவில்லை?’’- சில நேரங்களில் அவளுடைய கேள்விகளை’ கேட்கும்போது நம’கே ஆச்சரியமாக இரு’கும்.

‘‘உடலின் அளவும் எடையும் அதிகமாவதை அனுசரித்து, உயிரினங்களின் சோம்பேறித்தனமும் அதிகரி’கும்’’- அந்த வகையில் அமைந்த அவளுடைய ஒரு கேள்வி’குப் பதிலாக நான் ஒருமுறை இப்படிச் சொன்னேன். தொடர்ந்து அவளிடம் நான் ஓணானைப் பற்றி சொன்னேன். அதன் துள்ளி’ குதித்து ஓடும் செயலைப் பற்றியும்...

‘‘பறவைகள்தான் எப்பவும் பற’குமா?’’- அவளுடைய கேள்வி இது.

‘‘இல்லை... பட்டாம்பூச்சிகளும் பறப்பதுண்டு.’’

‘‘அவை பாடுமா?’’

‘‘வேறொரு விதத்தில் அவை தங்களின் சந்தோஷத்தை வெளிப்படுத்தும்’’ - நான் சொன்னேன்: ‘‘பட்டாம்பூச்சிகளின் சந்தோஷம் அவற்றின் சிறகுகள் மீது வரையப்பட்டிரு’கின்றன’’- வண்ணத்துப் பூச்சியின் இந்திர தனுசுக்கு நிகரான நிறங்களைப் பற்றி பிறகு நான் அவளிடம் கூறினேன்.

பிப்ரவரி, 28.

கற்பனை என்ற நீரோட்டத்தில் நான் நேற்று மூழ்கிவிட்டேன். அதனால் இன்று சற்று திரும்பிப் பார்ப்போம்.


ஷரத்ருத்தைக் கற்கச் செய்வதற்காக நானே ப்ரெயில் எழுத்துக்களைப் படிக்க வேண்டிய சூழ்நிலை உண்டானது. என்னைவிட படுவேகமாக அவள் படிக்க ஆரம்பித்தாள்.

ஷரத்ருத்தைப் படிக்க செய்யும் விஷயத்தில் எனக்கு உதவி செய்ய வேறு சிலரும் இருந்தார்கள்.  என்னுடைய அதிகார விளிம்பிற்குள் இருந்த இடத்தில் நிறைய வேலைகளைச் செய்ய வேண்டிய சூழ்நிலை இருந்த காரணத்திற்காக, அது எப்படிப்பட்டதாக இருந்தாலும் நான் மனதில் சந்தோஷத்துடனே இருந்தேன். வீடுகள் ஒவ்வொன்றும் மிகவும் தூரத்தில் இருந்தன. அதனால் ஏழைகளையும் நோயாளிகளையும் பார்ப்பதற்காக நான் நீண்ட தூரம் போகவேண்டியிருந்தது. ஈஸ்டர் பண்டிகைக்கு ஜாக்ஸ் வீட்டிற்கு வந்திருந்தாள். படிக்கும் நாட்களில் லாஸான் என்ற இடத்திற்கு அவன் போக வேண்டியிருந்தது. இப்போது தியாலஜி படிப்பு நடந்து கொண்டிருக்கும் இடத்தில்தான் அவன் தன்னுடைய ஆரம்பக் கல்வியைக் கற்றான். இந்த விதிமுறையில் ஸ்கேட்டிங் போகும்போது அவனுடைய கையில் பிரச்சினை உண்டாகிவிட்டது. காயம் அப்படியொன்றும் பெரிதல்ல. நான் உடனடியாக மார்ட்டின்ஸை அழைத்தேன். சர்ஜனின் உதவி எதுவும் இல்லாமலே அவர் ஜாக்ஸின் கையைச் சரிபண்ணி விட்டார். இப்போது ஜாக்ஸ் ஷரத்ருத்திடம் ஆர்வம் காட்ட ஆரம்பித்தான். இதுவரை அவன் அவளிடம் குறிப்பிட்டுக் கூறும்படியாக ஈடுபாடு எதையும் காட்டியதில்லை. அப்படியிருந்த

அவன் அவளைப் படிக்கச் செய்யும் விஷயத்தில் இப்போது எனக்கு உதவி செய்ய ஆரம்பித்திருக்கிறான். மூன்று வாரங்கள் மட்டுமே அவனுடைய உதவி எனக்கு இருந்தது என்றாலும், இத்தனை நாட்களில் அவள் குறிப்பிட்டுச் சொல்கிற அளவிற்கு முன்னேறியிருந்தாள். அசாதாரணமான ஒரு உற்சாகம் அவளிடம் தெரிந்தது. சிறிதளவில்கூட முன்னோக்கிச் செல்வது என்பது ஆபத்தான ஒரு விஷயம் என்று தோன்றக்கூடிய வகையில் எந்தவித பயனும் இல்லாமல் இருந்த அவளுடைய அறிவு, இப்போது படு வேகமாக ஓட்டப் பந்தயத்திற்கே தயாராகிவிட்டது. தன்னுடைய சொந்த சிந்தனைகளுக்கு வடிவம் தர அவளுக்கு சர்வ சாதாரணமாக முடிகிறது என்ற விஷயம் எனக்குத் தெரியவந்தபோது என் கண்களில் ஆச்சரியம் வெளிப்பட்டது. மனம் முழுமையாக செயல்படும் வண்ணம், மிகுந்த தைரியத்துடன் நடந்து கொண்டாள் ஷரத்ருத். ஒலிகளை வைத்து அவள் தன்னுடைய சிந்தனைகளை உண்டாக்கிக் கொள்ள ஆரம்பித்தாள். முழுமையான சந்தோஷத்தை வெளிப்படுத்தும் ஒலி ஓவியங்களை தான் தொட்டு அறியக்கூடிய, உணர்ந்து தெரிந்துகொள்ளக்கூடிய பொருட்களை மட்டுமே அவள் அப்போது பயன்படுத்துவாள். அதே பொருட்களைக் கொண்டு அவள் தனக்குத் தெரிந்திராத விஷயங்களைப் பற்றியும் தெரிந்துகொள்ள ஆரம்பித்தாள்.

3

ரத்ருத்தின் கல்விக்கான ஆரம்ப ஏற்பாடுகளைப் பற்றி விவாதிக்க வேண்டிய அவசியமில்லை. எல்லா கண்பார்வை தெரியாதவர்களின் ஆரம்பப் பாடமும் இப்படித்தான் இருக்கும். என்னுடைய இடத்தில் வேறு யாராவது இருந்தால், அவர்கள் என்ன செய்வார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால், நான் ஷரத்ருத்தை வண்ணங்களின் பெயர்களைக் கூறும்படி கற்றுத் தந்தது வானவில்லின் நிறங்களைக் கொண்டுதான். ஆனால், அவளுடைய மனதில் வண்ணங்களுக்குள் வெளிச்சத்திற்கும் இடையில் ஒரு பிரச்சினை உண்டானது. வண்ணங்களுக்கிடையில் இருந்த வித்தியாசம் அவளுடைய புரிதலுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது என்பதை என்னால் உணர முடிந்தது. ஒவ்வொரு வண்ணமும் பல வண்ணங்களின் கலவையாக இருக்கும் என்பதையும், வண்ணங்களுக்கு இடையில் எத்தனை வண்ணங்களை வேண்டுமானாலும் சேர்த்துக் கலக்க முடியும் என்பதையும் புரிந்துகொள்ள அவள் மிகவும் சிரமம்பட்டாள். இந்த விஷயம் அவளை மிகவும் துன்பத்திற்குள்ளாக்கியது. திரும்பத் திரும்ப அவள் இதே விஷயத்தைப் பற்றியே ஆராய்ந்து கொண்டிருந்தாள்.

இதற்கிடையில் இசை நிகழ்ச்சி ஒன்றைக் கேட்பதற்காக நான் அவளை நியூ சாட்டலுக்கு அழைத்துச் செல்லும் ஒரு வாய்ப்பு வந்தது. குழு பாடலுகக்குத் தேவையான பலதரப்பட்ட இசைக் கருவிகளிலிருந்து என்னுடைய கவனம் வண்ணங்களைப் பற்றிய பிரச்சினையை நோக்கித் திரும்பியது. கம்பிகளாலும் மரத்துண்டுகளாலும் உண்டாக்கப்பட்ட இசைக் கருவிகள் எழுப்பிய வெவ்வேறு ஸ்வரங்களை மிகுந்த கவனத்துடன் கேட்கும்படி நான் அவளிடம் சொன்னேன். அங்கிருந்த ஒவ்வொரு இசைக் கருவியும் தனக்கென்று ஆரம்பத்திலிருந்து இறுதிவரை வெவ்வேறு வகையில் ஸ்வரங்களை வெளிப்படுத்தும் சக்தி படைத்தவையாக இருக்கின்றன என்பெதன்னவோ உண்மை. அதேபோல இயற்கையிலிருக்கும் அனைத்து வண்ணங்களைப் பற்றியும் கற்பனை பண்ணிப் பார்க்கும்படி நான் அவளிடம் சொன்னேன். அதைக் கேட்டவுடன் அவளுடைய சந்தேகங்களெல்லாம் எல்லை கடந்துபோய் விட்டன. ஷரத்ருத்தின் மனம் சந்தோஷத்தால் நடனமாட ஆரம்பித்தது.

‘‘இவை எந்த அளவிற்கு அழகாக இருக்கும் !’’ - அவள் சொன்னாள் : ‘‘ஆனால், வெள்ளை... ஆமாம்... என்ன செய்தும், வௌ நிறத்தைப் பற்றி எனக்கு ஒரு பிடிமானமும் கிடைக்க மாட்டேங்குதே !’’

‘நிறங்கள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்தால், ஒரு ஒட்டுமொத்த முடிவு இருக்கும் அல்லவா ? அதுதான் வெள்ளை என்று கூறி புரிய வைக்க நான் முயற்சித்தேன். ஆனால், அப்படி நான் கூறும்பட்சம், அது எனக்காட்டும் ஷரத்ருத்திற்காகட்டும் எந்தவொரு சந்தோஷத்தையும் தராது என்பதுதான் உண்மை.

திடீரென்று அவள் சொன்னாள்.

‘‘மரத்துண்டுகளாலும் உலோகத்தாலும் செய்யப்பட்ட இசைக் கருவிகள், வயலின் ஆகியவற்றுக்கு வெவ்வேறு வகைப்பட்ட ஸ்வரங்கள் இருக்கின்றன அல்லவா ?’’ - அவளுடைய இந்த வார்த்தைகளைக் கேட்டதும் என்னுடைய மனம் ஏதோ ஒரு முடிச்சுக்குள் மாட்டிக் கொண்டதைப் போல் நான் உணர்ந்தேன். அவளிடம் சர்வ சாதாரணமாக பாதிப்பு உண்டாக்குகிற மாதிரியான ஒரு வழியைக் கண்டுபிடிக்கிற முயற்சியில் இருந்தேன் நான்.

இறுதியில் நான் சொன்னேன் :

‘‘வண்ணத்தின் எந்தவொரு அடிக்கடையும் இல்லாத, வண்ணம் என்பதே இல்லாத, வெறும் பிரகாசத்தை மட்டுமே கொண்டிருக்கும் ஏதோ ஒரு பொருள் ‘வெள்ளை’ என்று கற்பனை பண்ணிக் கொள். அதே நேரத்தில் முற்றிலும் மாறுபட்ட வகையில், கறுப்பு நிறத்தில்... முற்றிலும் கறுப்பு நிறம் இருக்கும் வகையில் பல வண்ணங்களும் இருக்கும்.’’

நான் சந்திக்க நேரும் இக்கட்டான சூழ்நிலைகளுக்கு ஒரு உதாரணம் மட்டுமே இந்த அரைகுறை உரையாடல்.

ஷரத்ருத்திற்கென்று ஒரு நல்ல குணம் இருந்தது. பலரும் செய்வதைப் போல (பொய், பித்தலாட்டம் நிறைந்த விஷயங்களைத் தங்களின் மூளையில் சேர்த்துக் கொண்டு, இறுதியில் குழப்பங்களைக் கொண்ட விவாதங்கள் செய்து சூழ்நிலையையே அலங்கோலமாக்கும் மனிதர்களுக்கு இந்த உலகத்தில் பஞ்சமா என்ன ?) தன்னால் புரிந்து கொள்ள முடியாத விஷயத்தைப் புரிந்து கொண்டு விட்டதாகக் கூறி அவள் எந்தச் சமயத்திலும் பொய்யாக நடித்ததில்லை. விஷயம் எது வேண்டுமானாலும் இருக்கட்டும். அதன் தெளிவான வரைபடம் தனக்குக் கிடைக்கின்ற வரையில், அது அவளின் மூளையைப் படாதபாடு படுத்திக் கொண்டேயிருக்கும்.


ஷரத்ருத்துடன் இப்படிப்பட்ட சோதனை முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதுதான், காட்சி உலகம் ஸ்வர உலகத்திலிருந்து எந்த அளவிற்கு மாறுபட்டு இருக்கிறது என்பதையும், அவற்றுக்கிடையே இருக்கும் ஒப்பீடு எந்த அளவிற்கு அர்த்தமற்றது என்பதையும் திரும்பத் திரும்ப நான் உணர்ந்தேன்.

பிப்ரவரி, 29.

நியூ சாட்டலில் நடந்த இசை நிகழ்ச்சி நேரத்தில் ஆனந்தத்தில் திளைத்திருந்த ஷரத்ருத் மிகவும் அமைதியாக உட்கார்ந்திருந்தாள்.

‘‘நீங்கள் சொல்கிற விஷயத்தில் உண்மையாகவே இந்த அளவிற்குத்தான் அழகு இருக்கிறதா -?’’ - இறுதியில் அவள் கேட்டாள்.

‘‘ஷரத்ருத், இவ்வளவுதான் அழகு இருக்குன்றதை வச்சு நீ நினைப்பது என்ன -?’’

‘‘நதிக்கரையின் காட்சி அளவிற்கு...’’

நான் இதுவரையில் ஷரத்ருத்திற்கு முன்னால் இருக்கும்போது கெட்டவை, பாவம், மரணம் போன்ற விஷயங்களைப் பற்றிப் பேச முயன்றதில்லை.

நான் சொன்னேன் :

‘‘கண் இருப்பவர்களுக்கு அவற்றின் சந்தோஷம் தெரியாது.’’

‘‘ஆனால், பார்க்கும் சக்தி இல்லாத எனக்கு அவற்றைக் கேட்பதற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கு’’ - அவளின் குரலில் ஒரு அழுத்தம் இருந்தது.

மிகவும் நெருக்கமாகக் பேசிக் கொண்ட நடக்கும்போது, சிறு பிள்ளைகள் சாய்ந்து கொள்வதைப்போல் ஷரத்ருத் என் கைகளில் சாய்ந்திருந்தாள்.

‘‘நான் எந்த அளவிற்கு சந்தோஷமாக இருக்கேன்னு உங்களுக்குத் தெரியுமா ?’’ - அவள் தொடர்ந்து சொன்னாள் : ‘‘நான் உங்களை சந்தோஷப்படுத்துறதுக்காக மட்டும் இதைச் சொல்லல. இங்கே கொஞ்சம் பாருங்க. மற்றவர்களின் முகங்களைப் பார்க்கும்போது, அவங்க சொல்றது உண்மையா பொய்யான்னு உங்களால் எளிதில் புரிந்துகொள்ள முடியும் அல்லவா ? அவர்களின் குரலில் இருந்து என்னால் அந்த விஷயத்தைப் புரிந்து கொள்ள முடியும். தனக்கு உதவியா இல்லைன்னு ஆன்ட்டி (அவள் என் மனைவியை இப்படித்தான் அழைப்பாள்) வாய்க்கு வந்தபடி பேசியபோது, அதைப்பற்றி உங்களுக்கு எந்தக் கவலையும் இல்லைன்னு நீங்கள் ஒருமுறை கூறியது ஞாபகத்துல இருக்கா ? ஆனால், சொல்றது உண்மை இல்லைன்னு உங்களோட குரலிலிருந்து அந்த நிவீடமே நான் தெரிந்து கொண்டேன். நீங்கள் கவலையில் இருக்கீங்களா இல்லையான்னு தெரிஞ்சிக்கிறதுக்கு நான் அந்தக் கன்னங்களைத் தொட்டுப் பார்க்க வேண்டிய தேவையே இல்லை’’ - அவள் உரத்த குரலில் திரும்பத் திரும்பச் சொன்னாள்.

‘‘உங்களின் கன்னங்களைத் தொட்டுப் பார்கக வேண்டிய எந்தவொரு தேவையும் இல்லை.’’

நான் வெட்கத்தால் சுருங்கிப்போய் விட்டேன். ஏனென்றால், அப்போது நகரத்தைச் சேர்ந்த மக்கள் எங்களைத் திரும்பிப் பார்க்க ஆரம்பித்தார்கள். அவள் தொடர்ந்து சொன்னாள் :

நீங்கள் என்னை ஏமாற்ற முயற்சிக்கக் கூடாது. ஒரு பார்வை தெரியாதவளை ஏமாற்றுவது மிகவும் மோசமான ஒரு விஷயம். பிறகு... இன்னொரு விஷயம்... நீங்கள் அதுல வெற்றி பெறவும் முடியாது’’ - சிளீத்துக் கொண்டே அவள் தொடர்ந்து கேட்டாள் : ‘‘சொல்லுங்க... உங்களுக்குக் கவலை இல்லையா ?’’

ஷரத்ருத்துடன் இருப்பதுதான் எனக்கு சந்தோஷமான விஷயம் என்பதை அவள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நான் அந்தக் கண்பார்வை தெரியாத சிறுமியின் கையை எடுத்து என் உதடுகள்மீது வைத்தேன்.

‘‘இல்லை... எனக்குக் கவலை இல்லை ஷரத்ருத். நான் எப்படி கவலைப்பட முடியும்.’’

‘‘இருந்தாலும்... சில நேரங்களில் நீங்கள் கவலைப்படுறீங்களா ?’’

‘‘ம்... சில நேரங்களில்...’’

‘‘அன்னைக்கு அந்தச் சம்பவம் நடந்த பிறகு, நீங்கள் ஒருமுறை கூட கவலைப்பட்டது இல்லையா ?’’

‘‘இல்ல... அதற்குப் பிறகு ஒருமுறை கூட கவலைப்பட்டது இல்லை.’’

‘‘சரி... அது இருக்கட்டும்... உங்களுகப் பொய் சொல்லணும்னு தோணியிருக்கா ?’’

‘‘இல்ல ஷரோ...’’

‘‘என்னை ஒருமுறை கூடஏமாற்ற மாட்டீங்கன்னு சத்தியம் பண்ண முடியுமா ?’’

‘‘நான் சத்தியம் பண்ணுறேன்.’’

‘‘சரி... அப்படின்னா சொல்லுங்க... நான் அழகியா -?’’ - திடீரென்று அவள் இப்படியொரு கேள்வியைக் கேட்டதும் என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் நான் தடுமாறினேன்.

ஓரத்ருத்தின் அழகைப்பபற்றி நான் இதுவரையில் நினைத்துப் பார்த்ததேயில்லை. மேலும் அதைப் பற்றி அவளுக்குத் தெரிய வைப்பது தேவையில்லாத ஒன்று என்று நான் நினைத்திருந்தேன்.

‘‘சரி... இதைத் தெரிந்துகொண்டு உனக்கு என்ன ஆகப்போகிறது ?’’ - நான் கேட்டேன்.

‘‘நான் கட்டாயம் அதைத் தெரிஞ்சிக்கணும். நான்... நான்... நான் அதை எப்படிக் கூறுவேன் ? உங்களிடம் இல்லாமல் வேறு யாரிடம்...’’

‘‘மக்களின் முக அழகைப்பற்றி பாதிரியார் எதற்குச் சிந்திக்கணும் ?’’

அந்த நிவீடமே இநந்த விஷயத்திலிருந்து எப்படிக் கழன்று கொள்வது என்பதைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தேன்.

‘‘ஏன் சிந்திக்கக் கூடாது ?’’

‘‘ஒரு பாதிரியாரைப் பொறுத்தவரையில், மக்களின் ஆன்மாவின் அழகைத்தான் அவர் பார்க்க வேண்டும்.’’

‘‘நான் அழகற்றவள் என்பது என் எண்ணம்’’ - ஷரத்ருத் அலட்சியமான குரலில் சொன்னாள்.

அப்போது என் உள்மனதிற்குத் திரையிட்டுக் கொண்டு நான் சொன்னேன் :

‘‘ஷரோ, நீ அழகின்னு உனக்கு நல்லா தெரியும்.’’

அதற்குப் பிறகு அவள் அமைதியாக இருந்தாள். அவளுடைய முகத்தில் பிரகாசமான கம்பீரம் தெரிந்தது. நாங்கள் வீட்டை அடையும்வரை அவளுடைய நடவடிக்கையில் எந்தவொரு மாற்றமும் உண்டாகவில்லை.

நாங்கள் திரும்பி வந்தவுடன் எமிலி சொன்னாள் :

‘‘நீங்க இப்படி நேரத்தை வீணாக்குவது எனக்குப் பிடிக்கல...’’

இதே விஷயத்தை அவள் முன்பும் கூறியிருக்கலாம். ஆனால், எதுவுமே சொல்லாமல் மனிதர்களை வேலை செய்ய விட்டுவிட்டு, பிறகு அவர்கள் மீது குறைகள் சொல்வது சிலரின் குணமாயிற்றே ! தன்னுடைய ‘உரிமை’யின் பாதுகாப்பிற்கு எந்தவொரு கேடும் வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் அவள் எங்கள் இருவரையும் போகவே அனுமதித்தாள். ஷரத்ருத்தை நான் இன்று எங்கு அழைத்துச் சென்றேன் என்பது எமிலிக்குத் தெரியும். அதனால் இசை நிகழ்ச்சி நேரத்தில் நாங்கள் என்னவெல்லாம் கேட்டோம் என்று கேட்டிருந்தால், அந்தச் சிறு பெண் எந்த அளவுக்கு அதிகமான சந்தோஷத்தை அடைந்திருப்பாள் !

இரவில் பிள்ளைகள் தூங்கச் சென்றபிறகு நான் எமிலியிடம் கேட்டேன் :

‘‘இசை நிகழ்ச்சிக்கு ஷரத்ருத்தை அழைத்துச் சென்றதற்காக நீ ஏன் கவலைப்படுறே ?’’

அதற்கு அவள் சொன்னாள் :

‘‘உங்க சொந்தப் பிள்ளைகள்ல ஒண்ணுக்குக்கூட செய்யாததையெல்லாம் நீங்க இவளுக்காகச் செய்றீங்க...’’

‘நம்மைத் தேடித் திரும்பி வரும். காணாமற் போன பிள்ளைக்குத்தான் விருந்துகிடைக்கும்... அப்படியில்லாமல் வீட்டிலேயே நம்முடன் இருக்கும் பிள்ளைகளுக்கு அல்ல’ என்று எத்தனை முறைகள் கூறினாலும் அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை.


வேறு விதத்திலிருக்கும் எந்தவொரு சந்தோஷத்தைப் பற்றியும் மனதில் கற்பனை பண்ணிப் பார்க்கும் நிலையில்கூட ஷரத்ருத் இல்லை என்ற விஷயத்தை நன்கு தெரிந்திருந்தும், உடல் ரீதியான அவளுடைய சிரமத்தில் எமிலி சிஜீதளவும் அக்கறையே எடுத்துக் கொள்ளவில்லை. அவளுடைய இந்த நடத்தை எனக்கு மிகவும் மோசமான ஒன்றாகத் தெரிந்தது. எந்த நேரமும் நான் பல வேலைகளிலும் ஈடுபட்டிருப்பவன் என்பதும், அதிர்ஷ்டம் என்ற ஒன்றால் மட்டுமே எனக்கு சற்று ஓய்வு கிடைத்தது என்பதும் எமிலிக்கு நன்றாகத் தெரியும். பிள்ளைகள் ஏதாவது வேலைகளில் தீவிரராகத் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருப்பார்கள் என்பதும், தனக்கு இசையில் சிஜீதுகூட ஆர்வம் இல்லை என்பதும் அவளுக்குத் தெரியாத விஷயங்களல்ல. இசை நிகழ்ச்சி நடப்பது வீட்டு வாசலில் என்று வைத்துக் கொள்ளுங்கள்.... முழு நாளும் ஓய்வுதான் என்ற நிலையில் இருந்தால்கூட அதை ரசிக்க வேண்டம் என்று எமிலி நினைப்பதேயில்லை.

எமிலி எல்லா விஷயங்களையும் ஷரத்ருத்திற்கு முன்னால் இருந்து கொண்டு கூறியதால், எனக்குக் கவலை அதிகமாகியது. நான் அவளை ஒரு பக்கமாக ஒதுக்கிக் கொண்டு போனாலும், அவள் உரத்த குரலில் பேசியதால் ஷரத்ருத் அவள் கூறியவை அனைத்தையும் கேட்டு விட்டாள். நான் மிகுந்த கவலைக்கு ஆளானேன். அதைவிட நான் கோபம் கொண்டவனாகவும் ஆனேன்.

எமிலி போய் சில நிவீடங்களுக்குப் பிறகு, நான் ஷரத்ருத்தின் அருகில் சென்று அவளுடைய மெலிந்துபோன கையை என் கையில் எடுத்தேன். பிறகு, அதை மெதுவாக என் முகத்தில் வைத்து வருடியவாறு நான் சொன்னேன்.

‘‘இந்த முறை நான் கவலைப்படல...’’ - புன்னகையை உதிர்க்க நான் முயன்றபோது அவள் சொன்னாள் :

‘‘இந்த முறை கவலைப்படவேண்டியவள் நானாயிற்றே !’’  - அவள் எனக்கு நேராக தன் முகத்தை உயர்த்தியபோது, கன்னங்கள் வழியாக கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

மார்ச், 8.

எனக்கு விருப்பமில்லாத விஷயங்க¬ள்ச செய்யாமல் இருக்க வேண்டும். எனக்கு அவள் செய்யக்கூடிய உதவி அது ஒன்றுதான். என் வாழக்கையை அவள் எந்த அளவிற்குப் பிரச்சினைக்குரியதாக ஆக்கியிருக்கிறாள் என்ற விஷயம் அவளுக்குத் தெரியாது. எமிலிக்காக மிகுந்த சந்தோஷத்துடன் - எந்த அளவிற்கு ஆபத்து இருந்தாலும் அந்த வேலையைச் செய்ய என்னால் முடியும். ஆனால், ஒவ்வொரு விஷயத்திலும் அவள் கசப்பையும், வெறுப்பையும் மட்டுமே பார்த்தாள். எப்படியாவது நாட்களைக் கடத்த வேண்டும்.... ஆமாம். அது மட்டும் தான் வாழ்க்கையில் முன்னேற்றம் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்தாள். புதுமையான எந்தப் பொருளும் அவளுக்குத் தேவையில்லை. எந்தப் பொருளிலும் அவளுக்கு ஆர்வம் ல்லை. சொந்தமாக எதையும் அடையும் முயற்சியை நம்பிக்கையற்ற கோணத்தில் பார்ப்பதே அவளுடைய வழக்கமாக இருந்தது.

அன்று பிற்பகலில் நியூ சாட்டலில் இருக்கும் வியாபாரிக்குப் பணம் கொடுப்பதற்காகப் போக வேண்டியதிருக்கிறது என்பதையும் எமிலிக்குக் கொஞ்சம் பஞ்சு வாங்கி வரவேண்டும் என்பதையும் நான் மறந்துவிட்டேன். ஆனால், அவளைவிட கவலை எனக்குத்தான் இருந்தது. அவள் சம்பந்தப்பட்ட விஷயமென்றால் நான் எப்போதும் மறக் மாட்டேன் என்கிற உறுதியான நம்பிக்கை இருந்த நிலையில், சொல்லப் போனால் மிகச்சிறிய விஷயத்தில்கூட சரியாக நடந்து கொள்ளும் ஒரு மனிதனால் மட்டுமே பெரிய காரியங்களிலும் உண்மையானவளாக நடந்து காட்ட முடியும் என்ற விஷயத்தையும் நான் நன்கு உணர்ந்திருந்தேன். என்னுடைய ஞாபக மறதியிலிருந்து அவள் எப்படிப்பட்ட புதிய விஷயங்களையெல்லாம் கற்பனை பண்ணிக் கூற போகிறாளோ ! அதைக் கூறி அவள் என்னைத் தண்டித்திருந்தால் நான் மகிழ்ச்சியடைந்திருப்பேன். நான் அதற்குத் தகுதியானவன்தானே ?

4

ரத்ருத்தின் மன ரீதியானதும், தார்மீக மானதுமான வளர்ச்சியைப் பற்றிக் குறிப்பிடுவதுதானே என்னுடைய நோக்கம்! நான் இப்போது அதை நோக்கிச் செல்கிறேன்.

அந்தக் கண்பார்வையற்ற சிறுமியின் முன்னேற்றத்தைப் பற்றிப் படிப்படியாக நினைத்துப் பார்க்கலாம் என்று எண்ணித்தான் நான் அவளுடைய கதையையே விளக்கமாகக் கூற ஆரம்பித்தேன். ஆனால், வளுடைய முன்னேற்றம் சம்பந்தப்பட்ட விஷயங்களை மிகவும் தெளிவவகக் கூறுவதற்கு நேரமில்லை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். நடந்த ஒவ்வொன்றையும் விட்டுவிடாமல் நினைத்துப் பார்ப்பது என்பதே சற்று கவலையை அளிக்கக் கூடிய ஒரு விஷயம்தான்.ன கதையைக் கூறிக் கூறி ஷரத்ருத் சொன்ன விஷயங்களைப் பற்றியும் அவளுடன் நான் நடத்திய உரையாடலைப் பற்றியும் விவாதம் ஆரம்பித்திருக்கிறது. இந்தச் சுருங்கிய கால அளவிற்குள் தன்னுடைய சிந்தனைகளைச் சரியாக இருக்கும் வண்ணம் வெளிப்படுத்தவும் முழுமையான திறமையுடன் விவாதம் செய்யவும் அவளுக்கு எப்படி முடிந்தது என்பதை இந்தக் ‘கதை’யை வாசிப்பவர்கள் யாராக இருந்தாலும் ஆச்சரியப்படுவார்கள் என்பது மட்டும் உண்மை.

உண்மையாகச் சொல்லப்போனால், ஷரத்ருத்தின் வளர்ச்சி ஆச்சரியப்படத்தக்க முன்னேற்றமாக இருந்தது. கிடைக்கக்கூடிய எந்த விஷயமும் இந்த அளவிற்கு எளிதில் மூளைக்குக் கடந்து செல்வதற்கு அவள் காட்டிய ஆர்வத்தைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டு விட்டேன். ஒவ்வொரு விஷயத்தையும் அவள் எவ்வளவு சீக்கிரத்தில் உணர்ந்து கொள்கிறாள்! ஒரு பாடத்திலிருந்து இன்னொரு பாடத்திற்குக் கடந்து செல்வதில் அவள் காட்டு சுறுசுறுப்பைப் பார்த்தபோது... மனம் திறந்து கூறுகிறேன். என்னுடைய அருமை சிஷ்யையை என்னாலேயே அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.

மாதங்கள் பல கடந்தன. ஷரத்ருத்தின் அளிவு நீண்ட காலம் உபயோகப்படுத்தப்படாமல் இருந்தது என்று சொன்னால் யாரும் அதை நம்ப மறுத்தார்கள். முன்னேற்றத்தின் அந்த ஆரம்ப நிலையில்கூட சராசரியாக இருக்கும் ஒரு சிறுமியுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அவள் அதிக புத்திசாலித்தனம் கொண்டவளாகவும் திறமைகள் படைத்தவளாகவும் இருந்தாள். முதலில் நாங்கள் நினைத்ததைவிட அவளுக்கு வயது அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். பார்வையற்ற தன்மை அவளுக்குப் பல வகைகளிலும் பயனுள்ள ஒன்றாகிவிட்டது.

பாட விஷயங்களில் ஷரத்ருத் அளவுக்கும் அதிகமாக ஆர்வம் காட்டுகிறாள் என்பதைக் கூற வேண்டிய தேவையே இல்லை. ஆனால், முடிந்தவரையில் அவளுடைய மூளையுடன் அவள் இணக்கமாக இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். அதனால் அவள் அதிகமாகப் படிப்பதை நான் தடுத்தேன். நான் இல்லாமலிருக்கும் நிமிடங்களில் அவள் அதிகமாகப் படிக்காமல் இருப்பதே நல்லது என்று நினைத்தேன். குறிப்பாக பைபிளை. ஏனென்றால் ஒரு ப்ராட்டஸ்டென்டைப் பொறுத்தவரையில் அப்படி நடப்பது வினோதமான ஒரு செயலாக இருந்தது. நான் இந்த விஷயத்தை இன்னும் தெளிவாக விளக்கிக் கூறுகிறேன். நியூ சாட்டலில் நடந்த சிஜீய ஒரு சம்பவத்தைப் பற்றிக் கூறுகிறேன்.


அப்போது நடைபெற்ற இசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து சில நிமிடங்களில் நடைபெற்ற ஒரு சம்பவம் அது.

கோடை விடுமுறைக்கு மூன்று வாரங்கள் இருக்கும்போது நடைபெற்ற சம்பவம் அது. ஜாக்ஸ் அப்போது வீட்டிற்கு வந்திருந்தான். சமீபகாலமாக நான் தேவாலயத்தில் ஆர்மோனியத்தை எடுத்து ஷரத்ருத்துடன் வாசிக்க உட்காருவதுண்டு. சாதாரண வேறொரு பெண்தான் அதைப் பொதுவாக வாசித்துக் கொண்டிருந்தாள். அவள் ஷரத்ருத்திற்கு இசை கற்றுக் கொடுக்க ஆரம்பித்திருக்கவில்லை.  இசை பிளீயமான விஷயமாக இருந்தாலும் எனக்கு அதைப்பற்றி அதிகம் தெரியாது. அதனால் ஆர்மோனியத்தை எடுத்து வைத்துக்கொண்டு ஷரத்ருத்துடன் உட்காரும்போது அவளுக்கு ஏதாவது கற்றுத்தர முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.

முதல் பாடத்திற்குப் பிறகு ஷரத்ருத் சொன்னாள் :

‘‘என்கிட்ட இருந்து நீங்க கொஞ்சம் விலகி இருக்குறது நல்லது. நானே இதை வாசிக்க முயற்சிக்கிறேன்.’’

உடனடியாக நான் மிகுந்த சந்தோஷத்துடன் அவளை விட்டு விலகி நின்றேன். (அங்கு நின்றிருப்பது அந்த அளவிற்குச் சரியானது என்று நான் நினைக்கவில்லை. அந்த இடத்தின் புனிதத்தன்மை பற்றிய நினைப்பும், அவளைப் பற்றி ஏதாவது கூறிவிடுவேனோ என்ற பயமும்தான் காரணம்).

ஆனால், பாதிரியார் என்ற முறையில் நான் எங்காவது சில வேளைகளில் போக வேண்டிய சூழ்நிலை உண்டாகும் அல்லவா ? அப்போது நான் ஷரத்ருத்தை தேவாலயத்திற்கு அழைத்துச் செல்வேன். பலமணி நேரங்கள் அவளை அங்கு நிறுத்திவிட்டு, வீட்டிற்குத் திரும்பி வரும்போது அவளையும் உடன் அழைத்துக் கொண்டு வருவேன்.

அந்த வகையில் சந்தோஷம் நிறைந்த அமைதியான மனநிலையுடன் த்வனிகளைப் பற்றிப் புரிந்துகொள்ள ஷரத்ருத் தன்னுடைய நேரத்தைச் செலவிட்டாள். மாலை நேரத்தில்கூட ஸ்வரங்களின் ஓசையைப்பற்றி நினைக்கும்போது, அவளுடைய மனமென்னும் மயில் நடனமாடுவதை நம்மால் உணர முடியும்.

இப்படியே ஆறு மாதங்கள் ஓடியிருக்கும். ஆகஸ்டு மாதத்தின் ஆரம்ப நாட்களில் ஒருநாள். நான் ஒரு ஏழை விதவையின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். ஆனால், நிறைய ஆறுதல் தேவைப்படும் நிலையில் இருந்த அந்தப் பெண்ணை அங்கு என்னால் பார்க்க முடியவில்லை. அதனால் நான் ஓரத்ருத்தை அழைத்துக்கொண்டு வருவதற்காக தேவாலயத்திற்குச் சென்றேன். ஜாக்ஸ் அவளுக்கு அருகில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தபோது எனக்கு மிகுந்த ஆச்சரியம் உண்டானது. என்னுடைய மெல்லிய காலடிச் சத்தம் இசைக் கருவியின் ஓசையில் காணாமற் போய்விட்டதால் நான் உள்ளே நுழைந்ததை அந்த இருவருமே கவனிக்கவில்லை. ஒரு பூனையைப் போல மறைந்தவாறு எந்தவொரு ஓசையையும் உண்டாக்காமல் நான் படிகளில் ஏறி அந்த இடத்திற்குச் சென்றேன். எல்லாவற்றையும் நன்கு பார்க்கக்கூடிய விதத்தில் அந்த இடம் அமைந்திருந்தது. எனக்கு முன்னால் கூறக்கூடாத ஒரு வார்த்தைகூட அவர்களுடைய உதடுகளிலிருந்து வெளியே வரவில்லை. ஆனால் ஒரு விஷயத்தை நான் கவனித்தேன். ஜாக்ஸ் அவளுடன் நெருக்கமாக உரசிக் கொண்டு உட்கார்ந்திருந்தான். ஷரத்ருத்தின் கையைப் பிடித்து ஆர்மோனியம் வாசிக்கும்போது விரல்களை எப்படி வைக்க வேண்டும் என்ற விஷயத்தை அவன் பல தடவைகள் கூறிக் கொண்டிருந்தான். ‘நானே இதை வாசிக்க முயற்சிக்கிறேன்’ என்று முன்பு தலையை இப்படியும் அப்படியுமாக ஆட்டியவாறு ஷரத்ருத் என்னிடம் சொன்ன விஷயம் அப்போது என் ஞாபகப் பெட்டகத்திற்குள்ளிருந்து தலையை நீட்டியது. அவள்தான் இப்போது ஜாக்ஸிடம் ‘இசையை’க் கற்றுக் கொண்டிருக்கிறாள் என்பதே ஆச்சரியமான ஒரு விஷயமாக இல்லையா ? எனக்குத் தாங்க முடியாத அளவிற்கு வெறுப்பும் வருத்தமும் உண்டாயின. அவர்களுக்கு இடையில் தடை உண்டாக்க முயற்சித்தபோது, ஜாக்ஸ் கைக்கடிகாரத்தை எடுப்பதை நான் பார்த்தேன்.

‘‘நான் இனிமேல் இங்கே இருக்க முடியாது’’ - அவன் சொன்னான் : ‘‘சில நிமிடங்களில் அப்பா இங்கே வருவார்.’’

அதைச் சொல்லிவிட்டு சிறிதும் தயங்காமல் ஜாக்ஸ் அவளுடைய கையைப் பிடித்து உயர்த்தி தன் உதடுகள் வரை கொண்டு போனான். தொடர்ந்து அவன் அவளிடம் விடைபெற்றான். சில நிவீடங்களுக்குப் பிறகு நான் மைதியாக படிகளில் இறங்கிக் கீழே வந்தேன்.

‘‘இப்போதுதான் வந்தேன்’’ என்று ஷரத்ருத்திடம் கூறிக்கொண்டே நான் தேவாலயத்தின் கதவைத் திறந்தேன்.

‘‘வீட்டிற்குப் போகலாமா ஷரத்ருத்? உன் கற்றல் எந்த அளவுல இருக்கு?’’- நான் கேட்டேன்.

‘‘நல்லா நடக்குது’’- மிகவும் இயல்பான குரலில் அவள் பதில் சொன்னாள்.

‘‘சொல்லப்போனால் நான் இன்னைக்குக் கொஞ்சம் முன்னேறியிருக்கிறேன்.’’

என் இதயம் கடுமையான கவலையால் நிறைந்தது. ஆனால், நாங்கள் யாரும், ‘அதைப்’பற்றி எதுவும் பேசவில்லை.

5

ஜாக்ஸுடன் பேசுவதற்கு என் மனம் விரும்பியது. இரவு உணவிற்குப் பிறகு, எமிலியும் பிள்ளைகளும் ஷரத்ருத்தும் சீக்கிரம் தூங்கப் போய்விடுவார்கள். அதற்குப் பிகு ஜாக்ஸும் நானும் சிறிது நேரம் உட்கார்ந்து எதையாவது படித்துக் கொண்டிருப்போம். அந்த நிமிடத்திற்காக நான் காத்திருந்தேன். ஆனால், அவனிடம் எதையாவது கூறுவதற்கு முன்பு என் மனதில் பெரிய உணர்ச்சி அலைகள் எழுந்து ஓசையெழுப்பிக் கொண்டிருக்கின்றன என்றும்; இதயம் பிளந்து கொண்டிருக்கிறது என்றும் நான் உணர்ந்தேன். என்னை வேதனைப்படுத்திக் கொண்டிருந்த விஷயத்தைப் பற்றி விவாதிக்க முடியாத ஒரு நிலையில் நான் இருந்தேன். அதற்கான தைரியம் என்னிடம் சிறிதும் இல்லாமல் இருந்தது. திடீரென்று அமைதியைக் கிழித்துக் கொண்டு ஜாக்ஸ் சொன்னான் :

‘‘மீதி விடுமுறைக் காலத்தை இங்கேயே கழிக்க நான் தீர்மானித்திருக்கிறேன்.’’

தான் ஆல்ப்ஸைச் சுற்றிப் பார்க்கப் போவதாக அவன் என்னிடம் கூறி அப்படியொன்றும் நாட்கள் அதிகம் ஆகிவிடவில்லை. அவனுடைய ‘பயண’ விஷயத்தை நானும் எமிலியும் எந்தவிதத் தடையும் சொல்லாமல் ஒப்புக் கொள்ளவும் செய்திருந்தோம். சிறிதும் எதிர்பாராத இந்த மாற்றம் ஏன் உண்டானது என்பதை யூகிக்க நான் கஷ்டப்பட வேண்டியதில்லை. மனதிற்குள் முழுமையான கோபம் உண்டானாலும், என்ன காரணத்தாலோ அதை வெளிப்படுத்த எனக்கு பயமாக இருந்தது. தன் தந்தை மீது ஜாக்ஸ் வைத்திருக்கும் நம்பிக்கைக்குக் கெடுதல் உண்டானாலோ, வேறு ஏதாவது நடக்கக் கூடாதது நடந்தாலோ...? எல்லாவற்றையும் ஒரு மூலையில் போட்டு அடக்கி வைக்க முயற்சித்துக் கொண்டு, முடிந்தவரை இயல்பாக ஆக்கிக் கொண்டு நான் சொன்னேன் :

‘‘ஆனால். உன் நண்பன்...?’’

‘‘ஓ... அதனால் பரவாயில்லை...’’ - அவன் சொன்னான் :

‘‘அதனால் எந்தப் பிரச்சினையும் இல்லை. இன்னொரு நண்பனைக் கண்டுபிடிப்பது அவனுக்கு சிரமமான காரியமா என்ன ? மலை உச்சிகளில் இருப்பதைப் போல, நான் இங்கேயும் ஓய்வு எடுக்க முடியும்.


உண்மையாகச் சொல்லப்போனால், என்னுடைய விடுமுறைக் காலத்தை இங்குதான் நல்ல முறையில் பயன்படுத்த முடியும்.’’

‘‘இங்கே வீட்டில் கட்டிப்போட்டு இருக்குற அளவுக்கு உனக்கு என்னவோ கிடைச்சிருக்குன்றதுதானே அதற்கு உண்மையான காரணம் ?’’ - உடனடியாக நான் கேட்டேன்.

என் ‘த்வனி’யைக் கேட்டு அவன் ஒரு மாதிரி ஆகிவிட்டான். அடுத்த நிமிடம் அவன் எனக்கு நேராகத் திரும்பினான். ஆனால், நான் சொன்னதற்குப் பின்னால் மறைந்திருந்த நோக்கம் என்ன என்பதை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. அதனால் உற்சாகமே இல்லாத குரலில் ஜாக்ஸ் சொன்னான் :

‘‘அப்பா, மலைத் தொடர்களைவிட எனக்கு விருப்பம் பாடங்கள்தான்னு உங்களுக்குத் தெரியுமே !’’

‘‘அதை நீ சொல்லணுமா ?’’ - நான் அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டு சொன்னேன் : ‘‘ஆனால்... ஜாக்ஸ், ஹார்மோனியம் படிப்பதில்தானே உனக்கு விருப்பம் அதிகம் ?’’

‘‘அப்பா இந்த மாதிரி என்னைப் பார்த்துக் குற்றம் சுமத்தாதீர்கள். நான் எந்த விஷயத்தையும் உங்களிடமிருந்து மறைத்து வைக்க விரும்பல. நான் கூற வேண்டிய விஷயத்தை நீங்கதான் முன்கூட்டியே தெரிந்து வைத்திருக்கிறீர்களே !’’ - ஏதோ ஒரு புத்தகத்தை வாசிக்கிற மாதிரி மிகவும் மெதுவான குரலில் அவன் சொன்னான்.

அவனுடைய இந்த அசாதாரணமான தைரியம் என் மனதில் இருந்த வெறுப்பை மேலும் அதிகமாக்கியது. நான் எங்கே தடுத்து விடப் போகிறேனோ என்று நினைத்து அவன் தன் கையை உயர்த்திக் கொண்டு சொன்னான் :

‘‘அப்பா, நீங்க பிறகு சொல்லுங்க. முதல்ல என்னைப் பேசவிடுங்க.’’

உடனடியாக நான் அவனுடை கையைப் பார்த்தேன்.

‘‘ஓ...’’ - நான் கவலையுடன் சொன்னேன் : ‘‘அவளுடைய ஆன்மாவின் புனிதத் தன்மை கெட்டுப் போவதைவிட உன் முகத்தை நான் இனியொருமுறை பார்க்காமல இருப்பதே மேல். நான் எதையும் கேட்க விரும்பல. அந்த அப்பிராணிச் சிறுமியின் கண்பார்வையற்ற தன்மையையும், கள்ளங்கபடமற்ற நிலையையும் இப்படியா ஏமாத்துறது - எந்த அளவிற்கு இரக்கமே இல்லாத கொடூரமான விஷயம் இது ! இப்படி நீ செய்வேன்னு நான் கொஞ்சம்கூட நினைச்சுப் பார்க்கல... இங்கே பார்... ஷரத்ருத் என் பாதுகாப்பில் இருக்கிறாள். அவளுடன் பேசுவதும், அவளைத் தொடுவதும் இனியொருமுறை நீ அவளைப் பார்ப்பதும்கூட... எனக்குப் பிடிக்காதவை.’’

‘‘ஆனால், அப்பா..’’ - அவன் அமைதியான குரலில் சொன்னான் :

‘‘அப்பா, நீங்க பிரியமா இருக்குறது மாதிரிதான் நானும் ஷரத்ருத் மீது பிரியம் வச்சிருக்கேன். என் முடிவிலும் உள்மனதிலும்... ம்... நடத்தையிலும் என்று நான் சொல்லல... ஏதாவது கெட்ட நோக்கம் இருக்கும் என்று நீங்க நினைச்சா... அப்பா, அது மிகப்பெரிய தவறு. நான் ஷரத்ருத்தைக் காதலிக்கிறேன். ஆமா... இன்னொரு விஷயத்தையும் சொல்றேன். அதே அளவிற்கு அவள்மீது பிரியம் வச்சிருக்கேன். அவளை ஆச்சரியப்பட வைக்கவோ, அந்தச் சிறு பெண்ணின் கள்ளங்கபடமில்லாத தன்மையை ஏமாற்றணும் என்ற எண்ணத்தையோ... அப்பா, உங்களைப் போலவே நானும் வெறுக்கிறேன்.’’

அதற்குப் பிறகு ஜாக்ஸ் என்னுடைய குற்றச்சாட்டை நிராகரித்து விட்டு சொன்னான் :

‘‘ஷரத்ருத்திற்கு உதவக்கூடியவனாகவும் நண்பனாகவும் கணவனாகவும் ஆகணும்னுதான் நான் ஆசைப்படுறேன். அவளை, நான் திருமணம் செய்வதைப்பற்றி உறுதியான ஒரு முடிவு எடுப்பதுவரை, உங்ககிட்ட நான் எதையும் வெளிப்டுத்தாமல் இருக்கணும்னு நினைச்சேன். பிறகு... அவளுக்கு என்னுடைய இந்த விருப்பங்கள் எதுவும் தெரியாது... அப்பா, உங்ககிட்ட நான் சொல்ல நினைச்சது இதுதான்...’’ - ஜாக்ஸ் தன்னுடைய வார்த்தைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு சொன்னான் :

‘‘நம்புங்க அப்பா... என் மனதில் வேறு எதுவும் இல்லை.’’

ஜாக்ஸின் வார்த்தைகள் என்னுடைய மனதை இறுகச் செய்து விட்டது. அவன் சொன்னதைக் கேட்டு என் தோள் துடிக்க ஆரம்பித்தது. அவனுக்கு அறிவுரை கூற வேண்டும் என்று நான் நினைத்தேன். ஆனால், கோபப்பட்டு ஏதாவது கூறும் அளவிற்கு மிகவும் குறைவான சூழ்நிலையையே அவன் உண்டாக்கிவிட்டிருந்தான். அவனுடைய வார்த்தைகளைக் கேட்டு முடித்தபோது, நான¢ அவனிடம் கூறுவதற்கு எதுவுமே இல்லை என்ற நிலையை நான் அடைந்திருந்தேன்.

‘‘சரி... இனி நீ போய்த் தூங்கு’’ - சிறிது நேர மவுனத்திற்குப் பிறகு நான் சொன்னேன் :

‘‘இதைப் பற்றிய என் கருத்தை நாளைக்கு நான் சொல்றேன்.’’

‘‘அப்பா, உங்களுக்கு என் மீது கோபம் இல்லைன்ற விஷயத்தையாவது சொன்னால், நல்லா இருக்கும்’’ - மிகவும் தாழ்ந்த குரலில் ஜாக்ஸ் சொன்னான்.

‘‘அதைப்பற்றி நான் யோசிச்சு சொல்றேன். எது இருந்தாலும் பொழுது விடியட்டும்’’ - உடனடியாக நான் சொன்னேன்.

ஜாக்ஸை மறுநாள் பார்த்தபோது, அன்றுதான் அவனை முதல் தடவையாகப் பார்க்கிறேனோ என்று எனக்குத் தோன்றியது. என் மகன் இப்போது சிறு பையன் இல்லை. மாறாக, ஒரு இளைஞனாக மாறிவிட்டிருந்தான். இதுவரையில் நான் அவனைச் சிறுவனாகவே மனதில் நினைத்துக் கொண்டிருந்தேன். அதனால் சிறிதும் எதிர்பாராமல் அவனுடைய ரகசியத்தை அறிய நேர்ந்தபோது எனக்குள் ஒருவித பயம் தோன்ற ஆரம்பித்துவிட்டது.

நடப்பவை அனைத்தும் மிகவும் இயல்பானவை என்றும், சாதாரணமானவை என்றும் என்னை நானே இரவு முழுவதும் தேற்றிக் கொண்டிருந்தேன். எனினும், என்ன காரணத்தாலோ எனக்குள் இருந்த குழப்பம் அதிகரித்துக் கொண்டேயிருந்தது. என் மகனுக்கு என்னுடைய முடிவை அறிவித்தே ஆகவேண்டும். உள்குரல் என்பது மாதிரி என்னுடைய மனம் கூறியது.

‘இந்தத் திருமணத்தைத் தடுத்தே ஆகவேண்டும்.’

நான் ஜாக்ஸை பூந்தோட்டத்தின் ஒரு மூலைக்கு அழைத்துக் கொண்டு சென்றேன்.

‘‘நீ ஷரத்ருத்திடம் ஏதாவது சொல்லியிருக்கியா ?’’ - நான் கேட்டேன்.

‘‘இல்லை...’’ - பதில் சொன்னான் :

‘‘நான் அவளைக் காதலிக்கிறேன்னு ஒருவேளை ஷரத்ருத் நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால், நான் இதுவரை அவளிடம் இதைப்பற்றி எதுவும் பேசல...’’

‘‘அப்படின்னா இனிமேல் அவளிடம் எதுவும் சொல்லமாட்டேன்னு எனக்கு சத்தியம் பண்ணித் தா...’’

‘‘அப்பா, நீங்க சொல்கிறபடி நான் நடக்குறேன்’’ - அவன் சொன்னான் : ‘‘நான் ஏன் அப்படி சத்தியம் பண்ணணும்னு எனக்குப் புரியலையே !’’

காரணத்தைக் கூறுவதற்கு எனக்குத் தயக்கமா இருந்தது. மனதிற்குள்ளிருந்து உயர்ந்த வாதம் சிறிதும் அறிவுப்பூர்வமாக இல்லாததைப் போல தோன்றியது. காரண காரியங்களைவிட என்னுடைய உள்மனதுதான் இப்போது சரியான வழிகாட்டியாக இருந்தது.

‘‘ஷரத்ருத் இப்போது வயதில் மிகவும் இளையவள்’’ - நான் சொன்னேன் :


‘‘அவளுடைய மனம் இப்போது அந்த அளவுக்கு பக்குவப்பட்ட நிலையில் இல்லைன்றதை நீ மறந்துடக்கூடாது ஜாக்ஸ். அதிர்ஷ்டம் இல்லாததால் அவள் மற்ற சிறுமிகளைப்போல இல்லை. அவளுடைய மன வளர்ச்சியை எடுத்துக்கொண்டால், மிகவும் தாமதமாகவே அது இருக்குது. காதல் என்பதைக் கேட்டவுடன் சீக்கிரமே பரவசம் அடையக் கூடியவள் ஷரத்ருத். அதனால் அப்படிப்பட்ட ஒரு வார்த்தையை அவளிடம் கூறவே கூடாது. உன் மனதிற்குள் எந்தவிதமான கெட்ட நோக்கமும் இல்லைன்னு நீ சொன்னேல்ல...! எது எப்படியிருந்தாலும் அவள் சிந்திக்கத் தெரிந்தவளா ஆகுற வரையில், நீ எல்லா விஷயங்களையும் யோசிச்சுத்தான் செயல்படணும். என் உள்மனதில் இருக்கும் விஷயங்கள் இவை !’’

ஜாக்ஸிடம் குறிப்பிட்டுக் கூறக்கூடிய ஒரு குணம் இருந்தது. அவன் சிறு வயதுப் பையனாக இருக்கும்போது, ‘என் உள் மனதின் குரல் இது’ என்ற வார்த்தைகள் என் உதடுகளிலிருந்து வெளியே வந்துவிட்டால் போதும். அவை அவனுடைய வாழ்க்கைப் பாதையில் முக்கிய இடத்தைப் பிடித்துவிடும். ஜாக்ஸை நோக்கப் பார்த்தபோது, நான் சிந்தித்தேன்.

ஷரத்ருத்திற்குப் பார்வை சக்தி கிடைத்திருந்தால்... பெரிய விழிகளையும் அகலமான நெற்றியையும் கொண்டிருக்கும், உயர்ந்து மெலிந்து காணப்படும் இந்த இளைஞனை அவள் பாராட்டாமல் இருக்க மாட்டாள். சலன புத்தியைக் கொண்டவன் என்றாலும், இவன் சரளமான குணத்தைக் கொண்டவன். முகம் சிறுவனுடையதைப்போல இருந்தாலும், அதில் ஒரு கம்பீரம் கலந்திருக்கத்தான் செய்கிறது. தோள்மீது சுருண்டு கிடக்கும் அழகான தலைமுடி ! கறுத்து சுருண்ட முடி காதுகளின் பாதியை மூடியிருக்கின்றன.

‘‘உன்னிடம் நான் இன்னொரு விஷயத்தைக் கேட்கணும்’’ - நான் பெஞ்சிலிருந்து எழுந்து கொண்டே சொன்னேன்.

‘‘நீ நாளை மறுநாள் போக வேண்டும் என்றுதானே முடிவு செய்திருந்தே ! எந்தவொரு காரணத்தைக் கொண்டும் நீ இந்தப் பயணத்தைத் தள்ளிப் போடக்கூடாதுன்னு நான் சொல்றேன். குறைந்தபட்சம் ஒரு மாத காலமாவது நீ வெளியே போய்த் தங்கவேண்டும் என்று நினைச்சிருந்தே... ஜாக்ஸ், அதே மாதிரிதான் நீ நடக்கணும். சரியா ?’’

‘‘சரி அப்பா... நான் அப்படியே செய்றேன்.’’

அப்போது அவனுடைய முகம் மிகவும் மஞ்சள் நிறத்தில் இருந்தது. அவனுடைய உதடுகள் கூட மிகவும் வெளிறிப்போய்க் காணப்பட்டன. இதைப்போன்ற தற்காலிகமாக அடங்கிப்போகும் செயலால் குறிப்பிட்டுக் கூறும்படி எந்தவொரு மகத்துவமும் இல்லை என்று எனக்குள் நானே கூறிக்கொண்டேன். என் மனம் மிகவும் உற்சாகமாக இருந்தது. சொன்னபடி கேட்கும் என் மகனின் குணம் எனக்கு முழுமையான மகிழ்ச்சியைத் தந்தது.

‘‘இதைப் போன்ற சொன்னபடி கேட்கும் பிள்ளைகளைத்தான் எனக்குப் பிடிக்கும்’’ - நான் மெதுவான குரலில் சொன்னேன். எனக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் வண்ணம் அவனைப் பிடித்து இழுத்து வைத்துக்கொண்ட நான், தொடர்ந்து அவனுடைய நெற்றியில் முத்தமிட்டேன். ஆனால், அவன் சிறிதும் மாறுபட்ட மனம் கொண்டவனாக இல்லை.

6

மார்ச், 10.

எங்களுடைய வீடு மிகவும் சிறியது. ஒருவரோடொருவர் சண்டைபோடுவது என்பது தினமும் அங்கு நடக்கக்கூடிய ஒரு சம்பவம் என்றுதான் சொல்ல வேண்டும். பலவிதப்பட்ட வசதிக் குறைவுகள்... என் வேலை சம்பந்தமாக, குறிப்பாக வீட்டில் யாருடனாவது தனிப்பட்ட முறையில் பேச நேரும்போது, இந்த வசதிக் குறைவு என்ற விஷயம் மனதை மேலும் கவலைப்படச் செய்யும். எனக்கென்று நான் ஒரு சிறிய அறையை ஒதுக்கி வைத்திருந்தேன். பிள்ளைகள் அந்த அறைக்குள் நுழைய அனுமதி இல்லையென்றாலும், ‘அப்பாவின் தவ இடம்’ என்று அவர்கள் குறிப்பிட்டுக் கூறும் அந்த அறையில் இருக்கும்போது எனக்கு அந்தக் கவலை இருக்கவே இருக்காது.

அன்று பொழுது விடியும் நேரத்தில் ஜாக்ஸ் ஷூக்கள் வாங்குவதற்காக நியூசாட்டலுக்குச் சென்றான். அழகான பருவ காலமாக இருந்ததால், பிள்ளைகள் உணவு சாப்பிட்டு முடித்து ஷரத்ருத்துடன் வெளியே கிளம்பினார்கள். அவர்கள் அவளைத் தங்களுடைய மேற்பார்வையில் கொண்டு போவார்கள். அதே நேரத்தில் ஷரத்ருத் அவர்களைப் பார்த்துக் கொள்பவர்களாகவும் இருப்பாள். ஷார்லட், ஷரத்ருத்தைத் தனிப்பட்ட முறையில் கவனமாகப் பார்த்துக் கொள்வாள் என்ற விஷயத்தில் எனக்கு அளவற்ற மகிழ்ச்சி இருந்தது.

தேநீர் அருந்தும் நேரத்தில் நான் எமிலியுடன் இருந்தேன். அறையில் நாங்கள் இருவர் மட்டுமே இருந்தோம். பல நாட்களாக இப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்திற்காகத்தான் நான் காத்திருந்தேன். ஏனென்றால் நான் அவளுடன் பேசுவதற்கு விஷயங்கள் இருந்தன. என் மனைவியுடன் பேசுவதற்கான இந்த மாதிரியான சந்தர்ப்பம் மிகவும் அரிதாகவே எனக்குக் கிடைக்கும். அதனால் நான் சற்று தயங்கினேன். கூறப்போகிற விஷயத்தின் முக்கியத்துவம் எனக்குச் சற்று தைரியத்தைத் தந்தது. அந்தக் கேள்வி என் மகனுடன் அல்ல, மாறாக - என்னுடன் தொடர்பு கொண்டது என்று நான் நினைத்தேன்.

நான் இப்படிக் கூற ஆரம்பித்தேன் : ‘‘ஒருவரையொருவர் காதலித்துக் கொண்டு ஒரே அலைவரிசையில் வாழ்ந்து கொண்டிருக்கும் இரண்டு பேர் விஷயத்தில் பெரும்பாலும் ஒரு ஆள் இன்னொரு ஆளுக்கு ஒரு புதிராக இருப்பதுதான் உண்மை. அவர்களுக்கிடையில் ஒரு கற்சுவரைப்போல இருக்கும் மிகவும் வினோதமான புதிர் ! உண்மை நிலைமை அப்படி இருக்கும்போது, அவர்கள் ஏதாவது கேட்கவோ கூறவோ பயன்படுத்தும் வார்த்தைகள் அவர்களுக்கு நடுவில் இருக்கும் சுவர்மீது மோதி இறுதியில் கர்ண கொடூரமான ஓசையாகக் கேட்கும். கவனமாக இருக்கவில்லையென்றால், அந்தச் சுவர் இன்னொரு தொல்லையாக ஆகிவிடும் என்பதுதான் உண்மை. நேற்று இரவிலும் இன்று காலையிலும் ஜாக்ஸ் என்னிடம் சொன்னான் : ‘‘எமிலி தேநீர் தயாரித்துக் கொண்டிருக்கும்போது, நான் கூற வேண்டியதைக் கூற முயற்சித்தேன்......

‘‘ஆமா... தான் ஷரத்ருத் மீது பிரியம் வச்சிருக்குறதா ஜாக்ஸ் சொன்னான்.’’ மொத்தத்தில் என் வார்த்தைகள் நடுங்கியபடியே இருந்தன.

மிகவும் இயல்பான இந்த விஷயம் தனக்குத் தெரியாததொன்றும் இல்லையே என்பது மாதிரி தேநீர் தயாரிப்பதிலேயே முழு கவனத்தையும் செலுத்தியவாறு என் பக்கம் சிறிதுகூட பார்க்காமல் எமிலி சொன்னாள் :

‘‘ஜாக்ஸ் சொன்னது உண்மைதான்.’’

அப்போது நான் சொன்னேன் :

‘‘தான் அவளைத் திருமணம் செய்ய விரும்புறதா அவன் என்னிடம் சொன்னான். அவன் தன் முடிவுல உறுதியா இருக்கான்.’’

‘‘பிறகு அது அப்படி ஆகாம இருக்குமா ? தோளைச் சற்று குலுக்கியவாறு எமிலி மெதுவான குரலில் சொன்னாள் :

‘‘அப்படின்னா இந்த விஷயத்தைப் பற்றி ஏற்கெனவே நீ நினைச்சிருந்தியா ?’’ - நான் சற்று வெறுப்புடன் கேட்டேன்.


‘‘இறுதியில் எப்படி அது போய் முடியும் என்று கடந்த பல நாட்களாகவே நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், இப்படிப்பட்ட விஷயங்கள் எந்தச் சமயத்திலும் ஆணின் பார்வையில் படவே படாது.’’

எமிலியை வெறுப்பது என்பது அர்த்தமற்றது என்பதால் நான் சொன்னேன் :

‘‘எமிலி, அப்படின்னா நீ ஏன் அதை என்னிடம் சொல்லாம இருந்தே ?’’

மவுனத்தை மறைத்து வைப்பதற்காக சில நேரங்களில் செய்வது மாதிரி ஒருவகை ஈர்ப்புடன் அவள் புன்னகைத்தாள். தொடர்ந்து தலையை நன்றாக ஆட்டியவாறு அவள் சொன்னாள் :

‘‘உங்களால் பார்க்க முடியாத விஷயங்களையெல்லாம் நான் தெரிந்துகொள்ள ஆரம்பித்தால், என்னுடைய வாழ்க்கையே துன்பமயமா ஆகிவிடும்.’’

எமிலி எதிர்ப்பு காட்டியதற்கான அர்த்தம் என்ன என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. புரிந்து கொள்ள நான் சிறிதுகூட முயற்சிக்கவும் இல்லை.

‘‘எது எப்படி இருந்தாலும்... எமிலி, உன் கருத்து என்னன்னு தெரிந்து கொண்டால் நல்லதுன்னு நினைக்கிறேன்.’’

என் வார்த்தைகளைக் கேட்டவுடன், ஒரு நீண்ட பெருமூச்சை விட்டவாறு அவள் சொன்னாள்.

‘‘ஷரத்ருத் இங்கே இருக்குறது எனக்கு எந்தச் சமயத்திலும் பிடிக்காத ஒரு விஷயம். உங்களுக்கு இது தெரியாத விஷயம் ஒண்ணுமில்லையே !’’

அடக்கவோ ஒதுக்கவோ முடியாத கோபத்துடன் நான் சொன்னேன் :

‘‘அவள் இங்கே தங்குறதைப் பற்றி விவாதம் செய்றதுக்கா நாம இருக்கோம் ?’’

‘‘ஆனால்...’’ எமிலி சொன்னாள்.

‘‘இது அந்த அளவுக்கு நல்லதற்கான அறிகுறி இல்லைன்னு எனக்கு எப்பவும் தோணியிருக்கு.’’

எமிலியுடன் சேர்ந்து சரியான முறையில் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்ற தீவிரமான எண்ணத்தின் காரணமாக அவள் கூறிய விஷயத்தைக் காதில் வாங்கிக் கொண்டு நான் கேட்டேன் :

‘‘அப்படின்னா ஷரத்ருத்தை ஜாக்ஸ் திருமணம் செய்றது நல்லது இல்லைன்னா நீ சொல்றே ? அதைத்தான் நான் உன்னிடமிருந்து கேட்க ஆசைப்பட்டேன். நாம இரண்டு பேரும் ஒரே கருத்துடையவர்களாக இருக்கிறோம் என்பது குறித்து எனக்கு சந்தோஷமே.’’

ஜாக்ஸ் என்னுடைய ‘வார்த்தை’களுககு முன்னால் தலையைக் குனிந்து கொண்டிருந்தான் என்றும்; மனக் குழப்பமடைய வேண்டிய தேவையே இல்லை என்றும் தொடர்ந்து நான் அவளிடம் சொன்னேன். மறுநாள் அவன் பயணத்தை ஆரம்பிக்கிறான் என்றும்; அது ஒருமாத காலம் இருக்கும் என்றும் சொன்னேன்.

‘‘திரும்பி வர்றப்போ ஜாக்ஸ் ஷரத்ருத்தைப் பார்க்கக்கூடாது என்று நீ நினைக்கிறியா ?’’ - நான் என்னுடைய வார்த்தைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அவளைப் பார்த்துக் கேட்டேன். தொடர்ந்து நான் சொன்னேன் :

‘‘மேடத்தின் மேற்பார்வையில் ஷரத்ருத்தை வைத்திருப்பதும் தினமும் நான் அங்கே போய் அவளைப் பார்ப்பதும்தான் சரியாக இருக்கும். எந்த அளவிற்குக் கனமான பொறுப்புகள் எனக்கு அவள் மீது இருக்குன்னு உனக்குத்தான் தெரியுமே ! நான் மேடத்திடம் எல்லா விஷயங்களையும் விளக்கிச் சொல்லிட்டேன். அவங்க நமக்கு உதவி செய்யத் தயாரா இருக்காங்க. அவங்க இப்போ எந்த அளவிற்குச் சந்தோஷமா இருக்காங்க தெரியுமா ? ஷரத்திற்குக் கற்றுத்தர ஆரம்பித்ததிலிருந்தே அவங்க மிகவும் ஆர்வமா இருந்தாங்க.’’

ஆனால், மவுனத்தைக் கலைக்காமல் இருப்பதில் எமிலி மிகவும் பிடிவாதமாக இருப்பதைப்போல் தோன்றியது. அதனால் நான் சொன்னேன்:

‘‘ஜாக்ஸ் அங்கே போய் ஷரத்ருத்தைப் பார்ப்பது நமக்கு விருப்பமில்லாத ஒரு செயலாக இருப்பதால், மேடத்திடம் எல்லா விஷயங்களையும் கூறிவிடுவதுதான் சரியானது. அதைப்பற்றி உன் கருத்தென்ன ?’’

இந்த முறை நான் அவளிடமிருந்து பதிலைக் கட்டாயம் எதிர்பார்த்தேன். ஆனால், ஒரு வார்த்தையைக்கூட உதிர்ப்பதில்லை என்று மனதிற்குள் சபதம் எடுத்திருப்பதைப்போல் அவள் உதடுகளை இறுக்கமாக வைத்துக் கொண்டு நின்றிருந்தாள்.

என் மனைவியின் மவுனம் பொறுமையைத் தாண்டி இருந்ததால், அதற்குப் பிறகும் நானே பேசினேன்.

‘‘ஜாக்ஸ் திரும்பி வந்தவுடன் காதல் என்ற உணர்வின் உள்துடிப்புகள் மீது அமர்ந்து வெற்றி பெற்றாக வேண்டும் என்று அவன் முயற்சி செய்தால்...? அவனுடைய வயதில் அவனுக்கு என்ன தேவை என்பதை அவ்வளவு எளிதில் யாராலும் புரிந்து கொள்ள முடியாது.’’

‘‘பல நேரங்களில் அதற்குப் பிறகும் மனிதர்களுக்கு அவ்வளவு எளிதில் விஷயங்களைப் புரிந்து கொள்ள முடியாது’’ - சரமணிகள் தெறிப்பதைப்போல் இருந்தது அவளுடைய பதில்.

எமிலியின் ‘நெருப்பைப் போன்ற’ அந்த வார்த்தைகள் எப்போதும் இல்லாத அளவிற்குக் கோபம் கொள்ளச் செய்தன. (இயல்பாகவே நான் எதிலும் தெளிவாக இருப்பவன். ஆனால், இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டு இருக்கிறதே, அதில் எனக்குக் கொஞ்சம்கூட விருப்பமில்லை). உடனடியாக அவளை நோக்கித் திரும்பி நான் கேட்டேன்.

‘‘நீ என்ன சொல்லணும்னு நினைக்கிறியோ, அதைத் தெளிவாகச் சொன்னால் உதவியாக இருக்கும்.’’

‘‘இல்லை... குறிப்பாக சொல்றதுக்கு என்கிட்ட எதுவும் இல்ல...’’

முழுமையான கவலை கலந்திருந்த பதிலாக அது இருந்தது. அவள் சொன்னாள் : ‘‘ ஒரு நிமிடத்திற்கு முன்னாடிதானே நீங்க என்னிடம் சொன்னீங்க, என்னால் பார்க்க முடியாத விஷயங்களைப்பற்றி நான் தெரிஞ்சிருக்கணும்னு...’’

‘‘அப்படின்னா...’’

‘‘பல நேரங்களில் மனிதர்களை விஷயங்களைத் தெரிஞ்சிக்க வைக்கிறது அந்த அளவுக்கு எளிதான காரியம் இல்லைன்னு நான் நினைச்சுப் பார்த்தேன்.’’

‘‘ரகசியமான காரியங்கள் மீது எனக்கு வெறுப்பு இருக்கிறது என்பதையும் சைகைகள்மூலம் விளக்குறதையும் இரட்டை அர்த்தங்களில் பேசுவதையும் கொஞ்சம்கூட விரும்பமாட்டேன் என்பதையும் ஏற்கெனவே நான் சொல்லியாச்சு. எமிலி, நீ சொல்றதை நான் புரிஞ்சிருக்கணும்னு உனக்கு விருப்பமிருக்கா ? அப்படின்னா எல்லாவற்றையும் விளக்கமா சொன்னாத்தான் சரியாக இருக்கும்...’’

என்னுடைய பதில் சற்று கடுமையாக இருந்திருக்கலாம். அதற்காக நான் வருத்தப்படவும் செய்தேன். சில நிமிடங்களுக்கு எமிலியின் உதடுகள் துடிப்பதை நான் பார்த்தேன். அவள் தன் தலையை ஒரு பக்கமாக சாய்த்து வைத்துக்கொண்டாள். பிறகு எழுந்து மேல் மூச்சு கீழ்மூச்சு விட்டவாறு அறைக்குள் இங்குமங்குமாக நடக்க ஆரம்பித்தாள்.

‘‘ஆனால்... எமிலி, எல்லாம் ஒழுங்காகப் போய்க் கொண்டிருக்கிற நிலையில் நீ கவலைப்படுறது ஏன் என்றுதான் என்னால புரிஞ்சிக்க முடியல.’’

என் கண்கள் அவளை ஆச்சரியப்படச் செய்வதாக நான் உணர்ந்தேன். அதனால் முழங்கைகளை மேஜைமீது ஊன்றிய நான், கைகளில் தலையை வைத்துக்கொண்டு சொன்னேன் :

‘‘நான் உன்னிடம் கடுமையான குரலில் பல விஷயங்களைக் கூறியிருக்கலாம். என்னை மன்னிச்சிடு எமிலி.’’

அடுத்த நிமிடம் அவள் எனக்குப் பின்னால் வந்து தன் விரல்களை மிகவும் மெதுவாக என் தலையில் வைத்துக் கொண்டு, மெல்லியதும் நடுங்கியதுமான குரலில் கண்கள் நீர் அரும்ப சொன்னாள் :


‘‘அன்புள்ள...’’

அடுத்த நிமிடம் அவள் அறையை விட்டு வெளியேறினாள். முழு ரகசியத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நான் நினைத்த எமிலியின் வார்த்தைகளுக்கான அர்த்தம் என்னவென்று தெளிவாக எனக்குத் தெரிந்துவிட்டது. இனிமேல் ஷரத்ருத்தை இங்கு இருக்க வைப்பது சரியான விஷயமாக இருக்காது என்பதை நான் அன்று தெரிந்து கொண்டேன்.

7

மிலியின் உரையாடல் நடந்தது மூன்றாவது நாள். சற்று ஓய்வு நேரம் கிடைத்தபோது மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்த ஒரு காட்டுப்பகுதியின் வழியாக ஷரத்ருத்தை நான் ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றேன். மிகவும் சுகமான காலநிலை நிலவிக் கொண்டிருந்தது. அங்கிருந்து மரக்கிளைகள் வழியாகப் பார்த்தால், கீழே பரந்து விரிந்து கிடக்கும் மைதானம் தெரியும். அதற்கப்பால் காற்று வீசும்போது பறந்து உயரும் தூசிப் படலத்திற்கு மத்தியில் பனி மூடியிருக்கும் ஆல்ப்ஸ் மலை தன்னுடய முகத்தைக் காட்டும். இடது பக்கம் சூரியன் மறையப் போகிறது. மிகவும் அருகில் அடர்த்தியாக வளர்ந்திருந்த புற்கள் வெட்டப்பட்ட மேய்ச்சல் இடம். சற்று தூரத்தில் பசுக்கள் மேய்ந்து கொண்டிருக்கின்றன. மலைச் சரிவில் நின்றிருக்கும் ஒவ்வொரு பசுவின் கழுத்திலும் ஒரு மணி கட்டப்பட்டிருப்பது தெரிந்தது.

‘‘இங்கே இருக்கும் காட்சிகள் எப்படி ?’’ - மணிச்சத்தத்தைக் கேட்ட ஷரத்ருத் கேட்டாள்.

நாங்கள் சுற்றிப் பார்த்தவாறு போய்க் கொண்டிருக்கும்போதே, எங்காவது சற்று நேரம் நின்றால் ஷரத்ருத் கேட்பாள் :

‘‘இந்த இடம் எப்படியிருக்கு ?’’

எப்போதும்போல இந்த முறையும் கேட்டபோது நான் சொன்னேன் : ‘‘இந்த இடம் ஏற்கெனவே உனக்குத் தெரிந்ததுதான். காட்டின் இன்னொரு பக்கத்தில் நாம நின்று கொண்டிருக்கிறோம். இங்கேயிருந்து ஆல்ப்ஸ் மலையை நல்லா பார்க்கலாம்.’’

‘‘இன்னைக்கும் நல்லா பார்க்க முடியுமா ?’’

‘‘ஏன் முடியாது ?’’

‘‘இந்த மலைத்தொடர்களின் அழகு ஒவ்வொரு நாளும் வேறு வேறு மாதிரி இருக்கும் என்று நீங்கள் ஒருமுறை சொன்னீங்களே !’’

‘‘அது உண்மைதான்.

‘‘சரி... அது இருக்கட்டும். முன்னால் இருக்கு இந்தப் பெரிய புல்வெளியில் லில்லி மலர்கள் இருக்கின்றனவா ?’’

‘‘இல்ல ஷரத்ருத். இவ்வளவு உயரத்தில் லில்லி மலர்கள் இருக்காது. அப்படியே இருந்தாலும், விசேஷ வகையைச் சேர்ந்த ஒன்றோ இரண்டோ மட்டுமே இருக்கும்.’’

‘‘வயலில் லில்லி மலர்கள் இருக்குமா ?’’

‘‘வயலில் லில்லி மலர்கள் இருக்காது.’’

‘‘நியூ சாட்டலுக்குப் பக்கத்திலுள்ள வயல்களிலும் இருக்காதா ?’’

‘‘இருக்காது. லில்லி மலர்கள் வயல்களில் இருக்கவே இருக்காது.’’

‘‘அப்படின்னா, வயலில் இருக்கும் அந்த லில்லி மலர்களைப் பார் என்று கடவுள் சொல்லியிருக்கிறாரே !’’

‘‘அப்படிச் சொல்றதுக்கு ஏற்றபடி கடவுளின் யுகத்தில் மலர்கள் இருந்திருக்கலாம். ஆனால், மனிதர்களும் கலப்பைகளும் வருவதற்கு முன்னால் அவை இல்லாமற் போய்விட்டன.’’

‘‘இந்த உலகத்தில் மிகவும் அதிகமாக தேவைப்படுவது தன்னம்பிக்கையும், அன்பும்தான் என்று பல நேரங்களில் நீங்கள் சொல்லியிருக்கிறீங்க. நான் அதை நினைச்சுப் பார்க்கிறேன். மனிதன் தனக்குள் இன்னும் கொஞ்சம் தன்னம்பிக்கையை உண்டாக்கிக் கொள்வதாக இருந்தால்,  அவன் மீண்டும் ஒருமுறை லில்லி மலர்களைப் பார்க்க முடியாதா ? உங்கள் கருத்து என்ன ? கடவுளின் வார்த்தைகளைக் கேக்குறப்போ லில்லி மலர்கள் கண்களுக்கு முன்னால் இருப்பது மாதிரி எனக்குத் தோணுது. அதேபோல என்னால் அந்த மலர்களை வர்ணிக்க முடியும். நெருப்பு ஜுவாலை நிற மலர்கள் அவை ! நீல நிறத்திலுள்ள பெரிய மலர்கள் ! காதலின் நறுமணம் கொண்ட அழகான மலர்கள்! மாலை நேரத்தில் காற்று வீசும்போது, அவை இப்படியும் அப்படியுமாக ஆடும். அவை நமக்கு முன்னால் இல்லை என்று எப்படிச் சொல்றீங்க ? நான் அவை இருப்பதை உணர்கிறேன். உண்மையாகச் சொல்லப்போனால், புல்வெளி லில்லி மலர்களால் நிறைந்திருக்கிறது.’’

‘‘நீ பார்ப்பதைவிட அழகு அந்த மலர்களுக்கு இல்லை ஷரத்ருத்.’’

‘‘மனக்கண்ணால் பார்ப்பதைவிட அவற்றுக்குக் குறைந்த அழகுதான் என்று சொல்றீங்களா ?’’

‘‘ஷரத்ருத், நீ பார்க்கு அழகுதான் அவற்றிற்கு இருக்கு.’’

‘‘சாலமன் கூட தன்னுடைய மிகவும் புகழ்நிறைந்த காலத்தில் இந்தப் பெரிய லில்லி மலர்களைப்போல அலங்கரிக்கப்பட்டதில்லை’’ - ஏசுவின் இந்த வார்த்தைகள் ஷரத்ருத்தின் உதடுகளிலிருந்து உதிர்ந்தபோது அவற்றை இப்போதுதான் முதல்தடவையாக கேட்கிறோமோ என்று நான் நினைத்தேன்.

‘தன்னுடைய மிகவும் புகழ் நிறைந்த காலத்தில்’ - இந்த வார்த்தைகளை கம்பீரமாக ஷரத்ருத் திரும்பத் திரும்ப சொன்னாள். தொடர்ந்து சிறிது நேரம் அவள் எதுவும்பேசாமல் மவுனமாக இருந்தாள். நான் தொடர்ந்து சொன்னேன் :

‘‘கண்கள் இருப்பவர்களால் பார்க்க முடிவதில்லை என்று நான் உன்னிடம் சொன்னேன்’’ - அப்போது என் உள்மனதில் பிரார்த்தனையை வெளிப்படுத்தும் இந்த வார்த்தைகள் எழுந்தன.

‘‘சொர்க்கத்தின், பூமியின் நாயகனான பிதாவே, நான் உனக்கு நன்றி கூறுகிறேன். நீ இந்த விஷயங்களை ஞானிகளிடமிருந்தும் அறிவாளிகளிடமிருந்தும் மறைத்து வைத்துக் குழந்தைகளிடம் காட்டினீர் அல்லவா ? ஆமாம்... பிதாவே, உன் திருவுள்ளம் அந்த மாதிரி இருந்தது.’’

‘‘உங்களுக்குத் தெரிந்திருந்தால்...!’’ சந்தோஷத்துடன் அவள் சொன்னாள்.

‘‘எந்த அளவுக்கு சிரமமே இல்லாமல் நான் இந்த விஷயங்களை கற்பனை பண்ணுகிறேன் ! என் மனக்கண்களில் தெரிவதை நான் கூறட்டுமா ?’’ - தொடர்ந்து அவள் சொன்னாள் :

‘‘நமக்குப் பின்னாலும் மேலேயும் சுற்றிலும் மிகவும் உயரமான தேவதாரு மரங்கள் ! பொன் நிறத்தில் இருக்கு அந்த மரங்களில் தடிகளில் இருந்து அரக்கின் நறுமணம் வெளிப்படுகிறது. அவற்றுக்கு கருப்பு நிறத்தில் பல கிளைகள் இருக்கின்றன. காற்று வீசுறப்போ, அவை முனகுகின்றன. நாம நிற்கும் இடத்துக்குப் பக்கத்தில் இருக்கும் டெஸ்க்கின்மீது திறந்துவைக்கப்பட்டிருக்கும் புத்தகத்தைப் போல - அழகான புல்வெளி ! நிழல் இருக்கும்போது அதன் நிறம் நீலம் என்றால், வெயிலில் அது பொன் நிறத்தில் மாறிவிடும். பலவகைப்பட்ட மலர்கள் என்ற சொற்களால் அது உரையாடல் நடத்துகிறது. பசுக்கள் மெதுவாக நடந்து வர, அவற்றின்மீது ‘மந்திரவித்தை’யை அது பயன்படுத்துகிறது. ‘மனிதக் கண்கள் மூடியிருக்கும்’ என்று நீங்கள் கூறுவீர்கள் அல்லவா ? அதனால் தேவர்கள் வந்து அவற்றைப் படிக்கிறார்கள். புத்தகத்திற்குக் கீழே புகையாலும் தூசிப் படலத்தாலும் போர்த்தப்பட்ட ஒரு குருதி ஆற்றைப் பார்க்கலாம். மிகவும் பெரிய ஒரு நதி... ரகசியத்தின் குவியல்கள் மறைந்து கிடக்கும் அதன் ஒரேயொரு கரை தூரத்தில்...


 மிகவும் தூரத்தில் தெரியும் அழகான, கண்களைக் கூசச் செய்யும் ஆல்ப்ஸ். அங்குதான் ஜாக்ஸ் போகிறான். ஒரு விஷயத்தை எனக்குச் சொல்லுங்க. உண்மையிலேயே நாளைக்கா அவன் புறப்படுகிறான் ?’’

‘‘ஆமாம்... நாளைக்கு ஜாக்ஸ் அங்கே போறான். பயணத்தைப் பற்றி அவன் உன்னிடம் ஏதாவது சொன்னானா ?’’

‘‘இல்ல. ஜாக்ஸ் என்னிடம் எதுவும் சொல்லல. ஆனால், நான் நினைத்தேன். நீண்ட நாட்களுக்குப் பிறகுதான் அவன் திரும்பி வருவானா ?’’

‘‘ஆமாம்... ஒரு மாதத்திற்குப் பிறகு... ஷரத்ருத், நான் உன்னிடம் சில விஷயங்களைக் கேட்கணும். நீங்க ரெண்டு பேரும் தேவாலயத்தில் சந்தித்த சம்பவத்தைப்பற்றி நீ ஏன் என்னிடம் சொல்லவில்லை ?’’

‘‘அவன் இரண்டு முறைகள் வந்திருந்தான். நான் அதை மறைத்து வைக்கணும்னு நினைக்கல. ஆனால், எங்கே உங்களுக்கு அந்த விஷயம் தெரிஞ்சா, நீங்க வருத்தப்படுவீங்களோன்ற பயம் எனக்கு இருந்தது.’’

‘‘ஷரத்ருத், நீ எதையும் சொல்லாமல் இருந்தால்தானே எனக்கு வருத்தம் உண்டாகும்.’’

அப்போது தன் கையை நீட்டிய அவள் என் கைகளைப் பிடித்தாள் தொடர்ந்து அவள் கேட்டாள் :

‘‘போறப்போ ஜாக்ஸ் சாதாரணமாக இருந்தானா ?’’

‘‘சொல்லு ஷரத்ருத்...’’ - நான் உடனடியா அவளைப் பார்த்து கேட்டேன் : ‘‘அவன் உன்னைக் காதலிக்கிறதா சொன்னானா ? எனக்குத் தெரியவேண்டியது அதுதான்.’’

‘‘இல்ல... ஜாக்ஸ் அப்படியெதுவும் சொல்லல. ஆனால், அப்படிச் சொல்லாமலே என்னால் அதை உணர முடியும். ஆனால், நீங்கள் என்மீது வைத்திருக்கிற காதல் அளவுக்கு அவனுக்கு என்மீது இருக்கிறதா தெரியல...’’

‘‘சரி... அது இருக்கட்டும். ஷரத்ருத், ஜாக்ஸ் போறான்றதை நினைச்சு நீ கவலைப்படுறியா ?’’

‘‘அவன் போறதுதான் நல்லதுன்னு நினைக்கிறேன். அவன் எதிர்பார்த்த மாதிரி நடக்க என்னால முடியாதே !’’

‘‘ஜாக்ஸ் போவதால் உனக்குக் கவலை இருக்கான்னு சொல்லு.’’

‘‘நான் காதலிக்கிறது உங்களைத்தான் அது உங்களுக்குத் தெரியாத விஷயம் இல்லையே ! ஓ... நீங்க ஏன் திடீரென்று கையை எடுத்தீங்க ? நீங்க திருமணமாகாத ஆளாக இருந்திருந்தால், நான் இதைச் சொல்லியிருக்கவே மாட்டேன். கண்பார்வை இல்லாத ஒரு சிறு பெண்ணை யார் திருமணம் செய்துகொள்வார்கள் ? அப்படி இருக்கும்போது, நாம ரெண்டு பேரும் ஒருவரையொருவர் ஏன் காதலிக்கக்கூடாது ? என்ன... அதுல ஏதாவது தப்பு இருக்கா ?’’

‘‘காதலிப்பதில் எந்தச் சமயத்திலும் எந்தவொறு தவறும் இல்லை.’’

‘‘நல்லதைத் தவிர என் மனதில் வேறு எதுவும் இல்லை என்பதை என்னால புரிஞ்சிக்க முடியாது. நான் ஜாக்ஸைக் கவலைக்கு உள்ளாக்க விரும்பல. நான் யாரையும் வேதனைப்படுத்த விரும்பல. மகிழ்ச்சியைத் தரவேண்டும் என்பது மட்டும்தான்...’’

‘‘தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி உன்னைக் கேட்க ஜாக்ஸ் நினைச்சிருக்கான்.’’

‘‘ஜாக்ஸ் ஆல்ப்ஸுக்குப் போறதுக்கு முன்னாடி நான் அவனிடம் பேசினால் நல்லா இருக்கும் என்று நினைக்கிறேன். நீங்க அதற்கு என்னை அனுமதிப்பீர்களா ? தயவுசெய்து இந்தக் காதலை விட்டெறி என்று நான் அவனிடம் சொல்லி, அவனுக்குப் புரிய வைக்கிறேன். என்னால் யாரையும் திருமணம் செய்ய முடியாதுன்னு உங்களுக்குத் தெரியுமா தெரியாதா ? எது எப்படியோ... ஜாக்ஸிடம் பேச நீங்க என்னை அனுமதிப்பீங்கள்ல ?’’

‘‘இன்னைக்கு சாயங்காலம்...’’

‘‘இல்ல... நாளைக்கு அவன் போறதுக்கு முன்னாடி...’’

சூரியன் மறைந்து கொண்டிருந்தது. நல்ல வெளிச்சம்... வெப்பம் உடலைச் சுட்டது. நாங்கள் எழுந்து பேசிக்கொண்டே ஆள் அரவமற்ற பாதை வழியாக வீட்டை நோக்கி நடந்தோம்.

8

சிறிது நேரத்திற்கு நான் இந்தப் புதினத்¬ எழுதுவதை நிறுத்தி வைத்திருந்தேன். இறுதியில் பனி உருகி, பாதைகள் நடக்கக் கூடியதாக ஆயின. வெளி உலகத்துடன் தொடர்பு இல்லாமல் போனதால் தடைபட்டுப் போயிருந்த பல வேலைகளும் முன்னால் தெரிந்தன.

எழுதியது வரையில் நான் நேற்று வாசித்துப் பார்த்தேன். என் இதயத்திற்குள் இதுவரை ஒளிந்து கொண்டும் மறைந்துகொண்டும் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்த உண்மை என்னவென்பதை நான் இப்போது சரியாகப் புரிந்துகொண்டு விட்டேன். இதுவரை உண்மையிலேயே நான் தவறான சுழலில் சிக்கிக் கொண்டிருந்திருக்கிறேன் என்பது ஆச்சரியமான ஒரு விஷயம்தான். எமிலியின் வார்த்தைகள் எனக்கு ரகசியமாகத் தோன்றின. ஷரத்ருத்தின் தெளிவான விளக்கத்திற்குப் பிறகும் எனக்கு அவள்மீது காதல் இருக்கிறது என்றுதான் நான் நினைத்திருந்தேன்.

எந்த அளவிற்கு மனதைப் புண்படுத்தாத, தெளிவான வார்த்தைகளைப் பயன்படுத்தி ஷரத்ருத் பேசிளான் என்பதை நினைத்துப் பார்த்தபோது, எனக்குள் ஒரு நிம்மதி உண்டானது. ‘அவள் ஒரு சிறுபெண்’ - நான் நினைத்தேன். உண்மையான காதலாக இருந்தால் சந்தேகங்களும் குழப்பங்களும் முரண்பாடுகளும் கட்டாயம் இருக்கத்தான் செய்யும். உண்மையாக சொல்லப்போனால் கவலையில் இருக்கும் ஏதோ ஒரு சிறுவன்மீது தோன்றக்கூடிய அன்புதான் ஷரத்ருத் மீது எனக்கு இருந்தது என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன். ஏதாவதொரு நோயாளியைப் பார்ப்பதைப் போலத்தான் நான் அவளைப் பார்த்தேன். ஷரத்ருத்தின் மீது நான் கொண்டிருந்த ஈடுபாட்டை நான் என்னுடைய தார்மிகமான பொறுப்பாக எடுத்துக் கொண்டேன்.

ஜாக்ஸ் போய் விட்டான் (போவதற்கு முன்னால் அவனைச் சந்திக்க வேண்டும் என்ற அனுமதியை நான் ஷரத்ருத்திற்குக் கொடுத்திருந்தேன். விடுமுறை முடிவடைவதற்கு சில நாட்களுக்கு முன்னால் அவன் திரும்பி வந்தான். ஷரத்ருத்திடமிருந்து தப்பித்ததைப் போலவோ, இனிமேல் அவளுடன் பேசுவதாக இருந்தால், நான் இருக்கும்போது மட்டுமே அப்படிச் செய்வான் என்று எனக்குக் கூறாமல் கூறுவது மாதிரியோ உள்ள முக வெளிப்பாட்டுடன் அப்போது அவன் இருந்தான்.)

ஜாக்ஸ் போன பிறகு எங்களுடைய வாழ்க்கை அமைதியாக பயணித்துக் கொண்டிருந்தது. முன்கூட்டியே ஏற்பாடு செய்ததற்கு ஏற்றபடி ஷரத்ருத் மேடம் லூயியின் இல்லத்தில் வசிக்கச் சென்றாள்.

தினமும் அங்கு போய் நான் அவளைப் பார்ப்பேன். இருவருமே சந்தோஷப்படுகிற மாதிரி ஷரத்ருத் எதையும் கூறமாட்டாள் என்பதை ஆரம்பத்திலேயே தீர்மானித்துவிட்டேன். நான் அவளிடம் பாதிரியார் என்ற முறையில் மட்டுமே பேசினேன். அதேபோல அவளும் பெரும்பாலும் மேடம் லூயி இருக்கும்போது மட்டுமே என்னுடன் பேசுவாள். முக்கியமாக ஷரத்ருத்தை வேதபாடங்களைக் கற்றுக் கொள்ளச் செய்வதிலும், உயிர்த்தெழும் திருநாளன்று நடக்கும் புனித விருந்தில் பங்கு கொள்ளச் செய்வதிலும் நான் மூழ்கியிருந்தேன். ‘ஈஸ்டர் விருந்தி’ல் பங்கு கொள்ளவும் செய்தேன்.

பதினைந்து நாட்களுக்கு முன்னால் நடைபெற்ற விஷயம் இது. விடுமுறையை எங்களுடன் கழித்த ஜாக்ஸ் ஏசுநாதரின் விருந்தில் கலந்து கொள்ளவில்லை என்ற விஷயம் என்னை ஆச்சரியத்திற்குள்ளாக்கியது.


முழுமையான கவலையுடன் கூறுகிறேன் - எமிலியும் அதில் கலந்து கொள்ளவில்லை. எங்களுடைய திருமணத்திற்குப் பிறகு இதைப்போன்ற ஒரு வாய்ப்பு முதல் தடவையாக இப்போதுதான் வருகிறது. என்னுடைய மன அமைதியைக் கெடுக்க வேண்டும் என்பதற்காகவே அவர்கள் இருவரும் இந்தச் சடங்கில் கலந்து கொள்வதில்லை என்று முன்கூட்டியே தெளிவாக முடிவு எடுத்துவிட்டார்கள் என்பதை நான் புரிந்து கொண்டேன். எது எப்படியோ, ஷரத்ருத்திற்கு இந்த விஷயம் தெரியாதே என்று நினைத்து நான் சந்தோஷப்பட்டுக் கொண்டேன். கவலையால் உண்டான கசப்பு நீரை நான் மட்டும் தனியே பருகினேன். எமிலியை எனக்கு நன்கு புரிந்துகொள்ள முடியும். அவள் எந்தச் சமயத்திலும் வெளியே எல்லோருக்கும் தெரியும்படி என்னை அவமானப்படுத்தியதில்லை. ஒருவகைப்பட்ட தனிமை என்னும் துயரச் சூழலில் என்னை விட்டெறிந்துவிட்டு அவள் தன்னுடைய கோபத்தைக் காட்டுகிறாள் என்பதை நான் புரிந்து கொண்டேன். அவளுடைய அந்தச் செயலை நினைத்துப் பார்த்து நான் மிகவும் கவலைப்பட்டேன். ஆனால், ஜாக்ஸ் விருந்தில் கலந்து கொள்ளாததற்குக் காரணம் வேறொன்றாக இருந்தது. சில நாட்களுக்குப் பிறகு என் மகனுடன் உரையாடிய போதுதான் என்னால் அதைத் தெரிந்துகொள்ள முடிந்தது. விஷயம் வேறொன்றுமில்லை. ஏசுவிடம் எந்தவொரு உயர்ந்த விஷயத்தையும் அவன் உணரவில்லையாம் !

டாக்டர் மார்ட்டின் நேற்று வந்திருந்தார். அவர் நீண்ட நேரம் ஷரத்ருத்தின் கண்களைப் பரிசோதித்துப் பார்த்தார். லொஸானில் இருக்கும் கண் சிகிச்சை நிபுணர் டாக்டர் ராக்ஸிடம் தான் ஷரத்ருத்தைப் பற்றிக் கூறியிருப்பதாகவும், தன்னுடைய பரிசோதனை ரிப்போர்ட்டை அவரிடம் கொடுக்க வேண்டும் என்று மார்ட்டின் என்னிடம் சொன்னார். ஆப்ரேஷன் மூலமாக ஷரத்ருத்திற்குப் பார்வை சக்தி கிடைக்கும் என்ற எண்ணம் அவர்கள் இருவருக்கும் இருந்தது. ஆனால், அப்போது அதைப்பற்றி அவளிடம் எதுவும் கூறாமல் இருப்பதே நல்லது. மலையிலிருந்து கீழே விழுவதைப் போல் ஏதோ ஆபத்து உண்டாகப் போகிறது என்ற சூழ்நிலையில் அந்த அப்பிராணிப் பெண்ணின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளைத் தட்டியெழுப்புவதன் மூலம் என்ன பயன் உண்டாகப்போகிறது ?

ஈஸ்டர் திருநாளன்று ஜாக்ஸ் ஷரத்ருத்தைப் பார்த்தான். ஆனால், நான் இருக்கும்போது அவள் அவனுக்கு அருகில் நின்றிருந்தாள்.  இருவரும் மிகவும் சாதாரண முறையிலேயே உரையாடினார்கள். நான் பயந்ததைப் போல ஜாக்ஸ் அப்படியொன்றும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இல்லை. ஷரத்ருத் மீது அவன் கொண்டிருந்த காதல் பலம் கொண்டதாக இருந்திருந்தால், அந்த அளவிற்கு எளிதாக அவனால் அதைக் கட்டுப்படுத்திக் கொண்டு இருக்க முடியாது என்பதை நான் சிந்தித்துப் பார்த்தேன். சென்ற வருடம் அவன் போவதற்கு முன்னால் இந்தக் காதல் அர்த்தமே இல்லாதது என்று அவள் ஜாக்ஸிடம் கூறியிருந்தாள். ஜாக்ஸ் இப்போது அவளை ‘நீ’ என்று அழைக்காமல், அதற்குப் பதிலாக ‘நீங்கள்’ என்று அழைக்கிறான் என்பதை நான் தெரிந்து கொண்டேன். எது எப்படியோ, அப்படி அழைப்பதுதான் சரியானதும்கூட நான் அவனிடம் அவளை அப்படித்தான் அழைக்க வேண்டும் என்றெல்லாம் கூறவில்லை.

ஜாக்ஸின் இந்தத் தியாகத்திற்குப் பின்னால் மிகப்பெரிய மனப்போராட்டம் இருக்கும் என்பதை என்னால் உணர முடிந்தது.

ஜாக்ஸைப் பொறுத்தவரையில் கர்த்தாவான ஏசுவைவிட புனிதர் பால் கூறிய வார்த்தைகள்தான் அர்த்தம் நிறைந்ததாக இருந்தன. அவனை அவனுடைய ஆயுதத்தைப் பயன்படுத்தியே தோல்வியடையச் செய்ய வேண்டும் என்று நான் நினைத்தேன். அதனால் ஒருநாள் நான் அவனுடைய அறையில் ஒரு சிறிய குறிப்பை எழுதி வைத்தேன்.

‘வசதி படைத்தவன் ஏழையை வெறுக்கக்கூடாது. காரணம் - ஏசு தன்னுடைய சீடர்களாகத் தேர்ந்தெடுத்து ஏழைகளைத்தான் என்று புனிதர் பாலின் கட்டுரையில் இருக்கிறது. ‘தேவைப்பட்டால் அதற்கடுத்த வார்த்தைகளையும் என்னால் எழுதியிருக்க முடியும்.

‘அது அசுத்தமான ஒரு செயல் அல்ல. ஆனால் அதை அசுத்தம் என்று நினைப்பவனுக்கு வேண்டுமானால் அது அசுதமாக இருக்கும்.’

ஆனால், நான் அப்படிச் செய்யவில்லை. அதற்குக் காரணம் - ஜாக்ஸ் எங்கே ஷரத்ருத்தின் பெயரைச் சொல்லி தப்பான சில விளக்கங்களுடன் என்மீது சந்தேகப்பட்டு விடுவானோ என்ற பயம் எனக்கு இருந்தது. அப்படிப்பட்ட ஒரு சந்தேகம் ஒரு நிமிடம்கூட அவனுடைய மனதில் உண்டாவதை நான் விரும்பவில்லை. புனிதர் பால் மேலும் கூறுகிறார் :

‘‘ஆனால், உன்னுடைய உணவுப் பொருள் விஷயத்தில், உன்னுடைய சகோதரனுக்கு வருத்தம் உண்டாகிறது என்றால், நீ அன்பின் பாதையில் பயணிக்கவில்லை என்றே அர்த்தம். அன்பு தோல்வி அடையும் இடத்தில்தான் தம்முடைய ஆயுதம் ‘கட் கட்’ என்ற ஓசையை உண்டாக்குகிறது. தீமை நம்மீது ஆட்சி செய்வதும் வேறொரு இடத்தில் அல்ல. கடவுளே, அன்புடன் தொடர்பு இல்லாத எல்லாவற்றையும் எங்களுடைய இதயத்திலிருந்து அழித்துவிடுவீராக !’’

பொழுது விடிந்தபோது, ஜாக்ஸிற்காக எழுதி வைத்திருந்த அதே ‘குறிப்பு’ மேஜைமீது கிடப்பதைப் பார்த்தேன். அந்தக் குறிப்பில் பின் பக்கத்தில் புனிதர் பாலின் அதே அத்தியாயத்திலிருந்த பகுதியை ஜாக்ஸ் இப்படி எழுதியிருந்தான்.

‘ஏசு யாருக்காக இறந்தாரோ, அவனுடைய அழிவிற்கு உன்னுடைய உணவு காரணமாகாமல் இருக்கட்டும்.’

நான் எல்லா அத்தியாயங்களையும் மீண்டும் ஒருமுறை வாசித்தேன்.

ஷரத்ருத்தை இந்தப் பிரச்சினைகளால் கவலைக்குள்ளாக்கியது சரியான செயல்தானா ? இந்தக் கார்மேகங்களைக் கொண்டு அந்தக் கண்பார்வையற்ற பெண்ணின் ஆகாயத்தின் வெளிச்சத்திற்கு பங்கம் உண்டாக்கியது சரியா ? என்னுடைய மனதிற்குள் சிந்தனை என்னும் சிவப்பு எறும்புகள் இங்குமங்குமாக ஓடிக் கொண்டிருந்ததை நான் அவளுக்கு அறிவு புகட்டுகிறேன். பாவம் என்பது என்னவென்றால் மற்றவர்களின் சந்தோஷத்திற்குக் கேடு உண்டாக்குவதுதான் என்பதை அவளுக்குப் புரிய வைக்க முயற்சிக்கிறேன். அப்படிச் செய்யும்போது உண்மையிலேயே நான் ஏசுவிற்கு அருகில் நின்று கொண்டு, ஷரத்ருத்தைக் கருணையே வடிவமானவரும், அன்பின் பிறப்பிடமானவருமான கடவுளுக்கு அருகில் நிற்கவல்லவா செய்திருக்க வேண்டும் ?

9

ந்தோஷமும் திருப்தியும் இல்லாத சில மனங்கள் இருக்கத்தான் செய்கின்றன. சந்தோஷத்தின் மூலம் பலனடைவது எப்படி என்பது அவர்களுக்குத் தெரியாது. அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பதும் இல்லை. நான் எமிலியைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன். ஒருநாள் கூட விடாமல் மிகவும் தீவிரமாக அவளிடம் நான் கூறுவேன்.

‘‘சந்தோஷமா இருக்கணும் எமிலி.’’

எல்லோரையும் உயர்த்திக் கடவுளுக்கு அருகில் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைப்பவன் நான். ஆனால், எமிலிக்கு அதில் விருப்பமில்லை. வெயிலில் இருக்கும் மலர்களைப் போல அவள் வாடிப் போகிறாள். தான் காணும் ஒவ்வொரு பொருளிலும் அவள் நிம்மதியற்ற தன்மையையும் துயரத்தையும் உணர்கிறாள்.


அன்று அவள் என்னிடம் சொன்னாள் :

‘‘இதனால் உங்களுக்கு என்ன பயன் கிடைக்கப் போகுது ? நாம எல்லோரும் கண் பார்வை தெரியாதவர்களாக ஆக முடியாது.’’

‘‘ஓ ! எந்த அளவிற்கு வேதனையை எமிலியின் வார்த்தைகள் என் மனதிற்குள் எறிந்திருக்கின்றன ! நிலை குலைந்து போய்விடாமல் இருப்பதற்காக நான் எந்த அளவிற்கு தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் வரவழைத்துக் கொண்டிருக்கிறேன் ! ஷரத்ருத்தின் பார்வையற்ற தன்மையைப் பற்றிய ஒவ்வொரு வார்த்தையும் என்னை வாயால் கூற முடியாத அளவிற்கு வேதனை கொள்ளச் செய்திருக்கிறது. ஆனால், இந்த விஷயம் எமிலிக்கு ஏன் புரியவில்லை ? அந்தக் கண்பார்வை தெரியாத சிறுமியின் அடக்கமான குணம்தான் உங்களை மிகவும் கவர்ந்துவிட்டது என்று என் மனைவி என்னிடம் கூற நினைக்கிறாள்.

ஷரத்ருத் சாதாரணமாகக்கூட யாரிடமாவது சண்டை போட்டுப் பேசுவதை நான் இதுவரை பார்த்ததேயில்லை. அவளுக்கு மோசமென்று படக்கூடிய எந்தவொரு விஷயத்தையும் நான் அவளைக் கேட்க அனுமதிப்பதில்லை என்பதுதான் உண்மை.

சந்தோஷத்தில் இருக்கும் மனம் தன்னைச் சுற்றி இருக்கும் காதலின் வெளிச்சத்தில் உல்லாசத்தையும் உற்சாகத்தையும் பரவச் செய்கிறது. எமிலியைப் பொறுத்தவரை நான்கு பக்கங்களிலும் எப்போதும் அலட்சியமும் அதிர்ஷ்டமின்மையும்தான் நிறைந்திருக்கின்றன. நாள் முழுவதும் கஷ்டப்பட்டு நோயாளிகளையும், ஏழைகளையும், கவலையில் இருப்பவர்களையும் பார்த்துவிட்டுத் தளர்ந்துபோய் சோர்வுடன் வரும்போது, சிறிதும் ஓய்வும் அன்பும் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கு என்று என் உள்மனம் ஏங்கும். ஆனால், சிந்தனைகளும் குற்றச்சாட்டுகளும் சண்டைகளும் என்னைச் சுற்றி வளைப்பதைத்தான் நான் பெரும்பாலும் காண்கிறேன். மொத்தத்தில் அந்த மாதிரியான நேரங்களில் நான் அதிர்ச்சியில் உறைந்து போவேன். காஸ்பேர்டும் ஷார்லட்டும் மிகவும் துடிப்பானவர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால், எமிலி அவர்களை தண்டிப்பதைச் சற்று குறைத்தால், அது எந்த அளவிற்குப் பயனுள்ள விஷயமாக இருக்கும் ! அவர்களை அவ்வப்போது தடுப்பதும், அவர்களுக்கு அறிவுரை கூறுவதும், அவர்கள்மீது குற்றச்சாட்டுக்கள் கூறுவதும் நடக்கும்போது, அலைகள் அடித்து அடித்துப் பாறைகளின் கூர்மையான முனைகள் தேய்ந்து போவதைப்போல, கூறும் விஷயங்களின் அடர்த்திக்கு குறிப்பிட்ட அளவு தேய்மானம் உண்டாகிவிடும்.

‘க்ளாடிற்கு பல் முளைக்கிறது என்பது எனக்கு நன்றாகத் தெரியும்’ (அவன் அழும்போது அவனுடைய தாயின் உதட்டிலிருந்து இந்த வார்த்தைகள்தான் வரும்). ஆனால், இந்த வார்த்தைகள் அவனை மேலும் அழ வைப்பதற்கு தூண்டுகோலாக இருக்கின்றன என்பதுதானே உண்மை. ‘க்ளாடின் அழுகைச் சத்தம் கேட்டவுடன் உடனடியாக ஓடி அவனைத் தூக்கி அவனுடைய முதுகைத் தடவிக் கொடுக்க வேண்டும் என்றுதானே எமிலியும் சாராவும் நினைக்கிறார்கள் ? நான் இல்லாமல் இருக்கும்போது ஒன்றிரண்டு முறை போதும் என்று தோன்றும்வரை க்ளாடினை அழ வைத்தால், திரும்பத் திரும்ப அவன் அழவே மாட்டான் என்பதை நான் முழுமையாக நம்புகிறேன்.

புறச்சிந்தனைகள் எமிலியை என்னதான் ஆக்கவில்லை ! ஆனால், அவள் தனக்குத்தானே உண்டாக்கிக் கொண்ட சிந்தனைகள் மூலம் ஒருகாலத்தில் என் இதயக்கனவுகளை வளர்த்த புன்னகை தேவதையின் அழகான உருவத்தை இப்போது அவளிடம் காண முடியவில்லையே என்ற வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. என்னுடைய ஒவ்வொரு எண்ணத்திற்கும் ஆர்வத்திற்கும் ஏமாற்றத்திற்கும் பங்காளியாக இருந்தவள் அவள். சொர்க்கத்திற்குச் செல்லும் பாதைக்கு என்னுடைய வழிகாட்டியும் அவள்தான். வானவில்லின் வண்ணங்களைக் கொண்ட எப்படிப்பட்ட இனிய கற்பனைகள் அவை ! பொன்னென ஒளிரும் எத்தனையெத்தனை கனவுகள் ! ஒருவேளை அந்த நாட்களில் காதல் என்னைக் குருடனாக ஆக்கிவிட்டிருக்குமோ ? தன் தாயைப்போல சாராவும் இப்போது வீட்டு விஷயங்களில் மட்டும் தன்னைக் குறுக்கிக் கொண்டுவிட்டாள். எந்த வகைப்பட்ட உள் ஒளியும் இப்போது அவளுடைய முகத்தில் தெரிவதில்லை. முற்றிலும் ஈவு, இரக்கமற்ற கொடுமையான குணத்திற்குச் சொந்தக்காரியாக அவள் இருக்கிறாள். கவிதைகளிலோ, வேறு எதையாவது படிப்பதிலோ எதிலும் அவளுக்குச் சிறிதும் ஆர்வம் இல்லை. தாயும் மகளும் உரையாடுவதைக் கேட்டு, அவர்களுடன் நானும் பங்கெடுத்துக் கொண்டால் என்ன என்று சில நேரங்களில் தோன்றும். ஆனால் அப்படிப்பட்ட உரையாடலைக் கேட்பதற்கான வாய்ப்பே எனக்குக் கிடைக்கவில்லையென்றால்...?

குளிர்காலத்தில் மேடத்தின் வீட்டிற்குச் சென்று தேநீர் அருந்துவது என்னுடைய பழக்கமாக இருந்தது. வேலையிலிருந்து ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் நான் அங்கு போவேன்.

ம்... நான் ஒரு விஷயத்தைக் கூறாமல் விட்டுவிட்டேன். மார்ட்டின் மேடத்திடம் ஒப்படைத்த அந்த மூன்று சிறுமிகளும் சென்ற நவம்பர் முதல் அவர்களுடன்தான் வசிக்கிறார்கள்.

மேடத்தின் வீட்டிற்குச் செல்லும்போதெல்லாம் அங்குள்ள சூழ்நிலை முற்றிலும் சாந்தம் நிறைந்ததாகவும் சந்தோஷமானதாகவும் நட்புணர்வு உள்ளதாகவும் இருப்பதை நான் உணர்ந்திருக்கிறேன். அங்கு இரண்டு மூன்று நாட்கள் போகாமல் இருந்தால், அதற்குப் பிறகு சிந்தனை முழுவதும் அவர்களையே சுற்றிக் கொண்டிருக்கும். ஷரத்ருத் மற்றும் மூன்று சிறுமிகளுக்கு ஆகக்கூடிய செலவுகளைப் பார்த்துக் கொள்வது என்பது அவர்களுக்குக் கஷ்டமான ஒரு விஷயமல்ல. மூன்று வேலைக்காரிகள் நல்ல முறையில் அவர்களைப் பார்த்துக் கொள்வார்கள். அதைவிட சந்தோஷத்தையும் அமைதியையம் யாரால் கற்பனை பண்ணிப் பார்க்க முடியும் ? மேடத்திற்கு ஏழைகள் மீதும் ஆதரவற்றவர்கள் மீதும் எப்போதும் ஈடுபாடு உண்டு. தர்மச் செயல்களில் நூறு சதவிகிதம் ஆர்வம் கொண்டிருக்கும் அந்த மதிக்கக்தக்க பெண்மணி இந்த உலகில்தான் இருக்கிறாள் என்பதை நம்புவதே நமக்குக் கஷ்டமாக இருக்கும். பரந்து கிடக்கும் இந்தப் பெரிய உலகில் அன்பிற்காக மட்டும்தான் அவள் வாழ்கிறாளோ என்று எண்ணத் தோன்றும். சிறு குழந்தைகளின் சிரிப்பைப்போல அவள் சிரிப்பாள். அவளுடைய நடவடிக்கை ஒவ்வொன்றும் ரசிக்கிறமாதிரி இருக்கும். இனிமையான குரலுக்குச் சொந்தக்காரியான அவள் நடந்து கொள்ளும் முறைகளையும் பழக்க வழக்கங்களையும் ஷரத்ருத் நன்றாகக் கற்றுக் கொண்டிருந்தாள். மேடம் பேசுவதைப்போலவே ஷரத்ருத் பேசுவாள். மேடத்தின் குரலை அப்படியே மனதிற்குள் வாங்கி எதிரொலிக்கவும் ஷரத்ருத் தெரிந்து வைத்திருந்தாள். சேட்டைகள் செய்கிறார்களே என்று தினமும் நான் அவர்கள்மீது கோபிப்பேன். ஆனால், அவர்களில் யாரும் சேட்டைகள் செய்வதை ஒத்துக் கொள்வதேயில்லை.

மேடமும் ஷரத்ருத்தும் அமர்ந்திருப்பதைப் பார்ப்பதில் நான் மிகவும் விருப்பம் கொண்டவனாக இருப்பேன். அவள் மேடத்தின் தலைமீது குனிந்து கொண்டு உட்கார்ந்திருப்பாள். அதாவது - மேடத்தின் கையை அவள் பிடித்திருப்பாள். அப்போது மேடத்தின் உள்மனதில் எதிரொலித்துக் கொண்டிருக்கும் கவிதையின் அழகைக் காண்பது என்பது எந்த அளவிற்குக் சந்தோஷமான ஒரு விஷயம் ! சிறு பெண்களின் இளம் மனங்களில் மேடம் முழுமையாக இடம்பிடித்து விடுவாள்.


அன்பு, அமைதி ஆகியவை நிறைந்த அந்தச் சூழ்நிலையில் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆச்சரியப்படும் வகையில் மேடம் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பாள். உடல் ஆரோக்கியதுடன் மகிழ்ச்சியும் கிடைக்கும் வகையில் தான் அந்தச் சிறுமிகளுக்கு நடனம் கற்றுத்தரப் போவதாக மேடம் சொன்னபோது, எனக்கு வந்த சிரிப்பை அடக்க முடியவில்லை. ஏனென்றால், நான் இப்போது அவர்களுடைய வளர்ச்சியடைந்த நிலையையும் இசை மயமான அழகையும் பார்த்து மனதிற்குள் மகிழ்ந்து கொண்டிருக்கிறேன். அந்தச் சிறுமிகளுக்குப் பார்க்கும் சக்தி இல்லையென்றாலும், தங்களுடைய செயல்களின் தாளமும் லயமும் என்ன என்பதை அவர்களால் அனுபவ ரீதியாக உணர்ந்து தெரிந்துகொள்ள முடியும். ஷரத்ருத் முழுமையான அமைதி கொண்ட மனதுடனும் உற்சாகத்துடனும் அவர்களின் நடனங்களில் கலந்துகொண்டு சந்தோஷமடைந்தாள். மேடம் அந்தச் சிறு பெண்களுக்கு நடனத்தைப் பற்றிய விஷயங்களைப் கற்றுத்தரும்போது, ஷரத்ருத் பியானோ வாசித்துக் கொண்டிருப்பாள். அவளுடைய வளர்ச்சி என்னை முழுமையாக ஆச்சரியப்படச் செய்தது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தேவாலயத்தில் அவள் பியானோ வாசிப்பாள். ஞாயிற்றுக்கிழமைகளில் எங்களுடன் சேர்ந்து உணவு சாப்பிடுவாள். மற்ற பெண்களின் அன்பு வேறொரு விதத்தில் வளர்ந்து கொண்டிருந்தாலும் ஷரத்ருத்தைப் பார்ப்பது என்பது அவர்களுக்கு மிகப் பெரிய ஆனந்தம் அளிக்கக்கூடிய ஒரு விஷயமாக இருந்தது. எமிலியும் இப்போது அதிக அளவில் கோபப்படுவதில்லை. சாப்பிட்ட பிறகு குடும்பமே ஷரத்ருத்துடன் சேர்ந்து மேடத்தின் வீட்டிற்குச் செல்லும். அங்கேயே தேநீர் குடிப்போம். நிலைமைகள் இப்படியிருக்க, பிள்ளைகளுக்கு எப்போதுமில்லாத மகிழ்ச்சி உண்டானது. பிறகு மேடம் அவர்களுக்கு நிறைய இனிப்புகள் தருவாள் எமிலியைப் பார்த்தால் அவளுக்குப் பத்து வயது குறைந்துவிட்டது என்று யாரும் கூறுவார்கள். தளர்ச்சி கரிய நிழலைப்போல பின்தொடர்ந்து கொண்டிருக்கும் அன்றாட வாழக்கையில், இந்த மனரீதியான உற்சாகத்தை வேண்டாம் என்று ஒதுக்கி வைப்பது எமிலிக்கு மிகவும் கஷ்டமான விஷயம் என்பதை என்னால் உணர முடிந்தது.

10

மே, 18,

இனிமையான பருவகாலம் நான் ஷரத்ருத்துடன் சேர்ந்து நடப்பதற்காக வெளியேறினேன். பல நாட்களுக்குப் பிறகு அவள் தனியாக எனக்கு இப்போதுதான் கிடைத்திருக்கிறாள்.

நாங்கள் மிகவும் வேகமாக முன்னோக்கி நடந்தோம். காற்று காரணமாக அவளுடைய உதடுகள் சிவப்பாக, தலையிலிருந்த முடிகள் பறந்து பறந்து முகத்தில் விழுந்து கொண்டிருந்தன. இரண்டு மலர்களைப் பறித்து நான் அவளுடைய கூந்தலில் வைத்தேன்.

இதுவரை நாங்கள் எதுவும் பேசிக் கொள்ளவேயில்லை. திடீரென்று ஷரத்ருத் தன்னுடைய முகத்தை என் பக்கம் திருப்பிக் கொண்டு கேட்டாள் :

‘‘இப்போதும் ஜாக்ஸுக்கு என்மீது காதல் இருக்குன்னு நீங்க நினைக்கிறீங்களா ?’’

‘‘ஏன் ? அவன் உன்னைக் கைவிட முடிவு பண்ணிட்டானா ?’’ - என் பதில் இப்படித்தான் இருந்தது.

உடனடியாக அவள் கேட்டாள் :

‘‘நீங்கள் என்னைக் காதலிக்கிறீங்கன்ற விஷயம் ஜாக்ஸுக்குத் தெரியும்னு நினைக்கிறீங்களா ?’’

கடந்த ஆறு மாத காலமாக எங்களுக்கிடையே காதல் சம்பந்தப்பட்ட ஒரு வார்த்தை கூட எழுந்ததில்லை. தனியாக இருக்கும் வண்ணம் ஒருமுறை கூட நாங்கள் சந்திக்கவும் இல்லை. எது எப்படியிருந்தாலும் அது நல்லதுதான் என்று நான் நனைத்தேன். ஷரத்ருத்தின் கேள்விளைக் கேட்டதும் என்னுடைய இதயம் மிகவும் வேகமாக அடிக்கத் தொடங்கியது. என்னுடைய நடையின் வேகத்தைக்கூட குறைத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை எனக்கு உண்டானது.

‘‘நான் உன்னைக் காதலிக்கிறேன்ற விஷயம் ஒவ்வொருத்தருக்கும் தெரியும் ஷரத்ருத்’’ - உரத்த குரலில் நான் பதில் கூறினாலும், அவளுக்கு ஏனோ திருப்தி உண்டாகாததைப் போல..

‘‘நீங்கள் என் கேள்விக்குப் பதில் சொல்லல...’’ என்றாள்.

சிறிது நேர மவுனத்திற்குப் பிறகு தலையைக் குனிந்து கொண்டு சொன்னாள் :

‘‘எமிலி ஆன்ட்டிக்கு விஷயம் தெரிஞ்சிருக்கு. அதனால் அவங்க மிகுந்த கவலையில் இருக்காங்கன்னும் எனக்குத் தெரியும்.’’

‘‘அப்படியே இல்லைன்னாலும் வேறு எந்த விஷயத்துக்காகத் தான் ஆன்ட்டி கவலைப்படாமல் இருந்திருக்கா ?’’ - நடுங்குகிற குரலில் நான் சொன்னேன் :

‘‘கவலை என்பது அவளுடன் கூடவே பிறந்தது.’’

‘‘ஓ! நீங்க எப்பவும் என்னை சமாதானப்படுத்ததத்தான் முயற்சிக்கிறீங்க...’’ - மெதுவான குரலில் அவள் சொன்னாள் : ‘‘ஆனால், எனக்கு ஆறுதல் தேவையில்ல. நான் அதிகமாக ஆச்சரியப்படவோ, கவலைப்படவோ செய்கிற நிறைய விஷயங்களை நீங்கள் வேண்டுமென்றே என்னிடம் சொல்லாம இருக்கீங்கன்னு எனக்குத் தெரியும். எனக்குத் தெரியாத எவ்வளவோ விஷயங்கள் இருக்கு. அதனால் சில நேரங்களில்...

ஷரத்ருத்தின் குரல் சாதாரண நிலைக்கு வர, தொடர்ந்து மூச்சுவிட முடியாதது மாதிரி அவள் மவுனமாக இருந்தாள். நான் அவளுடைய இறுதி வார்த்தைகளை மனதில் வைத்துக் கொண்டு கேட்டேன் :

‘‘அதனால் சில நேரங்களில்...?’’

அடுத்த நிமிடம் மிகுந்த கவலையுடன் அவள் சொன்னாள் :

‘‘உண்மையாகச் சொல்லப்போனால் உங்கள் மீது நான் கொண்டிருக்கும் நன்றியுணர்வுக்குக் காரணமான சந்தோஷம், என்னுடைய அறியாமையிலிருந்து உருவானது என்று சில நேரங்களில் நான் சிந்தித்திருக்கிறேன்.’’

‘‘ஆனால், ஷரத்ருத்...’’

‘‘இல்ல... என்னைச் சொல்ல விடுங்க. இதைப் போன்ற சந்தோஷம் எனக்குத் தேவையே இல்ல. நான் என்னுடைய மகிழ்ச்சியைப் பற்றி சிந்திக்கல. எல்லாம் எனக்குத் தெரியணும்.’’ - அவள் மேலும் சொன்னாள் :

‘‘எத்தனையோ விஷயங்கள் கவலைப்படும் விதத்தில் இருக்கும். நான் அவற்றைக் காணமுடியாது. சரிதான்... ஆனால், என்னிடமிருந்து அவற்றை விலக்கி வைக்கக்கூடிய அதிகாரம் உங்களுக்கு இல்லை. இந்தக் குளிர் மாதகாலத்தில் நான் நிறைய சிந்திக்கிறேன். நீங்கள் சொல்கிற அளவிற்கு அழகானதா இந்த உலகம் என்று நான் சந்தேகப்படுகிறேன். அழகு என்பதிலிருந்து எவ்வளவோ தூரத்தில் அது இருக்கிறது என்பதுதான் உண்மை.’’

‘‘மனிதன் உலகத்தை அழகற்றதாக ஆக்கியிருக்கான் என்பது உண்மைதான்’’ - மெதுவான குரலில் நான் பதில் சொன்னேன். அதற்குக் காரணம் - ஷரத்ருத்தின் சிந்தனைகள் வழியாக வெளியேறிய ஓட்டம் என்னைப் பயப்படச் செய்தது. வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்க்கக்கூடிய தைரியம் இல்லையென்றாலும் நான் எண்ண ஓட்டத்தை ஒரு பக்கத்திற்குத் திருப்பிவிட முயன்றேன். என்னுடைய வார்த்தைகளுக்காக அவள் காத்திருந்தாள். அவள் அந்த வார்த்தைகளை முழுமையாக ஏற்றுக் கொள்ளவும் செய்தாள்.

‘நூறு சதவிகிதம் சரி...’’ - அவள் சொன்னாள் : ‘‘இந்த உலகத்தில் பாவங்களும் தீமைகளும் அதிகரிப்பதிலிருந்து நான் நிம்மதி அடைய விரும்புகிறேன்.

நீண்ட நேரம் நாங்கள் எதுவும் பேசாமல் மிகவும் வேகமாக நடந்து கொண்டிருந்தோம்.


அவள் எதைப் பற்றியோ சிந்திக்கிறாள் என்பதையும், வார்த்தைகள் அவளுடைய தொண்டைகளுக்குள்ளேயே என்ன காரணத்தாலோ தங்கிவிட்டது என்பதையும் நான் புரிந்து கொண்டேன். எங்கள் இருவரின் அதிர்ஷ்டமும் வெடித்து மலரும் வகையில் நல்ல வார்த்தைகள் என் வாய்க்குள்ளிருந்து வெளியே வந்தால்...

‘ஷரத்ருத்திற்குப் பார்வை சக்தி கிடைக்க வாய்ப்பு இருக்கு’ என்ற மார்டினின் வார்த்தைகள் அப்போது என்னுடைய ஞாபக அறையிலிருந்து உயர்ந்து வந்தது. ஆழமான ஏதோ சிந்தனை ஒரு நிமிடம் என் உள்மனதைப் பிடித்து அழுத்தியது.

‘‘உங்களிடம் நான் ஒரு கேள்வி கேட்கணும்னு நினைச்சேன்’’ - இறுதியில் அவள் சொன்னாள் : ‘‘ஆனால், அதை எப்படி ஆரம்பிக்கிறதுன்னு எனக்குத் தெரியல... கண்பார்வையற்ற பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தைகளும் பார்வை தெரியாதவர்களாகத்தான் இருப்பார்களா ?’’ - அவள் திடீரென்று கேட்டாள்.

‘‘இல்ல ஷரத்ருத்’’ - நான் சொன்னேன் : ‘‘அப்படி மிகவும் அரிதாகத்தான் நடக்கும். உண்மையாக சொல்லப்போனால், அப்படி நடப்பதற்குக் காரணம் எதுவும் இல்லை.’’

அப்போது அவளுக்கு எந்த அளவிற்கு நிம்மதி தோன்றியது தெரியுமா ? எதற்காக அந்த விஷயத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவள் விருப்பப்படுகிறாள் என்று அவளிடம் கேட்க நான் நினைத்தேன். ஆனால், அதற்கான தைரியம் வரவில்லை. தொடர்ந்து நான் சொன்னேன் :

‘‘குழந்தைகள் பிறக்கணும்னா, திருமணமாகணும்.’’

‘‘என்னிடம் அப்படிச் சொல்லாதீங்க. அது உண்மை இல்லைன்னு எனக்குத் தெரியும்.’’

ஷரத்ருத் வார்த்தைகளைக் கேட்டு நான் உண்மையாகவே ஆச்சரியப்பட்டேன். எனினும், தர்க்கத்தை விடாமல் நான் சொன்னேன் :

‘‘நான் சொல்ல வேண்டியதை உன்னிடம் சொல்லிட்டேன். ஆனால், மனிதர்களின் மற்றும் தெய்வத்தின் சட்டங்கள் கைவிடக் கூடிய சில விஷயங்களுக்கு இயற்கையின் சட்டங்கள் உதவியாக இருக்கின்றன என்பது உண்மைதான்.’’

‘‘கடவுளின் சட்டம் அன்பு நிறைந்தது என்று நீங்கள் என்னிடம் பலமுறை சொல்லியிருக்கீங்களே !’’

‘‘ஆனால், இது அந்த அன்பு அல்ல... அதற்குப் பின்னால் இரக்கம் இருக்குது.’’

‘‘அப்படின்னா, நீங்க இரக்கத்தின் காரணமாகவா என்னை...?’’

‘‘இல்ல... அப்படி இல்லைன்னு ஷரத்ருத், உனக்குத் தெரியும்.’’

‘‘அப்படின்னா நம்ம காதல் கடவுளின் சட்டத்திலிருந்து மிகவும் தூத்தில் இருக்குன்றதை நீங்க ஒத்துக்குவீங்களா ?’’

‘‘ஷரத்ருத், நீ என்ன சொல்ற -?’’

‘‘ஓ ! நான் என்ன சொல்ல நினைக்கிறேன்னு உங்களுக்குத் தெரியலையா ?’’

எப்படியாவது விஷயத்தை மாற்றினால் போதும் என்று நான் நினைத்தேன். ஏதாவது சரியான வழி தெரிந்தால்... நான் நினைத்தேன். ஆனால், எல்லாமே வீணாகத்தான் முடிந்தது.

வேகமான இதயத் துடிப்பு என் சகல தர்க்கங்களையும் சின்னாபின்னமாக்கியது. உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நான் கேட்டேன்.

‘‘உன் காதல் தகுதியற்றது என்று நினைக்கிறியா ?’’

உடனே அவள் திருத்தினாள் :

‘‘உன் என்று சொல்லாதீங்க. ‘நம்மோட’ என்று சொல்லுங்க. நீங்க சொல்றது உண்மைதான் என்று என் மனம் சொல்லுது...’’

‘‘அப்படின்னா...?’’

என்னுடைய குரலை யாரோ தடுத்ததைப்போல் இருந்தது.

ஆனால், ஒரே மூச்சில் அவள் சொன்னாள் : ‘‘ஆனால், உங்களைக் காதலிக்காமல் என்னால் இருக்க முடியாது.’’

எது எப்படியோ, நாங்கள் சுற்றிக் கொண்டிருந்தது முடிவுக்கு வந்தது. இருவரையும் யாரோ பின்பற்றி வருகிறார்கள் என்பது மாதிரி அவ்வளவு வேகமாக நாங்கள் நடந்தோம். அவள் என்னுடைய கையை இறுகப் பற்றியிருந்தாள். என் உடலிலிருந்து உயிர் எங்கோ சிறகுகளை விரித்துக் கொண்டு பறந்து போனதைப்போல... வழியில் இருக்கும் ஏதாவது கல்லில் பட்டு இரண்டு பேரும் எங்கே கீழே விழுந்து விடுவோமோ என்று நாங்கள் பயந்தோம்.

11

மே, 19.

டாக்டர் மார்ட்டின் இன்று காலையில் வந்திருந்தார். ஷரத்ருத்திற்கு ஆப்பரேஷன் நடக்கப்போகும் விஷயத்தை அவரிடமிருந்து நான் தெரிந்து கொண்டேன். ஆப்பரேஷன் வெற்றிகரமாக முடியும் என்ற முழுமையான நம்பிக்கை டாக்டர் ரூக்ஸுக்கு இருந்தது. சில நாட்களுக்கு ஷரத்ருத் தன்னுடைய மேற்பார்வையில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று அவர் கூறினார். நான் அதை மறுப்பதற்கில்லை. எனினும், என்னுடைய கோழைத்தனம் என்றுதான் சொல்ல வேண்டும். நான் அவருக்கு என்ன பதில் சொன்னேன் தெரியுமா ? ‘‘எனக்கு அதைப்பற்றி யோசிக்க கொஞ்ச நேரம் வேணும் !’’

ஷரத்ருத்தை அதற்குத் தயார் பண்ணுவதற்குத்தான் நான் நேரம் வேண்டுமென்று சொன்னேன். உண்மையாகக் கூறுவதாக இருந்தால், பார்வைசக்தி கிடைக்கப்போகும் விஷயத்திற்காக என் இதயம் சந்தோஷ நடனம் ஆடவேண்டும். ஆனால், இதயத்தில் குழப்பங்கள் நிறைந்த, வெளியே கூறமுடியாத சுமை அழுத்திக் கொண்டிருந்தது. ‘எனக்குப் பார்வைசக்தி கிடைக்கும்’ என்று எப்படி நான் ஷரத்ருத்திடம் கூறுவேன்...? நான் கடுமையான மனக்குழப்பத்திற்கு ஆளானேன்.

மே, 19 (இரவு).

நான் ஷரத்ருத்தைப் பார்த்தாலும், அவளுடன் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. அவள் மட்டும் தனியாகத்தான் இருந்தாள். நான் நேராக மாடியிலிருந்த அறைக்குச் சென்று ஷரத்ருத்தைக் கைக்குள் அடக்கி, சிறிது நேரம் அவளை என் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டிருந்தேன். அவள் என்னைத் தடுக்க முயற்சிக்கவில்லை. அவள் என்னை நோக்கி முகத்தை உயர்த்தியதும், இருவரின் உதடுகளும் இணைந்தன.

மே, 21.

அன்பே வடிவமான கடவுளே, இரவை இந்த அளவிற்குக் கருமை நிறம் கொண்டதாகவும், அழகானதாகவும் ஆக்கியது எங்களுக்காகவா ? எங்களுக்கு ஏற்ற காலநிலை. ஆகாயத்தின் ‘முடிவற்ற அமைதி’யை ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு பார்க்கிறேன் நான். திறந்து கிடக்கும் வானத்திலிருந்து நிலவு தன்னுடைய கிரணங்களை உலகிற்குள் சிதறவிட்டுக் கொண்டிருக்கிறது. ஓ ! எல்லோரின் பார்வையிலிருந்தும் விலகிச் செல்லும் பக்தி, அமைதியாக இருக்கும் என் இதயத்திற்குள் நுழைகிறது. எனக்கு... அய்யோ... என்னால் அமைதியாக பிரார்த்தனை செய்ய முடியவில்லையே ! காதலுக்கு ஏதாவது எல்லை என்ற ஒன்று இருந்தால்... அது கருணையே வடிவமான தெய்வமே, உன்னால் அல்ல. மனிதனால் தீர்மானிக்கப்பட்டது அது. மக்களின் பார்வையில் என்னுடைய காதல் எந்த அளவிற்கு மோசமானதாக இருந்தாலும் சரி, கடவுளே ! உன் பார்வையில் அது எப்படிப்பட்டது என்பதை நான் அறிய விரும்புகிறேன்.

நான் பாவத்தைப் பற்றியுள்ள சிந்தனையிலிருந்து உயர முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். பாவம் என்பது என்னால்சகித்துக் கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது. எனினும் கர்த்தாவான ஏசுவே, நான் ஓடமாட்டேன். நிச்சயம் ஓடமாட்டேன். ஷரத்ருத்தைக் காதலிப்பதன் மூலம் நான் எப்படிப்பட்ட பாவத்தைச் செய்து கொண்டிருக்கிறேன் என்பதை ஒப்புக் கொள்ளவில்லைதான்.


என் இதயத்தைப் பிளந்தால் மட்டுமே அந்தக் காதலை இல்லாமற் செய்ய முடியும். ஆனால், இதற்கு முன்பு எந்தக் காரணத்திற்காகவோ அந்தக் கண்பார்வையற்றச் சிறுமியை நான் காதலிக்காமலிருந்தாலும், அனுதாபத்தின் அடிப்படையில் அவள் மீது அன்பு செலுத்தாமல் இருந்தால், அது அந்த அப்பிராணிப் பெண்ணின்மீது நான் காட்டும் மிகப்பெரிய வஞ்சனையாக இருக்கும். உண்மையாகச் சொல்லப்போனால் ஷரத்ருத்திற்கு என்னுடைய அன்பு தேவையாக இருந்தது.

கடவுளே, உன்னைத் தவிர வேறு யாரையும் எனக்குத் தெரியாது. எனக்கு நீதான் வழிகாட்ட வேண்டும். என்னைச் சுற்றிலும் கடுமையான இருட்டு மட்டுமே இருக்கிறது என்பதும், ஷரத்ருத்திற்குக் கிடைக்கப் போகிற ஒளிக்காக நான் வஞ்சனாக ஆகியிருக்கிறேன்¢ என்பதும் சில நேரங்களில் தெரிகிறது.

மார்ட்டின் அவளைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு வருவார். அதற்கு முன்னால் தன்னை வந்து பார்க்க முயற்சிக்கக் கூடாது என்று அவள் என்னிடம் சத்தியம் வாங்கியிருக்கிறாள்.

மே, 22.

ஆப்பரேஷன் வெற்றியில் முடிந்தது என்ற டாக்டர் மார்ட்டினின் கடிதம் கிடைத்தது. சர்வசக்தி படைத்தவரும், கருணை வடிவமுமான கடவுளுக்கு நன்றி.

மே, 24.

சாயங்கால நேரத்தில் காதலித்தவள்தான் இனி சரியாகப் பார்க்கப் போகிறாளே என்ற சிந்தனை இதயத்தை அலைக்கழித்துக் கொண்டிருந்தது. என்னை, அவளுக்கு அடையாளம் தெரியுமா ? வாழ்க்கையில் முதல் தடவையாக நான் என்னைக் கண்ணாடியில் பார்த்தேன். ஷரத்ருத்தின் மனதில் அடித்தளத்தில் இருந்த அளவிற்குப் பிரகாசமும் அனுதாபமும் அந்த விழிகளில் இல்லை என்று, அவள் திரும்பி வரும்போது நான் புரிந்து கொண்டால்... அப்படியென்றால் அப்போது எனக்கு என்ன நடக்கும் ? கடவுளே, உன்மீது அன்பு செலுத்த வேண்டுமென்றால் ஷரத்ருத்தின் காதல் கட்டாயம் தேவைதான் என்று சில நேரங்களில் எனக்குத் தோன்றுவதுண்டு.

ஜூன், 8.

வேலைப்பளு காரணமாக நாட்கள் கடந்து போனது தெரியவில்லை. ஆனால், ஷரத்ருத்தின் அன்பான வடிவம் எனக்கு முன்னால் முழுமையாகத் தோன்றும். ஷரத்ருத் நாளை திரும்பி வருகிறாள். மூன்று வாரங்களாக எமிலியின் குணத்தில் உண்டாகியிருக்கும் மாற்றம் தெளிவாகவே தெரிந்தது. எப்போதும் அவள் என்னுடைய கவனத்தைத் திருப்ப முயற்சிப்பாள். பிள்ளைகளுடன் சேர்ந்து ஷரத்ருத்தை வரவேற்க தயார் நிலையில் இருந்தாள் அவள்.

ஜூன், 9.

தோட்டத்திலிருந்தும் மைதானத்திலிருந்தும் காஸ்பேர்டும் ஷார்லட்டும் சேர்ந்து கிடைத்த மலர்களைப் பறித்துக் கொண்டு வந்தார்கள். ரோஸ்லி தன் கைப்பட ஒரு கேக் தயாரித்து வைத்திருந்தாள். சாரா அதை அழகுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாள். ஷரத்ருத் இன்று பகல் நேரத்தில் எங்களுடன் சேர்ந்து உணவு சாப்பிடுவாள் என்று எதிர்பார்க்கிறேன். இப்போது மணி பதினொன்றாகிறது. டாக்டர் மார்ட்டினின் கார் வருகிறதா என்பதை அறிவதற்காக அடிக்கொரு தரம் நான¢சாலையையே பார்ப்பேன். அவர்கள் சீக்கிரமாக வரக்கூடாதா ? மற்றவர்களைக் கொண்டு வரவேற்காமல் இருப்பதே சரியானது - குறிப்பாக எமிலியைக் கொண்டு.

என் இதயம் சந்தோஷ மலர் போர்வையை அணிந்தது. ஆஹா ! அவள் வந்துவிட்டாள் !

ஜூன், 9 (மாலை)

ஓ ! நான் எப்படிப்பட்ட கொடிய இருட்டுக்குள் குமைந்து கொண்டு இருக்கிறேன் ! கருணை காட்டு, கடவுளே ! நான் ஷரத்ருத்தைக் காதலிக்காமல் இருக்கிறேன். ஆனால், அவளைத் திரும்பவும் அழைத்து வரவேண்டாம்...

நான் சந்தேகப்பட்டது எவ்வளவு சரியாக இருக்கிறது !

அவள்... உண்மையிலேயே அவள் என்ன செய்தாள் ? ஷரத்ருத் என்ன செய்ய விரும்பினாள் ?

ஷரத்ருத்துடன் சேர்ந்து நாங்கள் இருவரும் ‘க்ரன்ஜ் டோர்’ வரை போனோம் என்று எமிலியும் சாராவும் சொன்னார்கள். அவளை எதிர்பார்த்துக்கொண்டு மேடம் அங்கு நின்றிருந்தாள். கட்டாயம் அவள் எங்காவது போயிருப்பாள். உண்மையிலேயே நடந்தது என்ன ?

நான் சிந்தனைகளை ஒரே கயிற்றில் கோர்ப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். எனக்குக் கொடுக்கப்பட்டிருந்த விளக்கத்தை என்ன காரணத்தாலோ புரிந்து கொள்ள சிரமமாக இருந்தது. சொல்லப்பட்ட விஷயங்களாக இருந்தாலும், அவை ஒன்றோடொன்று பொருந்தாமல் இருந்தன. என்னுடைய சிந்தனை இப்போது பிரச்சினைக்குள்ளாகியிருக்கிறது. மேடத்தின் தோட்டக்காரன் ஷரத்ருத்தை மயக்க நிலையில் கொண்டு வந்து சில நிமிடங்கள்கூட ஆகவில்லை. நதிக்கரையில் அவள் நடந்து திரிவதை தான், பார்த்ததாக அவன் சொன்னான். பிறகு அவள் ‘கார்டன் பிரிட்ஜ்’ கடந்து விட்டாளாம் ! திடீரென்று அவள் குனிந்து காணாமல் போனவுடன், தடுமாறி விழுந்துவிட்டாளோ என்ற எண்ணம் உண்டானது. முதலில் சொன்ன தோட்டக்காரன் இல்லாததால் அவன், அவளைக் காப்பாற்றுவதற்கு ஓடவில்லை. உண்மையிலேயே ஷரத்ருத்தைக் காப்பாற்ற அவன் ஓடியிருக்க வேண்டும். அதற்குப் பிறகு அவளை சிறிய ஒரு அணைக்கட்டிற்கு அருகில் அவன் பார்த்திருக்கிறான். அதற்குள் உள்ளே சென்ற நீர் முழுவதையும் எப்படியோ ஆட்கள் வெளியே எடுத்துவிட்டார்கள். பிறகு நான் அவளைப் பார்த்தபோது அவளுக்கு சுயநினைவு வந்திருக்கவில்லை. திரும்பவும் அவளுக்கு சுயநினைவு இல்லாமற்போயிருக்குமோ என்னவோ ? எனினும் உடனடியாக ஏதோ ஒரு ‘வித்தையை’ பயன்படுத்தியவுடன், உடனடியாக ஏதோ ஒரு ‘வித்தையை’ பயன்படுத்தியவுடன், உடனடியாக அவளுக்கு சுயநினைவு வந்தது. கடவுளின் கருணை என்று கூறாமல் வேறு என்ன கூறுவது ? டாக்டர் மார்ட்டின் இன்னும் போகவில்லை. ஆனால், எந்த மாதிரியான தளர்ச்சி ஷரத்ருத்திடம் பாதிப்பு உண்டாக்கியிருக்கிறது என்பதை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. டாக்டர் மார்ட்டின் அவளிடம் கேள்விகள் கேட்டாலும், அதனால் எந்தப் பிரயோஜனமும் உண்டாகவில்லை. ஒன்று அவள் கேட்காமல் இருக்கலாம். இல்லாவிட்டால் வாயைத் திறக்காமல் இருக்க அவள் தீர்மானித்திருக்கலாம். மூச்சுவிட அவள் மிகவும் சிரமப்பட்டாள். அத்துடன் அவளுக்கு நிமோனியா வந்திருக்குமோ என்று டாக்டர் பயப்பட்டார்.

ப்ளாஸ்ட்டர் இடும்படி கூறிய பிறகு, நாளைக்குப் பார்க்கலாம் என்று கூறிய டாக்டர் அங்கிருந்து கிளம்பினார். அவளை சுயஉணர்வு கொண்டவளாக ஆக்க முயற்சித்ததற்கு மத்தியில் ஒரு சிறிய தவறு நடந்து விட்டது. இவ்வளவு நேரமும் அவளை ஈரத்துணியுடனே படுக்க வைத்திருந்தார்கள். ஆற்று நீர் பனிக்கட்டியைப் போல குளிர்ந்திருந்தது.

இறுதியில் ஷரத்ருத்தைப் பேசச் செய்வதில் மேடம் வெற்றி பெற்றுவிட்டாள். அதற்கு மேடம் சொன்னாள்:

‘‘ஆற்றின் கரையில் மலர்ந்து நிற்கும் நிறைய பூக்களில் சில பூக்களைப் பறிக்க நினைத்திருக்கா ஷரத்ருத். அது எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பதைப் பற்றிய உணர்வு அவளுக்கு அந்த அளவிற்கு இருக்க வாய்ப்பில்லையே! கால் வைக்கக்கூடிய சரியான இடம் என்று அவள் அந்தப் பூக்கள் பூத்திருந்த இடத்தைத் தவறுதலாக நினைச்சிருக்கணும்!


சிறிதும் எதிர்பாராமல் அந்த அப்பிராணிப் பெண் கால் தவறி கீழே விழுந்திருக்கா.’’

இவற்றையெல்லாம் என்னால் நம்ப முடிந்திருந்தால்! நடைபெற்ற அனைத்தும் ஒரு சாதாரண ‘ஆக்ஸிடெண்ட்’ என்று என்னை நானே தேற்றிக் கொள்ள முடிந்திருந்தால்! கனமான மனதைவிட்டு அப்போது எந்த அளவிற்குக் கனமான சுமை கீழே இறங்கியிருக்கும்!

உணவு ருசியாக இருந்தாலும், ஷரத்ருத்தின் முகத்தில் தெரிந்த வினோதமான புன்னகை நிரந்தரமாக என்னுடைய மனதைப் பாடாய்ப் படுத்திக் கொண்டிருந்தது. வேண்டுமென்றே வரவழைக்கப்பட்ட அந்தப் புன்னகையை ஷரத்ருத்தின் முகத்தில் முன்பு எப்போதும் நான் கண்டதில்லை. எனினும், அவள் புதிதாக வரவழைத்த பிரகாசமான புன்னகை அது என்பதைப் புரிந்துகொள்ள நான் முடிந்தவரையில் முயற்சித்தேன். ஷரத்ருத்தின் விழிகளின் ஓரத்திலிருந்து தெரிந்த வினோதமான புன்னகை! அவள் எங்களுடைய சந்தோஷத்தில் பங்கெடுத்துக் கொள்ளவில்லை. எனக்கு முன்னால் வெளிப்படுத்திய ஏதோ ஒரு ரகசியத்தை அவள் கண்டுபிடித்திருப்பதாக நான் உணர்ந்தேன். அவள் மௌனமாக இருந்தால். ஆனால், மற்றவர்களின் முன்னால் பல நேரங்களில் அப்படித்தான் அவள் நடந்துகொள்வாள் என்பதால் ஷரத்ருத்தின் மௌனம் யாரையும் ஆச்சரியப்படுத்தவில்லை.

கடவுளே, அவளுடைய உள்மனதில் என்ன இருக்கிறது என்பதை நான் அறிந்தால் நன்றாக இருக்கும். அதைத் தெரிந்துகொள்ளாமல் என்னால் எப்படி வாழ முடியும்?

அவள் இப்போது வாழ்க்கையை முடித்துக்கொள்ள நினைக்கிறாள் என்றால், காரணம் வேறொன்றுமில்லை. எல்லாவற்றையும் அவள் அறிந்திருக்கிறாள். ஆனால், ஷரத்ருத் தெரிந்துகொண்ட அந்த பயங்கரமான விஷயம் என்ன? அது என்ன, கடவுளே! நான் அவளிடமிருந்து எதையும் மறைத்து வைக்கவில்லையே! எது எப்படி இருந்தாலும் அவள் உயிரைப் போக்கிக் கொள்ளத் தீர்மானித்தது அச்சத்தைத் தரக்கூடிய ஒன்றே. அப்படிச் செய்யக்கூடிய அளவிற்கு திடீரென்று அவள் எதைப் பார்த்துவிட்டாள்? தெய்வமே, ஷரத்ருத்திற்கு...

இரண்டு மணிநேரமாக நான் அவளுடைய தலையணைக்கு அருகில் உட்கார்ந்திருக்கிறேன். என்னுடைய கண்கள், அளவுக்கு மீறிய கவலை காரணமாக மூடியிருக்கும் கண் இமைகள், ஈரத்துடன் கடல் புற்களைப் போல அவளைச் சுற்றித் தலையணையில் பரவிக் கிடக்கும் கூந்தல் ஆகியவற்றை விட்டு சிஜீதுகூட விலகவில்லை... எந்த அளவிற்கு மிகவும் சிரமப்பட்டு அவள் மூச்சு விடுகிறாள் தெரியுமா?

12

ஜுன், 10.

மேடம் இன்று காலையில் என்னை அழைத்திருந்தாள். இல்லாவிட்டாலும்கூட நான் அங்கு போவதற்குத் தயாராகத்தான் இருந்தேன். அமைதியாக இரவைக் கழித்த பிறகு, இறுதியில் ஷரத்ருத்தின் சுய நினைவற்ற தன்மை மாறியது. நான் அவளுடைய அறைக்குச் சென்றபோது அவள் புன்னகைத்தவாறு என்னைத் தன் அருகில் வந்து அமரும்படி சைகை செய்தாள். நான் அவளிடம் எதையும் கேட்கவேண்டும் என்று நினைக்கவில்லை. அவளை எடுத்துக் கொண்டால், நான் எங்கே எதையாவது கேட்டு விடப்போகிறேனோ என்ற பயத்தில் இருந்தது மாதிரி இருந்தாள். அந்தச் சூழ்நிலையை மாற்றுவதற்காக அவள் திடீரென்று கேட்டாள்.

‘‘ஆற்றின் கரையில் நான் பறிக்க விரும்பிய அழகான பூக்கள் இருக்கே. அந்தப் பூக்களின் பெயர் என்ன? எனக்கு ஒரு பூங்கொத்து கொண்டுவந்து தரமுடியுமா? நான் அதை என் படுக்கையில் வைத்திருக்க ஆசைப்படுறேன்.’’

ஷரத்ருத்தின் குரலில் மறைந்திருந்த ரகசியம் என்னை அச்சம் கொள்ளச் செய்தது. இந்த விஷயம் அவளுக்கு நிச்சயம் தெரிந்ததுதான். எனினும், அவள் சற்று மிடுக்கான குரலில் சொன்னாள்:

‘‘என்னால் இப்போது உங்களுடன் பேசமுடியல. நான் மிகவும் சோர்வடைந்து போயிருக்கேன். ஆற்றின் கரைக்குப் போய் ஒரு பூங்கொத்தைப் பறிச்சு எனக்குக் கொண்டு வந்து தாங்க.’’

ஒருமணி நேரத்திற்குப் பிறகு நான் அவளுக்காகப் பூங்கொத்துடன் வந்தபோது மேடம் சொன்னாள்:

‘‘ஷரத்ருத் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறாள். சாயங்காலம் பார்ப்பதுதான் சரியாக இருக்கும்.’’

நான் அவளை மாலை நேரத்தில் பார்த்தேன். அவள் படுத்திருந்தாள். அப்படிக் கூறுவதைவிட படுக்கையில் தலையணையின் உதவியுடன் உட்கார்ந்திருந்தாள் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். இப்போது அவள் தன்னுடைய தலைமுடியைப் பின்னி வாரிக் கட்டியிருந்தாள். அவளுக்காகக் கொண்டு வந்திருந்த பூங்கொத்திலிருந்து ஒரு பூவை எடுத்து நான் அவளுடைய தொங்கிக் கொண்டிருந்த முடியில் வைத்தேன்.

ஷரத்ருத்திற்கு பலமாக காய்ச்சல் அடித்தது. மிகவும் சிரமப்பட்டு அவள் மூச்சு விட்டுக் கொண்டிருந்தாள். நான் கையை அவளுக்கு நேராக நீட்டினேன். தொடர்ந்து சற்று அவளை நெருங்கி நின்றேன்.

சிறிது நேரத்திற்குப் பிறகு அவள் சொன்னாள்:

‘‘நான் உங்களிடம் சில விஷயங்களைச் சொல்ல நினைக்கிறேன். நான் இன்னைக்கு சாயங்காலம் மரணத்தைத் தழுவிட்டா...? இன்னைக்குக் காலையில நான் உங்களிடம் பொய் சொன்னேன். பூக்களை பறிக்க நான் விரும்பவே இல்ல... உண்மையிலேயே நான் விரும்பியது தற்கொலை பண்ணிக்கத்தான் என்று சொன்னால் நீங்க... நீங்க என்னை மன்னிச்சிடுவீங்கள்ல?’’

ஷரத்ருத்தின் மெத்தைகளுக்கருகில் நான் முழங்காலிட்டு அமர்ந்திருந்தேன். அவளுடைய மெலிந்துபோன கை இப்போதும் என் கையில்தான் இருந்தது. திடீரென்று அவள் தன் கையை விடுவித்து அன்புடன் என் தலையை மெதுவாகத் தடவியபோது, கண்களில் அரும்பிய கண்ணீரை மறைக்கவும், ஒரு ஓரத்தில் ஒதுக்கவும் நான் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல.

‘‘நான் அப்படிச் செய்தது சரியில்லைன்னு நீங்கள் நினைக்கிறீங்களா?’’

மௌனம் மட்டுமே என்னுடைய பதிலாக இருந்தது.

அப்போது அவள் மெதுவான குரலில் சொன்னாள்:

‘‘உங்களுடைய இதயத்திலும் வாழ்க்கையிலும் எனக்கு இருந்தது மிகப்பெரிய இடமாச்சே! நான் உங்களிடம் திரும்பி வந்தபோது, சொந்தமென்று நினைச்ச இடம் அப்படி இல்லைன்னு தெரிஞ்சதும், எனக்கு என்னவோ மாதிரி ஆயிடுச்சு. ஆன்ட்டிக்குத்தான் எந்த அளவிற்குக் கவலை! இந்த விஷயத்தை உடனடியா என்னால புரிஞ்சிக்க முடியல. அதாவது - எல்லா விஷயங்களும் தெரிந்த பிறகும் என்மீது அன்பு செலுத்த உங்களை அனுமதிச்சாங்க என்று நினைச்சதுதான் என்னோட மிகப்பெரிய தப்பு. ஆனால், ஆன்ட்டியின் முகம் என் கண்களுக்கு முன்னால் தெரிந்தபோது, அந்த முகத்தில் தெரிந்த கவலையைப் பார்த்தபோது என்னால அதைப் பொறுத்துக்க முடியல. ஆன்ட்டிக்கு இந்த அளவுக்கு மனக்கவலை வந்ததற்குக் காரணம் நான்தானோ! நீங்க கொஞ்சம்கூட தப்பா நினைக்கக்கூடாது.... ம்... ஒரே ஒரு உதவி மட்டும் செய்தால் போதும். தயவு செய்து என்னைப் போகவிடுங்க. அதற்குப் பிறகு ஆன்ட்டிக்கு அவங்களோட சந்தோஷத்தைத் திருப்பிக் கொடுங்க.’’

மெதுவாக தடவிக்கொண்டிருந்ததைத் திடீரென்று நிறுத்தியதும், நான் அவளுடைய உள்ளங்கையைத் தடவினேன். அத்துடன் கண்ணீர் மழையும். பதைபதைத்துப் போய் தன் கையை இழுத்துக் கொண்ட அவள் ஏதோ சிந்தனையில் சிக்குண்டதைப் போல் மெத்தையில் இங்குமங்குமாக அடிக்க ஆரம்பித்தாள்.


‘‘இல்ல... நான் இந்த விஷயத்தை இல்ல உங்களிடம் சொல்ல விரும்பியது... உங்களிடம் கூற நான் ஆசைப்பட்டது இந்த விஷயம் இல்ல...’’ - அவள் சொன்னதையே திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருந்தாள். ஷரத்ருத்தின் நெற்றியில் வியர்வைத் துளிகள் தெரிந்தன. தொடர்ந்து தன்னுடைய சிந்தனைகளை ஒருமுகப்படுத்துவதற்கோ அல்லது கண்பார்வை தெரியாமல் இருந்தபோது தான் எப்படிப்பட்ட நிலைமையில் இருந்தோம் என்பதைப் பற்றி மீண்டும் ஒருமுறை நினைத்துப் பார்ப்பதற்காக சில நிமிடங்களுக்கு அவள் தன் கண்களை மூடினாள். பிறகு மிகுந்த கவலை கொண்ட மனதுடன் அவள் பேசினாலும், மீண்டும் கண்களைத் திறந்தவுடன் அவளுடைய வார்த்தைகளுக்கு வேகம் கூடின.

‘‘நீங்கள் எனக்குப் பிரகாசத்தைத் திரும்பத் தந்தபோது...’’ ஷரத்ருத் சொன்னாள்:

‘‘இந்த அளவிற்கு அழகாக இருக்கும் என்று கனவில்கூட நினைத்திராத ஒளிமயமான உலகத்தை என் கண்கள் பார்த்தன. ஆமாம்.... உண்மையாகச் சொல்லப்போனால் பகல் வெளிச்சத்திற்கு இந்த அளவிற்கு ஒளி இருக்கும் என்றும், சூழல் இந்த அளவிற்கு அழகானதாக இருக்கும் என்றும் நான் கொஞ்சம்கூட நினைக்கல. ஆகாயம் இந்த அளவிற்குப் பரந்து கிடக்கும் என்ற விஷயமும் என் கற்பனையைத் தாண்டி இருந்தது. மனித முகங்கள் இந்த அளவிற்கு ஒளி பொருந்தியதாக இருக்கும் என்பதையும் நான் கொஞ்சம்கூட நினைத்திருக்கவில்லை. உங்களுடைய வீட்டிற்கு வந்தபோது என்னை மிகவும் கவலைக்குள்ளாக்கியது எது தெரியுமா? ஓ! எடுத்தவுடன் எனக்குத் தெரிந்தது கெட்ட விஷயம்தான்.... நம்முடைய பாவம்... அப்படியில்லைன்னு மட்டும் சொல்லிடாதீங்க. உங்களுக்கு ஏசுநாதரின் வார்த்தைகள் ஞாபகத்துல இருக்குதுல்ல...? ‘அறிவு இல்லாமலிருந்தால், நீங்கள் செய்திருக்க மாட்டீர்கள். ஆமாம்... கண்பார்வை இல்லாமலிருந்தால், நீங்கள் பாவம் செய்திருக்க மாட்டீர்கள்.’ அப்படின்னா... இப்போ என்னால் பார்க்க முடியும். வாங்க... எழுந்து இங்கே என் பக்கத்துல வந்து உட்காருங்க. பிறகு நான் சொல்றதை கவனமா கேளுங்க. நான் மருத்துவமனையில் இருந்த நேரத்தில் பைபிளில் இருந்து எனக்கு தெரியாத சில பகுதிகளை வாசிக்க, நான் கேட்டேன். அவற்றில் சிலவற்றை நீங்கள் ஒருமுறைகூட எனக்கு வாசிச்சுக் காட்டல. நான் முழுவதும் திரும்பத் திரும்ப வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்த புனிதர் பாலின் அறிவுரை எனக்கு ஞாபகத்துல இருக்கு... ‘நான் ஒரு காலத்தில் சட்டமே இல்லாமல் வாழ்ந்து கொண்டிருந்தேன். ஆனால், சட்டம் என்ற ஒன்று வந்தவுடன் பாவங்களை அதிகமாகச் செய்து நான் இறந்துவிட்டேன்’ - இவைதான் அவருடைய வார்த்தைகள்.’’

ஷரத்ருத் முழுமையாக உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தாள். இறுதியாகச் சொன்ன வார்த்தைகளை மிகவும் உரத்த குரலில் அவள் சொன்னாள். கிட்டத்தட்ட கூப்பாடு போடுவது மாதிரி.

அறைக்கு வெளியே இருக்கும் யாராவது அதைக் கேட்டிருப்பார்களோ என்று நினைத்து நான் பதைபதைத்துப் போய்விட்டேன். தொடர்ந்து அவள் கண்களை மூடிக்கொண்டு தனக்குள் கூறிக்கொள்வது மாதிரி மெதுவான குரலில் தான் சொன்னதையே திரும்பச் சொன்னாள்:

‘‘பாவங்களை அதிகமாகச் செய்து நான் இறந்துவிட்டேன்.’’

நான் தலையிலிருந்து கால்வரை நடுங்கிவிட்டேன். ஏதோ பயத்தால் என் இதயம் உணர்ச்சியற்றதாகிவிட்டது. நான் அவளுடைய கவனத்தைத் திருப்ப முயற்சித்தேன்.

‘‘யார் உனக்கு அந்தப் பாடத்தை வாசித்துக் காட்டியது?’’

‘‘ஜாக்ஸ் மதம் மாறின விஷயம் உங்களுக்குத் தெரியுமா?’’

ஷரத்ருத்தின் வார்த்தைகளை என்னால் சகிக்க முடியவில்லை.

‘கொஞ்சம் பேசாமல் இருக்கியா? என்று கூறுவதற்காக நான் வாயைத் திறந்தேன். அதற்குள் அவள் சொன்னாள்:

‘‘என் காப்பாளரே, நான் உங்களை மிகவும் சங்கடப்படுத்திக் கொண்டிருக்கிறேன். அதே நேரத்தில் நம் இருவருக்கும் இடையில் உண்மையற்றதற்கு இடம் இருக்கக்கூடாது. நான் ஜாக்ஸைப் பார்த்தப்போ உங்களை அல்ல... மாறாக, அவனைத்தான் காதலிக்கிறேன்னு உடனடியா எனக்குத் தோணுச்சு. அவனுடைய முகம், அப்படியே நான் மனதில் கற்பனை பண்ணி வச்சிருந்த உங்களுடைய முகம் மாதிரியே இருந்தது. நீங்க எதற்கு என்னை ஜாக்ஸுக்கு எதிராகப் பேச வச்சீங்க? ஜாக்ஸுடன் எனக்குத் திருமணம் நடந்திருந்தால்...’’

‘‘ஆனால், இப்போதுகூட நீ அவனைத் திருமணம் செய்து கொள்ளலாமே!’’- நான் காயம்பட்ட இதயத்துடன் சொன்னேன்.

‘‘ஜாக்ஸ் பாதிரியாரா ஆகப் போறான்.’’

அழுத்தமான குரலில் சொன்னாள் ஷரத்ருத். தொடர்ந்து தேம்பித் தேம்பி அழுதவாறு அவள் சொன்னாள்:

‘‘நான் ஜாக்ஸிடம் இதயத்தை சமர்ப்பிக்க ஆசைப்படுகிறேன்.’’

உணர்ச்சிவசப்பட்ட குரலில் அவள் தொடர்ந்து சொன்னாள்:

‘‘நீங்களே சொல்லுங்க. இறப்பதைத் தவிர எனக்கு வேற என்ன வழி இருக்கு? எனக்கு தாகமா இருக்கு. யாரையாவது கூப்பிடுங்க. அய்யோ... என்னால மூச்சுவிட முடியலையே! நீங்கள் இனிமேல் என்னைவிட்டுப் போகலாம். இப்போது எனக்குத் தேவை தனிமைதான். உங்களுடன் பேசிக்கொண்டிருந்தால் அதிக மனஅமைதி கிடைக்கும் என்று நான் எதிர்பார்த்திருந்தேன். இனி நீங்க... இல்ல... இனி நாம விடைபெற்றுக் கொள்வோம். ஆமாம்... விடைபெறுவதற்கான நேரம் வந்துவிட்டது. இனி அதிக நேரம் நான் உங்களுடன் இருக்க முடியாது.’’

நான் ஷரத்ருத்தின் அருகிலிருந்து விலகிப்போய் மேடத்திடம் அவளுக்கு அருகில் இருக்கும்படி சொன்னேன். அவளுடைய உணர்ச்சிவசப்படல் மூலம் ஏதாவது நடக்கக் கூடாதது நடந்துவிடக் கூடாதே என்று நான் பயந்தேன். ஆனால், நான் இருப்பதால் அவளுக்கு ஏதாவது கெடுதல் நடந்தால், அதைப் பார்த்து கொண்டிருக்க என்னால் முடியாது.

‘‘ஷரத்ருத்தின் நிலைமை மோசமானால், என்னை யாரையாவது அனுப்பிக் கூப்பிடுங்க.’’- நான் மேடத்திடம் சொன்னேன்.

13

ஜுன், 11.

ஷரத்ருத்தை உயிருடன் அதிக காலம் பார்க்கக்கூடிய அதிர்ஷ்டம் எனக்கு இல்லாமற் போய்விட்டது. இரவு முழுவதும் அவள் என்னென்னவோ பிதற்றிக் கொண்டிருந்திருக்கிறாள். மொத்தத்தில் - அந்த அப்பிராணிப் பெண்ணின் உடல் மிகவும் தளர்ந்து போய்விட்டது. இன்று பொழுது விடியும் நேரத்தில் அவள் நிரந்தரமாக விடைபெற்றுவிட்டாள். இறுதி மூச்சை விடும்போது, ஜாக்ஸுக்கு தந்தி கொடுக்க வேண்டுமென்று அவள் கேட்டுக் கொண்டிருந்தாள். மேடம் தந்தி அடித்தாள். அவள் இறந்து சிலமணி நேரங்களுக்குப் பிறகு ஜாக்ஸ் வந்து சேர்ந்தான். நேரம் ஆகியும் பாதிரியாரை ஏன் அழைக்கவில்லை என்று என்னிடம் கடுமையாக அவன் கேட்டான். ஆனால், என்னால் அப்படிச் செய்ய முடியவில்லை. லாஸானில் தங்கியிருக்கும்போது, ஜாக்ஸ் கூறியபடி அவள் ப்ராட்டஸ்டன்ட் மதத்தை நிராகரித்த விஷயம் எனக்கு எப்படித் தெரியும்? ஒரே மூச்சில், இருவரின் மத மாற்றத்தைப் பற்றியும் ஜாக்ஸ் என்னிடம் சொன்னான். அந்த வகையில் அவர்கள் இருவருமே ஒன்று சேர்ந்து என்னை ஏமாற்றிவிட்டார்கள்.


வாழ்ந்த காலத்தில் நான் ஜாக்ஸையும் ஷரத்ருத்தையும் எப்போதும் விலகியிருக்கும் படி செய்தேன். அதற்கு இருவரும் சேர்ந்து எனக்கு தந்த பரிசு! என்னிடமிருந்து தப்பித்து, கர்த்தரின் முன்னால் இருவரும் ஒன்று சேர்வது... இதுதான் அவர்கள் கண்டுபிடித்த வழி!

ஆனால், ஜாக்ஸின் மதமாற்றத்திற்குப் பின்னால் செயல்பட்டது. இதயம் அல்ல... மாறாக, மூளை என்று என் மனம் கூறுகிறது.

‘‘அப்பா!’’ - ஜாக்ஸ் சொன்னான்.

‘‘அப்பா, உங்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் கூறுவது, அந்த அளவுக்கு நல்ல ஒரு செயல் அல்ல. ஆனால், உங்களுடைய பாவச்செயல்தான் எனக்கு வழிகாட்டியாக அமைந்தது.’’

இதைச் சொல்லிவிட்டு ஜாக்ஸ் போய்விட்டான். நான் எமிலிருக்கு அருகில் முழங்காலிட்டு அமர்ந்து அவளிடம் எனக்காக பிரார்த்திக்கும்படி சொன்னேன். ஏனென்றால், என் மனைவியின் உதவி அப்போது எனக்குத் தேவையாக இருந்தது.

‘சொர்க்கத்திலிருக்கும் எங்களுடைய பிதாவே...’ - எமிலியின் உதடுகளிலிருந்து வார்த்தைகள் வெளியே வந்தன. என் கண்கள் நீரால் நிறைந்து ததும்பவில்லை. மனம் பாலைவனத்தைவிட வறண்டு போய்விட்டதோ என்று அப்போது எனக்குத் தோன்றியது.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.