
சட்ட திட்டங்கள் காதலிலிருந்து உண்டகின்றன
என்பது உண்மையாக இருக்கும் பட்சம்,
காதலர்கள் அந்த சட்ட திட்டங்களைப் பற்றி
சிறிதும் கவலைப்படுவதே இல்லை
என்பதும் உண்மைதான்.
மெழுகுவர்த்தியை நோக்கி
நேராக பறந்து செல்.
அந்த எரிதல் மிகவும் நெருக்கமானதாகவும்,
மிகவும் குளிர்ச்சியானதாகவும் இருக்கும்.
அது நம்மை அதன் நெருப்புக்குள்
வரும்படி தூண்டும்.
* * *
நீ சேறு படிந்த நீருக்குள்
எந்த அளவிற்கு சிரமப்பட்டு பார்க்கிறாய்
என்பது ஒரு பொருட்டே அல்ல.
நீ நிலவையோ சூரியனையோ
பார்க்கப் போவது இல்லை.
* * *
சில விளக்குகள்
அவை எண்ணெய்யின்
மூலம் எரியும்போது,
வெளிச்சத்தை அளிப்பதைவிட
அதிகமான புகையை
வெளியே விடுகின்றன.
* * *
யார் வசை பாடுகிறார்களோ,
அவர்களிடமிருந்து தப்பி ஓடாதே.
அதேபோல முரண்பாடுகளைக் களையாமல்,
விலகி ஓடாதே.
இல்லாவிட்டால் நீ மிகவும்
பலவீனமானவனாக ஆகி விடுவாய்.
* * *
ஒரு மெழுகுவர்த்தியின்
அழகிலிருந்து ஒரு பட்டுப்பூச்சியைப்
புரிந்து கொள்.
* * *
காதலர்கள் தங்களுக்குள்
ஒரு உண்மை இருக்கிறது
என்பதை உணர்வார்கள்.
அதை பகுத்தறிவாளர்கள் மறுப்பார்கள்.
* * *
விமானம் செல்வதற்கு
பல வழிகள் இருப்பதைப் போல,
புலர்காலைப் பொழுதில்
பிரார்த்தனை செய்வதற்கும்
பல வழிகள் இருக்கின்றன.
* * *
இந்த பிரபஞ்சத்தில் இருக்கும்
ஒவ்வொரு பொருளும்,
உயிரும் ஒரு கண்ணாடி பாத்திரத்தில்
நிறைந்து வழியும் அறிவையும்,
அழகையும் போன்றவையே.
* * *
ஒரே ஒரு மனிதனை
காதலுடன் பார்க்கும்
ஒரு அடக்கமான பெண்-
அதுதான் ஆன்மீக அறிவு.
* * *
மேலோட்டமான உலகம்
எவற்றையெல்லாம்
மிக உயர்ந்தவையாக நினைக்கின்றதோ,
அவை ஆன்மாவின்
உண்மைத்தன்மையில் ஒளிராது.
* * *
உன்னுடைய காலணி
இல்லாத கால்கள்
எங்கு நடக்கின்றனவோ,
அங்கு நான் இருக்க விரும்புகிறேன்.
ஏனென்றால்,
நிற்பதற்கு முன்னால்,
நீ தரையைப் பார்க்கலாம்.
நான் அந்த ஆசீர்வாதத்தை
விரும்புகிறேன்.
* * *
பணம், புகழ்,
வறுத்த மாமிசத்தைக் கடிப்பது -
இவற்றையெல்லாம் விட
இங்கு விரும்புவதற்கு
இன்னும் விஷயங்கள்
இருக்கின்றன.
* * *
ஒரு பறவை
தன் தலையை மேலும் கீழும்
அசைத்துக்கொண்டே
இரையைக் கொத்துவதைப் போல,
தினமும் பிரார்த்தனை
செய்து கொண்டிருக்காதே.
பிரார்த்தனை என்பது
ஒரு முட்டையைப் போன்றது.
உள்ளே செயலற்று இருப்பதை
பொரிக்க செய்வதைப் போல...
* * *
முள்ளில் வாழ்ந்து கொண்டிருக்கும்
மிகவும் அரிதான நறுமணம்-
அதுதான் ரோஜா.
* * *
வார்த்தைகள், பொய்களைக் கொண்டு
முலாம் பூசப்பட்டிருக்கும்போது,
அவை ஒரு பழைய விளக்கில்
விழுந்து கொண்டிருக்கும்
நீர் துளிகளைப் போல ஆகி விடுகின்றன.
திரி வெளிச்சத்தை தரவே தராது.
* * *
நீ சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று
மனிதர்கள் விரும்புகிறார்கள்.
நீ உன்னுடைய வேதனைகளை
அவர்களுக்கு பரிமாறி விடாதே.
* * *
தோட்டத்தைப் பற்றியே
பேசிக்கொண்டிருக்காதே.
திராட்சைக் கனிகளை சாப்பிடு.
* * *
ஒரு கண்ணாடியைப் போல
தெளிவாக இரு.
எதையும் பிரதிபலிக்காதே.
* * *
நம் முன்னோர்களின் வெளிச்சங்கள்
பெரிதாக ஆக்கிரமிக்கவில்லை -
ஆதவனுக்குள் சேர்ந்திருக்கும் அளவிற்கு.
* * *
அனைத்து மனித முகங்களையும்
உன் முகத்தில் வைத்திரு.
அவற்றைக் குறித்து
எந்த முடிவையும் எடுக்காதே.
* * *
உன் வெறுப்புகளை
கண்ணாடியிடம் காட்டி விட்டு அழு.
அப்போதுதான்- உண்மையான கலை பிறக்கிறது.
உண்மையான படைப்பு ஆரம்பமாகிறது.
* * *
ஒரு தையல்காரன்
ஒரு கிழிந்த சட்டையைக் கட்டாயம்
வைத்திருக்க வேண்டும் -
தன் நிபுணத்துவத்தை
அவன் அனுபவரீதியாக பெறுவதற்கு.
* * *
பிச்சைக்காரனின் காதில்
ஒரு குரல்
ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
அது கூறுகிறது -
அருகில் வா.
இரக்கம் உன்னைத் தேடுகிறது!
* * *
நம் கண்ணீர் துளிகள்
பூமியை வளரச் செய்யும்.
வெட்கப்படாதது எதுவோ,
எந்த உண்மையையும்
பார்த்து அச்சப்படுவது
எதுவோ அதை கூர்ந்து பார்.
* * *
யாராவது உங்களுக்காக
தங்கத்தை எண்ணிக் கொண்டிருந்தால்,
கைகளையோ தங்கத்தையோ பார்க்காதீர்கள்.
தருபவரை மட்டுமே பாருங்கள்.
* * *
எகிப்து நாட்டைச் சேர்ந்தவனுக்கு
நைல் நதி இருத்தல் நிறைந்ததாக தெரியும்.
அதுவே ஒரு இஸ்ரேல் நாட்டுக்காரனுக்கு
தெளிந்த நீரோட்டமாக தெரியும்.
ஒருவனுக்கு ஒரு நெடுஞ்சாலையாக தெரிவதே
இன்னொருவனுக்கு பேரழிவாக தெரிகிறது.
* * *
ஒரு ஆணுக்கும்
ஒரு பெண்ணுக்கும்
ஒரு உண்மையான புனித நாள் -
அவர்கள் தங்களைத் தாங்களே
தியாகத்திற்குள் கொண்டு வரும்
அந்த நாள்தான்.
* * *
நான் உன்னுடன்
எப்போதும் இருப்பேன்
என்பதற்கு அர்த்தம் -
நீ கடவுளை எதிர்பார்க்கும்போது
உன் கண்களின் பார்வையில்
கடவுள் இருக்கிறார்.
* * *
தங்களின் கைகளை
வெறுமையில் கொண்டுபோய்
யார் இருக்கச் செய்தவர்களோ,
அவர்களுக்கு பொய் -
உண்மை மனம் -
ஆன்மா எதனுடனும் இனி தொடர்பில்லை.
* * *
நீங்கள் உங்களின் சிறகுகளை
விடுதலை பெறச் செய்து
உங்களின் சந்தோஷ ஆன்மாவை
சுதந்திரமாக்கினால்,
நீங்களும் உங்களைச் சுற்றியிருக்கும்
அனைவரும் புறாக்களைப் போல
பறந்து திரியலாம்.
* * *
மெழுகேற்றப்பட்ட
ஒரு கண்ணாடி
பிரதிபலிக்காமல் இருக்காது.
* * *
ஏதாவது தவறு நேர்ந்தால்,
முதலில் உன்னை நீயே
குற்றம் சொல்லிக் கொள்.
* * *
டேபிளுக்கு முன்னால் அமர்ந்து
யார் சாப்பிடுகிறார்களோ,
அவர்களுக்குத்தான்
ஒரு உணவின் சுவை தெரியும்.
* * *
ஒரு சாலை
ஒரு தனியாக இருக்கும் வீட்டில் முடியலாம்.
ஆனால், அதுவே காதலின் சாலை அல்ல.
காதல் என்பது ஒரு நதியைப் போன்றது.
அதிலிருந்து அள்ளி பருகு.
* * *
உன் ஆன்மா
எதைச் செய்யுமாறு கூறுகிறதோ,
அதை எவ்வளவு சீக்கிரமாக செய்கிறாய்
என்பதுதான் முக்கியம்.
* * *
ஒளிந்து கொள்வதற்கு
ஒரு பொந்தைத் தேடி
உலகமெங்கும் ஓடிக் கொண்டிருக்காதே.
ஒவ்வொரு குகையிலும்
பயங்கரமான மிருகங்கள் இருக்கின்றன.
நீ எப்போது கடவுளுடன்
தனியாக இருக்கிறாயோ,
அப்போதுதான் உண்மையான ஓய்வு
வந்து சேர்கிறது.
* * *
ஒரே விஷயத்தை நிராகரிக்கவும் முடியும்…
ஏற்றுக் கொள்ளவும் முடியும்.
ஒரு ஜாடியில் ஆயிரம் வருடங்களாக
இருந்து கொண்டிருக்கும் ஒயின்,
ஒரே ஒரு வருடம் மட்டுமே
வயது கொண்டிருக்கும் காதலை விட
குறைவான சுவையையே கொண்டிருக்கும்.
* * *
நீ காதலை காதலிக்கும் பட்சம்,
உன்னையே நீ பார்த்துக் கொள்.
இந்த காதலுடன் அது எப்படி இருக்கிறது?
நான் உன் உலகத்தைப் பார்க்கிறேன்…
உன்னை அல்ல.
* * *
அறிவை அடைந்தவர்கள்,
பார்வையாளர்கள்
அதை விரும்புவார்களோ இல்லையோ
என்று கவலைப்படுகிறார்கள்.
புகழ் பெறுவதற்கான ஒரு கருவியாக
அது இருக்கிறது.
* * *
வெளியே செல்ல வேண்டிய அவசியமே இல்லை.
உருகும் பனியாக இரு.
உன்னை நீயே சுத்தமாக்கிக் கொள்.
* * *
நான் ஒரு வெறும் அம்பு.
உன்னுடைய வில்லில் என்னைப் பொருத்து.
நான் பறந்து கொள்கிறேன்.
* * *
சூரியன் நெருப்பில்
தாடை தொடும் வண்ணம் நின்று கொண்டிருக்கிறது.
அதனால் நமக்கு பகல் வெளிச்சம் கிடைக்கிறது.
* * *