Logo

சுராவின் முன்னுரை

Category: ஆரோக்கியம்
Published Date
Written by சுரா
Hits: 6028
suravin munnurai

நலம் தரும் நல்லெண்ணெய்சுரா(Sura)
(ஆயுள்
காக்கும் ஆயில் புல்லிங்...)

லக்கிய மொழிபெயர்ப்பு நூல்களையும், சினிமா சார்ந்த திறனாய்வுக் கட்டுரைகளையும் மட்டுமே எழுதிக்கொண்டு  இருந்த நான், உடல்நலன் குறித்து எழுதும் முதல் நூல், ‘நலம் தரும் நல்லெண்ணெய்.’

நல்லெண்ணெய்யில் சமையல் செய்தால் உடலுக்கு நலம் தரும் என்பது அனைவரும் அறிந்த செய்தி.

ஆனால், நல்லெண்ணெய்யை வாயில் ஊற்றி கொப்பளிப்பதன் மூலமும் உடல் ஆரோக்கியம் பெறமுடியும் என்பதைப் புரிந்துகொண்டதால் மட்டுமே, இந்த நூலை என்னால் எழுத முடிந்தது.

நல்லெண்ணெய்யில் வாய் கொப்பளிப்பது ‘ஆயில் புல்லிங்’ என்று கூறப்படுகிறது. ‘ஆயில் புல்லிங்’ செய்வதால் உடலில் உள்ள பல நோய்களும் குணமாகின்றன. அதனால், ‘ஆயில் புல்லிங்’கை எல்லோரும் செயல்படுத்துவது நல்லது என்று நான் நினைத்தேன். அந்த நினைப்பில் உதயமானதுதான் இந்த நூல்.

இதைப் படிப்பவர்கள் நல்லெண்ணெய்யை தங்கள் வாழ்க்கையில் ஓர் அங்கமாக இணைத்துக் கொண்டு, தங்களின் உடல் நலனைப் பாதுகாத்துக்கொள்ளும் சூழ்நிலை உண்டானால், இந்த நூலின் நோக்கம் நிறைவேறிவிட்டது என்று அர்த்தம்.

இந்த நல்ல நூலை வெளியிட முன் வந்த விகடன் பிரசுரத்துக்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி.

அன்புடன்,

சுரா(Sura)

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.