
நலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)
(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)
அந்தக் காலத்தில் வெளியூர்ப் பயணம் போகும்போது கையோடு கட்டுச்சோற்றை எடுத்துச் செல்வது நம்முடைய முன்னோர் வழக்கம். சமையலுக்கு நல்லெண்ணெய்யைப் பயன்படுத்துவதால் இரண்டு நாட்களானாலும், கட்டுச்சோறு கெடாமலேயே சுவையாக இருக்கும்.
உணவுப் பண்டங்களில் நல்லெண்ணெய் இருந்தால், பாக்டீரியா போன்ற நுண்கிருமிகள் எதுவும் உணவுப் பொருட்களை அண்டாது.
நம்முடைய முன்னோர் இந்த உண்மையைப் புரிந்துகொண்டனர். அதனால்தான் அன்று முதல் இன்றுவரை ஊறுகாய் தயாரிப்பில் நல்லெண்ணெய்யைப் பிரதானமாகப் பயன்படுத்தி வருகிறார்கள். நல்லெண்ணெயில் ஊறுகாய் தயாரித்தால் பல மாதங்களுக்கு கெட்டுப் போகாமல் அப்படி இருக்கும்!