
நலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)
(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)
நியூயார்க்கில் உள்ள அருங்காட்சியகத்தில் எகிப்து நாட்டைச் சேர்ந்த இறந்த உடல்களை (மம்மிக்கள்) பாடம் செய்து வைத்திருக்கின்றனர். அந்த உடல்களை, சமீபத்தில் உடலியல் நிபுணர்கள் ஆராய்ச்சி செய்து பார்த்துவிட்டு சில அறிவியல் உண்மைகளை வெளியிட்டார்கள்.
எகிப்தியர்கள் மிகவும் குறைந்த வயதுகளிலேயே மரணத்தைத் தழுவியிருக்கிறார்கள்.
அவர்களுடைய பற்கள் நோயால் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. பற்கள் பாதிக்கப்பட்டு இருந்ததால்தான், இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. மூட்டு வலியும் இருந்திருக்கிறது. அவர்கள் வெகுசீக்கிரமே மரணமடைந்து இருக்கிறார்கள்.
எகிப்தியர்கள் இதய நோயால் குறைந்த வயதில் இறந்திருக்கிறார்கள் என்பதற்கு, அவர்களின் பற்களில் நோய் இருந்திருக்கிறது என்பதுதான் காரணம் என்றால், வாயையும் பற்களையும் நாம் எந்த அளவுக்கு பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க வேண்டும்? இந்த விஷயத்தில் நம்மில் எத்தனைப் பேர் அக்கறையுடன் இருக்கிறோம்?
நாம் ஒவ்வொருவரும் நல்லெண்ணெய்யால் வாய் கொப்பளித்து ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.