
நலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)
(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)
சில மாதங்களுக்கு முன், மதுரையில் இருந்து சென்னைக்கு ரயிலில் பயணம் செய்துகொண்டு இருந்தேன். அப்போது சற்றும் எதிர்பாராமல் ‘இதயம்‘ நிறுவனத்தின் அதிபர் திரு வி.ஆர்.முத்து அவர்களைச் சந்திக்க நேரிட்டது. நான் பார்த்த,‘இதயம் வெல்த்’ கருத்தரங்கத்தைப் பற்றியும், அதில் பலரும் நல்லெண்ணெய்யின் சிறப்புப் பற்றி பேசியதையும் அவரிடம் கூறினேன். அதைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்த அவர், என்னிடம் ஒரு சம்பவத்தைக் கூறினார்:
“உடுமலைப்பேட்டையில் சில நாட்களுக்கு முன் ஒரு குடும்பத்தினரை நான் சந்திக்கவேண்டிய சந்தர்ப்பம். அப்போது அவர்கள் இல்லத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியை என்னிடம் பகிர்ந்துகொண்டார்கள். அவர்களது 14 வயது மகள், மன வளர்ச்சி குறைந்த சிறப்புக் குழந்தை. அவர்கள் இல்லத்தில் எப்போதும் சமையலுக்கு இதயம் நல்லெண்ணெய்யை மட்டுமே பயன்படுத்துவது வழக்கம்! இதயம் நல்லெண்ணெய்யில் தோசை வார்த்துக் கொடுக்கும்போது, தோசை ருசியாக இருக்கவே, அதை அவர்களுடைய மகள் விரும்பி சாப்பிடுவது உண்டாம்.
அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மளிகைக் கடையில் ஒருநாள், இதயம் நல்லெண்ணெய் இருப்பு தீர்ந்து போய்விட்டதால், வேறு ஏதோ எண்ணெய்யை அவசரத்துக்கு வாங்கியிருக்கிறார்கள். அதைப் பயன்படுத்தி தோசை சுட்டிருக்கிறார்கள்.
ஆனால், அந்தச் சிறுமிக்கு தோசை சாப்பிடுவதில் ஆர்வம் இல்லாமல் போய்விட்டது. தோசையைச் சுட்டுவைத்தால், அதைக் கையால்கூட தொடவில்லை. ‘ஒரு வேளை, எண்ணெய் மாற்றம்தான் காரணமாக இருக்குமோ’என அவர்களுக்கு சந்தேகம்.
அதன்பிறகு, அந்தச் சிறுமியின் பார்வையில் படும்படி இதயம் நல்லெண்ணெய் லேபிள் ஒட்டப்பட்ட பாட்டிலில் அவர்கள் வாங்கிய வேறு ஏதோ ஒரு எண்ணெய்யை ஊற்றி, தோசை வார்த்து கொடுத்திருக்கிறார்கள். அந்த தோசையையும் சாப்பிட அவர் மறுத்துவிட்டார்.
அப்போது அவர்களுக்கு நிச்சயமாக புரிந்துவிட்டது,‘எண்ணெய் மாற்றம்தான், மகள் சாப்பிட மறுப்பதற்கு காரணம்’என்று. பிறகு இதயம் நல்லெண்ணெய் வாங்கி தோசை வார்த்திருக்கிறார்கள். பழையபடி, சிறுமி தோசையை விருப்பத்துடன் சாப்பிட்டிருக்கிறார்.
இந்தத் தகவல் எனக்கு கிடைத்தபோது நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், இதயம் நல்லெண்ணெய் மக்கள் மனதில் எந்த அளவுக்கு இடம் பிடித்திருக்கிறது என்பதையும், அதை எவ்வளவு தரத்துடன் தரவேண்டும் என்ற பொறுப்பு உணர்வையும் உணர்ந்தேன்.”
‘இதயம்’ நிறுவன அதிபர் இப்படிக் கூறியபோது, இதயம் நல்லெண்ணெய் நல்ல தரத்துடன் இருப்பதற்கான காரணத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.
சில நாட்களுக்கு முன்பு புகழ்பெற்ற விளம்பரப் படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் ஆகியவற்றின் இயக்குனரான திரு.லேகா ரத்னகுமார் அவர்களுடன் நான் குற்றாலத்துக்குச் சென்றிருந்தேன். அவர் இயக்கத்தில் அமெரிக்காவில் படமாக இருக்கும் திரைப்படத்தின் கதை விவாதத்துக்காக நாங்கள்‘குற்றாலம் ஹெரிடேஜ்’ என்ற விடுதியில் பத்து நாட்கள் தங்கியிருந்தோம்.அங்குள்ள மசாஜ் நிலையத்தில் பணியாற்றும் ஒருவர் ஒருநாள் எங்களிடம் வந்து கூறினார்:
“இரண்டு மாதங்களுக்கு முன்பு ஈரோட்டிலிருந்து ஒரு பேருந்து உரிமையாளர் இங்கு வந்திருந்தார். வந்த மறுநாளே அவர் என்னை அழைத்து, ‘இதயம் வெல்த்’ வாங்கி வரும்படி கூறினார். தினந்தோறும் ‘ஆயில் புல்லிங்’ செய்வாராம். வரும்போது கொண்டுவர மறந்துவிட்டாராம். நான் தென்காசிக்குச் சென்று இதயம் வெல்த் பாக்கெட்டுகளை வா ங்கி வந்து கொடுத்தேன். நான், அதைக் கொண்டுவரும் வரை அவர் பல்கூட துலக்கவில்லை”. அந்தப் பணியாளர் அவ்வாறு கூறியதும், ‘ஆயில் புல்லிங்’ மீது பேருந்து உரிமையாளர் கொண்டிருந்த ஈடுபாட்டைக் கண்டு நான் மெய்சிலிர்த்துப் போனேன்.