
பனீர் குழம்பு
(Paneer Curry)
தயாரிக்கும் நேரம் - 30 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் - 35 நிமிடங்கள்
6 நபர்களுக்கு
தேவையான பொருட்கள் :
• பனீர் துண்டுகள் - 500 கிராம்
• முந்திரிப்பருப்பு - 20
• கசகசா - 2 மேஜைக்கரண்டி
• தக்காளி - 2
• பெரிய வெங்காயம் - 6
• தயிர் - 1 கப்
• பால் - 100 மில்லி லிட்டர்
• மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
• கரம்மசாலாத்தூள் - 1 தேக்கரண்டி
• உப்புத்தூள் - தேவையான அளவு
• இதயம் நல்லெண்ணெய் - 300 மில்லி லிட்டர்
செய்முறை :
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பனீர் துண்டுகளைப் போட்டுப் பொரித்து எடுத்து, தனியாக வைக்கவும்.
முந்திரிப்பருப்பையும், கசகசாவையும் அரைத்துக் கொள்ளவும்.
ஒரு டம்ளர் தண்ணீரைக் கொதிக்க வைத்து, தக்காளியைப் போட்டு ஐந்து நிமிடங்கள் ஆனதும் தக்காளியை எடுத்து, ஆறியபின் நறுக்கி வைக்கவும்.
மற்றொரு வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம் போட்டு சிவக்க வதக்கி, ஆறியபின் அரைத்துக் கொள்ளவும்.
மற்றொரு வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அரைத்த வெங்காயத்தை வதக்கவும்.
பின் தயிர், தக்காளி சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கவும்.
எண்ணெய் நிரிந்ததும் அரைத்த முந்திரிப்பருப்பு, கசகசாவை சேர்த்துக் கிளறி, பால் ஊற்றவும்.
உப்பு, மிளகாய்த்தூள், கரம்மசாலாத்தூள் சேர்க்கவும்.
பொரித்து வைத்துள்ள பனீர் துண்டுகளை சேர்த்து, மிதமான தீயில் வைத்து ஐந்து நிமிடங்கள் ஆனபின் இறக்கி பரிமாறவும்.