
விருதுநகர் மீன் குழம்பு
(Grandma’s Fish Gravy)
தயாரிக்கும் நேரம் - 15 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் - 20 நிமிடங்கள்
6 நபர்களுக்கு
தேவையான பொருட்கள் :
• வஞ்சர மீன் - 1 கிலோ
• சின்ன வெங்காயம் (உரித்தது)- 200 கிராம்
• சீரகம் - 6 தேக்கரண்டி
• புளி - 125 கிராம்
• மிளகாய்த்தூள் - 5 தேக்கரண்டி
• மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
• உப்புத்தூள் - தேவையான அளவு
• இதயம் நல்லெண்ணெய் - 250 மில்லி லிட்டர்
செய்முறை :
மீனை கனமான துண்டுகளாக நறுக்கி, சுத்தம் செய்து கொள்ளவும்.
புளியைத் தண்ணீரில் ஊற வைத்து, கரைத்து, வடிகட்டிக் கொள்ளவும்.
சீரகத்தையும் வெங்காயத்தையும் தனித்தனியாக பரபரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் புளி கரைசல், அரைத்த மசாலா, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
அதனுடன் பாதி அளவு இதயம் நல்லெண்ணெய் மட்டும் ஊற்றவும்.
குழம்பு ஓரளவு கெட்டியானதும் மீனையும், மீதமுள்ள இதயம் நல்லெண்ணெயையும் சேர்க்கவும்.
மீன் துண்டுகள் வெந்து, குழம்பிலிருந்து எண்ணெய் பிரிந்ததும் இறக்கி பரிமாறவும்.