
கோழி மசாலா வறுவல்
(Chicken Masala Fry)
தயாரிக்கும் நேரம் - 50 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் - 20 நிமிடங்கள்
4 நபர்களுக்கு
தேவையான பொருட்கள் :
• சுத்தம் செய்த கோழிக்கறித் துண்டுகள் - அரை கிலோ
• பெரிய வெங்காயம் - 1
• தக்காளி - 1
• தயிர் - 3 மேஜைக்கரண்டி
• எலுமிச்சைச்சாறு - 1 தேக்கரண்டி
• மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
• மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
• இஞ்சி - பூண்டு (அரைத்தது) - 1 தேக்கரண்டி
• தனியாத்தூள் - 1 தேக்கரண்டி
• கரம்மசாலாத்தூள் - 3 மேஜைக்கரண்டி
• சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
• உப்பு - தேவையான அளவு
• இதயம் நல்லெண்ணெய் - 100 மில்லி லிட்டர்
செய்முறை :
வெங்காயம், தக்காளி இவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கோழித் துண்டுகளுடன் தயிர், எலுமிச்சைச்சாறு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், அரைத்த இஞ்சி, பூண்டு, தனியாத்தூள், கரம்மசாலாத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய பொருட்களைப் போட்டு வதக்கவும்.
அதன்பின், ஊற வைத்துள்ள கோழித் துண்டுகளைச் சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
மிதமான தீயில் வைத்து, கோழிக்கறி வெந்து, சிவக்க வதங்கி, எண்ணெய் பிரிந்தவுடன் இறக்கி பரிமாறவும்.