
முட்டை மசாலா
(Egg Gravy)
தயாரிக்கும் நேரம் - 45 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் - 20 நிமிடங்கள்
6 நபர்களுக்கு
தேவையான பொருட்கள் :
• வேக வைத்த முட்டை - 6
• பெரிய வெங்காயம் - 2
• தக்காளி - 2
• பச்சை மிளகாய் - 2
• தனியாத்தூள் - 4 தேக்கரண்டி
• மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
• மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
• சீரகத்தூள் - 2 தேக்கரண்டி
• மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
• தேங்காய் துறுவல் - 3 மேஜைக்கரண்டி
• தயிர் - 1 மேஜைக்கரண்டி
• உப்பு - தேவையான அளவு
• இதயம் நல்லெண்ணெய் - 50 மில்லி லிட்டர்
செய்முறை :
வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
பச்சை மிளகாயின் நடுவே கீறிக் கொள்ளவும்.
தனியாத்தூள், மிளகுத்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், தேங்காய் துறுவல் இவற்றை வழுவழுப்பாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
அரைத்த மசாலா, தயிர் சேர்த்து நன்றாக வதக்கவும்.
சிறிதளவு தண்ணீர் ஊற்றி, உப்பு போடவும்.
கெட்டியானதும், வேக வைத்த முட்டைகளை போட்டுக் கிளறி, இறக்கி பரிமாறவும்.