
உளுந்து வடை
(Urad Dal Vada)
தயாரிக்கும் நேரம் - 30 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் - 20 நிமிடங்கள்
6 நபர்களுக்கு
தேவையான பொருட்கள் :
• உளுந்தம் பருப்பு - 200 கிராம்
• பெரிய வெங்காயம் - 1
• பச்சை மிளகாய் - 2
• உப்பு - தேவையான அளவு
• இதயம் நல்லெண்ணெய் - 300 மில்லி லிட்டர்
செய்முறை :
உளுந்தம் பருப்பை ஊற வைத்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து, கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
வெங்காயம், பச்சை மிளகாய் இவற்றை நறுக்கிக் கொள்ளவும்.
மாவுடன் நறுக்கிய பொருட்கள், உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மாவில் சிறிதளவு எடுத்துத் தட்டி நடுவில் விரலால் துளை போட்டுப் பொரிக்கவும்.
ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பிப் போட்டு, பொன் நிறமானதும் எடுத்து சட்னியுடன் பரிமாறவும்.