
தக்காளி சட்னி
(Tomato Chutney)
தயாரிக்கும் நேரம் - 15 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் - 20 நிமிடங்கள்
5 நபர்களுக்கு
தேவையான பொருட்கள் :
• தக்காளி - 500 கிராம்
• சின்ன வெங்காயம் - 20
• பூண்டு - 5 பல்
• கடலைப் பருப்பு - 1 மேஜைக்கரண்டி
• உளுந்தம் பருப்பு - 1 மேஜைக்கரண்டி
• சிகப்பு மிளகாய் - 6
• புளி - 2 கோலி அளவு
• தேங்காய் துறுவல் - 2 மேஜைக்கரண்டி
• கடுகு - 1 தேக்கரண்டி
• கறிவேப்பிலை - 1 ஆர்க்கு
• உப்பு - தேவையான அளவு
• இதயம் நல்லெண்ணெய் - 100 மில்லி லிட்டர்
செய்முறை :
தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயத்தையும் பூண்டையும் உரித்துக் கொள்ளவும்.
வாணலியில் மூன்று மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பு போட்டு சிவந்ததும் தக்காளி, வெங்காயம், பூண்டு, சிகப்பு மிளகாய், புளி, தேங்காய் துறுவல் இவற்றைப் போட்டு நன்றாக வதக்கி இறக்கவும்.
ஆறியபின் உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
மற்றொரு வாணலியில் மீதமுள்ள இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, அரைத்த தக்காளி கலவையைப் போட்டு, எண்ணெய் நிரிந்ததும் இறக்கி பரிமாறவும்.