
உருளைக்கிழங்கு - கறிவேப்பிலை வறுவல்
(Potato Curry Leaves)
தயாரிக்கும் நேரம் - 30 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் - 30 நிமிடங்கள்
5 நபர்களுக்கு
தேவையான பொருட்கள் :
• உருளைக்கிழங்கு - 500 கிராம்
• இஞ்சி, பூண்டு அரைத்தது - 2 தேக்கரண்டி
• சோம்பு - 2 தேக்கரண்டி
• தனியாத்தூள் - - 2 தேக்கரண்டி
• மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
• மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
• மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
• சின்ன வெங்காயம் - 30
• காஷ்மீரி மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
• கறிவேப்பிலை - - 20 ஆர்க்கு
• உப்பு - தேவையான அளவு
• இதயம் நல்லெண்ணெய் - 100 மில்லி லிட்டர்
செய்முறை :
உருளைக்கிழங்கை குழையாமல் வேக வைத்து, தோல் நீக்கி வட்ட வடிவங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் இரண்டு மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், அரைத்த இஞ்சி, பூண்டு, சோம்பு, தனியாத்தூள், மிளகாய்த்தூள், மிளகுத்தூள், மஞ்சள் தூள், வெங்காயம் இவற்றைப் போட்டு இளம் சிவப்பாக வதக்கி, அரைத்துக் கொள்ளவும்.
இத்துடன் காஷ்மீரி மிளகாய்த் தூள், உப்புத்தூள் கலந்து கொள்ளவும்.
இக்கலவையை நறுக்கிய உருளைக்கிழங்குகளின் மீது தடவி வைக்கவும்.
முப்பது நிமிடங்கள் கழித்து, வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மசால் தடவிய உருளைக்கிழங்குகளைப் போட்டு மிதமான தீயில் வைத்து வறுத்து எடுத்து தனியாக வைக்கவும்.
மற்றொரு வாணலியில் மூன்று மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலையைப் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
வறுத்து வைத்துள்ள உருளைக்கிழங்குகளை பரிமாறும் தட்டில் பரவலாக வைத்து, இவற்றின் மீது கறிவேப்பிலையைப் போட்டுப் பரிமாறவும்.