
உருளைக்கிழங்கு பஜ்ஜி
(Potato Bajji)
தயாரிக்கும் நேரம் - 35 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் - 20 நிமிடங்கள்
6 நபர்களுக்கு
தேவையான பொருட்கள் :
• உருளைக்கிழங்கு - 300 கிராம்
• கடலை மாவு - 150 கிராம்
• அரிசி மாவு - 2 மேஜைக்கரண்டி
• பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை
• உப்பு - தேவையான அளவு
• இதயம் நல்லெண்ணெய் - 300 மில்லி லிட்டர்
செய்முறை :
உருளைக் கிழங்கை மெல்லிய வட்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
கடலை மாவு, அரிசி மாவு, பெருங்காயத் தூள், உப்பு இவற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, கலந்து கொள்ளவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் உருளைக்கிழங்குத் துண்டுகளை ஒவ்வொன்றாக மாவில் நனைத்து, எண்ணெய்யில் போட்டுப் பொரித்து எடுத்துப் பரிமாறவும்.