
குழிப்பணியாரம்
(Kuzhi Paniyaram)
தயாரிக்கும் நேரம் - 35 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் - 15 நிமிடங்கள்
4 நபர்களுக்கு
தேவையான பொருட்கள் :
• பச்சரிசி -- 200 கிராம்
• புழுங்கலரிசி - 200 கிராம்
• உளுந்தம் பருப்பு - 50 கிராம்
• வெந்தயம் - அரை தேக்கரண்டி
• பெரிய வெங்காயம் - 1
• பச்சை மிளகாய் - 2
• கடுகு - 1 தேக்கரண்டி
• உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி (தாளிப்பதற்கு)
• உப்பு - தேவையான அளவு
• இதயம் நல்லெண்ணெய் - 200 மில்லி லிட்டர்
தேவையான பொருட்கள் :
பச்சரிசி, புழுங்கலரிசி, உளுந்தம் பருப்பு, வெந்தயம் இவற்றைத் தண்ணீரில் ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும்.
உப்பு சேர்த்து, நன்றாகக் கலந்து இரவு முழுவதும் மூடி வைக்கவும்.
மறுநாள் காலையில், பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் இவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் ஒரு மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுந்தம்பருப்பு போட்டுத் தாளிக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கி, மாவுடன் கலந்து கொள்ளவும்.
குழிப்பணியாரச் சட்டியின் ஒவ்வொரு குழியிலும் சிறிதளவு இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் குழியின் அரை பாகத்திற்கு மாவை ஊற்றவும்.
மறுபடியும் இதயம் நல்லெண்ணெய் சுற்றிலும் ஊற்றவும்.
ஒரு பக்கம் வெந்ததும், மறுபக்கம் திருப்பிப் போட்டு பொன்நிறமானதும் எடுத்து, சட்னியுடன் பரிமாறவும்.