Logo

காராமணி - பனீர் மஸாலா

Category: சமையல்
Published Date
Written by சித்ரலேகா
Hits: 1706

காராமணி - பனீர் மஸாலா

(Karamani – Paneer Masala)

 

தேவையான பொருட்கள் :

வெள்ளை காராமணி : 200 கிராம்

பனீர் : 1 பாக்கெட்

குடமிளகாய் : 1

பெரிய வெங்காயம் : 1

தக்காளி : 2

இஞ்சி : 2 அங்குலம்

பூண்டு : 6 பல்

சீரகத்தூள் : 3 தேக்கரண்டி

மிளகாய்தூள் : 1 தேக்கரண்டி

தனியாதூள் : 3 தேக்கரண்டி

கரம் மஸாலாதூள் : 1 தேக்கரண்டி

ஜாதிக்காய் தூள் : 1/2 தேக்கரண்டி

சிகப்பு மிளகாய் : 3

சுத்தம் செய்து நறுக்கிய கொத்தமல்லித்தழை : 1 மேஜைக்கரண்டி

கருவேப்பிலை : சிறிது

உப்பு : தேவையான அளவு

இதயம் நல்லெண்ணெய் : 2 மேஜைக்கரண்டி

செய்முறை :

வெள்ளை காராமணியை வேக வைத்துக் கொள்ளவும்.

குடமிளகாயை சதுர வடிவமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

சிகப்பு மிளகாயை கிள்ளி வைக்கவும். பனீரை சதுர வடிவமாக நறுக்கிக் கொள்ளவும்.

அகன்ற வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சிகப்பு மிளகாய், சோம்பு, கருவேப்பிலை போட்டுத் தாளித்து, வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.

வதங்கியபின் குடமிளகாய் துண்டுகளைப் போட்டு வதக்கவும்.

இத்துடன் மிளகாய்தூள், ஜாதிக்காய்தூள், தனியாதூள், சீரகத்தூள், கரம் மஸாலாதூள், இவற்றைப் போட்டு இரண்டு நிமிடங்கள் வதக்கி, வேகவைத்துள்ள காராமணியைப் போட்டுக் கிளறவும், தேவைப்பட்டால் சிறிதளவு சுடுதண்ணிர் ஊற்றி தேவையான அளவு உப்பு போடவும்.

அனைத்தும் கலந்ததும் பனீர் துண்டுகளைப் போட்டு இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் வைத்துக் கிளறி, கொத்தமல்லித்தழை போட்டு இறக்கி உபயோகிக்கவும்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.