Logo

புதினா சப்பாத்தி

Category: சமையல்
Published Date
Written by சித்ரலேகா
Hits: 1994

புதினா சப்பாத்தி

(Mint Roti)

 

தேவையான பொருட்கள் :

மைதா மாவு : 250 கிராம்

பெரிய வெங்காயம் : 1

சுத்தம் செய்து நறுக்கிய புதினா இலைகள் : 6 மேஜைக்கரண்டி

சுத்தம் செய்து நறுக்கிய கொத்தமல்லித்தழை : 2 மேஜைக்கரண்டி

பால் : தேவையான அளவு

தயிர் : 1 மேஜைக்கரண்டி

ஈஸ்ட் (Yeast) : 1/2 தேக்கரண்டி

ஓமம் : 2 தேக்கரண்டி

பேக்கிங் பவுடர் (Baking Powder) : 1/2 தேக்கரண்டி

மிளகாய்தூள் : 1 தேக்கரண்டி

உப்பு : தேவையான அளவு

இதயம் நல்லெண்ணெய் : 5 மேஜைக்கரண்டி

செய்முறை :

ஈஸ்ட்டை சிறிதளவு வெதுவெதுப்பான தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்.

மைதாமாவில் உப்புத்தூள், தயிர், கரைத்து வைத்துள்ள ஈஸ்ட், பேக்கிங் பவுடர், பால் இவற்றை ஊற்றி மாவைப் பிசையவும். மாவு அதிக தளர்த்தியாக இல்லாமல் கவனம் கொள்ள வேண்டும்.

பிசைந்த மாவுடன் சிறிதளவு இதயம் நல்லெண்ணெய் ஊற்றி மறுபடியும் நன்றாகப் பிசைந்து, மாவை ஒரு பாத்திரம் அல்லது டப்பாவில் போட்டு இறுக்கமாக மூடி வைக்கவும்.

நான்கு மணிநேரம் வரை அப்படியே ஊறவிடவும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

புதினா இலைகள், கொத்தமல்லித்தழை, வெங்காயம், மிளகாய்தூள், தேவையான அளவு உப்புத்தூள், ஓமம் இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து வைக்கவும்.

பிசைந்து வைத்துள்ள மாவை சப்பாத்தியாக தேய்க்கவும்.

புதினா கலவையை பரவலாக தூவியபின் மறுபடியும் ஒரு முறை பூரிக்கட்டையால் தேய்க்கவும். புதினா கலவை சப்பாத்தியுடன் நன்றாக ஒட்டிக் கொள்ளும். விரல்களால் ஒரு முறை சப்பாத்தியை அழுத்திவிடவும்.

தோசைக்கல்லைக் காயவைத்து, சூடேறியதும் சப்பாத்தியைப் போடவும். சுற்றிலும் சிறிதளவு இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, ஒவ்வொரு புறமும் திருப்பிப் போட்டு எடுத்து உபயோகிக்கவும்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.