Logo

திருமணத்தில் தடையா? அதற்கான பரிகாரங்கள்

Category: ஜோதிடம்
Published Date
Written by சுரா
Hits: 2710

திருமணத்தில் தடையா?
அதற்கான பரிகாரங்கள்
- மகேஷ் வர்மா

பெண்களின் திருமண விஷயத்தில் பல நேரங்களில் தடைகள் உண்டாகின்றன. அதற்கான பரிகாரங்கள் என்ன?

ஒரு பெண் குழந்தை வீட்டில் பிறந்து விட்டால், அவளுடைய பெற்றோர் வீட்டில் தன் மகள் வளர்ந்து பெரியவளாக ஆகும்போது, அவளுக்கு நல்ல மணமகன் கிடைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அவளைப் பற்றிய கனவுகளுடனே அவர்கள் எப்போதும் இருப்பார்கள்.

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் லக்னாதிபதி, 2 க்கு அதிபதி, 7 க்கு அதிபதி நல்ல இடத்தில் இருந்தால், அல்லது உச்சமாக இருந்தால், சுய வீட்டில் இருந்தால், குருவால் பார்க்கப்பட்டால், அவர்களுக்கு திருமணம் சீக்கிரம் நடக்கும். நல்ல கணவர் வருவார். சந்தோஷமான வாழ்க்கை வாழ்வார்கள்.

பெண்ணின் ஜாதகத்தில் சுக்கிரன், சந்திரனுடன் லக்னத்தில், 2 இல், 11 இல் அல்லது 9 இல் இருந்தால், அவர்களுக்கு சீக்கிரமே திருமணம் நடக்கும். 2 க்கு அதிபதி, சுக்கிரன் – சந்திரனுடன் இருந்தால், அவர்களுக்கு திருமணம் சீக்கிரம் நடக்கும். 2 இல் சுக்கிரன் இருந்து, குருவால் பார்க்கப்பட்டால், அவர்களுக்கு சீக்கிரம் திருமணம் நடக்கும். 2 க்கும் 7 க்கும் அதிபதி, சுக்கிரனுடன் இருந்தால், திருமணம் சீக்கிரம் நடக்கும். சுக்கிர தசையில் சந்திர புக்தி நடக்கும்போது, திருமணத்திற்கு வாய்ப்பு இருக்கிறது.

சுக்கிரன், செவ்வாயுடன் லக்னத்திலோ, 4 இலோ, 7, 8 இலோ இருந்தால், திருமணம் தடைபடும். சுக்கிரன் – ராகு – சனி 1, 4, 7, 8 இல் இருந்தால், திருமணத் தடை உண்டாகும். செவ்வாய், ராகு லக்னத்தில், 7 இல், 12 இல் இருந்தால், திருமண தடை உண்டாகும். செவ்வாய், சூரியன் லக்னத்தில், 7 இல், 12 இல் இருந்தால், திருமண தடை உண்டாகும். லக்னத்தில் சூரியன், 7 இல் சனி இருந்தால், திருமண தடை உண்டாகும். லக்னத்தில் சூரியன், சனி, செவ்வாய் இருந்தால், திருமண தடை உண்டாகும். லக்னத்தில் ராகு, சூரியன், சனி இருந்தால், திருமண தடை உண்டாகும். 4 இல் செவ்வாய், சனி, ராகு இருந்தால், திருமண தடை உண்டாகும். 7 இல் சூரியன், சனி, ராகு அல்லது சனி அல்லது செவ்வாய், ராகு அல்லது சுக்கிரன், செவ்வாய், ராகு அல்லது சுக்கிரன் – சூரியன் – செவ்வாய் இருந்தால் திருமண தடை உண்டாகும்.

வீட்டிற்கு வடக்கு திசையில் தேவையற்ற பொருட்கள் சேர்த்து வைக்கப்பட்டிருந்தாலும் அல்லது வீட்டின் மொட்டை மாடியில் தேவையற்ற பொருட்கள் இருந்தாலும், திருமண தடை உண்டாகும். வீட்டின் வடக்கு பக்க சுவரில் விரிசல் இருந்தால், திருமண தடை உண்டாகும்.

தென் கிழக்கு வாசல் இருந்தால், திருமண தடை உண்டாகும். தென் கிழக்கில் படுக்கும் அறை இருந்தால், திருமண தடை உண்டாகும். வீட்டின் கிழக்கு மத்திய பகுதியில் நீர் தொட்டி இருந்தால், திருமண தடை உண்டாகும். வீட்டின் மத்திய பகுதியில் சமையலறை இருந்து, தென் கிழக்கில் நீர் தொட்டி இருந்தால், பெண்களுக்கு திருமண தடை உண்டாகும். தென் மேற்கு வாசல் இருந்து, வட கிழக்கில் படுத்தால், திருமண தடை உண்டாகும். ஈசானிய மூலை (வட கிழக்கு) துண்டிக்கப்பட்டிருந்தால், பெண்களுக்கு திருமண தடை உண்டாகும்.


பரிகாரங்கள்

1. வட மேற்கில் படுக்கையறை இருக்க வேண்டும். மேற்கில் தலை, கிழக்கில் கால் வைத்து படுக்க வேண்டும்.
2. கருப்பு நிற ஆடை அணியக் கூடாது.
3. திங்கட் கிழமை சிவனுக்கு அபிஷேகம் செய்து, அவரைப் போன்ற ஒருவர் தனக்கு கணவனாக வர வேண்டும் என்று ஒரு பெண் வேண்டிக் கொள்ள வேண்டும். திங்கட் கிழமை விரதம் இருக்க வேண்டும்.
4. வெள்ளிக் கிழமை துர்க்கை ஆலயத்திற்குச் சென்று, சிவப்பு நிற மலரை வைத்து வழிபட வேண்டும்.
5. வீட்டில் தேவையற்ற பொருட்களை நீக்கி விட வேண்டும்.
6. லக்னாதிபதியும், 9 க்கு அதிபதியுமான கிரகத்தின் ரத்தினத்தை அணிய வேண்டும்.
7. வீட்டில் வாஸ்து சாந்தி யந்திரத்தை வைக்க வேண்டும்.
8. ஜாதகத்தில் சுக்கிரனால் தோஷம் இருந்தால், துர்கா யந்திரத்தை வீட்டில் வைத்து பூஜை செய்ய வேண்டும்.
9. அரச மரத்தைச் சுற்றி வர வேண்டும் (ஒவ்வொரு வியாழக் கிழமையன்றும்).
10. தினமும் காலையில் பகவான் சூரியனுக்கு நீர் விட வேண்டும்.
11. ஞாயிற்றுக் கிழமை தலை குளிக்கக் கூடாது.
12. படுக்கும் அறையில் பச்சை வர்ணம் இருக்கக் கூடாது.
13. வீட்டில் வாஸ்து சாந்தி யாகம் செய்ய வேண்டும்.

மேற்கண்ட பரிகாரங்களைச் செய்தால், பெண்களுக்கு தடைகள் நீங்கி, திருமணம் நடக்கும்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.