Logo

வெள்ளை நிற ஆடையை யார் அணியலாம்? யார் அணியக் கூடாது

Category: ஜோதிடம்
Published Date
Written by சுரா
Hits: 2884

வெள்ளை நிற ஆடையை
யார் அணியலாம்? யார்
அணியக் கூடாது
-மகேஷ்வர்மா

ரு மனிதன் தன் வெளித் தோற்றத்திற்காக ஆடைகள் அணிகிறான். ஆனால், சில மனிதர்களின் ஜாதகத்தில் பிறந்த நேரம், நாள், நட்சத்திரங்கள் ஆகியவற்றுக்கு ஏற்ற சில வர்ணங்கள் சரியாக இல்லையென்றால், அவர்களுக்கு அந்த வர்ணங்களால் மனதில் கஷ்டங்கள் ஏற்படும். அதனால், அவர்கள் எந்த வேலையையும் ஒழுங்காக செய்யாமல் இருப்பார்கள். பலருக்கு அந்த நிறங்களால் கோபம் ஏற்படும். சிலருக்கு அந்த வர்ணங்களால் அமைதியற்ற சூழ்நிலை ஏற்படும். மனதில் சந்தோஷம் இல்லாமற் போய் விடும்.

உதாரணத்திற்கு – வெள்ளை நிறத்தை எடுத்துக் கொள்வோம்.

ஒரு மனிதனின் ஜாதகத்தில் லக்னத்தில் சூரியன், 4 இல் சூரியன், 10 இல் சூரியன், லக்னத்தில் சந்திரன், 10 இல் சந்திரன், 11 இல் சந்திரன் ஆகிய கிரகங்கள் இருந்தால், அவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் வெள்ளை நிற ஆடை அணிந்தால், அவர்களுக்கு மன மகிழ்ச்சி, பெயர், புகழ் ஆகியவை கிடைக்கும்.

அவர்கள் மேலாடையை வெள்ளை நிறத்திலும், கீழாடையை கருப்பு வர்ணத்திலும் அணிந்தால், அவர்களிடம் அது கோபத்தை அதிகமாக உண்டாக்கும். அவர்கள் செய்கின்ற செயல்கள் அவர்களுக்கே தெரியாமல், மனதில் கோபத்தை ஏற்படுத்தும். அதன் காரணமாக தீமைகளை அவர்கள் செய்வார்கள். அது அவர்களின் பெயரைக் கெடுக்கும். சிலருக்கு கெட்ட நட்பு ஏற்படும். அதன் காரணமாக அவர்கள் சிறைக்குச் செல்வதற்கான சூழ்நிலைகள் கூட உண்டாகும். ஏனென்றால், வெள்ளை நிறம் சூரியன், சந்திரன் இருவருக்கும் உகந்தது. ஆனால், அத்துடன் கருப்பு நிறமும் சேர்ந்து விட்டால், அது பாதிப்பை ஏற்படுத்தும். கருப்பு என்பது சனி பகவானின் வர்ணம். அதனால் சந்திரன், சனி சேர்ந்தால் விஷ யோகம் உண்டாகும்.

அதேபோல சூரியனுடன், சனி சேர்ந்தால், அதுவும் விஷ யோகம்தான். சாஸ்திரத்தில் சூரியன் என்றால் தந்தை. சனி என்றால் மகன். இருவருக்கும் எப்போதும் ஒத்துப் போகாது. இருவரும் பகைவர்கள். அதனால் தன்னுடைய உறவினர்களுடன் நல்ல உறவு இருக்காது. தலையில் ஏதாவது நோய் இருந்து கொண்டேயிருக்கும். தந்தையுடன் நல்ல உறவில் இருக்க மாட்டார்கள்.

சந்திரன் நீசமாக இருந்தால், அவர்கள் தூய வெள்ளை நிற ஆடைகளை அணியக் கூடாது. அதேபோல சூரியன் நீசமாக இருந்தால், அவர்களும் தூய வெள்ளை நிற ஆடைகளை அணியக் கூடாது.

1, 10, 19, 28, 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் வெள்ளை நிற ஆடை அணிந்தால், அவர்களுக்கு பெயர், புகழ் ஆகியவை கிடைக்கும்.

கிழக்கு திசை வாசல் இருக்கும் வீட்டில் வசிப்பவர்கள் வெள்ளை நிற ஆடை அணிவதால், அவர்களுக்கு பெயரும், புகழும் கிடைக்கும்.

வெள்ளை நிற ஆடை அணிந்தால், ஒரு மனிதனுக்கு மனதில் அமைதி கிடைக்கும். பல பிரச்னைகளை முன் கூட்டியே சமாளிக்கக் கூடிய சிந்தனைகள் உண்டாகும். ஒருவருக்கு நன்மைகள் செய்ய வேண்டும் என்ற நினைப்பு உண்டாகும். பகவான் சூரியன், சந்திரன் ஆகியோரின் அருளால், அதை அவர்கள் செய்து முடிப்பார்கள்.

லக்னத்தில் செவ்வாய், ராகு அல்லது சனி – சூரியன் – ராகு ஆகிய கிரகங்கள் இருந்தால், அவர்கள் வெள்ளை நிற ஆடை அணிந்தால், அவர்களுக்கு தங்களுடைய மனைவியுடன் உள்ள பிரச்னைகள் குறையும். 12 இல் சூரியன் – சனி அல்லது செவ்வாய் – சனி அல்லது ராகு – சனி இருப்பவர்கள் எப்போதும் வெள்ளை நிற ஆடை அணிவதால், அவர்கள் மனதில் மகிழ்ச்சியுடன் வாழலாம்.

சிம்மராசி, கடக ராசி, ரிஷப ராசி ஆகிய ராசிகளில் உள்ளவர்கள் வெள்ளை நிற ஆடைகள் அணிவதால், அவர்களுடைய மனதில் இருக்கும் கஷ்டங்கள் குறையும்.

சிம்ம ராசியில் சூரியன் – ராகு – சனியுடன் இருந்தால், பல கஷ்டங்கள் ஏற்படும். அதனால், அவர்கள் வெள்ளை நிற ஆடை அணிந்தால், அவர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.
கடக ராசியில் சந்திரன் – சனி அல்லது சந்திரன் – ராகு இருந்தால், அவர்களுக்கு மன நோய் ஏற்படும். அதனால், அவர்கள் வெள்ளை நிற ஆடை அணிந்தால், அவர்களுக்கு அந்த பிரச்னைகளிலிருந்து விடுதலை கிடைக்கும்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.