Logo

மன நோய் ஏன் ஏற்படுகிறது? அது குணமாக... பரிகாரங்கள்

Category: ஜோதிடம்
Published Date
Written by சுரா
Hits: 7072

மன நோய் ஏன் ஏற்படுகிறது? அது குணமாக... பரிகாரங்கள்
(மகேஷ் வர்மா)

ரு மனிதனுக்கு மன நோய் உண்டாவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

அதில் முக்கியமானது- சில நேரங்களில் பேராசை அதிகமாக இருந்து, அது நிறைவேறாமற் போனால், அவர்களுக்கு மன நோய் வரும்.

சிலருக்கு தங்களுடைய வீட்டு சூழ்நிலை நன்றாக இல்லாமற் போனால், அவர்களுக்கு மன நோய் வரும். சிலருக்கு தங்களுடைய பிள்ளைகளால் அதிக நோய் உண்டாகும். சிலருக்கு மனைவியால் வரும். சிலருக்கு அதிக வேலைகள் காரணமாக மனநோய் வரும். சிலருக்கு நோய்களால் மன நோய் உண்டாகும்.

ஒரு மனிதனுக்கு அவனுடைய ஜாதகத்தில் சனி, ராகு ஆகிய கிரகங்கள் 6 அல்லது 8 இல் இருந்து, அவர்களுடைய தசை நடக்கும் போது மனதில் பிரச்சினைகள் உண்டாகும். குரு 5 இல் இருந்து, குருவின் தசை நடக்கும்போது, மனிதனுக்கு மன கஷ்டங்கள் உண்டாகும். குரு தசையில் சனி புக்தி வரும்போது, அவர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களால் ஏமாற்றப்படுவார்கள். அதனால் அவர்களுக்கு மன கஷ்டங்கள் உண்டாகும்.

கன்யா லக்னத்திற்கு விரய ஸ்தானாதிபதியான கிரகம் சூரியன் லக்னத்தில் இருந்து, அந்த சூரியனின் தசை நடக்கும்போது மனிதனுக்கு பயம் ஏற்படும். உடல் நலம் கெடும். வேலைகள் அதிகமாக இருக்கும். எதையும் முழுமையாக செய்ய முடியாது. அதனால் அவர்கள் மன ரீதியாக பாதிக்கப்படுவார்கள்.

செவ்வாயுடன் சனி 12இல் இருந்தால், மனிதனுக்கு 3, 6, 8 இன் தசை நடந்தால், அவர்களுக்கு குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டு, மன நோய் உண்டாகும், கோச்சாரத்தில் ராசிக்கு 3 இல் குரு இருந்து, அதே நேரம் அஷ்டம சனி அல்லது 7 1/2 நாட்டு சனி நடந்தால், அந்த மனிதனுக்கு தன்னுடைய குடும்பத்திலிருந்து வெளியேறக் கூடிய சூழ்நிலை உண்டாகும். அதனால் அவருக்கு மன நோய் உண்டாகும்.

லக்னாதிபதி அஸ்தமாக இருந்தால், விரய ஸ்தானாதிபதியின் தசை நடந்தால், அந்த நேரம் அந்த மனிதனுக்கு மன நோய் உண்டாகும். 7 1/2 நாட்டு சனி நடக்கும்போது அவருடைய ஜாதகத்தில் கேது அல்லது சூரிய தசை நடந்தால், அவர்களுக்கு மன நோய் உண்டாகும், சுக்கிரன், செவ்வாய், ராகு 8 இல் இருந்து, கேதுவின் தசை நடந்தால், அந்த நேரம் அவருக்கு தன் மனைவியால் மன கஷ்டங்கள் உண்டாகும், 7க்கு அதிபதியான கிரகம் விரய ஸ்தானத்தில் செவ்வாயுடன் இருந்தால், 8இல் இருக்கும் கிரகத்தின் தசை நடக்கும் போது, அவருக்கு தன்னுடைய மனைவியால் பிரச்சினைகள் உண்டாகும். மன நோய் ஏற்படும்.

ராகு தசையில் சுக்கிர புக்தி நடக்கும்போது, அரசாங்கம், நீதிமன்றம், வழக்கு என்று பல பிரச்சினைகள் ஏற்பட்டு, அதனால் மன நோய் உண்டாகும். 12இல் ராகு, சனி இருந்து, 4 இல் சூரியன் இருந்தால், அவர்களுக்கு தங்களுடைய குடும்பத்தால் பிரச்சினைகள் உண்டாகும். அதனால் மன நோய் ஏற்படும். அப்போது அவருக்கு புதன் தசையோ அல்லது கேது தசையோ நடந்தால், ஞாபக மறதி உண்டாகும்.

ஒரு மனிதனுக்கு சனி, குருவுடன் லக்னத்திலோ அல்லது 8லோ இருந்தால், அவருக்கு மனைவி அல்லது இன்னொரு பெண் தொடர்பால் மன நல பாதிப்பு உண்டாகும். லக்னத்தில் ராகு, 7இல் சனி, கேது, 9இல் சூரியன் இருந்தால், அவர்களுக்கு கடன் பிரச்சினைகள் ஏற்பட்டு அதனால் மனதில் பாதிப்பு உண்டாகும்.

ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி சூரியனுடன் 4இல் இருந்தால், அந்த சூரியனுக்கு சனியின் பார்வை இருந்தால், அவருக்கு இதய பாதிப்பு உண்டாகி, அதனால் மன நல பாதிப்பு ஏற்படும்.

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் லக்னத்தில் செவ்வாய், 12இல் சனி, 11இல் சூரியன், சுக்கிரன், புதன் சேர்கை இருந்தால், அந்தப் பெண் தன் கணவன் இல்லாமல் வேறு வெளி ஆணுடன் தொடர்பு வைத்திருப்பாள். அதனால் மன ரீதியான பாதிப்புகள் உண்டாகும். ஒரு மனிதனின் ஜாதகத்தில் 6இல் செவ்வாய், சனி, ராகு இருந்தால், அவர்களுக்கு தங்களுடைய மனைவியால் மன நல பாதிப்பு உண்டாகும், 5க்கும் 7க்கும் உரிய கிரகங்கள் 8 அல்லது 12 இல் இருந்தால், தங்களுடைய பிள்ளைகளாலும், மனைவியாலும் அவர்களுக்கு இல் வாழ்க்கையில் பிரச்சினைகள் உண்டாகி, மனநோய் ஏற்படும்.

பரிகாரங்கள்:

1. பகவான் சிவனின் சந்திர மவுலீஸ்வரர் உருவத்தை மனதில் நினைத்துக் கொண்டே சிவனுக்கு பாலாபிஷேகம் செய்ய வேண்டும்.

2. மேற்கு திசையில் தலை வைத்து படுக்கக் கூடாது.

3. வீட்டின் படுக்கை அறையில் இருக்கும் அலமாரியின் கதவைத் திறந்து வைக்கக் கூடாது.

4. வீட்டில் பச்சை வர்ணம் இருக்கக் கூடாது.

5. லக்னாதிபதியின் ரத்தினத்தை அணிய வேண்டும்.

6. லக்னாதிபதி அஸ்தமாக இருந்தால், அல்லது லக்னத்திற்கு 6, 8, 12இல் பாவ கிரகத்துடன் இருந்தால், அவர்கள் பகவான் விநாயகரை வழிபட வேண்டும். வீட்டிற்கு வெளியே கால் வைக்கும்போது, விநாயகரின் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும், வீட்டில் ஆஞ்சநேயரின் படத்தை வைத்து, அனுமான் சாலிசா படிக்க வேண்டும்.

7. தன்னுடைய முன்னோர்களின் படத்தை தெற்கு திசையில் வைக்க வேண்டும்.

8. வீட்டின் படுக்கும் அறையில் தெற்கிலும் வடக்கிலும் முகம் பார்க்கும் கண்ணாடி இருக்கக் கூடாது.

9. வீட்டிற்கு வட மேற்கு திசையில் கிணறோ, இடிந்த சுவரோ, குப்பைகளோ இருக்கக் கூடாது.

10. வீட்டில் நவ கிரக சாந்தி, வாஸ்து சாந்தி ஹோமத்தைச் செய்ய வேண்டும்.

11. வீட்டிற்கு வட கிழக்கில் ஜன்னல் இருக்க வேண்டும்.

12. தன்னுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். பிண்ட தானத்தை கயா அல்லது ஹரித்துவாருக்குச் சென்று செய்ய வேண்டும்.

13. ஜாதகத்தில் ராகு இருக்கின்ற பாவத்தின் அதிபதியின் பூஜையைச் செய்ய வேண்டும்.

14. எப்போதும் படுக்கும் படுக்கையில் இருக்கக் கூடிய போர்வையின் நிறம் மிகவும் 'லைட்' ஆக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

15. தங்களுடன் எப்போதும் மகாம்ருத்யஞ்ஜெய யந்திரத்தை வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பரிகாரங்களைச் செய்தால், மனநோய் குணமாகி, சந்தோஷமாக வாழலாம்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.